Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா

என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா 4

அத்தியாயம் – 4

ஸ்மிருதியின் கோபத்தை அதிகப்படுத்த விரும்பாமல், அறையை விட்டு வெளியே வந்த அஜய், அறையின் வாசலில் ஹேமாவை கண்டதும் செய்வதறியாது நின்றான், அவளிடம் எதுவும் பேசாமல் அவன் அமைதியாக நழுவ இருந்த நேரம், அவனின் கரத்தை உரிமையாக பற்றியவாறு அவனை எங்கோ இழுத்து கொண்டு சென்றாள் ஹேமா…



Advertisement

வீட்டின் மொட்டைமாடியில் இருவரும் நின்றிருக்க, அஜய் வெளியே வேடிக்கை பார்த்தபடி இருந்தவாரும், ஹேமா அவனையே வெறித்து பார்த்தபடி இருந்தவாரும் மௌனமாகவே நின்றனர்,,… அந்த மௌனத்தை கலைக்கும் விதமாக ஹேமாவே, “உங்க வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேண்ணா” என தன் வேதனையை அடக்க முடியாமல் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு வெடித்து அழுதாள்,..

“ஹேய்  வர்ஷு, நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்லம்மா,” என அவளை தேற்றி அழுகையை குறைக்க முயன்றாள் அவளின் உடன் பிறந்த தமையானான அஜய் கிருஷ்ணா,…

Advertisement

Advertisement

“இல்லண்ணா,… என்னால தானே நீங்க இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டீங்க, நான் பெரிய தப்பு பண்ணிட்டேனோன்னு தோணுது, ஸ்மிருதி நல்ல பொண்ணுன்னு நினைச்சேன்,  ஆனா அவ இப்படியெல்லாம் நடந்துப்பான்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லண்ணா” என்றாள்…

“நாம ஸ்மிருதியையும் தவறு சொல்லிட முடியாது வர்ஷு, அவ பாஸ்ட் லைஃப்ல நடந்ததை ஏத்துக்க முடியாம அவ எல்லார் மேலயும் கோபத்தை காட்டிக்கிட்டு இருக்கா” என்று ஸ்மிருதிக்கு ஆதரவாக பேசினான் அஜய்…

Advertisement

“உங்களோட லைஃப்லையும் அதே போல ஒரு கோர சம்பவம் தானே அண்ணா நடந்திருக்கு, அவளாவது அவளுடைய முதல் கணவரை மட்டும் தான் பறிகொடுத்து நின்னா, ஆனா நீங்க உங்க மனைவியோட சேர்த்து உங்க ரெண்டு குழந்தைகளையும்ல பறி கொடுத்து இருக்கீங்க, உண்மையை சொல்ல போனா அவளை விட உங்களுக்கு தான் இழப்பு அதிகம்” என்றாள்,…..

“நடந்ததை நான் மறக்க முயற்சி செஞ்சிக்கிட்டு இருக்கும் போது, அதை பத்தியே நியாபக படுத்தாத வர்ஷு” என அவளை விட்டு விலகி நின்றான் அஜய்,.. “உங்க வேதனை எனக்கு புரியாம இல்ல அண்ணா, ஆனா ஸ்மிருதியோட இந்த செய்கைகளை பார்த்துகிட்டு என்னால அமைதியாக இருக்க முடியல, ரொம்ப கஷ்டமா இருக்குண்ணா” என்றாள் வேதனையோடு,…

