Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா 12 2

சிரித்த விகாஷ், “நீங்க நல்லா வாட்ச் பண்ணியிருக்கீங்க. ஆக்சுவல்லி, அஜய் சாரை ஆபீஸ்ல ‘சார்’னு தான் கூப்பிடுவேன். வீட்டுல, வெளி இடத்துல பெயர் சொல்லித் தான் கூப்பிடுவேன், அதுவும் அவரோட அன்பு கட்டளையால,” என்றான் புன்னகையோடு…

​”ம்ம்ம்… ஓகே ஓகே. அப்போ என்னையும் பெயர் சொல்லியே கூப்பிடுங்க. அக்கா, உங்க ஹஸ்பெண்ட் கிட்ட நீங்களே சொல்லுங்க. இல்லைன்னா மறுபடியும் நான் உங்க வீட்டுக்கு வரவே மாட்டேன்,” என்றாள் முடிவாக…



Advertisement

மிதுர்ளா பேச வரும் முன்னே, “ஓகேமா, இனி நோ மேம், ஓகே?” எனச் சொல்ல, அவள் சம்மதமாகச் சிரித்தாள்…

Advertisement

​”உங்க பேச்சுவார்த்தையெல்லாம் முடிஞ்சதுன்னா, இடத்தை காலி பண்ணுங்கப்பா. நான் ஸ்மிருதி ஆண்ட்டிகிட்ட பேசணும்,” என ஹாசினியின் குரலில், அவள் புறம் பார்வையைத் திருப்பினாள் ஸ்மிருதி…

Advertisement

​”ஆண்ட்டி… நீங்க தான் எனக்குப் பார்பி டால் சூஸ் பண்ணி வாங்கிட்டு வந்தீங்களா?” என ஹாசினி கேட்க, என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றாள் ஸ்மிருதி…

Advertisement

“என்ன ஆண்ட்டி, சொல்ல மாட்டேங்கிறீங்க?” என அவள் கரம் பிடித்துக் கேட்க, “அஜய் அங்கிள் தான் சொன்னாரே ஹாசினிமா. ஆண்ட்டி தான் உனக்காகவே பார்த்துப் பார்த்து வாங்கினாங்க,” என்றான் விகாஷ் தன் மகளிடம்…

​’எது, நானா? அவன் எதுக்காக அப்படிச் சொன்னான்?’ என யோசித்துக் கொண்டிருக்கும்போதே, ஸ்மிருதியின் இடுப்பைக் கட்டிக்கொண்ட ஹாசினி, “தேங்க்ஸ் ஆண்ட்டி. இந்த டாலை நான் எவ்வளவு நாளா வாங்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன் தெரியுமா? நெட்ல தான் இந்த டாலை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன். அப்பா கிட்ட வாங்கித் தரச் சொன்னேன், ஆனா அவர் இது மாதிரி டால் இல்லைனு சொல்லி வேறொரு பார்பி டால் வாங்கித் தந்தாரு. அது எனக்கு ஷேக்ரிஃபைஸா இல்ல. நான் போற டால் ஷாப்லயும் தேடிப் பார்ப்பேன், அப்போதும் கிடைக்கல. இப்போ உங்க கண்ணுல பட்டிருக்கு! எப்படி ஆண்ட்டி உங்களுக்குத் தெரியும், இது என்னோட ஃபேவரைட் டால்னு?” என ஹாசினி ஸ்மிருதியின் பதில் எதிர்பார்த்து அவளை நோக்கினாள்…

​”அது… அது வந்து,” எனத் திணறிக் கொண்டிருந்தவளிடம், “உன்னோட அஜய் அங்கிள் சொல்லியிருப்பாரு குட்டி. நான் தான் அவர் கிட்ட அன்னைக்கு நீ சேட்டை பண்றதைப் பத்திப் புலம்பியபடி அந்த டால் போட்டோவை காட்டினேன்,” என்றான் விகாஷ்.

​”ஓஹ்… அப்படியா ஆண்ட்டி, அங்கிள் தான் சொன்னாரா?” என ஹாசினி கேட்க, வேறு வழி தெரியாது தலையை ஆட்டி வைத்தாள் ஸ்மிருதி…

​”தேங்க்ஸ் ஆண்ட்டி, தேங்க் யூ சோ மச்,” என மலர்ந்த முகத்துடன் கூடிய ஹாசினியைப் பார்க்க, ஏனோ ஸ்மிருதிக்குக் குற்றவுணர்வாக இருந்தது…

‘உண்மையை இவ கிட்ட சொல்லலாமா, வேண்டாமா,’ என யோசித்துக் கொண்டிருந்த தருணம், “வாங்க ஸ்மிருதி, சாப்பிடலாம்,” என விகாஷ் பாசமாக அழைத்தான்…

