Skip to content
Post Views: 2,860
அத்தியாயம் _10
காரை பார்க்கிங்கில் நிறுத்தியவன் புயலாய் உள்ளே நுழைந்தான் .
எடுத்த எடுப்பில் அவளிடம் என்ன விசாரிக்க …!
நிதானத்தை வரவழைத்து கொண்டு பில்லிங்கில் உட்கார்ந்தான் . கம்ப்யூட்டரில் அன்றைய கணக்கு வழக்குகளை பார்த்தான் .
Advertisement
ஸ்வாதி ஸ்டாக் ரெஜிஸ்டரை எடுத்துட்டு ரூமுக்கு வாங்க …அவள் பதிலை நின்று கேட்காமல் உள்ளே போய் விட்டான் .
ஸ்வாதி ஸ்டாக் ரெஜிஸ்டரை எடுத்து கொண்டு உள்ளே போனாள் .
தீபாவளி அன்று அவனை திட்டிவிட்டபடியால் அவன் முகத்தை நேர் கொண்டு பார்க்க சங்கோஜ பட்டாள் .
Advertisement
ம்ஹ்ஹ்ம் …..மெல்ல செருமினாள் .
Advertisement
கை நீட்டினான் .
ரெஜிஸ்டரை கொடுத்தாள் .
சீட்டை காட்டினான் .
Advertisement
அமைதியாய் அமர்ந்தாள் .
ரெஜிஸ்டரை பார்த்தபடி …ஸ்வாதி இங்கே ஏதாவது பிராப்ளமா என்றான் ?
திக்கென்றானது …இல்லை …அதெல்லாம் ஒன்னும் இல்லை ஸார் ….அவள் எச்சில் விழுங்கினாள் .
நிஜமா ? அவன் குறுகுறுவென பார்த்தான் .
ஏன் இப்படி பார்க்கிறான் ? அவளுக்கு உதறியது .
“ஸ்வாதி CCTV காமிரா தெரியுமா ?”
“ம்ம்ம் …தெரியும் ஸார் !”
அந்த கேமிரா பிராசஸிங்கை எங்கிருந்து வேணுமானாலும் பார்க்கலாம் தெரியுமா ?
அவள் பதில் பேசாமல் …தலை குனிந்தாள் .
கூடுவாஞ்சேரி பிராஞ்சில் என்ன நடந்தாலும் வடபழனியில் உட்கார்ந்துட்டே என்னால் பார்க்க முடியும் தெரியுமா ?
அவனை நிமிர்ந்து பார்க்கும் திராணி இல்லாமல் தலை கவிழ்ந்தாள் .
யார் அவன் ? அவன் குரலில் அதி’காரம்’ தூக்கலாய் இருந்தது .
என்ன என்பதாய் தலை நிமிர்ந்து பார்த்தாள் .
என்ன பார்க்கிற …உன்னை மிரட்டிட்டு போனவன் யாரு ?
தெரியாது …அவள் வேகமாய் எழுந்து கதவை திறக்க போனாள் .
அவளுக்கு முன் கதவருகில் போய் நின்று கொண்டு கையை மார்பின் குறுக்காக கட்டி கொண்டு நின்றான் .
” பதில் சொல்லிட்டு போ …! “
உங்க கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை .
அவள் வெறுப்புடன் அவன் கையை விலக்கி கதவை திறக்க முயல ….
பதில் சொல்லாம நீ போக முடியாது ….வேகமாய் அவள் கரம் பற்றி இழுத்து நாற்காலியில் தள்ளினான் .
நீங்க உங்க லிமிட்டை தாண்டாதீங்க …சம்பளம் கொடுக்கிறதினால் என் பர்சனில் தலையிடும் ரைட்ஸ் உங்களுக்கு இல்லை .
உன் பர்ஸ்னலா ? அவள் அமைதியாய் சிரித்தான் .
ஸ்வாதி நடுங்கி போனாள் . இதுவரை அவள் கண்ட பிரபானந்தன் இவன் இல்லை .
உனக்கு தனியா என்ன பர்சனல் ? அவன் துளைக்கும் பார்வை பார்த்தான் .
அதை உங்களுக்கு சொல்ல அவசியம் என்ன ? நீங்க யாரு ஸார் ? அவளுக்கு மூச்சிரைத்தது .
நான் யாரா …? ஹா ஹா ஹா ….நான் யாரா …?
உனக்கு புருஷனாக போறவன் . அவன் கண்களின் ரத்த சிவப்பில் அவள் உறைந்து போனாள் .
