Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கலாட்டா கல்யாணம்

கலாட்டா கல்யாணம் 12

கலாட்டா – 12

பௌர்ணமி இரவில் நட்சத்திர கோலங்களுக்கு நடுவில் மிடுக்குடன் வீற்றிருந்த முழுநிலவோடு சேர்த்து சிலு சிலு தென்றல் காற்றும் வீச, அந்த ஏகாந்த சூழ்நிலையை வெகுவாய் ரசித்துக் கொண்டிருந்தான் அஸ்வத்.



Advertisement

அப்போது அவன் அருகில் வந்தமர்ந்த அஜய், ” என்ன ப்ரோ கண்ணை திறந்துகிட்டே தியானம் பண்ணுறியா? ” என்று கேட்க,

புன்னகையுடன் அவனை நோக்கி திரும்பிய அஸ்வத், “இந்த இடம் எவ்ளோ அமைதியா அழகா இருக்குல்ல.. இத்தனை வருஷமா மிஷின் லைஃப் வாழ்ந்துட்டு இப்போ இந்த மாதிரி இடத்துக்கு வரப்போ தான் மனசு ஒரு மாதிரி அமைதியா நிம்மதியா இருக்கு அஜ்ஜூ” என்று அவன் உணர்ந்து கூற,

Advertisement

Advertisement

” என்னடா விட்டா சாமியார் ஆய்டுவ போல.. உன்னை சம்சாரி ஆக்கத்தான் நம்ம மதுரம் அவ்ளோ கஷ்டப்பட்டு எல்லாரையும் இங்க தள்ளிட்டு வந்திருக்கு.. ஆனா நீ பேசுற பேச்சைப் பார்த்த நிம்மதியைத் தேடி யாத்திரை போறேன்னு கிளம்பிருவ போலயே ப்பா.. பாவம் நம்ம பாட்டி.. சோ சேட்” என்று அஜய் போலியாக வருத்தப்பட,

அவன் முதுகில் ஒரு அடி வைத்த அஸ்வத், ” உன் வாய் இருக்கே” என்று அலுத்துக் கொண்டவன் தொடர்ந்து, ” ஆனாலும் என்னால இப்போவும் நம்ப முடியலைடா.. நம்ம அப்பாங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே வீட்டுல தங்க ஒத்துப்பாங்கன்னு.. நம்ம பாட்டி கலக்கிட்டாங்க போ” என்று சிலாகித்துக் கூற, அதை ஆமோதித்த அஜய்க்கும் நினைவுகள் சற்று பின்னோக்கி சென்றது…

Advertisement

அன்று மருத்துவமனையில் மதுரம் அனைவரையும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று உத்தரவிட்டதோடு  மட்டுமல்லாமல் அனைவரும் அவர்களின் பூர்வீக வீடு இருக்கும் லட்சுமிநாயக்கண்பட்டிக்குச் சென்று தங்க வேண்டும் என்று கட்டளையாக கூற,

அதைக்கேட்டு பெற்றவர்கள் யாவரும் ‘ இது என்ன புதுசா பூர்வீக வீடு இத்தனை வருஷம் இல்லாம அதுவும் ஏதோ ஓர் ஊரு சொல்றாங்க.. இப்போ திடீர்னு லீவ் எப்படி கிடைக்கும்.. இவங்களை எப்படி சமாளிக்க ‘ என்று அதிர்ந்து போக,

வினோத்தோ, ‘ இந்த படுபாவி கூட்டம் தனியாகவும் போய் தொலைய மாட்டாங்களே.. நம்மளையும் இழுத்துட்டுல போவாங்க … முதல்ல இங்க இருந்து எஸ்கேப் ஆகணும் ‘ என்று யோசித்துக் கொண்டிருக்க,

அஸ்வத்தும் அஜயும் தான் தங்கள் பாட்டி கூறியதைக் கேட்டு ஆனந்தமாய் அதிர்ந்து நின்றனர்.

அவர் சொல்லிய ஊர் நம் நாயகிகளின் கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் தான் அமைந்திருந்தது.

