Skip to content
Post Views: 5,210
Epilogue
“செல்லம்மா.. செல்லம்மா.. இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க… சீக்கிரம் வாம்மா.. டைம் ஆச்சு..”என்று குரல் கொடுத்து கொண்டே வீட்டினுள் வந்தான் கந்தகுரு.
Advertisement
ஹாலில் அழகான பச்சை நிற பாவாடை சட்டை அணிந்து அழகோவியமாய் அமர்ந்திருந்தாள் சந்தோஷி. கந்தகுருவும் பச்சை நிற சட்டையும் வேஷ்டியும் அணிந்து தயாராக இருந்தான்.
“என்னடாம்மா இன்னும் செல்லம்மா ரெடி ஆகலையா?” என்று கேட்டான் குரு தன் செல்ல மகளிடம்.
Advertisement
Advertisement
“உங்க செல்ல சீமாட்டி வருவாங்க.. உட்காருங்க..” என்று நீட்டி முழக்கினாள் சந்தோஷி.
“என் சின்ன தங்கம் கோவமா இருக்காங்க போலவே?“
Advertisement
“ஹ்ம்ம்..” என்று முகத்தை திருப்பி கொண்டாள்.
“என்னடாம்மா.. சொன்னா தானே அப்பாவுக்கு தெரியும்”
“அஞ்சு ஆச்சியும் மஞ்சு பாட்டியும் சொல்றாங்க.. சீக்கிரம் நமக்கு தம்பி பாப்பா வரப்போகுதாம்“
“அதான் தங்கத்துக்கு ஏற்கனவே தெரியுமே? ஆனா தம்பி பாப்பாவா தங்கச்சி பாப்பாவா தெரியாதுடா”
“அதில்லைப்பா.. பாப்பா வந்தா அம்மாவுக்கு பாப்பாவை பார்க்க தான் டைம் இருக்குமாம். நீங்க எப்பவும் போல உங்க செல்ல சீமாட்டிய தான் பார்த்துப்பீங்களாம். அதனால என்னை அவங்க கூட இருக்க ஊருக்கு கூப்பிடறாங்க” என்று சொல்லும் போதே கண்களில் இருந்து நீர் இறங்கிவிட்டது.
“அச்சோ.. எங்க தங்கத்தை எப்படி நாங்க அனுப்புவோம்… அவங்க சொன்னா நீ ஏன்டா அழற.. அம்மாகிட்ட சொல்ல வேண்டியது தானே?”
“நான் அழுதா அம்மாவுக்கு கஷ்டமா இருக்கும் இல்ல.. அதான் நான் அம்மா கிட்ட சொல்லலை”
“சொக்கரே கொஞ்சம் இந்த சாரீ பிளிட்ஸ் எடுத்து விடுங்க” என்று கூறிக்கொண்டே, பச்சை பட்டுடுத்தி மேடிட்ட வயிறுடன் அசைந்துவரும் தங்க தேர் போல அருணாளினி வந்தாள் .
இன்று சந்தோஷியின் நான்காவது பிறந்தநாள். அதற்காக கோவிலுக்கு புறப்பட்டு கொண்டிருக்கிறார்கள். வழியில் கம்லா பாட்டியையும் உடன் அழைத்து கொள்வார்கள்.
“அப்புறம் வேற என்ன சொன்னாங்க உங்க ஆச்சியும் பாட்டியும்” என்றாள் அருணாளினி மகளிடம்.
“அப்பாக்கு செல்லம்மா தான் முதல்ல பிடிக்குமாம். அவங்க அப்பா அம்மா ஆச்சி பாட்டி தம்பி எல்லாரையும் விட்டுட்டு ‘எனக்கு என் செல்லம்மா தான் வேணும்னு இங்க வந்துட்டாங்களாம்..’ ”
அருணா குருவை பார்வையாலே எரித்தாள்.
“நேரமாச்சு. வாங்க கிளம்புவோம்” என்றான் குரு.
“இருங்க சொக்கரே.. என்ன அவசரம்..” என்று கூறிக்கொண்டே மகளை தூக்கி மடியில் அமரவைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
“அதுக்கு சந்தோஷி என்ன சொன்னீங்க?”
“அய்யோ அம்மா.. ஆச்சியும் பாட்டியும் நம்மளை எப்ப பேச விடுவாங்க.. அவங்க மட்டும் தானே பேசுவாங்க” என்று மூக்கை சுருக்கி சொன்ன அழகில், கணவன் மனைவி இருவருக்கும் புன்னகை அரும்பியது.
“அம்மா அப்பாவோட செல்ல சீமாட்டின்னா.. நீ அப்பாவோட தங்க பட்டு குட்டிடா”
“அப்ப உனக்கு..”
“எனக்கும் தான் டா.. நீ தான் எங்க இரண்டு பேருக்கும் கடவுள் கொடுத்த கிப்ட்”
“தம்பி பாப்பா வந்தா உனக்கு டைம் இருக்காதா? என்ன பார்த்துக்க கஷ்டமா இருக்குமா?”
“சந்தோஷிய பார்த்துக்க அப்பா அம்மா இரண்டு பேரும் இருக்கோம். பாப்பா வந்ததும் பார்த்துக்க அப்பா அம்மா அக்கா மூணு பேரு இருக்கோம்ல..”
“நான் அக்காவா?”