ஸார் உளறாதீங்க …! அவள் வெட வெடத்து போனாள் .
அவன் முறைத்து பார்த்தான் . அவன் விழி வீச்சை தாக்கு பிடிக்க இயலாமல் அவள் வெளியேற முயல ….
ஏய் …அடங்குடி ….அவன் கோபமாய் கை பற்றி இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான் .
ச்சீ விடுங்க ….ஓங்கி அறைந்தாள் .
ஏன்டி எவனோ ஒருத்தன் உன் கன்னத்துல தட்டிட்டு போகலாம் …உன்னை கல்யாணம் பண்ணி வாழ போறவன் நான் …உன்னை தொட்டு அணைக்க கூடாதா ?
ஆவேசமாய் அவளை பிடித்து நாற்காலியில் தள்ளி விட்டு வேகமாய் வெளியேறினான் .
அவன் வார்த்தைகளில் சுக்கல் நூறாய் உடைந்து சிதறினாள் ஸ்வாதி .
அவள் அறைந்த கன்னத்தை அழுந்த துடைத்து கொண்டவன் ….அவளை எண்ணி சிலிர்த்து போனான் .
தன் எண்ணத்தை தெரிய படுத்தி விட்டதில் கொஞ்சம் நிம்மதி அடைந்தான் .
புது விதமான உணர்வுகளின் பிடியில் இருந்தான் பிரபா .
மனம் மயிலிறகாய் இருந்தது . இதுநாள் வரை இருந்த கனம் சற்று குறைந்தாற் போல் இருந்தது .
ஸ்வாதிக்கு மனதில் பாரம் கூடியது …. நான் என்ன நேரத்தில் பெண்ணாய் பிறந்தேனோ ….? மருகினாள் .
இப்போதெல்லாம் ஸ்வாதிக்கு அழுகை வருவதில்லை . பின்னே …வருஷ கணக்காய் அழுது வறண்டு போய் இருக்கிறதே அவள் கண்கள் .
வேலையை விட்டு விடலாமா ?
இனி பிரபாவை நேர் கொண்டு பார்ப்பது இயலாத காரியம் .
எப்போது அவர் மனதில் இப்படி ஒரு எண்ணம் வந்து விட்டதோ …இனி அவரை தவிர்ப்பதே உத்தமம் .
வேறு எங்கு வேலை தேடுவது ? இங்கு கிடைக்கும் சம்பளம் வேறு எங்கும் கிடைக்காதே !
அவள் குழம்பி தவித்து கொண்டிருந்தாள் .
மொபைல் அழைத்து அவளை குழப்பத்தின் பிடியில் இருந்து மீட்டது .
லேண்ட் லைன் நம்பரில் இருந்து வந்த அழைப்பு ….
ஹலோ யாருங்க ? அவளுக்கு நடுக்கம் குறையவே இல்லை .
உங்க புருஷன்ங்க ….அவன் சிரித்தான் .
ஹலோ ….யாரு நீங்க ? அவள் கொதித்தெழுந்தாள் .
அது தான் தெள்ள தெளிவாய் சொன்னேனே உன் புருஷன் ….
அவள் எதிர் கேள்வி கேட்காமல் ஸ்தம்பிக்க …
ஹலோ ஸ்வாதி …நான் பிரபானந்தன் . அவன் ரசித்து சிரித்தான் .
அவள் துடித்து அழுதாள் .
ஸார் …ஏன் இப்படி பேசறீங்க ? அவளுக்கு நாக்கு குழறியது .
ரொம்ப டென்ஷன் ஆகாம மெயில் சென்ட் பண்ணியிருக்கேன் பாரு . அவன் வைத்து விட்டான் .
அவசரமாய் GMail ஆன் பண்ணி மெயில் சர்ச் பண்ணினாள் .
கூடுவாஞ்சேரி ஹோட்டலில் இருந்து மீண்டும் அவளை வடபழனிக்கு மாற்றி இருந்தான் .
மெயிலை பார்த்து உறைந்து போனவள் ….ரெஸ்ட் ரூம் சென்று முகம் கழுவி வந்தாள் .
பிரபாவிற்கு கால் பண்ணினாள் .
சொல்லுங்க ஸ்வாதி பிரபானந்தன் குறும்பாய் சிரித்தான் .
ஸார் பிளீஸ் ..பீ சீரியஸ் . அவள் குரல் உடைந்தது .
நான் காமெடி பணறேன்னா நினைத்த ?
