Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அறம் காக்கும் அன்பு

அறம் காக்கும் அன்பு 23

அத்தியாயம் 23 

“இங்க பாருங்க சாரங்.. குழந்தையை விட்டுட்டு நாம மட்டும் எப்படி போறது?”



Advertisement

“சும்மா க்ரிஞ்சா பேசாத வினு.. சாத்விக்கை அம்மாவும் அண்ணியும் பார்த்துப்பாங்க.. அது உனக்கே தெரியும். இப்பவும் அவங்க தானே பார்த்துக்குறாங்க?”

“அதான் நானும் சொல்றேன். அவன் என்கூட அட்டாச்டு ஆக மாட்டேங்குறான். உங்க அண்ணியை தானே அம்மான்னே கூப்பிடறான்”

Advertisement

Advertisement

“இப்ப உனக்கு இது தானா பெரிய பிரச்சனை. குழந்தைங்க கமிட்மெண்ட்ஸ் எல்லாம் வேண்டாம்னு தானே என்னை கல்யாணம் செஞ்சுகிட்ட..”

இதே பதில்!

Advertisement

சாரங்கன் மட்டுமில்லாமல், அவன் அம்மா அண்ணா அண்ணி என்று அனைவரும் கூறுவது. வார்த்தைகள் வேறாக வந்தாலும் இதே பொருளை தான் குறிக்கும்.

வினோதாவிற்கு எங்காவது சென்று செத்துவிடலாமா என்று தோன்ற ஆரம்பித்து பல நாட்கள் ஆகிவிட்டது.

செய்த தவறால் அவள் அதிகமாக இழந்தது மரியாதையை. 

ராமும் சரி, அவன் வீட்டு பெரியவர்களும் சரி, இவளை தங்கமாக தான் தாங்கினார்கள். மணி மணியான பிள்ளைகள்.. எல்லாவற்றையும் விட்டு சுதந்திரம் என்ற பெயரில் என்ன செய்திருக்கிறேன் என்று நொந்து போவதை தவிற வேறு வழியும் தெரியவில்லை.

சாரங்கிற்கு தினமும் பார்ட்டி, மாதம் ஒரு அவுட்டிங், வருடம் ஒரு வெளிநாட்டு சுற்றுலா என்று இருக்க வேண்டும். உடன் நாகரிகமாக மனைவியாக வினோதா வந்தே ஆகவேண்டும்.

மூச்சு முட்டுகிறது.. என்ன வேண்டும் சொல்லு என கேட்டு, உடை, மேக்கப் சாமான்கள், ஹாண்ட்பேக் என்று தேவைக்கு அதிகமாகவே எல்லாம் வாங்கி குவித்துவிடுவான்.  வேலைகள் செய்ய ஆட்கள்.. கூட்டு குடும்பமாக இருந்தாலும் இவர்களின் சுந்தந்திரத்தில் யாரும் குறுக்கிட மாட்டார்கள். குழந்தயை மட்டும் இவளிடம் விடமாட்டார்கள். 

 

“கமான் வினு.. நிச்சயம் இந்த ட்ரிப் நாம என்ஜோய் பண்ணலாம்” என்று கொஞ்சலாக கூறினான் சாரங்கன். 

வினோதாவிற்கு சரி என்று சொல்வதை தவிற வேறு வழி இல்லை.

இருவரும் ஒரே அலுவகத்தில் தானே பணி புரிகிறார்கள். லண்டனில் நடக்கும் ஒரு கான்பரென்ஸிற்கு இவர்கள் அலுவலகம் சார்பாக சாரங்கன் செல்வதாக உள்ளது. அதனுடன் சேர்ந்து ஒரு வாரம் லீவ் போட்டு அங்கே சுற்றி பார்த்து வரலாம் என்று தான் வினோதாவை அழைக்கிறார். 

சாத்விக்கிற்கு மூன்று வயது ஆகிறது.நோஞ்சான் உடம்பு அவனுக்கு. அதனால் வெளிநாட்டு பயணத்திற்கு அவனை அழைத்து செல்ல வேண்டாம் என்று சாரங்கனின் அம்மா கூறி விட்டார்.

