Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா 24

அத்தியாயம் 24

​”ஹெலோ ஸ்மிருதி, நான் நிவி,” புது எண்ணிலிருந்து அழைப்பு வரவே, யோசனையுடன் அழைப்பை ஏற்று எடுத்துக் காதில் வைத்த ஸ்மிருதி நிவிதாவின் குரலில் மௌனமாகிப் போனாள்…



Advertisement

​”ஹெலோ ஸ்மிருதி, லைன்ல இருக்க தானே?” என்றாள் பதில் வராமல் மௌனமாய் இருந்த ஸ்மிருதியிடம்…

​மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவள்,,.. “ஹாங் இருக்கேன், சொல்லுங்க” என்றாள் சிறு தயக்கத்துடன்…

Advertisement

Advertisement

​”என் மேல கோபமா இருக்கியா ஸ்மிருதி?” என்று கேட்டவள்,.. “அன்னைக்கு சொன்னதைத்தான் இன்னைக்கும் சொல்றேன், நான் உனக்கு ஹெல்ப் பண்ணணும்னு நெனச்சு தான் அஜய்யைப் பத்தின உண்மையைச் சொன்னேன். நீ எனக்கு யாரோவா இருந்தாலும் என்னமோ தெரியல, உன் மேல எனக்கு அக்கறை ஏற்பட்டதால, மறைக்காம சொல்லிட்டேன். இதனால நீ என்னை தப்பா  மட்டும் நினைச்சிடாத,” என்றாள் வருந்திய குரலில்…

​ஏனோ ஸ்மிருதிக்கு மனமெல்லாம் உறுத்த தொடங்கியது, மேலும் இரவு அஜய் போனில் உரையாடிய சொற்களும் நினைவில் வந்து போனது…

Advertisement

தொண்டையை செருமிக் கொண்டவள்,.. “நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை, எனக்கு உங்க மேல எந்தக் கோபமும் இல்ல,” என்றாள் ஸ்மிருதி…

​”தேங்க்ஸ் ஸ்மிருதி,… இப்போ தான் எனக்கு ரிலேக்ஸ்டா இருக்கு,” என்றவள், “ஏன் ஸ்மிருதி உன் வாய்ஸ்லாம் டல்லா இருக்கு?” என்றாள் அக்கறையாய்….

​”அது… அப்படியெல்லாம் எதுவும் இல்ல, நான் நல்லா தான் பேசுறேன்,” என்றாள்…

​”ஓகே ஸ்மிருதி,… அப்புறம் முடிஞ்சா அஜய்யைக் கொஞ்சம் வாட்ச் பண்ணி, உனக்கு மட்டுமே சொந்தமாக்கிக்கோ, இப்போதைக்கு என்னால இதை மட்டும் தான் சொல்ல முடியும், நான் அப்புறம் பேசுறேன்,” என இணைப்பைத் துண்டித்து விட்டாள்,..

‘எதுக்காக அவர்… ப்ச்… இது உண்மையா இருக்குமா?’ மனம் ஒரு பக்கம் ‘இல்ல’, என்று அழுத்தமாகச் சொன்னது, ஆனால் அடுத்த கணமே.. ‘ஆனா நைட் அவர் பேசுனதைக் கேட்ட பிறகு உண்மையா இருக்குமானும் தோணுது,’ எனத் தலையைத் தாங்கிக்கொண்டவள், ‘எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது, நான் என்ன பாவம் பண்ணேன், எப்போதுமே அந்தக் கடவுள் என்னை மட்டும் ஏன் சோதிச்சிகிட்டே இருக்காரு?’ என்று புலம்பியவளுக்குக் கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தது…

​மதிய உணவிற்காக அஜய் வீட்டிற்கு வர, வழக்கம் போல் அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைத்தாள் ஸ்மிருதி. அவன் சாப்பாட்டில் கை வைக்கப் போன நேரம் சரியாக அவனின் போன் ஒலித்தது.