அங்கு சென்றால் அடிக்கடி அவர்களின் ஜோடிகளை கண் குளிர காணலாம் என்று நினைத்து அஸ்வத்தும் அஜயும் உடனே சம்மதிக்க,

ராமனும் பரமசிவனும் தத்தம் பிள்ளைகளை சந்தேகமாக நோட்டம் விட்டனர்.

அப்போது அவர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்த மதுரம், ” இப்போ எல்லாரும் முடிவா என்ன சொல்றிங்க? வர முடியுமா முடியாதா??” என்று அவர்களுக்கு யோசிக்கக் கூட வாய்ப்பளிக்காமல் அவர் அவசரப்படுத்த,

அனைவரும் வேறு வழியின்றி மனமே இல்லாமல் தங்கள் சம்மதத்தை தெரிவித்தனர்.

அப்போது அங்கு அத்தனை நேரமும் உறங்கிக் கொண்டிருந்த வாசுதேவகிருஷ்ணனுக்கு முழிப்பு தட்ட, மெதுவாய் தன் இமைகளைப் பிரித்தார்.

கண்களை திறந்ததும் ஒரு நொடி தாம் எங்கிருக்கிறோம் என்று சிந்தித்தவர் பின் அனைத்தும் நினைவிற்கு வர, இன்னும் தன் நடிப்பைத் தொடர எண்ணி, ” அய்யோ நெஞ்சு வலிக்குதே.. மயக்கம் மயக்கமா வருதே .. என்னென்னமோ பண்ணுதே எனக்கு.. ” என்று அவர் புலம்ப,

அவரின் குரலில் அனைவரின் கவனமும் அவர் மீது திரும்ப, ” என்னாச்சு ப்பா.. டேய் வினோத் அப்பாக்கு என்னன்னு பாரு” என்று பதறினார் ராமர்.

‘ நேரம் காலம் தெரியாம இந்தாளு வேற ஓவர் ஆக்டிங் விட்டுட்டு இருக்காரு ‘ என்று மனதிற்குள் குமைந்த வினோத்,

பேருக்கு அவரை பரிசோதிப்பதைப் போல் பாசாங்கு செய்தவன் பின், ” அவருக்கு இப்போதைக்கு ஒன்னும் இல்லை… அப்பப்போ அவருக்கு இந்த வலி வரத்தான் செய்யும்.. ஒன்னும் கவலைப் படாதீங்க” என்று முயன்று முகத்தை சாதாரணமாய் வைத்துக் கொண்டு கூறினான்.

” இதுக்கு மருந்தே இல்லையா??” என்று பரமசிவன் சோகமே உருவாய் கேட்க,

“அவரை சந்தோஷமா வச்சுக்கோங்க.. அதான் மருந்து… இப்போ எனக்கு ஒரு முக்கியமான கேஸ் இருக்கு நான் கிளம்புறேன்.. நைட் வந்து பார்க்குறேன்” என்று அவன் இதற்கு மேல் இங்கிருந்தால் கேள்விக்கணைகளை சமாளிக்க முடியாது என்றெண்ணி அங்கிருந்து கிளம்பி ஓடி விட்டான்.

அவன் நிலமையை நினைத்து அஸ்வத்தும் அஜயும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டிருந்த சமயம்,

” அப்பா இன்னும் கொஞ்ச நாள் தான் வாழ போறாருன்ற உண்மையை அப்பாக்கிட்ட சொல்லிராதிங்க யாரும் ” என்று பரமசிவன் தன் தந்தைக்கு காது கேட்காது என்கிற தைரியத்தில் அவரின் முன்னிலையிலேயே இதைக் கூறிவிட்டார்.

அவ்வளவு நேரம் நடித்துக் கொண்டிருந்த வாசுதேவருக்கு இப்போது அதைக் கேட்டு நிஜமாகவே மயக்கம் வருவதைப் போல் இருந்தது.

