ஓரிரு நிமிடங்களில் அலுவலக உடையில் தயாராகி வந்த அஜய், உணவு மேஜையில் காலை உணவு தயாராக இருப்பதைக் கண்டான்.
உட்காரலாமா வேண்டாமா எனத் தன்னுள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த அஜய்யை, “உட்காருங்க,” என்ற ஸ்மிருதியின் மெல்லிய குரல் அமர வைத்தது…
Advertisement
அவனுக்குப் பிளேட்டை எடுத்து வைத்து, அதில் மூன்று இட்லியை எடுத்து வைத்தவள், “சாம்பாரா, சட்னியா?” என்றான் அவன் முகம் பார்த்து..
Advertisement
”அது… ரெண்டுமே,” என்றவனின் பேச்சைச் சட்டை செய்யாதவள், அவன் கூறியது போல் இரண்டையும் வைத்தாள்..
Advertisement
அஜய்க்கு உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தாலும், ‘தனக்காக இவள் இவ்வளவு சிரமப்பட வேண்டுமா’ என்ற அக்கறையில், “நீ ஏர்லி மார்னிங்கே எழுந்து, சமைக்கனும்னு எந்த அவசியமும் இல்லை. நீ இதுக்கு முன்ன இருந்தது போலவே இரு,” என்றான்…
Advertisement
”எனக்கு இதுல எந்த வித சிரமமும் இல்ல. சமைக்கிறது எனக்குப் பிடிக்கும். இத்தனை நாள் என்னுடைய கோபத்தால எனக்கு விருப்பப்பட்ட எந்த வேலையையும் செய்யாம இருந்தேன். நான் சமைத்து நானே சாப்பிடுறதை விட, மற்றவங்க சாப்பிடணும்னு தான் நினைப்பேன். இந்த கொஞ்ச நாள் எப்படியோ கடந்து போச்சு. இனி எனக்குப் பிடித்தமான சமைக்கிற வேலையைச் செய்யணும்னு நினைக்கிறது ஒன்னும் தப்பில்லையே,” எனச் சொல்ல, அவன் அதோடு பேச்சை நிறுத்திச் சாப்பிடத் துவங்கினான்…
சாப்பிட்டு முடித்துக் கை கழுவிக்கொண்டவன், “வரேன்,” என்றபடி அவளிடம் சொல்லிவிட்டு தான் சென்றான். அவன் கிளம்பியதும் தான் ஸ்மிருதி குளிக்கச் சென்றாள். குளித்து முடித்து வந்தவள், காலை உணவை முடித்தாள். வழக்கம் போல் போன், டிவியைப் பார்க்க விரும்பாமல், இன்று சமையலில் இறங்கினாள்…
இங்கு வந்த நாட்களில் எல்லாம், தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் எனச் சமைத்துச் சாப்பிட்டு போரடித்தவள், இன்று வெரைட்டி வெரைட்டியாக சமைக்க எண்ணினாள். மார்கெட்டிற்குச் சென்று தனக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தவள், மட்டன் சூப்பில் ஆரம்பித்து, இறால் பிரியாணி, இறால் தொக்கு, மீன் பொரியல், தயிர்பச்சடி, ஸ்வீட்டுக்கு பிரட் ஹல்வா என்று, விருந்து போல் தயார் படுத்தினாள்…
அனைத்தையும் சமைத்து முடித்தவள், மணியைப் பார்க்கப் பன்னிரண்டு எனக் காட்டியது. ‘அவரைச் சாப்பிடக் கூப்பிடலாமா?’ எனப் போனை கையில் வைத்தபடி யோசித்தாள். ‘ஒரே நாள்ல இந்தளவு சேஞ்ச், ஓவரா இருக்குன்னு நினைச்சிடுவரோ?’