போனை கையில் எடுத்துத் திரையில் வந்த பெயரைப் பார்த்தவன், இன்றும் எழுந்து தனியே பேச சென்று விட்டான்,

​ஸ்மிருதிக்கு இது அதிக வேதனையைக் கொடுத்தது…

‘ஒரு தடவை கூட அவர் என் முன்னாடி ஃபோன் பேச மாட்டேங்கிறார், அப்படினா இதுக்கு என்ன அர்த்தம்? அவர் பேசுறது எனக்குத் தெரியக் கூடாதுனு நினைக்கிறார்னு தானே அர்த்தம்!’ மனதில் நினைக்கும் போதே மிகவும் வலித்தது…

கொஞ்ச நேரத்தில் ​அவன் உரையாடி முடித்து வர, தனது வலியை மறைத்துக்கொண்டவள், அவனுக்குப் பரிமாற ஆரம்பித்தாள். அவன் அலுவலகம் கிளம்பியதும் குழப்பத்துடன் மெத்தையில் வந்து அமர்ந்தவள், ‘அவர் கிட்ட இதைப்பத்தி கேட்கலாமா? கேட்டா மறைக்காம உண்மையைச் சொல்லுவாரா, இல்லனா நான் அவரைத் தப்பா நினைச்சிட்டேன்னு என் மேல வருத்தப்படுவாரோ’

​’இல்ல இல்ல நான் அவர் கிட்ட கேட்கப் போறதில்ல, நானே உண்மை என்னனு அவருக்குத் தெரியாம கண்டுபிடிக்கிறேன்.’

​’பட் எப்படி? எப்படி நான் அதை கண்டுபிடிக்கிறது? எனக்கு எதுவும் புரியல, அண்ணா கிட்ட சொல்லலாமா..?’

​’இல்ல வேண்டாம், நான் நினைக்கிறது தப்பா இருந்து, இது அண்ணன் மூலமா அவருக்குத் தெரிய வந்தா ரொம்ப வருத்தப்படுவாரு, நான் தான் வேற ஏதாவது செய்தாகணும்’ எனப் பலவாறாக யோசித்துக்கொண்டிருந்தாள்.

​**********

​”ஸ்மிருதி எப்படி டா இருக்க?” என்றார் சகுந்தலா போனில் தனது மகளிடம்.

​”நல்லா இருக்கேன் மா,” என்றாள் குரலில் சுரத்தையே இல்லாமல் ஸ்மிருதி.

​”என்னடா குரல்லாம் ஒரு மாதிரியா இருக்கு, உடம்பு எதுவும் முடியலயா?” என்றார் பதட்டப்பட்ட குரலில்…

​”அதெல்லாம் இல்லமா, நான் நல்லா இருக்கேன்,” என்றாள் சற்று குரலைத் தெளிவாக்கி…

​”ம்ம்.. என்னடா மாப்பிளை கிட்ட சமாதானம் ஆகிட்டியா, விஷயம் கேள்விப்பட்டேன்,” என்றார் உற்சாகக் குரலில்…

​”என்ன கேள்விப்பட்டமா?” என்றாள் குழப்பத்துடன்.

​”அதான் டா, மாப்பிளை கூடச் சிரித்துப் பேச ஆரம்பிச்சிட்டியாமே, ரெண்டு பேரும் ஏதோ ரிசப்ஷனுக்குப் போனதா உன்னோட அண்ணன் சொன்னானேடா,” என்றார் சகுந்தலா…

​’அவர் அண்ணன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவாரு போல’ என நினைத்தவள், “ஆமா மா,” என்றாள்…

​”சரி சரி… ரொம்ப சந்தோசம், சீக்கிரமே உங்க வாழ்க்கை நல்லபடியா ஆரம்பிக்கணும், அந்தத் தெய்வம் தான் அருள்புரியணும்,” என்றார்…