ஸார் இப்போ தான் கூடுவாஞ்சேரி ஹோட்டலை இம்ப்ரூவ் பண்ணிட்டு இருக்கோம் . இப்போ போய் ஏன் வடபழனிக்கு டிரான்ஸ்பர் பண்ணி இருக்கீங்க ?
கூடுவாஞ்சேரி பிரான்ச்சை எப்படி ஹேண்டில் பண்றதுங்கிறது என் கவலை . நீ நாளைக்கு வடபழனி ஹோட்டலுக்கு வந்து சேர் !
குட் நைட் …பை …அவன் மெலிதாய் நகைத்தபடி போனை வைத்து விட்டான் .
பத்து நிமிஷம் கழித்து மீண்டும் போன் அழைத்தது .
சொல்லுங்க மேடம் என்றான் அகமகிழ்ந்து .
மிஸ்டர் பிரபானந்தன் உங்களுக்கு மெயில் பண்ணி இருக்கேன் பாருங்க .
குட்நைட் பை …அவள் வைத்து விட்டாள் .
அவள் குரலிலேயே புரிந்து போனது . அவள் என்ன செய்திருப்பாள் என்று …
நடுங்கும் விரல்களுடன் லேப்டாப்பை தட்டினான் .
தங்களிடம் வேலை பார்க்க விருப்பம் இல்லை என்று ரெசிக்னேஷன் லெட்டர் அனுப்பி இருந்தாள் .
வேதனையில் கண்மூடினான் .
தண்ணீர் குடித்து தன்னை சமன் படுத்தி கொண்டு ஸ்வாதிக்கு அழைத்தான் . ஸ்விட்ச்டு ஆஃப் என்று வந்தது .
“———“
பைலை தூக்கி கொண்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கினாள் .
பல்லாயிரம் கம்பெனிகள் சென்னையில் இருந்தும் அவளுக்கு தான் வேலை கிடைக்கவில்லை .
அவள் B.com கல்வி தகுதிக்கு ஏழாயிரம் ,எட்டாயிரம் தருவதாக ஒரு சில கம்பெனிகள் சொன்னார்கள் .
ஹாஸ்டலுக்கே அவள் மாதம் எட்டாயிரம் செலுத்த வேண்டுமே ? வீட்டிற்கு எப்படி பணம் அனுப்புவது ?
இதுவரை இருந்த தன்னம்பிக்கை மெல்ல ஆட்டம் கண்டது ….துவண்டு போனாள் .
அடுத்து என்ன செய்ய போறேன் ?
தேதி இருபத்தைந்து ஆகி விட்டதே …! இன்னும் ஐந்து நாட்களில் ஹாஸ்டல் பீஸ் கட்ட வேண்டுமே ?
ஒரு வாரமாய் வேலை தேடி திண்டாடி போனாள் .
பாலாஜி போன் பண்ணினான் . ஏன் ஸ்வாதி வேலையை விட்டுட்ட ?
இல்லை ஸார் …என்னால் அவ்வளவு தூரம் தினம் டிராவல் பண்ணி போய் வர முடியல …அவள் சமாளித்தாள் .
பாலாஜி அதை நம்பி விடுவானா ?
ஸ்வாதியும் சரி , பிரபாவும் சரி உண்மை காரணத்தை சொல்லவில்லை .
ஏதோ வலுவான காரணம் இருக்க கூடும் என்று பாலாஜி உணர்ந்து கொண்டான் .
ஸ்வாதி எனக்கு தெரிந்த கம்பெனியில் அக்கவுண்டண்ட் வேலை இருக்கு போறியாம்மா ?
இல்லை ஸார் …என் பிரண்ட் வேலை அரேஞ்ச் பண்ணிட்டா ஒன்னாந்தேதி ஜாயின் பண்ணிடுவேன் . தேங்க் யூ ஸார் …அவள் நாசூக்காய் அவனுடன் தொடர்ந்து பேசுவதை தவிர்த்தாள் .
நாளை தேதி ஒன்று ….என்ன செய்ய போகிறேன் ? வடபழனி முருகன் சந்நிதி தூணில் சாய்ந்து கண்ணில் நீர் திரள.. சிந்தனையில் ஆழ்ந்தாள் .
ஸ்வாதி …என்னம்மா நல்லா இருக்கியா ? அவள் தோளில் ஒரு மென் கரம் விழ….கண் திறந்து பார்த்தாள் .
கல்யாணி அம்மாள் பக்கத்தில் வந்து அமர்ந்தார் .
அம்மா …நீங்களா ? நல்லா இருக்கீங்களா ?