’இல்லனா, ஆபத்திலிருந்து காப்பற்றியதற்கு நன்றி கடனா சமைச்சிப் போடுறேன்னு நினைச்சிடுவாரோ?’ என எண்ணினாள்…
’என்ன வேணும்னாலும் நினைச்சுக்கட்டும். ரொம்பக் கஷ்டப்பட்டும் இல்லாமல், ஆசையா சமைச்சிருக்கேன். நான் சமைத்தது வேஸ்ட் ஆகிடக் கூடாதுன்னா அவரை கூப்பிட்டுத் தான் ஆகணும்.’
’ப்ச்… கூப்பிடலாம், பட் ஏதோ ஒன்னு தடுக்குதே. ஒரு மாதிரி சங்கடமா வேற இருக்கு, அவருக்கு நான் ஏதாவது ரூட் விட ஆரம்பிச்சிட்டேன்னு நினைச்சிடுவாரா?’
’ச்சே ச்சே, அந்த மாதிரி கேரக்டர் இல்லை அவர். இப்போ நான் என்ன தான் பண்ணட்டும்? அவருக்கு கால் பண்ணட்டுமா வேண்டாமா? பேசாம அண்ணன் கிட்ட சொல்லி அவரை வரச் சொல்லலாமா? இல்ல அது சரியா வராது. நானே பண்ணிடுறேன். இந்தச் சின்ன விஷயத்துக்குப் போய் இந்தளவு யோசிக்கிறேனே,’ என்றவள் பல யோசனைக்குப் பிறகு, அஜய்யின் எண்ணிற்கு அழைத்தாள்…
இரண்டாவது ரிங்கிலேயே அழைப்பை ஏற்றவன், “ஹெலோ,” என்று மட்டும் சொன்னான், அவன் குரலிலேயே வியப்பு தெரிந்தது,.
”ஹாங்,.. ஹெலோ, நான் ஸ்மிருதி,” என்றாள்.
”சொல்லு ஸ்மிருதி,” என்றான் அஜய்…
”அது… அது வந்து,” என இவள் இழுத்துக் கொண்டிருக்க, “என்ன ஆச்சு ஸ்மிருதி? ஏதாச்சும் பிராப்ளமா?” என்றான் பதட்டப்பட்ட குரலில்…
”இல்ல இல்ல, பிராப்ளம் எதுவும் இல்லை,” என வேகமாகச் சொன்னவள், “லன்ச்க்கு நானே சமைச்சிட்டேன்,” என்றாள்..
ஒருநொடி ஆச்சரியப்பட்டு போனவன்.. “ஓகே, நான் வந்துடுறேன்,” என்றதும், இணைப்பைத் துண்டித்தாள்.
‘ஏதோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன், என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பாரு?’
’இதுல நினைக்க என்ன இருக்கு? சமைச்சி தானே போடுறேன்,’ என ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தவள், அஜய்யின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
அவள் காத்திருப்பை பொய்யாக்காமல் அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் அஜய். அவன் கை கழுவச் சென்ற நேரம், அவனுக்கு முதலில் சூப்பை எடுத்து வைத்தாள். வந்தமர்ந்தவன் ஒரு மாதிரி பார்வையுடன் சூப்பைப் பார்த்துவிட்டு, அவளைப் பார்த்தான்…
அவனின் பார்வையின் மூலமே அவன் மனதில் ஏதோ யோசிப்பது போல் தோன்றியது ஸ்மிருதிக்கு.