 

லண்டனில் உலகம் முழுவதிலும் இருந்து பல மென்பொருள் நிறுவனங்கள் இந்த கலந்தாய்வில் கலந்துகொள்கிறார்கள். அதே கலந்தாய்வில் ராமும் கலந்து கொள்ள இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் ராமின் ப்ராஜெக்ட்டிற்கு விருதும் வழங்குவதாக உள்ளது. இதை அறியாமல் சாரங்கன் வினோதாவுடன் லண்டன் வந்து சேர்ந்தார்.

“வினு, இன்னிக்கு நீ அந்த ரெட் கவுன் போட்டுக்கோயேன்.. யூ  லுக் கார்ஜியஸ் இன் இட்” என்றான் சாரங்கன்.

வினோதாவிற்கு எனக்கு பிடிக்கவில்லை என்று கத்தி அழுக வேண்டும் போல இருந்தது. அது உடம்போடு கச்சிதமாக பொருந்தும் உடை. நாள் முழுவதும் அதை அணிந்துகொண்டு இருப்பது என்றால் மூச்சு முட்டுவது போல இருக்கும். ப்ரீயாக கை கால்களை கூட அசைக்க முடியாது.

ஆசையாக தான் சொல்கிறான் கணவன். இவள் என் மனைவி என்று அனைவர் முன்பும் பெருமையாக காட்ட நினைக்கிறான். ஆனால் இவளது சௌகரியம் பற்றி யோசிக்க தோன்றவில்லை.

நிகழிச்சிக்கு சாரங்கன் விருப்பப்படி அலங்காரம் செய்து கொண்டு அவனுடன் சென்றார் வினோதா. முகத்தில் மகிழ்ச்சி மட்டும் மருந்துக்கும் இல்லை. இயந்திரகதியான வாழ்க்கை.. அங்கே சென்றதும் சம்பிரதாய நலவிசாரிப்புகள் பின் நிகழ்ச்சி ஆரம்பமானது.

சாரங்கன் அவர்கள் நிறுவனம் சார்பாக சுருக்கமாக அவரது ப்ரெசன்டேஷனை முடித்து கொண்டார். 

நிகழிச்சி மிகவும் நன்றாகவே இருந்தது. வினோதாவும் சிறிது நேரத்திலே அதனுடன் ஒன்றிவிட்டார். மிகவும் பயனுள்ள பல தொழில்நுட்பங்கள் அங்கே விவாதிக்க பட்டது. மதியம் வரை அனைத்தும் நன்றாகவே சென்றது. உணவு இடைவேளைக்கு பிறகு ராம்மின் ப்ரெசன்டேஷன்…  சிறப்பு என்று மட்டும் கூறிவிட  முடியாது.. மிக மிக சிறப்பாக இருந்தது. அனைவருமே மிகவும் பாராட்டினார்கள். சாரங்கன் மட்டும் நொடிக்கொரு முறை வினோதாவை திரும்பி பார்த்து அவளது ரியாக்ஷனை கவனித்துக்கொண்டிருந்தார். வினோதாவிற்கு மிகவும் அசௌகரியமாக இருந்தது. இது என்ன அநாகரிகம். எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனதை தெரிந்து தானே என்னை காதலிச்சு.. விவாகரத்து வாங்க என்னை தூண்டி.. கல்யாணம் செஞ்சு.. குழந்தையும் பெற்றுக்கொண்டு இப்படி பார்ப்பது? அந்த நொடி மனதளவில் சாரங்கனுடனான  உறவை வெறுத்தார். 

மாலை விருதுகள் வழங்கும்விழா.. அதில் ராம் மிகவும் ஹேண்ட்ஸோமாக இருந்தார். 

இரவு ட்ரிங்க்ஸ் பார்ட்டி.. வினோதாவிற்கு குடிப்பது பிடிக்காது. ஆனால் சாரங்கன் வாரத்தில் ஒரு நாளாவது முழு மட்டை தான். இன்று ராமை சந்தித்தது வேறு அவரை உசுப்பேற்றி இருக்க, அவர் பார்ட்டியில் முழுமூச்சாக இறங்கி விட்டார்.