ஸ்மிருதிக்குத் தன் அன்னையின் இந்த வார்த்தைகள் நெருடலை உண்டாக்கியது. அஜய் இரவு பேசிய சொற்கள் மீண்டும் மீண்டும் அருகில் கேட்பது போல் இருந்தது. அவளின் மனதை அந்தச் சொற்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கண்ணீரில் மூழ்கச் செய்து கொண்டிருந்தது. இன்னும் சில நிமிடம் தன் அன்னையிடம் உரையாடியவள், இணைப்பைத் துண்டித்தாள்…

​

​அஜய் வீட்டிற்கு வந்த நேரம் இரவு எட்டு மணியாகிருந்தது. வந்ததும் தனது இதர வேலைகளை முடித்துவிட்டு ஹாலின் சோஃபாவில் தனது மடிக்கணினியுடன் அமர்ந்து விட்டான்…

​அப்போது தான் ஸ்மிருதி இரவு உணவைச் சமைத்து விட்டு அறைக்கு வந்தாள். வந்தவளுக்கு மேஜையின் மீதிருந்த அஜய்யின் போன் கண்களில் பட்டது.

தீவிரமாக யோசித்தவள், அஜய் பார்க்காதவாறு போனை கையில் எடுத்தாள். அதனைத் திறக்க நினைத்தவளுக்கு பாஸ்வேர்ட் கேட்டது. கோபம் தலைக்கு மேல் ஏறியது,

கோபத்தில் போனை நொறுக்கிவிடும் முன் அதனை இருந்த இடத்தில் வைத்துவிட்டாள்.

​அன்றைய இரவும் சரியான தூக்கம் இல்லாமலேயே போனது ஸ்மிருதிக்கு. மறுநாள் ‘அவரைப் பத்தி எப்படி கண்டுபிடிக்கிறது?’ என யோசித்தவளுக்கு, அஜய்யின் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஞாபகத்தில் வந்தது…

​அஜய்யின் விசிட்டிங் கார்டை எடுத்து, அதிலிருந்த எண்ணிற்கு அழைத்தாள். ரிங் போனது. நான்காவது ரிங்கில், “ஹெலோ… ஏகே கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்,” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது…

​”ஹாங் ஹெலோ,” என்றாள் ஸ்மிருதி சிறிது தடுமாறியபடி.

​”சொல்லுங்க மேம்,” என்றாள் அந்தப் பெண்…

​”அது,… நான் உங்க சீஃப் எம்.டி. கிட்ட பேசணும்,” என்றாள் ஸ்மிருதி.

​”ஸாரி மேம், நீங்க ரிசப்ஷனுக்குக் கால் பண்ணிருக்கீங்க, சார் கிட்ட பேச முடியாது, அவர் கிட்ட பேசனும்னா நீங்க டைரக்டா அவருக்கே கால் பண்ணலாம்,” என்றாள் அந்தப் பெண்.

​”ஓகே.. அண்ட் எனக்கு ஒரு இன்ஃபர்மேஷன் வேணும்,” என்றாள் ஸ்மிருதி.

​”சொல்லுங்க மேம்,” என்றாள் அவள்.

​”அது உங்க சார் இப்போ ஆஃபீஸ்ல தான் இருக்காரா, ஐ மீன் நான் இப்போ வந்தா அவரை மீட் பண்ண முடியுமா?” என்றாள்.

​”நோ மேம், சார் அவரோட P.A கூட வெளியே போயிருக்கார்,” இதைக் கேட்டதும் ஸ்மிருதிக்கு அதிர்ச்சியும் அழுகையும் ஒரு சேர வந்தது.

​”எ.. எங்கே போயிருக்காங்க?” என்றாள் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு…

​”எனக்கு எப்படி மேம் தெரியும், அண்ட் நீங்க யாரு? சார் கிட்ட கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் விஷயமா பேசனுமா, நாளைக்கு அப்பாயின்மென்ட் போடட்டுமா…” என்றாள்.

​”தேவை இல்ல,” என்றவாறு அந்த நொடியே இணைப்பைத் துண்டித்தாள்.

