அடுத்த நாள் விடியலில் சகுந்தலாவின் போன் அழைப்பில்தான் ஸ்மிருதி உறக்கத்திலிருந்து விடுபட்டாள்.
Advertisement
“என்னடா… மணி பத்துக்கு மேல ஆச்சு, இன்னுமா எழாம தூங்குற?” என்ற அன்னையின் குரலில், அப்பொழுதுதான் மணியை ஏறெடுத்துப் பார்த்தாள்…
”எனக்கு என்னம்மா இங்க வேலை இருக்கு? சாப்பிட்டுத் தூங்கி எழுவதுதானே?” சலிப்புடன் சொன்ன மகளிடம், “சொல்றேன்னு கோவிச்சிக்காதடா, இன்னும் எத்தனை நாளுக்குத்தான் இப்படியே இருக்கப் போற? மாப்பிள்ளை கிட்ட மனசுவிட்டு பேசிப் பார்க்கலாமே,” தன் மகளின் மனம் தன் வார்த்தைகளால் வாடிவிடக்கூடாது என்ற பயத்திலேயே பேசினார்…
Advertisement
Advertisement
”நீ மட்டும் தான் இதைப்பத்தி பேசாம இருந்த, இப்போ நீயும் லெக்சர் எடுக்க ஆரம்பிச்சிட்டியாமா? காலங்காத்தாலேயே டென்ஷன் பண்ணத்தான் கால் பண்ணியா?” எனக் கரகரத்த குரலில் கேட்டாள் ஸ்மிருதி…
”கோவிச்சிகாதடா… நீ சந்தோஷமா இருந்தா தானே, இங்க அம்மாவால நிம்மதியா இருக்க முடியும்?” கவலையுடன் சொன்னார் சகுந்தலா…
Advertisement
”அதுக்கு நீ எனக்கு இன்னொரு கல்யாணத்தை செஞ்சி வச்சிருக்கக் கூடாது, அப்படி செய்யாம இருந்திருந்தா இந்நேரம் உன் பொண்ணு நம்ம வீட்டுல சந்தோஷமா இருந்திருப்பேன்.”
”ஏன்டா இப்படிப் பேசுற? நீ நினைக்கிற மாதிரி புருஷன் இல்லாம ஒரு பொண்ணால வாழ்ந்துட முடியாது ஸ்மிருதி, இது உனக்கு இப்போ புரியாது, புரிய வேண்டிய வயசுல புரியும்.”
”எனக்கு எதுவும் புரிய வேண்டாம், ஆவூண்ணா இதைச் சொல்லியே வாயை அடைக்கிறது. சரி நான் அப்புறம் கால் பண்ணுறேன்,” என்று அழைப்பை துண்டிக்கப் போனவளின் மனம் உறுத்த, ஒரு கணம் நின்று.. “சாரிமா, உன்கிட்ட நான் கோவமா பேசணும்னு நினைக்கல, ப்ச்… என்னை மன்னிச்சிடுமா,” என்றாள் கலங்கிய குரலில்…
”என்னடா… மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு. சரி, முதல்ல எழுந்து தயாராகி சாப்பிடுற வழியைப் பாரு. நேரத்துக்குச் சாப்பிடுறது கிடையாது. இப்படி இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகுறது?”
தாயின் அன்பில் நெகிழ்ந்து போனவள்,.. ”இனி சப்பிடுறேன்
மா,.. சரிமா, நான் வைக்கிறேன்,” என்று துண்டித்தவள் ஒரு பெருமூச்சோடு எழுந்து கொண்டாள்,..
மணி நண்பகல் பன்னிரண்டைக் காட்ட, டிவியையும், போனையும் பார்த்துப் பார்த்து இன்று ஏனோ போரடிக்க ஆரம்பித்தது ஸ்மிருதிக்கு…
தன்னிடமும் வீட்டுச் சாவி ஒன்று இருப்பது நினைவிற்கு வர, கீழே சென்று கார்டனிலாவது உட்காருவோம் என்று யோசித்தவள், வீட்டின் கதவை மூடிவிட்டு லிஃப்டின் புறம் வந்தாள்…
”ஹேய் ஸ்மிருதி, வெளியே எங்கேயாவது கிளம்பிட்டீயா?” உரிமையாகக் கேட்டவளிடம், “அது… கீழே கார்டன்ல இருக்கலாமேன்னு,” என இழுத்தபடி கூறினாள் ஸ்மிருதி…
”என்ன ஸ்மிருதி, வீட்டுக்குள்ளேயே இருந்து போரடிக்குதா? நான் நேத்தே சொல்லித் தானே அனுப்பினேன், உனக்குப் போரடிச்சா என் ஃபிளாட்டுக்கு வான்னு?” மிதுர்ளா கேட்க, அவள் பதில் சொல்லாது மௌனமாக இருந்தாள்….
