Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன்  உன்னை சேருமா  12 1

என் ஜீவன்  உன்னை சேருமா



Advertisement

 அத்தியாயம் -12

Advertisement

Advertisement

  தந்தையைப்  பார்க்க ஹாஸ்பெட்டல்  ஓடினான்  மாயா..

Advertisement

 தீவிர சிகிச்சை  பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் உலகநாதன்..

 அவருக்கு டாக்டர்கள் ட்ரீட்மெண்ட் செய்து கொண்டே இருந்தனர்.. நெஞ்சுவலி என்பதால் ஆஞ்சியோ கிராம் பண்ணி கொண்டு இருக்க.. அதில்  அவருக்கு  இரண்டு இடத்தில் பிளாக் இருப்பதை, கண்டுபிடித்தவர்கள்  அதை ஆஞ்சியோ  மூலமாக சரி பண்ணிக்   கொண்டிருந்தனர் டாக்டர்கள்…

 மாயா கனத்த மனதோடு உலகநாதன் இருக்கும் அறைப்பக்கம் தந்தைக்கு எதுவும்  ஆகிவிடக்கூடாது என்று கடவுளை வேண்டியபடியே  நின்று கொண்டிருந்தாள்..

 வெளியே வந்த டாக்டர் “ஒன்னும் பிரச்சனை இல்லை மாயா, 2 பிளாக் இருந்துச்சு,  அஞ்சியோ  கிராம் பண்ணி சரி பண்ணிட்டோம் அப்பாக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை ஒரு இரண்டு மூனுநாள்   கழித்து வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்”  என்று  டாக்டர்  கூற..

மாயாக்கு உயிர் வந்தது போல் இருந்தது அக்னியின் ஆபிஸிலிருந்து,, தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடி வந்திருந்தாள்  தந்தைக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்று… டாக்டர் ஒன்றுமில்லை  என்று சொல்லியதும் அப்பாடா என்று இருந்தது மாயாவிற்கு..

 உலகநாதனுக்கு ஆஞ்சியோ பண்ணி  முடித்து,,ரத்த குழாய்களில்  சரியாக இதயத்துக்கு செல்கிறதா என்று சரி பார்த்த பின்னே  மருத்துவர்கள் வெளியே வந்ததிருந்தனர்..

 “அப்பா ரெண்டு நாள் ஐ, சி, யூ வுல இருக்கட்டும் கண் முழிச்சதும் வேறொரு ரூம்புக்கு  மாத்திக்கலாம்”  என்று டாக்டர் கூற..

“சரி டாக்டர்” என்றிருந்தாள் மாயா  கலங்கி கண்ணீரோடு..

 சிறு வயதிலிருந்து மாயாவை தெரியும் டாக்டருக்கு மாயா அழுவதை பார்த்தவர் “என்னாச்சி  உலகநாதனுக்கு 2 பிளாக் எல்லாம் நெஞ்சு வலி வராதே, என்னாச்சு உலகநாதனுக்கு, அவர் ரொம்ப  ஹெல்தி பர்சன் ஆச்சே” என்று கேட்க..

 மாயா தன் கல்யாணம் நின்று போனதால் வந்த பிரச்சனையால் தான் தன் தந்தைக்கு இப்படி ஆகிவிட்டது என்று டாக்டரிடம் கூற..

“சரி பண்ணிடலாமா மாயா”என்று  இருவரும்   பேசிக்கொண்டே இருக்கும்போதே ஒரு செவிலி ஓடடி வந்து..

 “டாக்டர்  உலகநாதன் சாருக்கு பல்ஸ்  இறங்கிக்கிட்டே இருக்கு,  ஹார்ட் பீட் கம்பி ஆகிட்டே வருது” என்று கூற..

 “இருக்காதே” என்றவர்.. உலகநாதனை பார்க்க ஓடினார்..

 டாக்டர் உலகநாதனை செக் பண்ண அவர் இதயத்துடிப்பு குறைந்து கொண்டே வர… அவருக்கு ஒன்றும் புரியவில்லை

உடனே  அனைத்து டெஸ்டுகளையும் எடுத்தார்   ஒவ்வொரு ரிசல்ட்டும்  சரியாகவே  இருக்க..

 ஒரே ஒரு  ரிசல்டு மட்டும்  நெகடீவ் என்று வர அதை  என்னவென்று பார்த்தவருக்கு பயம் கூடி போனது..

