என் செல்ல சீமாட்டி 28 – Final 2
சொர்ணம் பாட்டி, பாரு பாட்டி, செந்தில் தாத்தா மூவருக்கும் கொள்ளு பேத்தியை பார்த்ததும் அத்தனை மகிழ்ச்சி… தவமிருந்து கிடைத்த வரமல்லவா?
அனைவரும் ஒன்றாக சென்று குல தெய்வத்திற்கு பூஜை செய்து வந்தார்கள்.
Advertisement
நந்தனும் மும்பையில் இருந்து வந்திருந்தான். அவனுக்கு திருச்சியிலே இப்பொழுது பணி மாற்றம் கிடைத்திருந்தது.
சொர்ணம் பாட்டியை சரி கட்டி அவர் மூலம் தேவசேனாவை திருமணத்திற்கு பேசும் படி கூறினான்.
Advertisement
Advertisement
பேரனுக்காக பாட்டி பேசவும்,” நீ மேலே படிகிறதா சொன்னியேடா.. படிச்சு முடிச்சுட்டு கல்யாணம் செய்வோமே, இப்ப என்ன அவசரம்?” என்றார் அஞ்சனா.
“அதானே, அஞ்சு சொல்றது தானே சரி. இப்ப பொண்ணுங்களே லேட்டா தான் கல்யாணம் செஞ்சுக்கிறாங்க, பசங்க செட்டில் ஆகணும் இல்ல?” என்றார் மஞ்சு.
Advertisement
“இல்ல.. தேவா வீட்ல இந்த வருஷதுக்குள்ள முடிக்கணும்னு இருக்காங்க.
அடுத்து தேவா தங்கச்சி வேற இருக்கு “ என்றார் வடிவேலு.
“அதானல என்ன? அவங்களுக்கு அவசரம்னா வேற இடம் பார்க்க சொல்லிடுங்க, நம்ம இவன் படிச்சதும் வேற இடம் பார்ப்போம்” என்றார் அஞ்சு.
அஞ்சு மஞ்சுவை தவிர ஓரளவிற்கு அனைவர்க்கும் நந்தனின் காதல் விவகாரம் தெரியும்.
அனைவரும் நந்தன் என்ன செய்ய போகிறான் என்று அவனையே குறுகுறுன்னு பார்த்து கொண்டு இருந்தார்கள்.
அப்பொழுது தான் அருணா சந்தோஷியை தூங்க வைத்துவிட்டு வந்து நந்தன் அருகில் அமர்ந்தாள்.
“அருணா அண்ணி.. நீங்க சொல்றது ரொம்ப சரி.. அம்மா அத்தை இரண்டு பேரையும் கூட மன்னிச்சிடலாம். ஆனா இப்படி ரவுண்டு கட்டி வேடிக்கை பார்க்கிறாங்க பாருங்க, கடுப்பா வருது அண்ணி..” என்றான் அருணாவிடம் மெல்ல.
அருணா “நமக்கு வந்தா தான் நந்தா ரத்தம்.. இப்ப புரியுதா?” என்று சிரித்து கொண்டே கேட்டாள். பிறகு,”அருணா இருக்க பயமேன்.. இரு.. நான் பேசுறேன்” என்று விட்டு, “அத்தை.. நம்ம நந்துவுக்கு தேவாவை ரொம்ப பிடிச்சிருக்காம், அதான் விஷயம்” என்று விஷயத்தை பட்டென்று போட்டு உடைத்துவிட்டாள்.
“என்ன அண்ணி இப்படி பட்டுன்னு சொல்லிட்டீங்க” என்று திரு திருவென முழித்தான்.
“என் அனுபவத்துல சொல்றேன். இவங்களுக்கு நாம சுத்தி சுத்தி வலை விரிச்சாலும் அதுல எப்பவுமே விழமாட்டாங்க. நேரடியா பேசி முடிச்சிடறது தான் சுலபம்” என்றாள் அருணா நந்தனுக்கு மட்டும் கேட்கும்படி.