​’எதுக்காக அந்த பி.ஏ. கூட அவர் வெளிய போகணும், ஏன் அவர் இப்படியெல்லாம் பண்ணுறாரு, நான் அவரை எந்தளவுக்கு நல்லவர்னு நினைச்சேன், ச்சே’ என்றவள் விசும்பி அழுதாள்.

​’என்னால இப்போ கூட அவரைத் தவறாக நினைக்க முடியல, ஆனா  காதால கேட்ட பிறகும் அத நம்பாம இருக்க முடியல,’

​’அவருக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருந்தா எதற்காக என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டாரு, என்னோட லைஃப் மறுபடியும் மண்ணோடு மண்ணா போயிடுச்சு,’ என முகத்தை இரு கரங்களால் மூடிக் கொண்டு அழுதாள்…

************

​

​”ஹேய் ஸ்மிருதி என்னாச்சு முகம் லாம் வாடிப் போயிருக்கு?” தனது வேதனை தன்னை வாட்டி எடுக்க, மனதை இலகுவாக வைக்க வேண்டி மிதுர்ளாவின் வீட்டிற்கு வந்தாள் ஸ்மிருதி. அவளின் முகத்தைக் கணித்துத் தான் மிதுர்ளா இந்தக் கேள்வியை எழுப்பினாள்…

​”அப்படியெல்லாம் எதுவும் இல்லக்கா, காலைல இருந்தே தலைவலி,” என்றாள் ஸ்மிருதி.

​”டேப்லட் போட்டியா, இப்போ பரவால்லையா, இல்லனா ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடலாமா?” அக்கறையாகக் கேட்டாள் மிதுர்ளா…

​”இல்லக்கா, இப்போ பெட்டர்,” என்று  சொன்னவள்,. ​”அக்கா… நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?” என்றாள் தயக்கத்துடன்…

​”கேளு ஸ்மிருதி,…” என்றாள் மிதுர்ளா.

​”அது,… உங்க ஹஸ்பண்ட் பிஹேவியர்ல உங்களுக்கு என்னைக்காவது சந்தேகம் வந்திருக்கா?” என தயக்கத்துடன் தனது சந்தேகத்தைக் கேட்டாள்.

​கோபப்படுவாளோ என நினைத்த ஸ்மிருதி அவள் சிரிப்பைக் கண்டு குழம்பி போய் பார்த்தாள்.

​”உனக்கு ஏன் இப்போ இப்படியொரு டவுட்?” என்றாள் மிதுர்ளா.

​”இல்ல சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னு தான்,” என்றாள் ஸ்மிருதி.

​”ஹ்ம்ம்…” என்றவள் “வந்திருக்கு ஸ்மிருதி, ஒரு தடவை வந்திருக்கு. என் ஹஸ்பண்ட் தனியா போய் யார் கூடவோ கொஞ்சிக் கொஞ்சி பேசிட்டு இருந்தாரு, அப்புறம் கொஞ்ச நேரத்திலேயே ‘இந்த விஷயம் யாருக்கும் தெரியாது, இது நமக்குள்ளேயே தான் இருக்கும், நீ இதைப்பத்தி கவலைப்படாத’ அப்படி இப்படின்னு இந்த மாதிரி ரொம்ப ஓவரா பேசிட்டு இருந்தாரு…. அதைக் கேட்டு எனக்கு அவர் மேல சந்தேகமும் கோபமும் எழுந்தது, உடனே அவர்கிட்ட போய் யார் கிட்ட அப்படி கொஞ்சிக் கொஞ்சி பேசுறீங்கன்னு வெளிப்படையாக் கேட்டுட்டேன்….

