இருள் சூழ்ந்திருந்த அந்த வேளையில் தன் கடந்தகால நினைவுகளின் தாக்கத்தால் நிற்காமல் கண்ணீர் சுரந்து கொண்டிருந்தது அஜய்யின் கண்களிலிருந்து…
Advertisement
அந்த நேரம் நண்பனை தேடி வந்த விஷ்ணுவின் பார்வையிலும் அவனின் கலங்கிய முகம் பட்டு விட, அவனின் மனம் பிசைந்தது, நண்பனின் துக்கத்தை வலியையும் அறியாதவன் இல்லையே அவன், இருப்பினும் அவனை அப்படியே விடவும் அவன் விரும்பவில்லை…
மெல்ல நடையுடன் அஜய்யின் அருகில் வந்து சேர்ந்தான், விஷ்ணுவை கண்டதும் அஜய் வேகமாக கண்களை துடைத்து கொள்ள,.. விஷ்ணுவோ.. “என்னடா பழைய நியாபகம் வந்துடுச்சா” என்றான்…
Advertisement
Advertisement
“அதெல்லாம் எதுவும் இல்லை டா,” என்றவன், வானத்தினை வெறிக்க,.. அவன் தோளில் கை வைத்தவன்,..”என்கிட்ட ஏன்டா மறைக்கிற, அவ்வளவு சீக்கிரமா நடந்ததை உன்னால மறக்க முடியாதுன்னு என்னால புரிஞ்சிக்க முடியும், அதோட எனக்கு நீ நண்பன் மட்டும் இல்லைடா, அதையும் தாண்டி நமக்குள்ள அற்புதமான ஒரு உறவு இருக்கு, நீ எனக்காக எவ்வளவோ உதவிகள் செஞ்சிருக்க,” என சொல்லி கொண்டிருந்த விஷ்ணுவிடம்,.. “என்னடா உதவி அது இதுன்னு ஓவரா பேசிக்கிட்டு இருக்க, இப்போ என்ன சொல்ல வந்தியோ அதை டைரக்டா சொல்லு” என்றான் சிறு அதட்டலுடன்…
“சரி டா நான் வெளிப்படையாவே கேட்கிறேன், என் தங்கச்சியை கல்யாணம் செஞ்சிக்கிட்டதுலருந்து அவ கிட்டருந்து உனக்கு சந்தோசம் கிடைக்கலைனாலும் உனக்கு அவ வருத்தத்தை நிறைய கொடுக்கிறாளாடா” என்று கேட்க,.. “இதை நீயா கேட்கிறியா இல்ல உன்னோட பொண்டாட்டி கேட்க சொன்னாளா?” என சரியாக கணித்தபடி கேட்டான் அஜய்,…
Advertisement
“என்ன இருந்தாலும் ஹேமா உன்னோட தங்கச்சி டா, தன் அண்ணன் வேதனை படுறதை யாரால தான் தாங்கிக்க முடியும், ஸ்மிருதி உன்கிட்ட ரொம்ப மோசமா நடந்துகிறா, என்னால அவ கிட்ட பேசி புரிய வைக்க முடியலடா, ஆனா அந்த உண்மையை மட்டும் அவ கிட்ட சொன்னா போதும், அவ நிச்சயம் உன்னை புரிஞ்சிப்பா, அதோட நீங்களும் உங்க வாழ்க்கையை சந்தோஷமா ஆரம்பிக்கலாம்” என விஷ்ணு சொல்ல,…
“வேண்டாம்… ஸ்மிருதி கிட்ட என்னை பத்தி எதுவும் சொல்ல வேண்டாம், அவ என்கிட்ட எப்படி நடந்துகிட்டாலும் அதுல எனக்கு எந்த வித வருத்தமும் ஏற்படல, இனியும் ஏற்படாது, அதனால இனி அதை பத்தி பேசாத விஷ்ணு ப்ளீஸ்” என அஜய் கெஞ்சலோடு கேட்டு கொள்ள,… “சரி டா, இப்போவும் உன் விருப்பத்திற்கு கட்டுப்பட்டு நான் சும்மா இருக்கேன், ஆனா நான் கேட்கிறதுக்கு மறைக்காம பதில் சொல்லு, ஸ்மிருதி ஸ்மிருதியை உனக்கு பிடிச்சிருக்கா, அவளை உன்னோட மனைவியா” என கேட்க வந்த விஷ்ணுவிடம்,… “நான் என்னைக்கு ஸ்மிருதி கழுத்துல தாலி கட்டி அவளை என் மனைவியாக்கிகிட்டேனோ அன்னைக்கே அவ தான் இனி எனக்கு எல்லாம்னு என் மனசுல பதிய வச்சிகிட்டேன், அவ மனசுல இருக்கும் வேதனை குறைய எத்தனை வருஷம் ஆனாலும் பரவாயில்லை, அவளுக்காக நான் காத்திருப்பேன்” என உறுதியுடன் சொன்ன நண்பனின் பேச்சில் உருகி தான் போனான் விஷ்ணு,…