” என்னது நான் சாகப் போறேனா??? எனக்கு என்ன?? நான் நல்லாத்தானே இருக்கேன்.. மது மா உன் மகன் என்ன உளறுறான்??” என்று பயத்தில் அவர் உளற,

‘ இந்த மனுஷன் காரியத்தையே கெடுத்துடுவார்  போலயே ‘ என்று பயந்து போன மதுரம்,

” ஏண்டா இப்படி பண்ற??” என்று தன் மகனிடம் அங்கலாய்த்து விட்டு தன் கணவனின் அருகில் சென்றவர்,

” உங்களுக்கு ஒன்னும் இல்லைங்க.. அவன் ஏதோ உளருறான்..நீங்க ஒன்னும் பதட்டப்படாதீங்க..பேசாம படுங்க.. இப்போ மட்டும் நீ ஒழுங்கா கண்ணை மூடி படுக்கலை நானே உன்னை கொன்றுவேன் கெழவா” என்று முதல் வாக்கியத்தை சப்தமாகவும் கடைசி வாக்கியத்தை தன் கணவனிற்கு மட்டும் கேட்குமாறு கூறியவர் பின் அனைவரையும் நோக்கி,

” சும்மா எல்லாரும் இங்கேயே நின்னு அவரை தொல்லை பண்ணாதீங்க.. எல்லாரும் கிளம்பி போய் ஊருக்கு போறதுக்கு தயாராகுங்க.. நாளைக்கே போறோம் நம்ம.. போங்க.. நான் இவரை பார்த்துக்கிறேன்..” என்று அவர்கள் மறுத்துப் பேச இடமளிக்காமல் அனைவரையும் வெளியேற்றி இருந்தார் மதுரம்.

‘ இப்போ மட்டும் இவருக்கு எப்படி காது கரெக்டா கேட்டுச்சு ‘  என்கின்ற குழப்பத்துடனே அங்கிருந்து கிளம்பினார் பரமசிவன்.

அதன் பின் துரித கதியில் அனைத்தும் நடந்தேற, இதோ இங்கு இலட்சுமிநாயக்கண்பட்டிக்கு வந்து சேர்ந்து இன்றோடு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.

இந்த இரண்டு நாட்களும் வீட்டை சுத்தப்படுத்தி தேவையான பொருட்களை வாங்கி ஒதுங்க வைப்பதற்கே சரியாகி விட, இப்போது தான் அனைவருக்கும் சற்று ஓய்வு கிடைத்தது.

அனைத்தையும் நினைத்து பார்த்த அண்ணன் தம்பி இருவரும் அடுத்து தங்கள் ஜோடிகளோடு இணைய என்ன செய்வது என்று சிந்திக்க தொடங்கினர்.

“ப்ரோ அஞ்சலிக்கு நம்ம போட்டு கொடுத்த பிளான் என்னாச்சு?? கேட்டியா” என்று அஜய் வினவ,

அவ்வளவு நேரம் அந்த ஏகாந்த சூழ்நிலையை உள்வாங்கி அனுபவித்துக் கொண்டிருந்த அஸ்வத்தின் முகம் சட்டென்று அப்படியே வாடிவிட்டது..

அதைக் கண்டே ஏதோ சரியில்லை என்று யூகித்த அஜய் அவன் தோள்களில் ஆதரவாய் கைபோட்டு, ” என்னாச்சு ஊத்திக்கிச்சா?? விடு ப்ரோ பார்த்துக்கலாம்.. நீ ஒன்னும் கவலைப்படாத .. அவங்க ஒத்துக்கலைனா நம்ம பொண்ணை தட்டி தூக்கிருவோம்” என்று அஸ்வத்தை உற்சாகப்படுத்த முயன்றான்.