தெரியாத ஊரில் இவரை எப்படி அழைத்து கொண்டு செல்வது என்று வினோதாவிற்கு மிகவும் டென்ஷனாக போனது.

ஓரமாக அமர்ந்து நகத்தை கடித்து கொண்டு அமர்ந்திருந்தார்.

ராம் இவர்களை காலையிலே பார்த்திருந்தார். இருந்தும் வந்து பேசவில்லை. ஆனால் இப்பொழுது வினோதாவின் முகத்தில் தெரிந்த பதட்டம், அப்படியே விட்டு செல்ல மனம் வரவில்லை.

‘ஹாய்’ என்று அவள் எதிரில் வந்து அமர்ந்தார்.

“ஹாய்.. கங்கிராட்ஸ் ..” என்றார் வினோதா குரலில் கொஞ்சம் தடுமாற்றத்துடன்.

“தேங்க்ஸ்.. எப்படி இருக்க வினோ.. வினோதா?”

“உண்மையை சொல்லட்டுமா? பொய் சொல்லட்டுமா?”

“நண்பர்களா பிரிஞ்சிடறோம்னு எல்லாரையும் சமாதானம் செஞ்சு பிரிஞ்சோம்.. ஆனா நண்பர்களா நம்மாள இருக்க முடியலை இல்ல? வினோ..வினோதா..”

வினோதா ஆம் என்று தலையை மட்டும் ஆட்டினார்.

“உண்மையை சொல்லு.. நீ டென்ஷனா இருக்கிறது தெரிஞ்சு பேசாம போக மனசு வரலை. அதான் வந்தேன்”

“நீங்க ஏன் என்னை தடுக்கலை.. எனக்குள்ள எதோ பேய் புகுந்துடுச்சு போல.. நானே அழகா இருந்த வாழ்க்கையை அலங்கோலமா மாத்திட்டேன். முட்டாள்  தனமா நான் தான் முடிவு செஞ்சேன்னா, நீங்க என்னை தடுத்திருக்கலாம் இல்ல? என் தப்பை எடுத்து சொல்லி இருக்கலாமே? நீங்க சொன்னா நான் கண்டிப்பா புரிஞ்சிட்டு இருந்திருப்பேன் இல்லையா?” கண்கள் கலங்க ராமின் முகத்தை பார்த்து கேட்டார் வினோதா.

இதற்கு என்ன பதில் சொல்வது? அதுவும் பிரிஞ்சு சில வருடங்கள் ஆன பிறகு இப்பொழுது இது என்ன கேள்வி? ராமிற்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை.

வினோதாவின் நிர்கதியான தோற்றம் மனதிற்கு மிகவும் வருத்தமளித்தது.

“உங்களை தப்பு சொல்லல ராம்.. நான் தான் தப்பு.. அது எனக்கு புரியுது.. நீங்க என்னை தப்பு செய்ய விடாம தடுத்திருக்கலாம்னு நான் நினைக்காத நாள் இல்லை..”

“எங்க அப்பா சொன்னது சரி தான் வினோதா.. மெத்த படிச்ச மேதாவி மாதிரி தான் நீயும் நானும்.. எல்லாம் சரியாய் செய்யணும்னு நாமளே எல்லாம் செஞ்சுட்டு..  முற்போக்கா சிந்திக்கிறோம்னு .. கண்டதையும் செஞ்சு அலங்கோலமா தான் நிக்குறோம்”

“உங்களுக்கு என்ன ராம்? நீங்க ஆசை பட்ட மாதிரி சாதிச்சிருக்கீங்க தானே?”