தனக்கான பதில் கிடைத்துவிட்ட திருப்தியில் மேலும் அஜய்யை வேறெதுவும் பேசி குடைச்சல் கொடுக்க விரும்பாமல்.. “லன்ச் நீ எதுவும் சாப்பிடல, வா கீழே போலாம்,” என கையுடன் அழைத்து சென்றான்……
“எப்படி இருக்கீங்க மாப்பிள்ள, நீங்களும் ஸ்மிருதியும் வீட்டுக்கு வந்திருக்கிறதா கேள்வி பட்டேன் அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்னு வந்தேன்” என ஸ்மிருதியின் பெரியம்மாவான சிந்தாமணி அஜய்யின் வருகையை கண்டதும் விசாரிக்க தொடங்கினார்,…
“நல்லா இருக்கேன்மா, நீங்க எப்படி இருக்கீங்க” என்றவாறு அஜய்யும் பணிவுடன் விசாரிக்க,.. “நல்லா இருக்கேன் மாப்பிளை, அதோட நானும் உங்களுக்கு அத்தை முறை தான், உரிமையா அத்தைனு கூப்பிடுங்க” என சிந்தாமணி சொல்ல,… அவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு “சரிங்க அத்தை” என்றான் அஜய் புன்னகைத்தவாறு,…
“ஆமா எங்கே வந்ததுல இருந்து இந்த ஸ்மிருதியை காணோம், பெரியம்மா வந்திருக்கிறதை தெரிஞ்சி தான் வெளியே வராம இருக்காளா” என சிந்தாமணி வீட்டை நோட்டமிட்டபடி கேட்க, “அதெல்லாம் எதுவும் இல்லக்கா, அவ ரூம்ல இருக்கா, நான் கூட்டிட்டு வரேன்” என்றவாறு தன் மகளின் அறை நோக்கி சென்றார் சகுந்தலா….
ஸ்மிருதி வருவதற்குள் சிந்தாமணியை பற்றி கொஞ்சம் பார்த்து விடலாம்,… சகுந்தலாவின் சொந்த தமக்கை தான் சிந்தாமணி, இவரின் கணவர் சில வருடத்திற்கு முன் தவறிவிட்டார், இவருக்கு இரண்டு பெண், இரண்டு பெண்ணையும் திருமணம் முடித்து புகுந்த வீட்டிற்க்கு அனுப்பி விட்டு, தன் மாமியாரின் வீட்டில் இருக்கிறார்,… ஸ்மிருதி தன் பெரியம்மாவை கண்டால் பாகற்காயை வாயில் வைத்து மெல்வது போல் முகத்தை அஷ்டகோணலாக்கி கொள்வாள், உண்மை தான் ஸ்மிருக்கு தன் பெரியம்மாவை கண்டால் கொஞ்சம் கூட ஆகாது, காரணம் சிந்தாமணி மனதில் எதையும் வைத்து கொள்ளாமல் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுபவர், ஸ்மிருதியின் செய்கைகளை கண்காணித்து ஏதாவது நல்லது சொன்னால் கூட, அவளை குத்தம் சொல்வது போல தான் இருக்கும், இந்த காரணத்திற்காகவே தன் பெரியம்மா இருக்கும் இடத்திற்கு மறந்தும் செல்ல மாட்டாள் ஸ்மிருதி,…
“ஏன்டா விஷ்ணு உன்னோட சுட்டி பையன் எங்கே ஆளையே காணோம்” என சிந்தாமணி கேட்க,.. “தூங்குறான் அத்தை, அதான் வீடு சத்தம் இல்லாம இருக்கு” என்றவாறு தனது பெரியத்தைக்கு காபி எடுத்து வந்து கொடுத்தாள் ஹேமா…
“அதானே பார்த்தேன், என்னடா வீடு அமைதியா இருக்கேன்னு” என்றவர், தங்கையுடன் வந்து கொண்டிருந்த, தங்கை மகள் ஸ்மிருதியை கண்டார்,…
அவளோ.. “வாங்க பெரியம்மா, எப்படி இருக்கீங்க” என வேறு வழியே இல்லாமல் விசாரிப்பது போல் விசாரிக்க,.. “நல்லா இருகேன்டி, நீ எப்படி இருக்க” என கேட்ட சிந்தாமணி, அவளை மேலிருந்து கீழ் வரை அளவெடுக்க தொடங்கினார்,..