அப்போது அங்கு வந்த ஜீவா, “தூக்குவ தூக்குவ.. மவனே உன் மீசை மாமனாருக்கு மட்டும் தெரிஞ்சது உன்னை தூக்குல தொங்க விட்டுடுவாரு.. இப்போ கூட அவரை பத்தித்தான் விசாரிச்சுட்டு வரேன்.. உங்க மாமனார் ஆனாலும் ரொம்ப போலீசா இருக்காரு டா.. இதுவரைக்கும் இருபது டிரான்ஸ்ஃபர்.. முப்பத்தைந்து என்கவுன்டர்..  இப்போக் கூட ஏதோ MP பையனோட கேஸ் பார்த்துட்டு இருக்காரு போல.. அதுலயும் அவரை அந்த கேஸ்ல இருந்து விலக சொல்லி அவ்ளோ மிரட்டல் அவருக்கு வருது.. ஆனாலும் மனுஷன் இந்த கேஸை முடிச்சே தீருவேன்னு கங்கணம் கட்டிட்டு சுத்திட்டு இருக்காரு.. இதுல அவர் பொண்ணை மட்டும் நீ கடத்தனும்னு நினைச்சது அவருக்கு தெரிஞ்சது.. மவனே நீ செத்த” என்று தானும் ஒரு போலீஸ் தான் என்பதை நிரூபித்து காட்ட ஜீவா சுந்தரபாண்டியனின் பயோடேட்டாவை விசாரித்து அறிந்து கொண்டு இப்போது அவரின்  வீர தீர சாகசங்களை அஜய்க்கு  அவிழ்த்து விட,

அதைக்கேட்டு காதைக் குடைந்து விட்டுக்கொண்ட அஜய், ” டேய் எருமை நிப்பாட்டித்தொலை.. என் மாமனாரைப் பத்தி இப்படி படிச்சுட்டு வந்து ஒப்பிக்கிறதுக்கு பதிலா என் மாமா பெத்த மைமாவைப் பத்தி எதுனா உருப்படியா டிடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணிட்டு வந்திருக்கலாம்ல.. நீயெல்லாம் என்ன போலீசா வேலை பார்க்குறியோ வேஸ்ட் ஃபெல்லோ நகரு” என்று ஒரே நொடியில் ஜீவாவின் ஜீவனை கொன்றுவிட்டான் அவன்.

தான் போட்ட உழைப்பெல்லாம் வீணாய் போய் விட்டதே என்று நொந்து போன ஜீவா, ” உனக்கு புரோக்கர் வேலை பார்க்கவெல்லாம் எனக்கு போலீஸ் டிரெய்னிங்ல சொல்லித்தலை தம்பி.. உனக்காக என் வேலையை விட்டுட்டு இங்க வந்து காத்துகிட்டு கிடக்கேன்ல.. நீ இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ” என்று அஜயை முறைத்துக் விட்டு அங்கிருந்து சென்று விட்டான் அவன்.

அவன் சென்றபின் அஸ்வத்தின் மூலம் அஞ்சலி வீட்டில் நடந்ததை அறிந்து கொண்ட அஜய், அப்போதும் தன்னவளின் குறும்புத்தனத்தை மனதில் ரசித்துக் கொண்டான்.

” விடு ப்ரோ.. அதான் அவருக்கு கொஞ்சமே கொஞ்சம் தம்பி மேல பாசம் இருக்கது கன்பார்ம் ஆய்டுச்சு..  நமக்கு அது போதுமே.. அவர் அஞ்சலிக்கு அடுத்து மாப்பிள்ளை பார்க்குறதுக்குள்ள நாம நம்ம மாமனாருங்களை ஒன்னா சேர்த்து நம்ம ஆளுங்க கூட சேர்ந்துரலாம்.. சரியா.. ஃப்ரீயா விடு.. பார்த்துக்கலாம்” என்று தன் அண்ணனிற்கு தைரியமளித்தவன்,  தனக்குள் ஒரு திட்டம் தீட்டிக்கொண்டான்.

“டெய்லி காலையில எத்தனை மணிக்கு எழுந்தரிப்பீங்க? ” என்று கீதா அந்த இரவு நேரத்தில் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் நிண்டு கொண்டு  தன் போனைப் பார்த்து ‘ டாக்டர் ‘ பட வசனத்தை ரீல்ஸ் செய்து கொண்டிருந்த சமயம்,

” ம்ம்.. வீக் டேய்ஸ்ல அஞ்சு மணிக்கு வீக் எண்டுல எட்டு மணிக்கு.. ஆனா நீ கூட இருந்தா எழுந்துக்கவே மாட்டேன்” என்று அவளுக்கு மிக அருகில் இருந்து வந்த குரலில் கீதவிற்கு தூக்கிவாரிப்போட்டது.