“கொஞ்ச நாள் போனா ஸ்மிருதி நார்மலாகிடுவா, அதுவரைக்கும் நீ அவ கிட்ட எதுவும் பேசாத வர்ஷு இந்த அண்ணனுக்காக” என அஜய் சொல்ல, “முடியல அண்ணா, ரொம்ப வேதனையா இருக்கு, நான் ஸ்மிருதி கிட்ட பேசட்டுமா” என்று சொல்லிய தன் தங்கையிடம், “அவ கிட்ட பேசி அவ மனசை இன்னும் கஷ்டபடுத்தாத வர்ஷு, அவ என்கிட்ட அந்த மாதிரி நடந்துகிறதுனால எனக்கு எந்த வித வருத்தமும் இல்ல, சொல்ல போனா அவ மேல பரிதாபம் தான் ஏறபடுது, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ஸ்மிருதி நைட்லாம் தூங்குறது இல்ல, நான் எழுந்து பார்க்கிற டைமெல்லாம் அழுதுட்டு தான் இருக்கா, அவளோட நிலமையை நாம புரிஞ்சிக்கனும், இந்த அண்ணனுக்காக இதை பெரிசுபடுத்தாம விட்டுடுமா” என அஜய் சொல்ல, தன் அண்ணனின் விருப்பத்திற்காக ஹேமவர்ஷினியும் வேறு வழியின்றி அமைதியானாள்..

“சரிண்ணா வாங்க கீழே போகாலாம்” என ஹேமா அழைக்க, “நீ போ கொஞ்ச நேரத்துல நானே வரேன்” என தங்கையை அனுப்பி வைத்தான் அஜய் கிருஷ்ணா,….

இருள் சூழ இருக்கும் அந்த வானத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்த அஜய்க்கு பழைய நினைவுகள், நினையில் வந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது,… “என்னை இங்கு தனியா தவிக்க விட்டுட்டு நீங்க மூணு பேரும் ஒன்னா சந்தோசமாக இருக்கீங்கள்ல, எதுக்காக இப்படி செய்தீங்க, அன்னைக்கு நானும் உங்களோட வரேன்னு சொல்லியும் நீங்க அதை காது கொடுத்து கேட்காம என்னை தனியாக விட்டுட்டு போயிட்டிங்க, ஒவ்வொரு நாளும் அணுஅணுவா நான் வலியில துடிக்கணும்னு தான் இப்படி செய்தீங்களா” என வாய்விட்டே புலம்பி கொண்டிருந்த அஜய், சில மாதங்களுக்கு முன்பு நடந்த தன் வாழ்க்கையின் துன்பகரமான நினைவில் மூழ்கினான்,….

அஜய் கிருஷ்ணா ஆண்களுக்கே உரித்தான ஆறடி உயரமும், மாநிற தோற்றமும், பார்த்த உடனே அவன் மேல் மயக்கம் வரும் அளவிற்கு அழகை தன் வசம் கொண்ட கண்களும், பொறுமையான குணமும், மென்மையான பேச்சுடனும் இளம் யுவனாக காட்சியளிப்பவன் தான் நம் கதையின் நாயகன் அஜய் கிருஷ்ணா, 29 வயது நிரம்பிய இவனுக்கு கல்யாணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்று சொன்னால் எவராலும் நம்ப முடியாது, அந்தளவிற்கு பெண்களின் கண்களுக்கு இளம் யுவனாகவே காட்சியளிப்பான்,…. சிறுவயதிலேயே தாயை இழந்த அஜய்யையும் ஹேமாவையும் இவர்களின் தந்தையான வைத்தீஸ்வரன் தான் அவர்களுக்கு தாயாகவும் தந்தையாகவும் அவர்களை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கினார், அஜய் தன் கல்லூரி படிப்பை முடித்திருந்த நேரம், தன் மகனுக்கு தன் தொழில் முறையை பற்றி அனைத்தையும் விவரித்து, அவனிடம் ஒப்படைத்துவிட்ட நிம்மதியில் இயற்கை எய்தினார் வைத்தீஸ்வரன்…

தன் தந்தையின் இழப்பை ஏற்று கொள்ள முடியாவிட்டாலும், தன் தங்கையின் பாசத்தினால் துக்கத்தை மறந்து தொழிலில் முக்கியத்துவம் காட்ட துவங்கினான்,….. வைத்தீஸ்வரன் ஹோட்டல் தொழிலில் கொடிகட்டி பறந்தவர், அவ்வூரில் மட்டுமில்லாமல் இன்னும் பல ஊர்களிலும் கூட சிறிய ஹோட்டலிலிருந்து ஸ்டார் ஹோட்டல் வரையிலும் தன்  திறமையினால் செயல்படுத்தி வந்தவர்,…