”என்ன,… ஏன் அப்படி பார்க்கிறீங்க?” என வாய்விட்டே கேட்டுவிட, “ஒன்னுமில்ல,” என்பது போல் சிறு சிரிப்புடன் தலையசைத்தவன் சூப்பை அருந்தினான். பின் பிளேட்டை வைத்து, கமகமக்கும் பிரியாணி, இறால் தொக்கு, மீன் பொரியல், கொஞ்சம் தயிர் பச்சடியையும் பரிமாறினாள். அவைகள் அத்தனையையும் கண்கள் விரியப் பார்த்தவன், பின் சாப்பிடவும் துவங்கினான்…
உண்மையாகவே அவளின் கைப்பக்குவம் ருசியாக இருக்க, அதனை ரசித்து ருசித்தபடியே சாப்பிட்டான். கடைசியாகச் ஸ்வீட்டை எடுத்து வைத்தவளை ஆச்சரியமாகவும் வியப்பாகவும் பார்த்தான் அவன்…
”என்ன ஆச்சு, ஸ்வீட் பிடிக்காதா?” அவனின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டது போல் கேட்டாள்…
”அப்படியெல்லாம் எதுவும் இல்லை,” என்றவன், ஸ்வீட்டையும் சாப்பிட்டு முடித்தான்…
சாப்பிட்டு முடித்து எழுந்தவன் கை கழுவி அறைக்குச் சென்றான். அறையிலிருந்து வெளியே வரும் போது அலுவலக உடையிலிருந்து மாறி, டீசர்ட், ட்ராக் பேண்ட்க்கு மாறியிருந்தான்…
’என்ன டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டாரு? ஆஃபிஸ் போகலையா?’ என யோசித்தவள், தானும் அமர்ந்து சாப்பிடத் துவங்கினாள். அஜய் ஹாலின் சோஃபாவில் தன் மடிக்கணினியில் மூழ்கினான்…
சாப்பிட்டு முடித்தவள், சமையலறையில் தன் பாத்திரம் கழுவும் வேலையில் மூழ்க, திடீரென்று ஏதோவொரு சத்தத்தில் தன் வேலையை பாதியில் விட்டு, வெளியே வந்தவளுக்கு அங்கு கண்ட காட்சி அவளை நிலைகுலையச் செய்தது…
டைனிங் டேபிளினின் அருகில் அஜய் தரையில் வீழ்ந்தபடி கிடந்தான். அவனை அந்த நிலைமையில் கண்டவள், பதறிக்கொண்டு அவனருகில் வந்தாள்…
“எ.. என்ன ஆச்சு உங்களுக்கு?” எனக் கேட்டவளுக்கு அவன் இமைகள் மூடி இருப்பதைக் கண்டு பயம் அதிகரித்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் தன்னால் முடிந்த வரை அவனைத் தட்டி எழுப்ப முயன்றாள்…
அவனோ சுயநினைவின்றி கிடந்தான், தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தவள், அப்பொழுதுதான் நினைவு வந்தது போல் தண்ணீரை எடுத்து வந்து, அவன் முகத்தில் தெளித்தாள்.
தண்ணீர் பட்டதும் மயக்கத்திலிருந்து விடுபட்டவனைக் கண்டு கொஞ்சம் நிம்மதியடைந்தாள் ஸ்மிருதி.
ஆனால் முழுவதுமாக இயல்பான நிலைக்குத் திரும்பாமல், மீண்டும் கண்கள் சொறுகப் போகும் நிலையில் தான் இருந்தான். அவனை மீண்டும் மயக்கத்திற்குச் செல்ல விடாமல் அவனின் கன்னத்தை தட்டியவள்,
“உங்களுக்கு என்னாச்சு, எப்படி மயக்கமானீங்க?” என்றாள் பதட்டக் குரலில்…
”டே…ப்..லட்,” என மிகவும் சிரமப்பட்டுச் சொல்லியவனின் வார்த்தையின் மூலம், அவன் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டவள், “என்ன டேப்லட், உங்களுக்கு டேப்லட் வேணுமா, டேப்லெட் நேம் என்ன?” என ஒவ்வொரு கேள்வியாய்க் கேட்கத் துவங்கினாள்…