அதில் அவள் கைகளில் இருந்து அலைபேசி நழுவி விழப்போன சமயம் அதை சரியாக தன் கைகளில் தாங்கிக் கொண்ட அஜய்யைக் கண்டு கீதாவின் கண்கள் இரண்டும் சாசர் போல் விரிந்தது.

அது மகிழ்ச்சியால் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.. அவளின் கண்கள் கோபத்தில் விரிய, அவள் விழியின் ஆழத்தில் விரும்பியே விழுந்து தொலைந்தான் அந்த ஆறடி ஆண்மகன்.

“நீ இங்க என்ன பண்ற?? உன்னைத்தான் அன்னைக்கே கிளம்ப சொல்லிட்டாங்கல.. திரும்ப எதுக்கு வந்து என் உயிரை வாங்குற?” என்று அவள் மெலிதாய் கத்தினாலும், அந்த இரவு நேரத்தில் அது சப்தமாகத்தான் வெளிவந்தது.

“நான் உன் உயிரை எடுக்க வரலை பேப்ஸ்.. உன் மனசை திருடிட்டு போக வந்திருக்கேன்” என்று அவன் அங்கிருந்த திட்டில் ஏறி நன்றாக அமர்ந்து கொண்டு சாவகாசமாய் பதிலளிக்க,

அதில் கீதாவின் இரத்த அழுத்தம் மேலும் கூடியது.

” இதென்ன உன் வீடா?? வந்து சட்டமா சம்மணங்கால் போட்டு உட்கார்ந்து கிட்ட.. மரியாதையா இங்க இருந்து போய்டு.. எங்க அப்பா வர நேரம்.. சத்தம் போட்டேன் உன்னை மொத்தமா போட்டு தள்ளிட்டு போய்டுவாரு” என்று தன் முட்டைக்கண்ணை உருட்டி அவள் மிரட்ட,

அதைக்கண்டு சொக்கித் தான் போனான் அவளின் சொக்கநாதன்.

” நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன்.. தயவு செஞ்சு என் முன்னாடி கோபப்படாதா.. அப்பறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை.. ” என்று அவன் பார்வையை வேறெங்கோ வைத்துக் கொண்டு கூற,

அதைக்கேட்டு அவனை அடிக்க ஏதாவது சிக்காதா என்று அங்கும் இங்கும் கண்களை அலையவிட்டாள் அவனின் அல்லிராணி.

அவளின் என்னத்தை புரிந்து கொண்ட அஜயும் தன் விளையாட்டுதனத்தை கைவிட்டு அவள் கண்களை நேராக சந்தித்தவன், ” ஓகே.. கூல்.. நான் இங்க எதுக்கு வந்தேன்னு சொல்றேன்.. உனக்கே தெரியும் உன் அக்காவும் என் அண்ணாவும் விரும்புறாங்க.. சோ அவங்களை சேர்த்து வைக்க வேண்டியது நம்மளோட பொறுப்பு.. அந்த பொறுப்பு உனக்கும் இருக்கு தான கீதா.. அவங்களுக்காக நீ என்ன வேண்டுன்னாலும் செய்வ தான?” என்று அவன் கேட்க,

கீதாவின் மனதிற்குள் எச்சரிக்கை மணி அடிக்க, “என் அக்காவை அவளுக்கு பிடிச்சவங்களோட சேர்த்து வைக்கிறதை நான் பார்த்துக்கிறேன்.. நீ கெளம்பு முதல்ல” என்று அவள் அவனிற்கு பிடி கொடுக்காமல் நழுவ,