“சாதிச்சிருக்கேன் தான்.. ஆனா சந்தோசமா இருக்கேன்னா தெரியலை”

“பிள்ளைங்களை நான் பார்த்தே பல வருஷம் ஆச்சு. உங்க தங்கச்சி வரா பெரிய பெண்ணானப்ப பேசுனாங்க. நான் கொஞ்சம் ரூடா பேசிட்டேன். அதுக்கப்புறம் அவங்களும் யாரும் பேசலை நானும் பேசுற சூழ்நிலையில இல்ல” 

“பிள்ளைங்க ரொம்ப நல்லா இருக்காங்க. என்கிட்டே கூட இப்ப எல்லாம் சரியா பேசுறது இல்ல. ஆனா அவங்க மணிகூட ரொம்பவே ஹாப்பியா இருக்காங்க வினோதா.. நான் இங்க வாங்கன்னு சொன்னப்போ முடியாதுன்னு சொல்லிட்டாங்க.”

“ஓ “

“உனக்கு தெரியும் தானே நம்ம வராவோட ப்ரண்ட்  வீர்யா, விட்டா இங்க வந்து என்னை அடிச்சிருப்பா..”

“நம்ம வராவோட உயிர் தோழி ஆச்சே?”

“ராம்.. நடந்ததை நம்மளால மாத்த முடியாது இல்ல? நான் ஏன் ராம் இப்படி புத்திகெட்டு போனேன். நாம எவ்வளவு பொறுப்பான பேரெண்ட்ஸ்ஸா இருந்தோம்? திரும்ப பழைய மாதிரி நீ நான் வரா வல்லபன் நம்ம வீடு.. இதை எல்லாம் சாத்தியம் இல்லாம செஞ்சுட்டேன் இல்ல?”

வினோதாவின் இந்த கேள்வியில் ராமிற்கு சர்வமும் அடங்கியது.

அவன் பதில் சொல்லும் முன்பே, தள்ளாடியபடி இவர்கள் டேபிளுக்கு வந்தார் சாரங்கன். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை அப்பொழுது தான்  கவனித்து இருந்தார். உடனே வந்துவிட்டார்.

“யூ..யூ.. ****” என்று வினோதாவை நோக்கி கெட்ட வார்த்தைகள் இரண்டை அசால்ட்டாக வீசினார்.

ராமிற்கு தர்மசங்கடமாக இருந்தது. வினோதாவின் நிலைக்கு நானும் காரணமோ என்று குற்ற உணர்வு வேறு இப்பொழுது சேர்ந்துகொண்டது.

பின் வினோதா அவரை கை தாங்களாக எப்படியோ அழைத்து கொண்டு சென்றார். உதவினால் சாரங்கன் மேற்கொண்டு என்ன பேசுவாரோ என்று பயந்து அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்து நின்றார் ராம்.

ரூமிற்கு வந்ததும் வினோதாவிற்கு எல்லாம் கசந்தது. எப்படி சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தேன். இப்படி அசிங்கப்பட்டு இவன் கூட இருக்கத்தான் வேணுமா? அந்த நிமிடம்.. சாரங்கனை மனதார வெறுத்தார். 

அவர் செய்த காரியத்தால் உண்மையான நட்புகளை இழந்தார். பெற்றோர்கள் சகோதரன் என்று யாரும் இவளுடன் பேசுவதில்லை. இவர்கள் பேசாவிட்டால் என்ன, என் வாழ்க்கை என் இஷ்டம் என்று நடந்துகொண்டதின் பயன்.

இரவு முழுவதும் தூங்கவே இல்லை. மறுநாள் காலை திரும்பி பார்த்தால் சாரங்கன் மல்லாக்க படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். இரவு உள்ளே சென்ற சரக்கு அவரை இப்பொழுதைக்கு எழுந்திரிக்க விடாது என்று புரிந்தது.

மெல்ல கதவை சாற்றிக்கொண்டு வெளியே வந்தார். ஹோட்டல் பக்கத்தில் இருந்த ஒரு பார்க்கிற்கு சென்றார்.

இனி என்ன? யாருமில்லாமல் அனாதையாக நிற்பது ஒரு சுயபச்சாதாபத்தை கொடுத்தது.

ராமிடம் பேசுவோமா என்று தோன்ற, உடனே அவருக்கு அழைத்தார்.

“சொல்லு வினோதா… எனி ப்ராப்ளம்?”