”வார்ட்ரோப்ல, சென்டர் செல்ஃப்ல,” என இதையும் சொல்ல முடியாமல் சொல்லியவனின் வார்த்தைகளைப் புரிந்து கொண்டு, வேகமாக அவன் சொன்ன இடத்தில் மருந்தை தேடத் துவங்கினாள். தேடுகிறேன் என்று அந்த அலமாரியையே ஒரு வழி செய்தவள், கடைசியாக மருந்துகள் நிரப்பப்பட்டிருந்த அந்த டப்பாவைத் தேடிப் பிடித்துக் கையில் எடுத்தாள்…
வேகமாக, அவனருகில் வந்தவள், அதில் இருந்த ஒவ்வொரு மருந்தையும் எடுத்து காண்பித்தபடி, அவனுக்கான மருந்து எது என்று அவனிடம் கேட்டுக்கொண்டிருந்தாள். அந்த மருந்தை அவன் மூலம் கண்டுபிடித்தவள், குடிநீர் எடுத்து வந்து, அவனைத் தன் கரங்களால் தூக்கி எழ வைத்து, டேப்லட்டை அவன் வாயில் வைத்து நீரைப் பருக வைத்து, மாத்திரையை விழுங்கவும் வைத்தாள்…
”இந்த டேப்லட் போட்டா சரியாகிடுமா, இல்லனா ஹாஸ்பிட்டல் போலாமா?” தன் மடியில் படுத்திருந்தவனிடம் பதற்றம் குறையாமலேயே கேள்வி எழுப்பினாள்…
”இல்ல…. இன்னும் கொஞ்ச நேரத்துல நார்மலாகிடுவேன்,” என்றவனிடம், “சரி… வாங்க, ரூம்ல படுத்துக்கோங்க,” என்றவாறு, கைதாங்கலாகத் தூக்கி எழுப்பியவள், அவனைப் படுக்கைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தாள். கண் மூடியவன் சிறிது நேரம் ஓய்வு எடுக்க எண்ணினான்…
இங்கு ஸ்மிருதிக்கு இருந்த பதற்றம் இன்னும் குறைந்தபாடில்லை, ஆகவே விஷ்ணுவிற்கு அழைத்து நடந்த சம்பவங்களைப் பற்றிக் கூறினாள். “ஸ்மிருதி அவனுக்கு நீ என்ன சாப்பிடக் கொடுத்த? ஸ்வீட் எதுவும் கொடுத்தியா?” தன் நண்பனின் நிலையை கேட்டு அறிந்தவன், ஏதோ யோசித்தவனாய் இந்தக் கேள்வியை தான் அவளிடம் முதலில் எழுப்பினான்…
”ஆமாண்ணா, கொடுத்தேன். ஏன் என்னாச்சு?” என்றாள் குழப்பமாக.
”என்ன சொல்றீங்கண்ணா, நிஜமா எனக்கு இதைப்பத்தி எதுவும் தெரியாது அண்ணா,” என்றவள், “அப்படினா ஸ்வீட் சாப்பிட்டதால தான், அப்படியானதா” என்றாள் கலங்கிய குரலில்…
”ஆமா… அஜய்க்குச் சின்ன வயசுல இருந்து டயபெட்டிஸ் இருக்கு. டீ, காபி, ஜூஸ், எது குடிக்கிறதா இருந்தாலும் சுகர் ஃப்ரீயோடு தான் எடுத்துப்பான். சுகர் சேர்த்துக்கவே மாட்டான். இந்த விஷயம் நம்ம வீட்டுல எல்லாருக்கும் தெரியும், உனக்குத் தெரியாதா ஸ்மிருதி?” என்றான் விஷ்ணு. இதிலிருந்து அவனை எந்தளவிற்குத் தான் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறோம், என்பதை அறிந்த ஸ்மிருதி, தன் தவறு புரிந்து பதில் பேசாது மௌனமானாள்.
”சரி விடு, டேப்லட் எடுத்துகிட்டான்ல, தூங்கி எழுந்தா நார்மலாகிடுவான். இனி இந்த விஷயத்துல கொஞ்சம் கேர்ஃபுல்லா இரு,” என்றவன், இணைப்பைத் துண்டித்தான்.
தன்னால் தான் அஜய்க்கு இந்த நிலமை எனத் தெரியவந்த பிறகு, ஸ்மிருதிக்கு குற்ற உணர்வு வாட்டி எடுத்தது. கண்களில் கண்ணீருடன் அஜய்யைப் பார்த்தபடி கட்டிலுக்கு அருகில் தரையில் அமர்ந்திருந்தவள், சற்று நேரத்தில் எல்லாம் அமர்ந்திருந்த நிலையிலேயே தன்னையும் அறியாமல் தூங்கி விட,.. அஜய் விழித்துக் கொண்டான்,..