இப்பொழுது அனைத்தும் அஜய்யின் பொறுப்பில் தான் இயங்கி கொண்டிருக்கிறது, தன் தந்தைக்கு பிறகு ஹோட்டல் தொழிலை பொறுப்பாக நடத்தி வருகிறான்,…

தந்தைக்கு பிறகு அஜய்யின் மாமா(அம்மாவின் அண்ணன்) தான் அஜய் ஹேமா இருவருக்கும் ஆதரவு தந்து அவர்களை தங்கள் குழந்தைகளை போலவே கவனித்து கொண்டார்,  ஸ்ரீனிவாசன் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர், அன்பான குணமுடையவர், உதவி செய்வதில் வள்ளல்,.. இவரின் மனைவி தேவி இல்லத்தரசி, இவரும் தன் கணவருக்கு சளைத்தவர் இல்லை, இவர்கன் இருவரின்  குணத்தை ஒற்றி எடுத்தாற் போல் பிறந்தவள் தான் இவர்களின் செல்ல மகள் வைஷ்ணவி,….

தன் செல்ல மகளை தன் தங்கையின் மகன் அஜய் கிருஷ்ணாவிற்கு மனம் முடித்து வைக்க முடிவெடுத்து, தன் மருமாகனான அஜய்யிடம் விஷயத்தை பற்றி சொன்னார் ஸ்ரீனிவாசன், “எனக்கு உங்க பொண்ணை கட்டிக்க முழு சம்மதம்” என தன் சம்மதத்தை தெரிவித்த அஜய், “என்னோட தங்கச்சி கல்யாணத்திற்கு பிறகு தான் நான் என்னோட கல்யாணத்தை செய்துப்பேன்” எனவும் திட்டவட்டமாக சொல்லிவிட்டான்,…

ஸ்ரீனிவசனுக்கும் அது தான் சரி என்பதும் தோன்ற, தன் தங்கையின் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை துவங்கினார், அவரை மேலும் சிரமத்திற்கு உட்படுத்த  விரும்பாமல்,… “என் தங்கைக்கு ஏற்கனவே நான் மாப்பிள்ளை பார்த்துடேன்” என்றவன், “அது வேறு யாரும் இல்ல, என்னுடைய ஆருயிர் நண்பன் விஷ்ணு தான்” என்பதையும் சொல்ல, ஸ்ரீனிவாசனும் விஷ்ணுவின் குணத்தை பற்றி நன்கு அறிந்திருந்ததால், மறுப்பு கூறாமல் “நானும் உன்னோட அத்தையுமே விஷ்ணு வீட்டிற்கு போய் பேசுகிறோம்ப்பா” என விஷ்ணு குடும்பத்தாரின் சம்மத்தத்துடன் அடுத்த ஒரு மாதத்திலேயே விஷ்ணு ஹேமாவின் திருமணம் நடந்து முடிந்தது,..

அவர்கள் திருமணம் முடிந்த அடுத்த ஆறுமாத்தில் அஜய், வைஷ்ணவிவின் திருமணமும் நடந்தேறியது, திருமணம் முடிந்த அடுத்த மாதமே கருவுற்றிருந்தாள் வைஷ்ணவி, அஜய், ஹேமா உட்பட வைஷ்ணவியின் பெற்றோர்களுக்கும் இது எல்லை இல்லா சந்தோசத்தை அள்ளி கொடுத்தது… ஹேமா அப்பொழுது நான்கு மாத கர்பினியாக இருந்தாள், மாதங்கள் கடக்க

ஒரு அழகாக ஆண் குழந்தையை(அம்ரிஷ்) ஈன்றெடுத்தாள் ஹேமவர்ஷினி, இந்த சந்தோசத்திலிருந்து அவர்கள் மீளும் முன்பே அடுத்த சில மாதத்தில் வைஷ்ணவியும் ஒரு ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள், அஜய்க்கு தான் அவனை சுற்றி எல்லா பக்கமுமே சந்தோசம் மட்டுமே நிரம்பி கிடந்தது,.. அடுத்த ஆறு மாதத்திலேயே வைஷ்ணவி மீண்டும் கருவுற்றாள், முதலில் பையன், இரண்டாவதாக பொண்ணு பிறக்க போவதை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு அடுத்ததும் ஆண் குழந்தை பிறந்தது வருத்தத்தை ஒன்றும் அளிக்கவில்லை மாறாக சந்தோசததை மட்டுமே அளித்தது….