​”அவ நம்ம கூடச் சாப்பிட்டானா அஜய் அண்ணா கூட யார் சாப்பிடுறது?” எனக் கிண்டலாகச் சொன்ன மிதுர்ளா, “அண்ணா… லஞ்ச்க்கு என்ன டைம் வருவாங்க ஸ்மிருதி?” என அவளிடம் கேள்வி எழுப்பினாள் மிதுர்ளா…

​இதற்குப் பதில் சொல்ல முடியாமல் விழித்தவள், “அது இப்போதான்… வர்ற டைம் தான்,” எனத் தட்டுத் தடுமாறிப் பொய்யை எடுத்துவிட்டவள், “சரிக்கா நான் கிளம்புறேன்,” எனக் கூறிவிட்டு, விறுவிறுவென்று வெளியேறியவள், தன் பிளாட்டைத் திறந்து, மெத்தையில் வந்து விழுந்தாள்…

​’நேத்து என் கையால ஹாசினிக்கு கிஃப்ட் கொடுத்தது தப்பாப் போச்சு. இதுவும் அவனோட பிளானாதான் இருக்கும். என்னை இப்படி ஒரு தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்கி விட்டுட்டானே! அடுத்த தடவை ஹாசினிகிட்ட உண்மை என்னனு சொல்லிடணும்,’ என ஒரு முடிவுக்கு வந்தவள், ‘அக்கா ஹஸ்பெண்ட் டெய்லி லஞ்சுக்கு வந்துடுவாரு போல. அப்போ அவன் எங்கே சாப்பிடுவான்? ஹோட்டல்ல சாப்பிடுவானா? எங்க சாப்பிட்டா நமக்கென்ன?’ என்றவாறு தன் மனதுடன் உரையாடிக் கொண்டிருந்த சமயம், தனக்காகச் சமைத்து வைத்த உணவைச் சாப்பிடச் சென்றாள்…

​டிவியைப் பார்த்தபடி சாப்பிட்டுக்கொண்டு  இருந்த நேரத்தில் போன் ஒலித்தது.

‘சாப்பிடுற நேரத்துக்குத்தான் கால் வரும்,’ என முணுணுத்தபடி போனை எடுத்தவள், திரையில் வந்த பெயரைப் பார்க்காமல் இடது கையால் போனை காதிற்கு கொண்டு சென்றாள்…

​”என்ன பண்ணுற ஸ்மிருதி?” என்ற விஷ்ணுவின் குரலில், வேகமாகத் திரையில் வந்த எண்ணைப் பார்த்தவள், அழைத்தது தன் தமையன் தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, ‘ஹய்யோ, ஏதாச்சும் கேள்வி கேட்டே சாகடிப்பாரே,’ என மனதில் எண்ணியவள், “சாப்டுட்டு இருக்கேன்ணா,” என்றாள்…

​”ம்ம்… அஜய் இன்னும் வரல?” என விஷ்ணு கேட்க, “என்ன?” எனப் புரியாமல் கேட்டாள் ஸ்மிருதி.

​”என்ன என்ன? நீங்க ஊருக்கு வந்துட்டு போனதிலிருந்து அவன் வீட்டுலதான் சாப்பிடுறதா சொன்னான், அதான் கேட்டேன், இன்னும் அஜய் வரலையானு?”

​இதனைச் சற்றும் எதிர்பார்க்காதவள், சமாளிக்கும் விதமாய், “அது ஆமாண்ணா, இன்னைக்குத்தான் வரக் காணோம்,” என்றாள் வார்த்தைகள் தடுமாறியபடி…

​”வரலைன்னா கால் பண்ணிக் கேட்க வேண்டியதுதானே?” என்ற விஷ்ணுவிடம், இந்த முறை என்ன சொல்லிச் சமாளிப்பது எனத் தெரியாமல் மௌனமானாள்…

​”என்ன சவுண்டைக் காணோம்? லைன்ல இருக்கியா இல்லையா?” என்ற விஷ்ணுவின் கறாரான குரலில், “இருக்கேன் அண்ணா,” என தயக்கமாக பதில் தந்தாள்…

​”அஜய்க்கு கால் பண்ணிக் கேளு. நான் அப்புறம் கால் பண்றேன்,” என இணைப்பைத் துண்டித்தான்.