கையிலிருந்த காபி டம்ளரை மேஜையின் மீது வைத்தவர்,.. “என்னடி இது கோலம், புருஷன் பக்கத்துல இருக்காரு, அழகா அம்சமா பட்டு புடவை கட்டிக்கிட்டு, நக நட்டை எடுத்து போட்டுக்காம, இந்த சொக்கா பேண்ட்டை போட்டுக்கிட்டு நிக்கிற” என சற்று கடிந்து கேட்க,… “எனக்கு அதெல்லாம் போட்டுக்க இஷ்டம் இல்ல, நான் இப்படி தான் இருப்பேன்” என்றாள் ஸ்மிருதி சற்று குரல் கம்மியாகவே..
“இஷ்டம் இல்லையா, உன் இஷ்டத்தை யாருடி கேட்டது, உன் புருஷன்ல அதை சொல்லணும், யாரு அவர் தான் சொன்னாரா உன்னை புடவை கட்டிக்க கூடாதுனு, இல்லைல” என்றவர்.. “வா நானே உனக்கு புடவை கட்டி அலங்காரம் பண்ணி விடுறேன்” என சொல்ல, வழக்கம் போல் ஸ்மிருதியின் கோபபார்வை அன்றும் ஒன்றும் அறியாத அஜய்யின் மீது தான் படிந்தது,…
ஸ்மிருதி கோபப்பார்வையுடன் அஜய்யை நோக்கிட,… “அங்கே யாரடி அப்படி மொறச்சி பார்க்கிற, என்கூட வா” என சிந்தாமணி அழைக்க, “தயவு செஞ்சி என்னை விட்டுடுங்க, எதுக்காக என்னை டார்ச்சர் பண்ணுறீங்க” என சற்று குரலை உயர்த்தி கேட்டிட…
“அதானே… என்ன இவ இப்படி பேசிக்கிட்டு இருக்கா, ஏன்டி சகு என்னடி வளர்ந்திருக்க உன்னோட பொண்ண, எல்லாம் நீ கொடுக்கிற செல்லத்துல தான் இவ இந்த ஆட்டம் போடுறா” என சிந்தாமணி தனது தங்கை சகுந்தலாவை வசை பாட,.. அதனை பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்மிருதி,… “என்னோட அம்மாவை எதுவும் சொல்லாதீங்க, இப்போ என்ன.. நான் நீங்க சொல்றதை செய்யணும் அவ்வளவு தானே, செஞ்சி தொலைக்கிறேன்” என்றவாறு வேகமாக தன் அறை நோக்கி நடந்தாள் ஸ்மிருதி, அவளை பின் தொடர்ந்து சென்றார் சிந்தாமணி,…
சில நிமிடங்கள் நடந்த இந்த சிறு பிரட்சனை அந்த வீட்டில் புயல் அடித்து ஓய்ந்தது போல் இருக்க, ஒரு பெருமூச்சொன்றை வெளியிட்ட விஷ்ணு,… “நீ ஏன்டா நின்னுகிட்டு இருக்க, உட்காரு” என அஜய்யிடம் சொன்னவன், தானும் அவனுடன் அமர்ந்து கொண்டான்,….
அப்பொழுது தான் மாலை ஏழு மணி என்பதால், சகுந்தலாவும் ஹேமாவும் டீயுடன், சில பலகாரங்களையும் செய்து வந்து அஜய்க்கும் மற்றவர்களுக்கும் எடுத்து வைத்தனர்,… சாப்பிட்டுகொண்டே அவர்கள் பேச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அந்த நேரம் ஸ்மிருதியின் அறையிலிருந்து வெளிவந்தார் சிந்தாமணி,….