‘இவ ஏன் இப்படி படுத்திருக்கா’ என்று எண்ணியவன்,.. “ஸ்மிருதி” என்று அழைக்க, அவளும் விழித்துக் கொண்டாள்…
”பெட்ல படுத்துக்காம, உட்கார்ந்துட்டுத் தூங்குற, உன்னோட ப்ளேஸ்ல படுத்துக்கோ,” என்றான் அஜய். இந்த முறை அவனின் முகமும் பேச்சும் தெளிவாக இருந்தது. சிறிது நேரத்திற்க்கு முன் இருந்த நிலைமையிலிருந்து முழுதாகவே மீண்டிருந்தான்…
இது ஸ்மிருதிக்கு நிம்மதியைக் கொடுத்தாலும் மறுகணமே அழத் துவங்கினாள்…
”ரியல்லி சாரி, எனக்கு சத்தியமா உங்களுக்கு டயபெட்டிஸ் இருப்பது தெரியாது. தெரிஞ்சிருந்தா ஸ்வீட்டைச் சாப்பிட சொல்லியிருக்க மாட்டேன்,” என்றாள் அழுகையுடன்..
”எனக்குத் தெரியும், உனக்கு அது தெரியாதுன்னு. உன் மேல எந்தத் தவறும் இல்லை. எனக்கு டையபெட்டிஸ் இருக்குனு தெரிஞ்சும், நான் ஸ்வீட்டைச் சாப்பிட்டு இருக்கவே கூடாது. அது நான் பண்ண தவறு,” என்றான்.
”அதானே ஏன் நீங்க சாப்பிட்டீங்க?” என்றாள் கண்ணீரைத் துடைத்தபடி…
”ஃபர்ஸ்ட் டைம் நீ சமைச்ச சாப்பாட்டைச் சாப்பிடுறேன். அதுல ஸ்வீட்டை மட்டும் எப்படி விடுறதுன்னு கஷ்ட்டமா இருந்தது, அதான் சாப்டேன்,” என்றவன், “எனக்குத் தெரியும் இதனால் மயக்கம் வரும்னு. அதனால் தான் ஆஃபிஸ் போகல. டேப்லட் போட்டுக்கலாம்னு போன டைம் முக்கியமாக மெயில் ஒன்னு அனுப்பியிருக்கிறதா ப்ரீத்தி கிட்டருந்து கால் வந்தது. சோ, அதைச் செக் பண்ணிட்டு டேப்லட் எடுத்துக்கலாம்னு லேப்டப் கூட உட்கார்ந்துட்டேன். அப்போ தான் தலை சுற்ற ஆரம்பிச்சது. வாட்டர் எடுத்துட்டு டேப்லட் போட்டுக்கலாம்னு டைனிங் டேபிள் கிட்ட வந்தேன், மயக்கம் வந்துடுச்சு,” என்றான் நடந்ததை.
”நீங்க எப்போதுமே இப்படித் தானா, இல்ல இப்போ தான் இப்படியா?” எனச் சந்தேகப் பார்வையுடன் கேட்டாள் ஸ்மிருதி.
”எதைப் பத்தி கேட்கிற?” கண்களைச் சுருக்கிக் கேட்டவனிடம், “இந்தளவிற்கு கேர்லசா இருக்கீங்களே அதைப்பத்தித் தான் கேட்கிறேன். இன்னைக்கு நானும் இந்த வீட்டுல இருந்ததனால பிராப்ளம் பெருசா ஆகாம முடிஞ்சு போச்சு. இதே தனிமையில் இருந்தால் என்னாகியிருக்கும்?” என்றாள் சற்று கலங்கிய குரலில்..
இதில் பதில் கூறாதவன் சிரித்து சமாளித்துவிட்டு, அப்பொழுது தான் கவனித்தான், ஸ்மிருதியின் முகத்தில் தனக்காகத் தெரிந்த பயம் கலந்த வேதனையை…
இது அஜய்க்கு வியப்பாகவும் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.