”என்ன ஸ்மிருதி, என்கூடப் பழக உனக்குப் பயமா இருக்கா?” மிதுர்ளா கிண்டலாகக் கேட்க, “ஹய்யோ, அப்படிலாம் இல்லை,” எனப் பதறிக்கொண்டு சொன்னவள், “இந்த டைம்ல நீங்க பிஸியா இருப்பீங்கன்னு நெனச்சேன்,” என்றவள் அவள் முகம் நோக்க, “இப்போ நான் ஃப்ரீ தான், என் வீட்டுக்குப் போலாமா?” என புன்னகையுடன் அழைக்க, சம்மதத்துடன் அவளுடன் நடந்தாள் ஸ்மிருதி…
லிஃப்டிற்கு அருகிலேயே மிதுர்ளாவின் பிளாட் இருக்க, அவளைப் பின்தொடர்ந்தபடி உள்ளே சென்ற ஸ்மிருதி, வீட்டில் யாரும் இல்லாததைக் கண்டு, “என்ன யாரையும் காணோம்? நேத்து அவ்வளவு பேர் உங்க சொந்தக்காரங்க இருந்தாங்க,” ஸ்மிருதி வீட்டை நோட்டமிட்டபடி கேட்க, அவளை அமரச் சொல்லிவிட்டுத் தானும் அமர்ந்தவள், “ஹாசினி பர்த்டே செலிபிரேட் பண்ணத்தான் எல்லாரும் வந்திருந்தாங்க. இன்னைக்குக் காலைல கிளம்பிட்டாங்க,” என்றாள் மிதுர்ளா…
”நீ என்ன சாப்பிடுற ஸ்மிருதி?” மிதுர்ளா இருக்கையிலிருந்து எழுந்தபடி கேட்க, “இந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் வேண்டாமே,” என்றவள், “நீங்க, உங்க ஹஸ்பெண்ட், அப்புறம் ஹாசினி மூன்று பேரும்தான் இருக்கீங்களா?” தன் கேள்வியைத் தொடர்ந்தாள் ஸ்மிருதி…
”ஆமா ஸ்மிருதி… எங்க சொந்த ஊர் திருச்சி. என் ஹஸ்பெண்ட்க்கு இங்க தான் ஜாப், ஹாசினி பிறக்கிறதுக்கு முன்னாடில இருந்தே இங்கதான் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில நல்ல நிலைமையில இருந்தார். எங்க கெட்ட நேரம், அந்த ஜாப் அவருக்குச் சில தீய எண்ணம் பிடித்தவர்களால் பறிக்கப்பட்டது. ஆறு மாதத்துக்கு மேல ஜாப் இல்லாம ரொம்பக் கஷ்டப்பட்டாரு. அஜய் அண்ணா தான் அவரோட கன்ஸ்ட்ரக்ஷன்ல இவரைச் சேர்த்துக்கிட்டாரு. முன்னாடி இருந்ததைவிட இப்போதான் உயர்ந்த பதவியில் இருக்கிறதா சொல்லி சந்தோஷப்படுவார். இதெல்லாம் அஜய் அண்ணாவால மட்டும்தான், எதிர் பிளாட்ல இருந்தாலும் அவரைப் பார்ப்பது கடினம். இப்போ ஒரு மாதமாகத்தான் இந்த பிளாட்டுக்கு அடிக்கடி வரார், இதுக்கு முன்னாடியெல்லாம் அவர் எப்போதாவதுதான் வருவார். முன்ன எதுவாக இருந்தாலும் போன்லதான் பேசிப்போம், கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் தெரிந்தது அவருக்குக் கல்யாணம் ஆன விஷயம். அதோட நேத்து ஹாசினி பர்த்டேக்கு இன்வைட் பண்ணக் கால் பண்ணோம். உங்க வைஃப் வீட்டுலதானே இருப்பாங்க, அவங்க கிட்ட நானே சொல்லிடுறேன்னு சொன்னேன். அண்ணன் ஓகே சொல்லிட்டாரு,” என மிதுர்ளா பேசிக்கொண்டே போக,..