 “ஓ  சிட்…” என்றவர்.

செவிலியிடம்  “மாயாவை   உடனே ஐ, சி, யூ வுக்கு வர சொல்லு” என்றவர் உலகநாதனை பார்க்க ஓடினார்…

 செவிலி  வந்து மாயாவை அழைக்க..

 மாயா பயந்து போனாள் தந்தைக்கு இதய  துடிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்று செய்தியை கேட்டு உடனே அவளின்  இதயத்துடிப்பும் மெல்ல குறைய ஆரம்பித்தது..

 அவளுக்கு ஐ, சி,யூ விற்கு வரவே கால்கள் நடக்கமுடியவில்லை எங்கே  விழுந்து விடுவோமோ,? தன்னையும் சேர்த்து  யார் பார்ப்பது? என்று பயந்துக்கொண்டே, தான்  உள்ளே வந்தாள்.. மாயா தன்  உடையை இருக்கமாக பற்றிக் கொண்டே  ஐ, சி, யூ விற்கு வர..

 மாயாவை  பார்த்த டாக்டர் “மாயா வேகமாக வா, வேகமா வா” என்று  அவளை கத்தி அழைக்க..

 என்னாச்சு என்பது போல் மாயா  வேகமாக வர.. உலகநாதன் மூச்சு விட சிறுமப்படுவதை போல் தெரிய “என்னாச்சு டாடிக்கு?  மூச்சு விடுவே சிரம படுறாரு”  என்ற மாயா  உலகநாதனே பார்த்துக் கொண்டே டாக்டரிடம்  கேட்க..

 “மாயா உங்க அப்பாவுக்கு எல்லாம் நார்மலா தான்  இருக்கு ஆனா அவருக்கு தான் உயிர் வாழவே பிடிக்கல”..

 “என்ன சொல்றீங்க டாக்டர், எனக்கு புரியல”  என்று மாயா கேட்க…

 “மாயா அப்பாவுக்கு சுகர் பிரஷர் வேற எந்த பிரச்சனையும் இல்ல,, அவருக்கு உயிர் வாழவே பிடிக்கல, அவரோட செல்கள் எல்லாம் அவருக்கு ஆப்போசிட்டா வேலை செய்யுது,, ஐ மீன் நம்ம உயிர் வாழ உதவுகிற செல் எல்லாம், உங்க அப்பா   உயிரை கொன்னுட்டு இருக்கு,, “…

 “எப்படி  டாக்டர்  எனக்கு ஒன்னும் புரியலயே”..

 “உலகநாதனுக்கு உயிர் வாழவே  பிடிக்கல சோ,, அவர் மூளை சொன்ன வேலையை அவர்  செல்கள் எல்லாம் துணை போகுது,, நீ அப்பா கிட்ட பேசு,,நீங்க  எனக்கு வேணும்னு சொல்லு.. அப்போதான்   செல்கலெல்லாம் அவர்  உயிரை  காப்பாத்துற  வேலையை பார்க்கும்,  இப்போ அவருடைய செல் எல்லாம் அவரை  கொல்லுற வேலைய பாத்துட்டு இருக்கு,, இந்த பிரச்சனை ரொம்ப ரேர் சிலருக்கு வரும்,,”

“என்ன  டாக்டர்  சொல்லுறீங்க”..

 “உன் அப்பா கிட்ட பேசு அவருக்கு உயிர் வாழ தோன்ற மாதிரி பேசு, அவர் எழுந்து வரணும் மூளை அவருக்கு கட்டளையிடனும் அப்பதான் அவர்  உயிர் பிழைப்பார்,, இல்லன்னா கோமாவுக்கு போக  கூட சான்ஸ் இருக்கு மாயா,, காமான் பேசு மாயா, பல்ஸ் குறைஞ்சு கிட்டே வருது”.. என்றார்.

 மாயா “டாடி டாடி” என்று அழுக..

 “மாயா அழாத அவர் உனக்கு வேணும் தானே அதை சொல்லு அவர்கிட்ட” என்ற டாக்டர் கூற..

 சரி என்று தலையாட்டியவளுக்கு “டாடி”  என்றதும் எவ்வளவு முயற்சி பண்ணாலும் அழுகை மட்டுமே வர..