“மாப்பிள்ள, ஸ்மிருதி தயாராகிட்டா, நீங்க கொஞ்ச நேரம் போய் அவ கூட இருங்க” என சிந்தாமணி சொல்ல,.. “இல்ல அத்தை, பரவால்ல நான் இங்கேயே இருக்கேன்” என்றான் அஜய்…
“பெரிமா தான் சொல்றாங்கள்ல போடா,” என விஷ்ணுவும் சொல்ல, “இல்லடா நான் என்ன சொல்ல வரேன்னா” என தயக்கமாக இழுத்து கொண்டிருந்த அஜய்யிடம்,.. “எல்லாரும் உன்னை தான்டா பார்க்கிறாங்க, எதுவும் நினைச்சிக்க போறாங்க” என விஷ்ணு அஜய்யின் வழிக்கே போக, புரிந்து கொண்ட அஜய்யும் வேறு வழியின்றி ஸ்மிருதியின் அறை நோக்கி நடந்தான்,…
ஸ்மிருதி அறையின் கதவு வரைக்கு சென்றவனுக்கு உள்ளே போகவே மனமில்லை, வாசலிலேயே நின்று விட்டவன்,.. தூரத்திலிருந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த நண்பனின் பார்வையை கண்டு மூச்சை இழுத்து விட்டு மனதை ஒருநிலைபடுத்திகொண்டு, அறையின் கதவை தள்ளியபடி உள்ளே சென்றான்,….
அங்கு அரக்கு நிற பட்டு புடவையில், நெற்றி, காது என தொடங்கி, கழுத்து, கை என அனைத்திலும் நகைகளால் அலங்கரிக்கபட்டிருந்தாள் ஸ்மிருதி, அவளின் அழகுக்கு இந்த அலங்காரம் மேலும் அழகு சேர்த்திருக்க, சில நொடி தன்னை மறந்து பார்த்து கொண்டிருந்தான் அஜய்,…
அஜய்யின் இந்த பார்வை ஸ்மிருதிக்கு எரிச்சலை தூண்ட,.. “என்ன பார்த்து முடிச்சாச்சா” அனல் பார்வையுடன் கேட்டபடி, அவனுக்கு சிறு இடைவெளிவிட்டப்படி வந்து நின்றவள்,… “பார்க்கிறதோட நிறுத்திடுவியா இல்ல வேற ஏதாவது பண்ண போறியா” என ஒருவித அர்த்தமான பார்வையுடன் சிடுசிடுப்புடன் கேட்க, இந்த முறை அஜய்க்கு கோபம் தலைக்கேறியது, அதனை வெளிக்காட்டாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பி தன் கோபத்தை தணிக்க முற்பட்டான்,…
அவளோ மேலும்,… “நான் போட்டிருக்கிற இந்த நகையெல்லாம் யார் வாங்கி தந்தது தெரியுமா, இதெல்லாம் என்னோட யஷ்வந்த்(முதல் கணவர்) எனக்காக ஆசையா வாங்கி தந்தது, அவர் எனக்காக வாங்கி தந்த இந்த நகைகளை எல்லாம் உனக்கு நான் போட்டு காட்டனுமா?” என்றாள் குரலை உயர்த்தி வெறுப்பான பார்வையோடு….
“இந்த பெரிமாவுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை, இது என்னோட முதல் கணவர் வாங்கி தந்த நகைன்னு சொன்னா, அதுக்கு என்ன இப்போ இதையென்ன தூக்கியா போட முடியும், நீ தானே போட்டாகனும்னு சொல்லி எனக்கு போட்டு விட்டுட்டு போய்ட்டாங்க, அப்றம் நான் உன் மனசு கோணாம நடந்துக்கணுமாம், இன்னும் கன்ட்ராவியா என்னென்னமோ சொல்லிட்டு போச்சு, அதையெல்லாம் என்னால காது கொடுத்து கூட கேட்க முடியல,..” என எரிச்சலுடன் முடித்தவள்..
மீண்டும் அஜய்யை நோக்கியபடி “சரி சொல்லு, இப்போ நீயும் அதுக்காக தான் வந்திருக்கியா, அப்றம் இந்த நகைகள், இதெல்லாம் என்னோட முதல் கணவர் வாங்கி தந்ததுன்னு உனக்கு தெரிஞ்ச பிறகும், உனக்கு என்னை ரசிக்கனும்னு தோணுமா” என ஸ்மிருதி பேசி முடித்த நேரம், அதற்கு மேலும் அஜய்யால் தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, தன் அருகில் மேஜையின் மீதிருந்த ஸ்மிருதியின் கைபேசியை எடுத்து கோபத்தில் விசிறி அடித்து விட்டு, அந்த நொடியே அறையிலிருந்து வெளியேறினான்,… இங்கு ஸ்மிருதியோ இது வரைக்கும் அஜய்யின் கோபத்தை கண்டிராததால், கண்கள் விரிய நின்றாள்,…..