“எல்லாம் நீ சொல்லி கொடுத்த வழிதான்டி, அதான் ஆளாளுக்கு அவங்க இஷ்டத்துக்கு முடிவு எடுக்கிறாங்க” என்று ஆரம்பித்தார் மஞ்சு.
“எல்லாம் என் நேரம் மஞ்சு.. விடு.. இவங்க நல்லத்துக்கு நாம எதுவுமே யோசிக்க வேண்டாம். எல்லாம் அவங்க தலையில அவங்களே மண்ணை அள்ளி போட்டுக்கட்டும்”
“என்னம்மா நீங்க.. கொஞ்சம் அமைதியா இருங்க.. பேசலாம்”என்று குரு தான் இருவரையும் சமாதானம் செய்து அமர வைத்தான்.
பின் சுருக்கமாக நந்தன் தங்கள் காதல் கதையை சொல்லவும், “இப்ப என்ன அம்மா.. கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கட்டுமே” என்றான் குரு.
“படிக்கிற வயசுல காதலிச்சிட்டு வந்து நிக்குறவன், கல்யாணம் பண்ணிட்டு படிக்க போறானா?”
“சரியான பாயிண்ட் அத்தை” என்றாள் ரித்து இப்பொழுது.
பின் சிறியவர்கள் முறைக்கவும் “பாயிண்ட் நல்லா இருதுச்சுன்னு சொன்னேன்” என்றாள் அசடு வழிந்துகொண்டே.
“சரி.. அந்த பொண்ணு இப்ப என்ன பண்ணுது” என்றார் மஞ்சு.
“அவ மாஸ்டர்ஸ் படிச்சிட்டு இப்ப திருச்சியில காலேஜில் லெக்ச்சரரா சேர்ந்திருக்கா அத்தை” என்றான் நந்தன்.
“அப்ப அதுக்காக தான் நீ திருச்சி வந்திருக்க, அப்படித்தானே” என்றார் அஞ்சனா.
“அப்பா தான் அம்மா, இரண்டு பேரும் ஒரே ஊர்ல இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாங்க” என்று வடிவேலுவை கோர்த்துவிட்டான் நந்தன்.
“அப்ப.. உங்களுக்கு முன்னமே தெரியும், அப்படி தானே..” என்று வடிவேலுவிடம் எகிறினார் அஞ்சு.
“இல்ல அஞ்சு.. நான் உன்கிட்ட சொல்லலாம்னு தான் சொன்னேன். மச்சான் தான் எதுக்கு ஈசியா நடக்குற விஷயத்தை காம்ப்ளிகேட் பண்ணனும். பெரியவங்க பேசுற மாதிரியே பேசுவோம்ன்னு ஐடியா சொன்னாரு” என்று ஆனந்தனை அழகாக கோர்த்துவிட்டார்.
“அடப்பாவி.. ஏன்ய்யா?”என்று ஆனந்தன் வடிவேலுவை முறைக்க. அஞ்சுவும் மஞ்சுவும் ஆனந்தனை முறைக்க.
“இப்ப என்ன பிரச்சனை? நல்ல பொண்ணு, நல்ல குடும்பம்…. மேலே பேசலாமே” என்றாள் அருணா.
“எல்லாருக்கும் தெரியும், அம்மா நான்.. எனக்கு தான் கடைசியா தெரியுது. எல்லாரும் ஏற்கனவே பேசிட்டிங்களா, கல்யாண தேதி பார்த்த்தாச்சா? இல்ல இனிமே தானா?” என்று மூக்கை உறிஞ்சினார் அஞ்சு.
“நம்மள தான் எல்லாரும் ஒதிக்கிட்டாங்களே.. வருத்தப்படாத அஞ்சு” என்று மஞ்சுவும் அவர் பங்கிற்கு மூக்கை உறிஞ்சினார்.