“ஆமாடா தங்கம்.. குட்டி அக்கா..”
“நான் பாப்பாவை பார்த்துகிறேன், அப்பா உன்ன பார்த்துக்கட்டும், நீ என்ன பார்த்துக்கோ ம்மா.. ஓகேவா?”என்றாள் சந்தோஷி மழலை குரலில்.
“எவ்வளவு அறிவு என் தங்கத்துக்கு.. அப்பாகிட்ட வாங்க” என்று மகளை ஆசையாக தூக்கிக்கொண்டான் குரு
“நான் ஊருக்கு போய்ட்டா கம்லா தாதிம்மா, ருக்கு நானிமா, கோலு மாமா எல்லாரும் மிஸ் பண்ணுவாங்கல்ல ப்பா?”
“சந்தோஷிய நாங்க எங்கேயும் எப்பவும் அனுப்ப மாட்டோம். அதனால் யாரும் மிஸ் பண்ண மாட்டாங்க, ஓகேவா.. இப்ப கோவில் போலாம் வா” என்று மகளை சமாதானம் செய்து அழைத்து சென்றார்கள்.
அன்று இரவு சந்தோஷி தூங்கிய பிறகு கணவனை மிரட்டிக்கொண்டிருந்தாள் அருணா.
“இங்க பாரு குரு.. இப்ப போன் போட்டு சொல்ற நீ..”
“இப்ப எல்லாரும் தூங்கி இருப்பாங்க செல்லம்மா…”
“பரவாயில்லை .. இனிமே வாரம் ஒரு தடவை போன் பேசறது கட். நீ சொல்லி தான் ஆகணும்.. பிறந்தநாள் அதுவுமா குழந்தைகிட்ட பேசற பேச்சா இது. மாசம் ஒரு தடவை தான் பேசுவோம்னு சொல்லிட்டு வந்து படு”
“செல்லம்மா அத சொல்லிட்டு போனை வைக்க முடியுமா.. ஆளுக்கு ஒரு மணி நேரம் என்ன வச்சு செய்வாங்க”
“அதுக்கு?”
“என் செல்லம்மாகிட்ட சொக்கி போற நேரத்துல.. போன் போட்டா..”
“நீங்களா சொக்கி போற ஆளு.. நானில்ல சொக்கி போய் இருக்கேன். பேசியே என்னை மயக்காதீங்க.. போனை போடுங்க..”
“செல்லம்மா.. ப்ளீஸ்.. “
அருணாளினி இறங்கி வருவதாக தெரியவில்லை.
குரு, அஞ்சுவுக்கு அழைத்து, “என்னம்மா நீங்க.. சந்தோஷிக்கிட்ட என்ன சொல்றதுன்னு தெரியதா?”
“ஆனாலும் நீ ரொம்ப தான் மாறிட்ட குரு.. அம்மாவை இப்ப எதுக்கு கோச்சுக்குற, எங்களுக்கும் எங்க பேத்திகூட இருக்கணும்னு ஆசையா இருக்கும்ல”
“ஆசையா இருந்தா எங்களை கூப்பிடுங்க, இல்லனா நீங்க இங்க வாங்க. அத விட்டுட்டு.. ஏன்மா..? இனிமே மாசம் ஒரு தடவை தான் போன் பேசணும்னு அருணா சொல்லிட்ட்டா மா. நான் என்ன சொல்றது..”
“நீ எதுக்கு டா பொண்டாட்டி பேச்சை கேக்கற. யாரு கிட்ட இருந்து டா இந்த பழக்கத்தை கத்துகிட்ட … நான் வாரம் ஒரு தடவை பேசுவேன்னு அடிச்சு சொல்லு அவகிட்ட”
“எல்லாம் எங்க மாமா கிட்ட தான் கத்துக்கிட்டாரு அத்தை, பொண்டாட்டி சொல்றதை கேக்றதுக்கு. என்னை வச்சு செஞ்ச மாதிரி இரண்டு பேரும் சேர்ந்து என் பொண்ணுகிட்ட உங்க வேலையை காட்டுறீங்களா? இனிமே மாசம் ஒரு தடவை பேசுனா போதும். அப்படியே உங்க மஞ்சுகிட்டயும் இதை சொல்லிடுங்க அத்தை. அடுத்த மாசம் பேசுறோம், இப்ப வைக்கிறோம்” என்று குரு கையில் இருந்து போனை பிடிங்கி பேசிவிட்டு வைத்தாள் அருணா.
குரு கேள்வியாக அருணாவை பார்க்கவும்..
“இப்படியே பார்த்துட்டு இருக்க போறீங்களா.. வாங்க சொக்கரே.. “என்று கந்தகுருவின் கை பிடித்து உள்ளே அழைத்து சென்றாள்.
இனி அவர்கள் இருவருக்குமான ஏகாந்த நேரம்.
“செல்லம்மா..செல்லம்மா.. நீ என் செல்ல சீமாட்டி செல்லம்மா….”
“சொக்கரே … எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் உங்க செல்ல சீமாட்டியாவே பிறக்கனும்.. உங்க கூடவே இருக்கனும்.. உங்களோடு கலக்கனும்.. உங்க அன்பை நேசத்தை காதலை சுகமாக சுமக்கனும்..”
செல்லம்மா…
சுபம்.
error: Content is protected !!