Skip to content
Post Views: 5,052
அத்தியாயம் 1
அம்மா தாயே என்பிள்ளை இப்படியே பட்ட மரமா நின்னுடக் கூடாது .
இன்னும் எவ்வளவு தான் எங்களை சோதிப்ப…? இனியும் எதையும் தாங்கும் சக்தி எங்களுக்கு இல்லை. என் பிள்ளை ஒத்த மரமா நின்னுடுவானோனு பயமா இருக்கு! அவன் வாழ்க்கை செழித்து வாழையடி வாழையா தழைக்கணும்…உன் அருள் என் பிள்ளைக்கு கிடைக்கணும்.
Advertisement
கண்ணில் நீர் திரள …கல்யாணி அம்மாள் மாங்காடு காமாட்சியிடம் மன்றாடி வேண்டிக் கொண்டார்.
நான் கண்ணை மூடுவதற்குள் என் பிள்ளை குழந்தை குடும்பம் என்று சந்தோஷமாக வாழ வேண்டும் அந்த ஒரு வரம் கொடு போதும்… வாய்விட்டு அழுதார்.
உள்ளத்து உணர்வுகளை கொட்டி அழ கூட அவருக்கு யாரும் இல்லை.அவரின் ஒரே புகலிடம் போக்கிடம் இந்த மாங்காடு காமாட்சி அம்மன் தான்.
Advertisement
ஏதோ ஒரு நம்பிக்கை இன்று இல்லை என்றால் நாளை, அல்லது நாளை மறுநாள், அல்லது என்றாவது ஒரு நாள் தன் பிள்ளையின் வாழ்க்கை நேரும் சீருமாய் அமைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் தான் அந்த தாயை நடமாட வைத்துக் கொண்டிருக்கிறது
Advertisement
பிரபா இங்கே வாப்பா …! இன்னைக்கு மாங்காடு கோயிலுக்கு போயிட்டு வந்தேன் …இந்தா பிரசாதம் . அன்பு மகனை அருகில் அழைத்து கண்ணீர் மல்க கரங்கள் நடுக்க விபூதி பூசி விட்டார் கல்யாணி .
இன்னைக்கும் விரதமா?ஏன்மா இப்படி உடம்பை கெடுத்துக்குறீங்க? Bp அதிகமாயிட்டா காமாட்சி வராது நான் தான் ஹாஸ்பிடல் கூட்டிப்போகணும் கடுமையாய் முறைத்தான்.
விரதம் எல்லாம் இல்லை இதோ இப்போ சாப்பிட போறேன்! மகனுக்கு பயந்து பம்மினார்.
Advertisement
ஆமா பிரபா …அந்த பொண்ணு ஸ்வாதி நல்லா இருக்காளா ? ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வாயேன் …!அவர் கண்களின் வழியே உள்ளத்தின் ஏக்கம் தெரிந்தது .
கல்யாணியின் பேச்சு அவனுக்கு திகிலூட்டியது.
அம்மா ….ரொம்ப ஆசையை வளர்த்துகிட்டாங்கன்னா பெரிய தப்பாயிடும் ..ஏதாவது செய்தே ஆக வேண்டும் . திடமாய் முடிவு செய்து விட்டான் .
அம்மா நீங்க சாப்பிட்டு மாத்திரை போடுங்க.போய் ரெஸ்ட் எடுங்க எனக்கு ஹோட்டலுக்கு டைம் ஆகுது நான் கிளம்புறேன்! தாயிடமிருந்து தற்காலிகமாக தப்பித்தான்.
அலைப்புறும் அவன் மனதையே அவனால் அடக்க முடியவில்லை தாயின் ஆசைக்கு எங்கனம் அணை போட…. விதியின் போக்கை எண்ணி நொந்து கொண்டான்.
“————“
பிரபா ஏன் ஸ்வாதியை வேற பிரான்ச்சுக்கு மாத்தின …? கோபமாய் எதிரில் வந்தமர்ந்தான் பாலாஜி.
ஆமாம் மாத்தினேன் …
கூடுவாஞ்சேரி வரைக்கும் போய் வரமாட்டாளா?
இல்லை பிரபா ….நீ வேணும்னே தான் அவளை அலைகழிக்கிற …
என்ன நான் வேணும்னே பண்ணிட்டேன்?நீ அதை பார்த்து கிழிச்சிட்ட? முகத்தில் முள்ளை கட்டிக்கொண்டு சுள்ளென்று எரிந்து விழுந்தான் .
பாவம் அவ …வடபழனி ஹாஸ்டலில் தங்கியிருக்கவ….தினம் அவ்வளவு தூரம் கடுமையான டிராபிக்கில் எப்படி போய் வருவா ? பாலாஜி அவளுக்காக வாதாடினான் .