“எனி ப்ராப்ளம் இல்ல.. எல்லாமே ப்ராப்ளம் தான்.. கொஞ்ச நேரம் உங்ககிட்ட பேச முடியுமா? திரும்ப உங்களை மீட் பண்ண முடியுமான்னு தெரியலை. எனக்கு யார் கிட்ட பேசுறதுன்னு தெரியலை.. ஐ பீல் ஸ்டக்”

“நாம பேசுறதை சாரங்கன் பார்த்தா பிரச்சனையாயிடுமே?”

“இல்ல.. இப்ப தூங்கிட்டு இருக்கார்.. ஒரு ஒன் அவர்.. “

ஒரு கஃபே அட்ரஸ் அனுப்பி அங்கேவருமாறு கூறினார்.

இருவரும் அமர்ந்ததும், ராம் சென்று இருவருக்கும் கப்பசினோ வாங்கி வந்தார்.

அது வினோதாவிற்கு பிடித்தமான ட்ரிங்க்.. சாரங்கன் ஒரு நாள்கூட இவளுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டது இல்லை. கவனித்ததும் இல்லை.. இருவரையும் ஒப்பிடுவது தவறு என்று அவளுக்கே புரிகிறது ஆனாலும் தவிர்க்க முடியவில்லை

“ராம்.. ஒரு நண்பனா உன்கிட்ட ஹெல்ப் கேட்கிறேன்.. இப்ப நான் என்ன செய்யட்டும்.. எனக்கே என்னை பிடிக்கிறது இல்லை.. அடிக்கடி சூசைட் தாட்ஸ் வருது.. குற்றவுணர்ச்சி.. தாழ்வு மனப்பாண்மை.. இப்படி.. “

“இங்க பாரு வினோதா, முதல்ல அடுத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிக்கிறதை விடு.. நாம சேர்ந்து தானே பிரிய முடிவு செஞ்சோம். சட்டப்படி விவாகரத்து செஞ்சு தான் இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கிட்ட.. அது தப்புன்னு நினைக்காத..”

“ராம்.. “

“எமோஷனலா  யோசிக்காத.. நேத்து அவன் உன்கிட்ட நடந்துகிட்டு விதத்துல இருந்தே உன் நிலைமை எனக்கு புரியது. எதுக்காக நீ இந்த வாழ்க்கையை சகிச்சுக்கணும்?”

“மறுபடியும் டிவோர்ஸ் வாங்குன்னா எல்லாரும் சிரிக்க மாட்டங்க?”

“யார் சிரிச்சா என்ன.. அதுக்காக தினம் தினம் சாக முடியுமா?” 

“பிரிஞ்சு எங்கே போவேன்?”

“நீ வேளைக்கு போற.. யூ ஆர் இன்டிபென்டென்ட்.. உன்னால தனியா வாழ முடியாதா? நான் இப்ப தனியா வாழலை?”

“சாரங்கன் என்னை அவ்வளவு ஈசியா விட மாட்டாங்க..”

“தெரிஞ்சோ தெரியாமலேயே போய் மாட்டிக்கிட்ட.. போராடி தான்  வெளியே வரணும்… நம்ம தப்பு செஞ்சதாவே இருக்கட்டும். அதுக்கான தண்டனையை நிறையவே அனுப்பிச்சிட்ட.. தைரியமா முடிவு எடு வினோதா.. என்னால முடிஞ்ச உதவியை கண்டிப்பா செய்றேன். இதை கண்டிப்பா ஒரு நண்பனா தான் சொல்றேன்”

“தேங்க்ஸ் ராம்.. இப்ப தான் கொஞ்சம் தெளிவு கிடைச்ச மாதிரி இருக்கு.. நான் கிளம்புறேன்” என்று கிளம்பிவிட்டார்.

ஊருக்கு திரும்பியதும், சாரங்கனை விவாகரத்து செய்ய மனு தாக்கல் செய்தார்.

சாரங்கன் ஒத்து கொள்ளவே இல்லை.

விவாகரத்து மனு கோர்ட்டில் உள்ளது. இனி என்ன என்று கேள்வியோடு நாட்களை நகர்த்தி கொண்டிருக்கிறார்.

———————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!