​அப்புறம் தான் தெரிஞ்சது அவர் கொஞ்சிக் கொஞ்சி பேசிக்கிட்டு இருந்தது நான்கு வயதுச் சிறுமி கிட்ட என்பது. அந்தக் குழந்தையோட அம்மா ரொம்பக் கஷ்டப்படுறவங்க. அந்தக் பொண்ணுக்கு விகாஷ் பணஉதவி செய்திருக்காரு. அதைத் தான் ‘இது நமக்குள்ளேயே இருக்கட்டும்’ அப்படினு பேசியிருக்கார். அதோட ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா அந்தக் குழந்தையோட அம்மா வேறு யாருமில்லை, அவரோட சொந்த அத்தை மகள். வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செஞ்சிக்கிட்டவங்க, தன் குடும்பத்ததால் ஒதுக்கப்பட்டவங்க. அந்தப் பொண்ணோட ஹஸ்பண்ட்க்கு வருமானம் இல்லாம குழந்தையை வச்சிகிட்டு கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்திருக்கா, அந்தப் பொண்ணுக்கு இவர் பணம் கொடுத்த விஷயம் அவரோட ஃபேமிலிக்குத் தெரிஞ்சா பெரிய போரே உருவாகிடும், அதான் அந்தப் பொண்ணு பயந்திருக்கா,

​விஷயம் இது தான் என எனக்குத் தெரிய வந்ததும் நான் அவரைச் சந்தேகப்பட்டது குற்றவுணர்வாக இருந்தது, அவர் கிட்ட மன்னிப்புக் கேட்டேன்,” என்று முடித்தவள்,

ஸ்மிருதியை நோக்கி, “இது தான் வாழ்க்கை ஸ்மிருதி, நமக்குக் கணவர் கிட்ட சந்தேகம் எழுந்தா உடனே அதைப்பற்றி நம்ம ஹஸ்பண்ட் கிட்ட கேட்டுடனும், அப்போ தான் வாழ்க்கை சந்தோசமாக கடக்கும், உனக்கு இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன் வந்தா கூட தயங்காம அண்ணா கிட்ட கேட்டுடு,” என்றாள் மிதுர்ளா.

​

​மிதுர்ளாவின் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு வந்த ஸ்மிருதி, மிதுர்ளா சொன்னதைப் பற்றியே பலவாறாக யோசித்து, இன்று வாய்விட்டே அஜய்யிடம் கேட்டுவிடலாம் என முடிவெடுத்தாள்…

​வேலை முடிந்து அஜய்யும் வீட்டிற்கு வந்தான். அவனுக்குக் காஃபி கலந்து கொடுத்தவள், தான் நினைப்பதைப் பற்றி கேட்டு விடலாம் என எண்ணினாள்.

அவள் வாயைத் திறக்கப் போன நேரம் சரியாகச் ஸ்மிருதியின் போன் ஒலித்தது, ​வேறு வழி இல்லாது அறைக்குள் சென்று தனது போனை எடுத்தவள், அதில் நிவிதா எனும் பெயர் வருவதைக் கண்டு முகம் சுழித்தாள்…

அடித்துக்கொண்டே இருந்த காரணத்தினால் ஒரு கட்டத்தில் அழைப்பை ஏற்று காதிற்குக் கொண்டு சென்றாள். “ஹெலோ ஸ்மிருதி, என்ன அஜய் வீட்டிக்கு வந்துட்டானா?” என்றாள் எடுத்த எடுப்பிலேயே…

​”ஹாங் ஆமா,” என்றாள் தயக்கத்துடன்…

​”ஓகே… நான் உனக்கு ஒரு ஃபோட்டோ சென்ட் பண்ணிருந்தேனே நீ பார்க்கலயா?” என்றாள் நிவிதா….

​”என்ன ஃபோட்டோ?” என்றாள் ஸ்மிருதி புரியாமல்.

​”நான் லைன்ல இருக்கேன் நீ செக் பண்ணு,” என்றாள் நிவிதா.

​’என்ன ஃபோட்டோவாக இருக்கும்?’ என யோசித்தபடியே, அவள் நிவிதா அனுப்பியிருக்கும் ஃபோட்டோவைப் பார்த்தாள். அதனைப் பார்த்தவளுக்கு கண்கள் கலங்கியது. அது அஜய் மற்றும் அவனுடன் ஒரு பெண் சேர்ந்து இருந்த ஃபோட்டோ. ஏதோ ஆளரவம் இல்லாத சாலையோரம் எடுத்தது போல் பதிவாகியிருந்தது.