 தன் கன்னத்தை தானே அடித்து அழக்கூடாது என்று அவளுக்கு அவளை சமாதானம் சொல்லிக் கொண்டவள்,,

 கண்களை துடைத்துக் கொண்டு உலகநாதன் அருகில் அமர்ந்து தந்தையின் கையை எடுத்து தன் கண்களில் வைத்துக் கொண்டாள்..

 “அப்பா”  என்றாள்.

” அப்பா எனக்கு நீங்க வேணும் பா என்கிட்ட திரும்பி வந்துடுங்கப்பா எனக்கு இந்த உலகத்துல உங்களை விட்டா யாரும் இல்லப்பா,  என்னை அனாதையா விட்டுட்டு   போயிடாதீங்கப்பா, ” என்று அவள் பேச பேச பல்ஸ் குறைந்து  கொண்டே போக..

 “மாயா  பேசு பேசு” என்ற டாக்டர் கத்தி கொண்டு இருக்க….

மாயாவுக்கு பயம் வர..

” டாடி அம்மா என்னை பாதியில விட்டுட்டு போயிட்டாங்க நீங்களும் என்னை விட்டுட்டு போயிடாதீங்க டாடி,, நான் கண்டிப்பா உயிரோடு இருக்க மாட்டேன் டாடி “என்று மாயா சொன்ன நொடி  உலகநாதன் இதய துடிப்பு   நின்றிருந்தது..

 பக்கத்தில் இருந்து இதய துடிப்பதை அளக்கும்  கருவியிலிருந்து கீச் கீச் என்று ஒலி வர..

 தந்தையிடம் பேசிக்கொண்டு இருந்தவளின்  தோளை தொட்டா  டாக்டர்.. கலங்கிய  கண்ணோடு பார்த்த  மாயாவிடம்,,

எப்படி  சொல்வது என்று நினைத்தவர்.. “உலநாதன் சார் நம்மளை விட்டு   போயிட்டாருமா” என்றார்..

என்ன என்பது போல் அவரைப் பார்க்க  மாயா,, “என்ன டாக்டர் சொல்றீங்க” என்றாள்..

உலகநாதன் முகத்தில் பொருத்தி இருந்த முக கவசத்தை எடுத்து விட்டவர்,, “அப்பா இறந்துவிட்டார்” என்றார்..

 “இல்லை டாக்டர் நீங்க சரியா பாருங்க, அப்பா என்னை விட்டு போக மாட்டார்,, நீங்கதானே கொஞ்ச நேரம் முன்னாடி அப்பாவுக்கு ஒன்னும் இல்லன்னு சொன்னீங்க,,”..

 டாக்டர் இவளிடம் எப்படி சொல்வது என்பது தெரியாமல் செவிலிய அழைத்து மாயாவிடம் தகவல் சொல்ல சொன்னார்..

 அந்த நர்ஸ்  மாயாவிடம் வந்து “அப்பா இறந்துட்டாங்க  மேடம்” என்று மாயாவிடம்  சொல்ல

 “இல்ல  சிஸ்டர் அப்பாவுக்கு  ஆக்சிசன்  மாஸ்க்  போட, சொல்லுங்க   டாக்டர்,, இப்போ  அப்பாவுக்கு  இதயம்  துடிக்கும் பாருங்க டாக்டர்” என்றாள் ஒரு சிறு குழந்தை போல்..

 உலகநாதன் அருகில் வந்தவள் “டாடி, டாடி உங்களுக்கு ஒன்னும் இல்லை  டாடி எழுந்திருங்க டாடி.., நாளைக்கு சண்டே சர்ச்சுக்கு போகணும் டாடி எழுந்து வாங்க உங்களுக்கெல்லாம் சரியாயிடுச்சு தானே டாடி” என்று  உலகநாதனிடம்  அவள்  பேசிக்கொண்டிருக்க.

 “மாயா” என்ற அதட்டினார் டாக்டர்.. “சொல்றது புரிஞ்சுக்கோ அப்பா இல்லை, இறந்துட்டார்  அடுத்து நடக்க வேண்டியதே பாரு, நீ  ஒன்னு சின்ன குழந்தை இல்லம்மா,, முதலில் அமைதியா இரு,, உன் போனை குடு,”  என்றவர் மாயாவின் போனை வாங்கிய  டாக்டர், அவள் போனில் உள்ள  அனைத்து வாட்ஸாப்  நம்பருக்கும் உலகநாதன்  இறந்துவிட்டதாக   மெஜேஸ் அனுப்பி விட்டார்..