சார் என்ன மேடம்கு அவ்வளவு ஸ்ட்ராங்க் சப்போர்ட்? வேலைக்கு வந்துட்டா தூரம் , நேரம் எல்லாம் பார்க்க கூடாது மேன் . சம்பளம் வாங்கும் போது மட்டும் இன்னிக்குதோ?
என் முடிவு இதுதான் விருப்பம் இருந்தா வேலையை கன்டினியூ பண்ணட்டும் இல்லனா வெளியே போகட்டும்! முகத்தில் அறைந்தார் போல் பேசிய பிரபானந்தன் அவனுக்கு புதிது.
என்னடா இப்படி எல்லாம் பேசற? உன் போக்கும் பேச்சும் எனக்கு சரியா படல மச்சி….இருந்தாலும் அந்த பொண்ணுக்கு எவ்வளவு சிரமம் …? கொஞ்சம் யோசிச்சு பாருடா ப்ளீஸ்.
பாலாஜி இதில் யோசிக்க என்ன இருக்கு? நான் டிசைட் பண்ணிட்டேன் ….அவ டேலண்டான பொண்ணு ,
அவத் திறமையை மனதில் வைத்து தான் சொல்றேன்.
இல்லை பிரபா … நீ வேற எதையோ மனதில் வைத்து தான் இப்படி பண்ற ….!
“பாலா என்னை டென்ஷன் பண்ணாம போயிடு ப்ளீஸ் ..!”
அவளுக்கும் எனக்கும் வாய்க்கால் தகராறா ? நான் என்னவோ கொடுமைக்காரன் மாதிரியும் நீ அவளை ரட்சிக்க வந்த ரட்சகன் மாதிரியும் பேசுற…. என் முடிவு எப்போதும் சரியா இருக்கும் என்று தானே சொல்வே. இந்த விஷயத்திலும் அப்படித்தான் இருக்கும் பிரபானந்தன் முறைக்க கடுங்கோபத்துடன் வெளியேறினான் பாலாஜி .
தலையை பிடித்தபடி ரோலிங்சேரில் சாய்ந்த பிரபா …தலைவலி பிளக்கவே இரு கைகளாலும் தலையை தாங்கி பிடித்துக் கொண்டான் .
உடலும் உள்ளமும் தகித்தது, மேனி நடுங்கியது.
மே ஐ கம் இன் சார் ….இனிய குரலுடன் கதவு தட்டப்பட்டது .
ஸ்வாதியின் குரலில் இறுகி இருந்த அவன் அகமும் முகமும் சட்டென்று இளகியது …
எஸ் ..கம் இன் என்றவன் ….
அவள் முகம் நோக்க இயலாமல் பேப்பர் வெயிட்டை உருட்டியபடி டேபிளை நோக்கினான் .
குட் மார்னிங் சார் ….என்றாள் வழக்கமான உற்சாகத்துடன் .
மார்னிங் என்றவன் கண்கள் அவளை பார்க்க சொல்லி கெஞ்சியது … மூளையோ பார்க்க கூடாது …அவளை தவிர்க்க தானே கூடுவாஞ்சேரிக்கு மாற்றி இருக்கிறாய் என்று அறிவுறுத்தியது .
ஸ்வாதி ….உங்ககிட்ட ஒரு முக்கியமான தகவல் சொல்லணும் ….! மெல்ல விழியுயர்த்தி பார்த்தான்
வழக்கம் போல் தான் …
எளிமையான காட்டன் சுடிதார் , சுருண்ட முடிக்கு ஒரு கேச்சர் க்ளிப்,கடுகளவில் சிறு மெரூன் வண்ண ஸ்டிக்கர் பொட்டு ….சுடிதாருக்கு மேட்சாக இளஞ்சிவப்பு வண்ண கம்மல் ….அதே வண்ண பாசி கழுத்தை அலங்கரித்தது .மை தீட்டப்பட்ட விழிகள் துறுதுறுவென அலைமோதியது. மேற்கொண்டு வர்ணிக்கும் படி அவள் ஆடை அலங்காரம் இல்லை.
அவள் முகம் கண்டவனுக்கு பேச்சு வராமல் தொண்டைக்குள் சிக்கி கொண்டது .
நர்த்தனமாடும் அவள் கருவிழிகள் இரண்டும் ….
அவன் சொல்லப் போகும் விஷயத்திற்காக காத்து நின்றது .
இப்படி காந்த கருவிழியால் சுற்றி சுழற்றி அடித்தால் அவன் என்ன பேசுவான்?அந்த விழிகளை அதற்கு மேல் நோக்கும் சக்தியற்றவனாய் ..
மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டு நாம கூடுவாஞ்சேரியில் புதுசா ஆரம்பிச்சிருக்கிற ரெஸ்டாரண்ட் “மேஜிக் டே ” இன்ச்சார்ஜ் நீங்க தான் ஏத்துக்க போறீங்க என்றான் .