‘அவனுக்கு இதுதான் ஃபர்ஸ்ட் மேரேஜ்னு இவங்க நெனச்சிட்டு இருக்காங்களா? இவங்க சொல்றதைப் பார்த்தா அப்படித்தான் தெரியுது. தனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயத்தைக்கூட மறைச்சுத்தான் வச்சிருக்கான் போல,’ என வழக்கம் போல் அஜய்யின் மீது கோபம் கொள்ளத் துவங்கினாள்…
”என்ன ஸ்மிருதி, நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டே போறேன், என்ன உன்னைப் போரடிக்க வச்சிட்டேனா?” என மிதுர்ளா கேட்க, “ச்சே ச்சே அப்படிலாம் இல்ல. நீங்க சொன்னதைப் பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்,” என்றவள்…
”ஹாசினி எங்கே? ஸ்கூல் போய்ட்டாளா?” ஸ்மிருதி கேட்க, “ஆமா. அவ வர்ற டைம் தான். உன்னைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவா. ஏன்னா நீதான் அவளுக்குப் பிடிச்ச பார்பி டாலை கிஃப்ட் பண்ணியிருக்கியே,” என மிதுர்ளா சொல்ல, ‘அவன் வாங்கிட்டு வந்த கிஃப்ட்டை பத்திதான் சொல்றாங்க போல,’ எனத் தன்னுள் நினைத்துக்கொண்டாள்…
இன்னும் சில நிமிடம் இருவரும் ஒருவருக்கொருவர் தங்களைப் பற்றியும் தங்கள் குடும்பத்தைப் பற்றியும் பகிர்ந்துகொண்டு ஓரளவு நெருக்கமாயினர். தனக்கும் அஜய்க்கும் இது இரண்டாவது திருமணம் என்னும் விஷயத்தை மட்டும் ஸ்மிருதி சொல்லாமல் விட்டுவிட்டாள்…
அந்த நேரம் சரியாக மிதுர்ளாவின் கணவர், தன் மகள் ஹாசினியுடன் வீட்டினுள் நுழைய, “அட மிசஸ் அஜய் கிருஷ்ணா, வாங்க வாங்க! எப்போ வந்தீங்க?” என ஸ்மிருதியைக் கண்டவர் அன்பாக வரவேற்றபடி, “சாப்பிட ஏதாவது கொடுத்தியா மிது?” எனத் தன் மனைவியின் புறம் திரும்பி கேட்டார்…
”என்ன நீ, வீட்டுக்கு வந்தவங்களுக்குச் சாப்பிட எதுவும் தர மாட்டியா?” செல்லமாகத் தன் மனைவியைக் கடிந்துகொண்டவர், “இருங்க, நானே உங்களுக்குச் சூப்பரான ஒரு ஜூஸ் போட்டு எடுத்து வரேன்,” என்று கூறி உள்ளே சென்றவனை, “அய்யோ, நீங்க எதுக்காக இதெல்லாம் பண்றீங்க? இருக்கட்டும் பரவாயில்லை, வரும்போதுதான் நான் சாப்பிட்டு வந்தேன்,” என்றாள் ஸ்மிருதி அவசரமாக…
”இதுல என்ன இருக்குங்க மேம்? வீட்டுக்கு வந்தவங்களை நாங்க தானே கவனிக்கணும்,” என விகாஷ் சொல்ல, “எது மேம்மா? ப்ளீஸ், என்னை அப்படியெல்லாம் கூப்பிடாதீங்க,” என்றாள் சங்கடத்துடன்…
”ம்ம்ம்… உங்க பாஸை நேத்து பார்ட்டில நேம் சொல்லித் தான் கூப்பிட்டீங்க, இப்போ என்னை மட்டும் இவ்வளவு மரியாதையோட கூப்பிடணும்னு என்ன அவசியம்?” என்றாள் நக்கலாக…