அதை நினைத்து சிரித்துக் கொண்ட அஜய், “ரொம்ப உஷார் தான்..” என்று மனதோடு கூறிக்கொண்டவன் வெளியே, ” பயப்படாத.. நான் உன்னை ஒன்னும் பண்ணிற மாட்டேன்.. நான் பேச வந்ததே அவங்களைப் பத்தி தான்.. எங்க அண்ணன் அஞ்சலியை நேர்ல மீட் பண்ணனும்னு ரொம்ப ஆசைப்படுறான்.. அதான் நீ நினைச்சா உங்க அக்காவை வெளிய கூட்டிட்டு வர முடியும்ல அதான் உன் கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னு வந்தேன்.. உங்க அக்காவுக்காக இந்த உதவியை பண்ணுவியா கீதா??” என்று அவன் பவ்யமாகக் கேட்க,

அவனை நம்பாத பார்வை பார்த்த கீதா, ” இதைக்கேட்க தான் சென்னையில இருந்து வந்தியா??” என்று எதிர்கேள்வி கேட்டாள்.

” ஹாஹா சென்னையா?? உனக்கு விஷயமே தெரியாதா?? நாங்க இப்போ லட்சுமிநாயக்கன்பட்டில இருக்கோம்.. உங்க ஊர்ல இருந்து ஜஸ்ட் பத்தே நிமிஷம்” என்று அவன் விஷமப் புன்னகையுடன் கூற,

” ஏதே!!?” என்று அதிர்ந்து போன கீதா, ‘ அப்போ இவனுங்க நிஜமாவே சீரியஸா இருக்காங்களா?? எங்க அப்பாங்களை பத்தி தெரியாம இப்படி விளையாடிட்டு இருக்காங்க.. இவங்க இந்த ஊருக்கு வந்த விஷயம் மட்டும் பெரியப்பாக்கு தெரிஞ்சா அவ்ளோதான் ‘ என்று யோசித்து கலங்கியவளை சொடக்கிட்டு தன் பக்கம் திருப்பியவன்,

“சரி என்னைப்பத்தி கனவு கண்டது போதும்.. நாளைக்கு உங்க அக்காவை எப்படியாச்சும் தேனி மாரியம்மன் கோவிலுக்கு கூட்டிட்டு வந்திடு.. இப்போ நான் கிளம்புறேன்.. வராம மட்டும் இருந்துறாத அவதார் குட்டி அப்பறம் நம்ம காதல் நம்மளைக் காணாம ஏங்கி போய்டும்” என்று அவன் கூற,

” என்ன நம்ம காதலா??” என்று அவள் குரல் உயர்த்த,

” நம்ம காதல்னா நம்ம  உடன்பிறப்புகளோட காதல்.. நம்முடன் பிறந்த காதல் நமக்குள் பிறந்த காதல் நமக்காகவே பிறந்த காதல் எப்படி வேணாலும் வச்சுக்கலாம் அவதார்குட்டி.. நான் கிளம்புறேன்.. நாளைக்கு மீட் பண்ணுவோம்” என்று அவளைத் தெளிவாய் குழப்பி விட்டு அங்கிருந்து அவன் விடைபெற்றுச் செல்ல, கீதா தான் மண்டைகாய்ந்து போய் நின்றிருந்தாள்.

அப்போது “இந்த மஞ்சக்கலர் நைட்டியில சும்மா அள்ளுற அவதார் குட்டி.. உன் மஞ்சக்கலர் நைட்டியை பார்த்து எனக்கு கலர் கலரா தோணுது அதெல்லாம் உன் கிட்ட சொன்னா நீ பச்சை பச்சையா திட்டுவ, அதுனால எதுக்கு வம்பு” என்று அவள் முறைப்பதைப் பொருட்படுத்தாமல் கூறிய அஜய் தொடர்ந்து,

 ” கண்டிப்பா நம்ம ஃபர்ஸ்ட் நைட்டுக்கு நீ இந்த நைட்டியை தான் போடணும் அவதார்.. அப்போதான் எல்லாம் வசதியா இருக்கும்” என்று சில்மிஷமாய்க் கூறி கண்ணடித்து விட்டு அவனின் காதலி அவனை அடிப்பதற்கு முன் அங்கிருந்து பறந்திருந்தான் அஜய்.

– தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!