 மாயா உலகநாதனிடம் பேசிக் கொண்டே இருப்பதை பார்த்து டாக்டர் “நீ முதலில் வெளியே வா” என்று அவளை அழைத்து வெளியே வர,,.

” நான் அப்பாவை விட்டு வரமாட்டேன் டாக்டர்,, நீங்க என்கிட்ட இருந்து அவரை பிரிச்சிருவீங்க, நீங்க பொய் சொல்லாதீங்க அப்பா இருக்காரு தானே” என்று மறுபடியும் டாக்டரிடம்  உலகநான் உயிரோடு இருப்பதை போலவே,பேச,,

 டாக்டருக்கு மாயாவை பார்த்து பாவமாக இருக்க,, அவளை ஐ, சி, யூ வில் இருந்து வெளியில் அழைத்து வந்தார்..

 மாயாவுக்கு தந்தை இறந்ததை தாங்க முடியவில்லை,, அவர் இல்லாததை அவளால்  ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மனது அவர் இறக்க வில்லை அவர் இருக்கிறார்  என்று சொல்ல,, மூளையோ அவர் இறந்துவிட்டார்.. என்று கூற..

“மேடம்” என்று பார்த்திபன் மாயாவின் அருகில் வர..

 “பார்த்திபன்”  என்று ஐ சி யூ அறையை காண்பித்து  “அப்பா அப்பா” என்று சொல்ல.

 “என்னாச்சு மேடம்” என்றதும்.. “அப்பா, டாடி,  பார்த்திப்பன்” என்று  அவனின் தோளை கட்டிக் கொண்டு  அப்படி ஒரு அழுகை அழுதால் மாயா.

” மேடம் அழாதீங்க மேடம்,, சாருக்கு என்ன ஆச்சு மேடம்’ என்று பார்த்திபன் கேட்டதும்.

” அப்பா, அப்பா” என்று அழுதளே தவிற அவளுக்கு தந்தை இறந்து விட்டதை கூட சொல்ல நா வரவில்லை…

டாக்டர் பார்த்திபனை பார்த்து “நீங்க யாரு மாயாவுக்கு” என்று கேட்க..

என்ன சொல்வது  என்று முதலில் யோசித்தவன்  பிறகு  “அண்ணா,  அண்ணா சார் மாயாவுக்கு ” என்றான்  பார்த்திபன்..

 “என்னாச்சு டாக்டர்   உலகநாதன் சாருக்கு” என்றான் டாக்டரை பார்த்து..

 “அவர் இறந்துவிட்டார் பார்த்திபன்” என்றவர்.. “அடுத்து என்ன பண்ணனுமோ, பண்ணுங்க” என்று  சொல்லி  சென்று விட்டார்..

 மாயாவோ  பார்த்திபன் தோள் சாய்ந்ததவாறு “அப்பா என்னை விட்டுப் போயிட்டாரு பார்த்திபன் எனக்கு யாரும் இல்லை பார்த்திபன்”,, என்று கதறி அழுத மாயாவின்  தலையை  தடவி கொடுத்துக் கொண்டு இருந்தான் பார்த்திபன்..

 உடனே தன் நண்பன்  கேசவன் ஞாபகம் வர, உடனே  கேசவனை அழைத்து இருந்தான்.

 கேசவன் ஏ,    டு,  இஸட்  என்று அனைத்து உதவிகளை செய்து கொடுக்கும் நிறுவனம் வைத்துள்ளான்,  அவன் கல்யாணம் முதல் கருமாதி வரை அனைத்தையும்   விதமான நிகழ்ச்சி  வேலைகளையும் செய்து கொடுப்பான்….

கேசவன்  வந்ததும், உலகநாதனை எடுத்து சொல்வதில் இருந்து அனைத்து வேலைகளையும் அவனே ஏற்று பார்த்துக்கொள்ள..

மாயா இரண்டு முறை அழுது, அழுது மயக்கம் போட்டு விழுந்திருந்தாள், அவளைப் பார்த்துக் கொள்வதே பார்த்திபனுக்கு வேலையாகி போனது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!