​போனைக் காதிற்குக் கொண்டு சென்றவள், “இந்த ஃபோட்டோல இருக்க பொண்ணு தான் பிரீத்தியா?” என்றாள் நிவிதாவிடம்…

​”ஆமா ஸ்மிருதி, இது இன்னைக்கு எடுத்த ஃபோட்டோ. அவங்க சந்திப்பு இன்னும் தொடரத்தான் செய்யுது. உன்னை நம்ப வைக்க வேறு வழி தெரியாம தான், இந்த ஃபோட்டோவை உனக்கு அனுப்பினேன், இப்போ உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்,” என்றாள்…

​”நான் அவர் கிட்ட இதைப் பத்தி பேசிப் பார்க்கலாம்னு இருக்கேன்,” என்றாள் ஸ்மிருதி…

​”கண்டிப்பா நீ பேசணும் ஸ்மிருதி, இப்போ நீ அவன் கிட்ட இதைப் பத்திக் கேட்டீன்னா, அவன் என்னை தப்பா சொல்ல என்ன ப்ரூஃப் இருக்குன்னு கேட்பான், நீ என்ன சொல்லுவ சொல்லு,” என்றவள், “இப்போ நீ அவன் கிட்ட கேட்கிறதை விட, அவனை கையும் களவுமாகக் பிடித்து, அவனைப் பத்தி நீ நேரடியாக தெரிந்து கொண்ட அப்புறம் அவன் கிட்ட இதைப் பத்தி கேட்பது சரியாக இருக்கும்னு எனக்குத் தோணுது. எனக்குத் தோணியதை சொல்லிட்டேன், அதுக்கு மேல் உன் இஷ்டம், நான் உனக்கு டுமாரோ கால் பண்ணுறேன்,” என சொல்லிவிட்டு வைத்து விட்டாள்,..

​தலையில் கைவைத்தபடி மெத்தையில் அமர்ந்தவள் அந்த ஃபோட்டோவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அஜய்யும் பிரீத்தியும் நேரெதிரே நின்றனர், மற்றபடி அதில் தவறாக எதுவும் தோன்றவில்லை ஸ்மிருதிக்கு.

​’பிரீத்தி அவரோட பி.ஏ. அப்படிங்கிறதால வொர்க் விஷயமா பேசிகிட்டு இருந்திருக்கலாம், அப்போ எடுத்த ஃபோட்டோவாக இருக்கலாம்’ என ஒரு மனம் சொல்ல,

​’இந்த ப்ளேஸ்ஸை பார்த்தாலே ஈ காக்கா கூட இல்லாம வெறிச்சோடி இருக்க மாதிரி இருக்கு, இந்த மாதிரி ஒரு இடத்துக்கு எதுக்காக இவங்க ரெண்டு பேரும் வரணும்?’ என்றது மற்றொரு மனம்…

​நிவிதா கூறியதை போல் இல்லையென்றாலும், அஜய் தவறானவர் இல்லை என்ற உண்மையை கண்டுபிடித்த பிறகே அவனிடம் இதைப்பற்றிச் சொல்லலாம் என இப்போதைக்கு அஜய்யிடம் கேட்காமல் அமைதியாக இருந்து கொண்டாள்…

​அடுத்த நாளும் ஸ்மிருதிக்குக் குழப்பத்துடன் தான் கழிந்தது. அன்றைய நாளில் தனது அன்றாட வேளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவளுக்கு மீண்டும் நிவிதாவிடமிருந்து ஒரு செய்தி வந்தது. அந்தச் செய்தியைக் கேட்ட ஸ்மிருதிக்கு இத்தனை நாள் அஜய் மீதி வைத்திருந்த மொத்த நம்பிக்கையும் தவிடுபிடியானதை போல் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!