வருடங்கள் கடக்க இரு குழந்தைகளும் வளர தொடங்கினார்கள், தன் வேலை விஷயமாக தன் சொந்த ஊரான மதுரையிலிருந்து சென்னைக்கு வந்திருந்தான் அஜய் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன்,…

சென்னை வந்து நான்கு நாட்கள் கடந்த பிறகும் அஜய் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்க, இதனை சகித்து கொள்ள முடியாத அவனின் மனைவியும் குழந்தைகளும், தங்களை ஊருக்கே அனுப்பி விடும்படி கேட்டு கொண்டனர்,.. அஜய் மறுப்பு தெரிவித்த பிறகும் “இனி ஒரு நாள் கூட எங்களால ரூம்ல அடைஞ்சிறுக்க முடியாது” என்றவாறு அவனின் மனைவியான வைஷ்ணவி தங்கள் உடமைகளை பேக் செய்து கொண்டு செல்ல தயாரானாள்,..

“இன்னும் ஒரு ரெண்டு நாள் மட்டும் இருந்தா நானும் உங்க கூடவே வந்துடுவேன்” என அஜய் சொல்ல,… “நீங்க மெதுவா வாங்க, எங்களை பஸ்ல மட்டும் ஏத்தி விட்டுடுங்க” என்ற தன் மனைவியை சமாதானம் படுத்த முடியாமல், அவர்களின் விருப்பத்திற்கேற்ற பேருந்தில் ஏற்றி வழி அனுப்ப வந்துவிட்டான் அஜய்,…

“பேசாம நானும் உங்க கூடவே வந்துடுறேன்” என கூறி பேருந்தில் ஏறி அமர்ந்தவனிடம்… “என்னங்க நீங்க, குழந்தை மாதிரி பண்ணிகிட்டு, இன்னும் ரெண்டு நாள் தானே, நீங்க உங்க வேலையை முடிச்சிட்டே வாங்க,” என வைஷ்ணவி சொல்ல,… “ப்ளீஸ் வைஷு, என்னால போக முடியாது, என்னால உன்னையும் என் குழந்தைகளையும் விட்டுட்டு இருக்கவே முடியாது, நானும் வர தான் போறேன்” என்றான் அஜய் பிடிவாதமாக…

“உங்களோட வம்பா போச்சே, பாருங்க வண்டியை எடுக்க போறாங்க, சீக்கிரம் இறங்குங்க” என்று அவசரப்படுத்திய தன் மனைவியிடம், “முடியாது வைஷு” என்றான் அஜய்…

“ஹயோ… வாங்க” என்றவாறு அஜய்யின் கரத்தை பற்றியவாறு பேருந்திலிருந்து அவனை இறங்க வைத்தவள்,…. “கவலை படாதீங்க, ரெண்டு நாள் தானே, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என்று கூற, அவனும் மனமே இல்லாமல் சம்மதித்திருந்தான், புன்னகையுடன் தனக்கு கையசைத்து டாட்டா காட்டிவிட்டு புறப்பட்ட மனைவியையும் குழந்தைகளையும் கண்களை நிரைத்துக் கொண்டவன் அன்றோடு அவர்களை பார்க்கவே முடியாது என்பதை அறிந்திருக்கவே இல்லை, வீட்டிற்கு வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்தில் அவனுக்கு வநத செய்தி அவர்கள் சென்ற பேருந்து ஒரு கோரவிபத்தில் சிக்கி அதிலிருந்து எவரும் உயிர்பிழைக்கவில்லை என்பது தான், அதன் பிறகு தன் மனைவி மற்றும் குழந்தைகளின் உயிரில்லா உடலை தான் அவன் பார்த்தான், அந்த நாளை நினைத்து பார்த்தவனுக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்தது, உயிரே பிடுங்கி எடுக்கும் வலி உள்ளத்தையே ஆட்கொண்டது,..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!