“ம்ம்ம்ம் …ஏதோ இருக்கேன் !”
நீ ஹோட்டலுக்கு போகலையாம்மா ?
இல்லைம்மா …கொஞ்சம் மனசு ஒரு மாதிரி இருந்தது, அது தான் கோயிலுக்கு வந்தேன் .
ஏம்மா டல்லா இருக்கீங்க ?
உடம்பு சரியில்லையா?
எனக்கு என்ன கேடு ? பிரபாக்கு தான் உடம்பு சரியில்லை .
என்னம்மா சொல்றீங்க ? பதறினாள் .
ஆமாம்மா டைபாய்டு ஜுரம் வந்திடுச்சு . மூனு நாள் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி நேத்து தான் டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு வந்தேன் .
இப்போ எப்படி இருக்கார் ?
கொஞ்சம் பரவாயில்லைமா ..!
உடம்பை விட மனசு சரியில்லாம இருக்கான் போலம்மா .. கீரை தண்டு போல வாடி வதங்கி பிள்ளை படுத்திருக்கான் .
என் குறையை முருகன் கிட்ட சொல்லி அழ தான் வந்தேன் . அந்த தாயின் துடிப்பு அவள் கண்ணில் கண்ணீராய் முட்டி கொண்டு வந்தது .
அம்மா நானும் உங்க கூட வரேன் …!
காரில் தான் வந்தேன் . வாம்மா போகலாம் .
வீட்டிற்கு வந்தவர் …அவளை ஹாலில் அமர்த்தி விட்டு …மகனின் அறைக்கு சென்று பிரசாதம் கொடுத்து விட்டு வந்தார் .
பிரபா ரூம் மாடியில் இரண்டாவது ரூம் . நீ போய் பாரும்மா …நான் காஃபி அனுப்பறேன் .
ஆவலும், தயக்கமுமாய் கால்கள் பின்னலிட..மாடி ஏறினாள் .
அடி எடுத்து வைக்க இயலாமல் ….அவன் அறை வாசலில் நின்றாள் .
சவரம் செய்ய படாத தாடியுடன் வாடி போய் படுத்திருந்தான் .
மெல்ல அடி வைத்து …அவன் அருகில் நின்றாள் .
அவள் மூச்சுவிடும் சத்தத்தில் மெல்ல இமை திறந்தான் .
ஸார் …எப்படி இருக்கீங்க ? அவள் குரல் கர கரத்ததது .
யார் அவன் ஸ்வாதி ? அவனுக்காக தான் என்னை வேண்டாம் என்று உதறி தள்ளி போயிட்டியா ?
ஸார் …வேண்டாம் ப்ளீஸ் …இந்த நிலையில் மனசை போட்டு குழப்பிக்காதிங்க !
நல்லா சொல்லும்மா ! கொடுத்துட்டு போன ஜுஸ் அப்படியே இருக்கு …டேபிலேட் போட்டுக்க மாட்டேங்கிறான் .
கல்யாணி ஸ்வாதிக்கு காஃபி கொடுத்து விட்டு மகனை பற்றி குற்றப் பத்திரிகை வாசித்து விட்டு….மகனிடம் இருந்து முறைப்பை பெற்று கொண்டு வெளியேறினார் .
காஃபியை டீபாயில் வைத்தவள் …அவன் அருகில் இருந்த சிறிய ஸ்டூலில் வைக்க பட்டிருந்த மாத்திரையை எடுத்து கொண்டு அவன் தலைமாட்டில் அமர்ந்தாள் .
ஸார் இது மார்னிங் போட வேண்டிய டேபிலட் இன்னும் போடாம இருக்கீங்க …
இப்படி இருந்தா உடம்பு எப்படி குணமாகும் ?
போட்டுக் கோங்க ப்ளீஸ் …அவனிடம் மாத்திரைகளை நீட்டினாள் .
“என் மனகாயத்திற்கு மருந்தே நீ தான்டி ….என்னை நடை பிணமாக்கிட்டியே …?”
“தினமும் சாகாமல் சாகிறேன்!” அவள் கரம் பற்றி இழுத்து தன் மார்போடு அணைத்து கொண்டவன் …அவள் விலகி விடாதபடி அவள் இதழில் இதழ் பதித்தான் .
அவள் மேனி கிடு கிடு வென்று ஆடியது …கண்ணில் நீர் புது வெள்ளமாய் பொங்கி வழிந்தது .
—-தொடரும் ——
error: Content is protected !!