​’ச்சே… ஒரு தடவையாவது என்னைப் பத்தி  இந்த அண்ணா விசாரிக்கிறாரா? எடுத்ததும் அவரோட ஃப்ரெண்டைப் பற்றி மட்டும்தான் விசாரிக்கிறது. எல்லாம் விதி, தலைவிதி,’ எனும் புலம்பலுடன் உணவு உண்ணுவதில் கவனம் செலுத்தினாள்…

​உணவை உண்டு முடித்தவள், தன் அண்ணன் கூறியதைப்பற்றி அப்போதுதான் யோசிக்கத் துவங்கினாள். ‘அண்ணன் கிட்ட அப்படி ஒரு பொய்யைச் சொல்லிருக்கான். சரி, எல்லாம் நல்லதுக்குத்தான், நான் அண்ணன் கிட்ட வாங்கி கட்டிக்காம இருப்பேன்,’ எனச் சோபாவில் வந்து படுத்தவள் கொஞ்ச நேரத்தில் எல்லாம் அவளையும் அறியாமல் தூங்கிப் போனாள்…

அவள் உறக்கத்திலிருந்து விடுபட்ட நேரம் மணி மாலை ஐந்தைக் காட்டியிருந்தது.

​’ச்சே… இப்போதான் மணி அஞ்சாகுது. டைமே போக மாட்டேங்குது. என்ன வாழ்க்கை இது? வீட்டுக்குள்ளேயே அடைஞ்சிக் கிடக்க வேண்டியதாயிருக்கு,’ என எரிச்சலுடன் டிவி ரிமோட்டை எடுத்து வீசி எறிந்தாள். தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு, ‘என்கிட்ட ஸ்கூட்டி இருக்கு, உனக்கு வேணும்னா தயங்காம வாங்கிக்கோ,’ என்று மிதுர்ளா சொன்னது நினைவில் வந்து போனது…

​சட்டென்று அவள் முகம் மலர.., ‘வெளியே எங்கேயாச்சும் போயிட்டு வரலாம்,’ என முகம் கழுவி, கைப்பையுடன் வீட்டைப் பூட்டி மிதுர்ளாவின் பிளாட்டின் முன் நின்று காலிங் பெல்லை அழுத்தினாள்…

சிறிது நொடிகளில் எல்லாம் தூக்கக் கலக்கத்துடன் வந்து கதவைத் திறந்தாள் மிதுர்ளா.

“என்னக்கா, தூங்கிட்டு இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என ஸ்மிருதி சங்கடத்துடன் கேட்க, “அதெல்லாம் இல்ல ஸ்மிருதி, நான் அப்போவே எழுந்துட்டேன்,” என்றாள்.

​”அக்கா… ஒரு ஹெல்ப். அது என்னன்னா உங்க ஸ்கூட்டி…” என இழுத்தவளிடம், “ஸ்கூட்டி கீய் கொடுங்கன்னு உரிமையா கேட்க வேண்டியதுதானே ஸ்மிருதி? சரி, உள்ளே வா,” என்றவள், சாவியை எடுத்து வந்து அவளிடம் நீட்டினாள்…

​”தேங்க்ஸ்க்கா,” எனச் சாவியை வாங்கியவளை செல்லமாக முறைத்த மிதுர்ளா, “தேங்க்ஸை நீயே வச்சிக்கோ,” என்றுவிட்டு, “கீயையும் நீயே வச்சிக்கோ. நான் கொஞ்ச நாளாவே ஸ்கூட்டி யூஸ் பண்றது இல்ல. எனக்கு வேணும்னா நானே கேட்டு வாங்கிக்கிறேன்,” என்றாள்…

​”ஓகேக்கா. ஹாசினி எங்கே?” எனக் கேட்க, “இங்க தான் இருக்கேன் ஆண்ட்டி,” என்று ஓடி வந்தவள், “ஆண்ட்டி, வெளியே போறீங்களா? என்னையும் கூட்டிட்டுப் போங்களேன், வீட்டிலேயே இருக்க போரிங்கா இருக்கு,” என்றாள் கெஞ்சலாக…

​”எனக்கு உன்னைக் கூட்டிட்டுப் போறதுல எந்தப் ப்ராப்ளமும் இல்ல. பட், உன் மம்மி கிட்ட நீ தான் பர்மிஷன் வாங்கணும். அவங்க ஓகே சொன்னா உன்னை நான் கூட்டிட்டுப் போறேன்,” என ஸ்மிருதி சொல்ல, ஹாசினியின் பார்வை தன் அம்மாவின் மீது திரும்பியது…

அவளோ மகளின் ஆசை புரிந்து,..​”ஓகே, போயிட்டு வா. ஆண்ட்டியை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது, என்ன புரிந்ததா?” என்றாள்..

​”அக்கா… அதை நான் பார்த்துக்குறேன்” என்றவள்.. “வா ஹாசினி,” என ஹாசினியின் கரம் பிடித்து அழைத்துச் சென்றாள்…

​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!