சார் …நான் …நான் போய் இன்சார்ஜா ? அவள் பயத்தில் தடுமாறினாள் .
விளையாடுகிறானா என்பது போல் இருந்தது அவள் பார்வை.
பின்னே எவ்வளவு பெரிய பொறுப்பை அசால்ட்டாய் தூக்கி கொடுத்திருக்கிறானே…
எதுக்கு இவ்வளவு பதட்டம்….? நான் உங்களை கூப்பிட்டு வைத்து பிராங்க் பண்ணலை நிஜம் தான் சொல்றேன்.
எஸ் …..உங்க திறமை எனக்கு நல்லாத் தெரியும் . புதுசா ஆரம்பித்திருக்கும் அந்த ரெஸ்டாரன்டை முன்னுக்கு கொண்டு வரும் பொறுப்பு உங்களுடையது .
கையை பிசைந்து உதட்டை கடித்து நடுக்கத்துடன் நின்றாள்.
அவள் நிற்கும் கோலம் அவனுக்குள் உஷ்ணத்தை பரப்பியது. கோபத்தினால் மட்டுமல்ல அந்த உஷ்ணம் என்று அவனுக்கு மட்டும் தானே தெரியும்?
கூடுசாஞ்சேரி ரொம்ப தூரம்னு ஃபீல் பண்றீங்களா ? சூழ்நிலையை மாற்றினான்.
இல்…இல்ல சார்…
வேலைக்குன்னு வந்துட்டா அதை எல்லாம் பார்க்க முடியாது …தட்டு தடுமாறினாள் .
தட்ஸ் குட்! நீங்க நாளைககு கிளம்பி கூடுவாஞ்சேரிக்கு வந்துடுங்க …!
ஓகே சார் …அவள் வெளியேறினாள் .
மிஸ் ஸ்வாதி ஒரு நிமிஷம்! உங்களுக்கு ஒன்றும் சங்கடம் இல்லையே….. தலையை கோதிக்கொண்டு ஆர்வமுடன் அவள் முகம் பார்த்தான்.
நோ சார் என்று தலையாட்டி விட்டு வெளியேறினாள். அவள் பதில் அவனுக்கு உவப்பானதாக இல்லை
பிரபாவின் மனதில் வெறுமை குடி கொண்டது . அவள் போன திக்கையே அவன் கண்கள் வெறித்துக் கொண்டிருந்தது .
அவளை காணாத என் நாட்கள் எப்படி போகும் ? அவள் முகம் பாராமல் என்னால் இருந்துவிட முடியுமா ? அவன் உள்ளம் கொல்லன் பட்டறை ஊது உலை போல் அனலை வீசி கொண்டிருந்தது .
இருந்து தான் ஆக வேண்டும் ….அது தான் அவளுக்கு நல்லது …!
தன்னை தானே தேற்றிக் கொள்ள முயன்றான் .
அவள் இல்லாமல் இருந்த பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தே இந்த சோதனையை வைத்திருக்கிறான்.
இந்த மூன்று ஆண்டுகளில் அவளை காணாத நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம் .
இனியும் அவள் நினைப்பில் உழன்றால் பைத்தியம் பிடித்து விடும் .
அவள் சிறு பெண் …பாவம் அவள் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் .ஆயினும் காதல் கொண்ட அவன் மனம் ஏற்க மறுத்தது .
வாஷ் ரூம் சென்று முகம் கழுவியவன் கண்ணாடியில் தன் பிம்பம் கண்டான் .
நெடு நெடு உயரம் ….உயரம் தனித்து தெரியாதபடி திடகார்த்தமான சரீரம் . மாநிறமே ஆனாலும் வசீகரமான முகம் . காந்த கண்கள் .. அது கூரிட்டு நேர் நிறுத்தி யாரையும் எளிதில் அளவிடும் .
அடர்த்தியான கேசம் …. ஆங்காங்கே ஒவ்வொரு நரை முடி. புகை பிடிக்கும் பழக்கம் இல்லாததால் நிக்கோடின் படியாத பற்கள் …தன்னை ஒருமுறை ஏற இறங்க பார்த்தான் …நன்றாக தானே இருக்கிறேன்?ஏன் என்னை விட்டு பத்மஜா போனாள் …? எந்த விதத்தில் தான் தகுதியற்றவளாய் போனேன்?
ஆறு ஆண்டுகளாய் கேட்கும் அதே கேள்வியை இப்போதும் தன்னை பார்த்து கேட்டு கொண்டான் … எப்போதும் போல் இப்போதும் அவனிடம் பதில் இல்லை .
அவள் எங்கே போனாள் நீதானே அனுப்பி வைத்தாய்? மனசாட்சி ஏளனமாய் எக்களித்து சிரித்தது.
———தொடரும் —–
error: Content is protected !!