“நீங்க இரண்டு பேரும் இல்லாம எப்படி ம்மா முடிவு செய்வோம்” என்றான் நந்தன்
“சும்மா நடிக்காதடா..”
“அம்மா..அத்தை.. நீங்க ஒரு தடவை பொண்ணுகிட்ட பேசி பாருங்களேன், உங்களுக்கு பிடிக்கும்.”
“இப்ப அதுவா பிரச்சனை, நீ மேலே படிக்கணும்னு எனக்கு ஆசை. உங்க அண்ணா ஐ டில வேலை பார்க்கனும்னு ஆசை, நான் ஆசை பட்டு என்ன பண்றது. எனக்கு தான் அந்த கொடுப்பினை இல்லையே”
“நான் வேலைக்கு போய் சம்பாதிச்சதை சேர்த்து வச்சிருக்கேன் மா. அதுவே நான் மேலே படிக்கிறதுக்கு போதும். அது போக மிச்சம் காசும் இருக்கும், சேனாவும் நான் படிக்கிறதுக்கு ஓகே சொல்லி இருக்கா. கொஞ்சம் யோசிம்மா…”
“பொண்டாட்டி சம்பாதிச்சு புருஷன் படிச்சா நல்லாவா இருக்கும்?”
“என்ன அஞ்சு இப்படி சொல்ற.. எனக்கு என் பொண்ணு நல்ல வேலைக்கு போகணும்னு ஆசை, நான் ஆசை பட்டது மட்டும் என்ன நடக்குதா? பொண்ணோ பையனோ, பிடிச்சவங்க வேலைக்கு போறதுல தப்பு என்ன இருக்கு? நாமளே இப்படி சொல்லக்கூடாது” என்று மஞ்சு கூறவும்.
“என்ன மஞ்சு நீயும் அவங்க பக்கம் பேசுற?” என்றார் அஞ்சு.
“இல்ல அஞ்சு.. அருணாவும் குருவும் சொல்லற மாதிரி தான் அஞ்சு. வாழ்க்கை வலிக்க வலிக்க சொல்லி கொடுத்த பாடம் நமக்கும் இருக்கே..?”
“அவங்க பெரிய தங்கத்தை இழந்தப்ப நாம எவ்வளவு தவிச்சு போனோம். இவங்க காணம போனப்ப எப்படி மனசொடிஞ்சு போனோம்…. நம்மளை யாருமே புரிஞ்சுக்கலையே, இனியும் புரிஞ்சுக்க மாட்டாங்க. அவங்கவங்களுக்கு அவங்கஅவங்க நியாயம். நந்தனுக்கு அவன் பொண்டாட்டி வேலைக்கு போய், இவன் படிக்கிறதுல இஷ்டம்னா எனக்கு அது தப்பா தெரியலை”
அஞ்சனா இப்பொழுது பாரு பாட்டியை பார்க்கவும், ”நான் சந்தோஷி பிறந்தப்பவே உணர்ந்துட்டேன். பிள்ளைகள் தப்பான வழியில் போனா நாம திருத்தலாம். அவங்க சரியா இருக்கும் பொழுது நமக்கு பிடிச்ச வழியில அவங்களை வலுக்கட்டயாமா திருப்பக்கூடாது. காலத்துக்கு ஏற்ப நாமளும் மாறனும் அஞ்சு” என்றார்.
“எல்லாரும் சொல்றீங்க.. என்னமோ பண்ணுங்க..”
“அம்மா.. அண்ணாக்கு மேலே படிக்கிறதை விட வேலைக்கு போறதுல தான் விருப்பம். அம்மாக்காக படிக்கணுன்னு தான் அவன் சொல்றான். சந்தோஷமா சரி சொல்லுங்கம்மா” என்றாள் அபி.
இப்படியாக அபிநந்தன் தேவசேனா திருமணம் இரு வீட்டார் சம்மதத்தோடு சீரும் சிறப்புமாக நடந்தேறியது.
