Skip to content
Post Views: 1,194
உலகநாதன் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றியதும் கூடவே ஏற போன மாயாவை வேண்டாம் என்று தடுத்த பார்த்திபன்..
அவனோடு காரில் அவளை அழைத்து கொண்டு உலகநாதன் வீட்டுக்கு வந்தான். தந்தையை பார்த்து ஏங்கி, ஏங்கி அழுகும் மாயாவை அவனால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை,, அனைவரும் இருந்தும் இப்படி தனியாக அனாதை போல் இருக்கும் மாயாவை பார்த்தவனுக்கு,, அக்னியின் மேல் கோபம், கோபமாக வந்தது,,
உலகநாதன் வீட்டிற்கு அழைத்து வந்தவன் மாயாவே அவர்கள் வீட்டில் வேலை செய்யும் வயதான பெண்மணி இடம் பார்த்துக் கொள்ளுமாறு மாயாவை ஒப்படைத்து விட்ட, பார்த்திபன..
Advertisement
உலகநாதன் உடலை எங்கே வைப்பது என்று அனைவரையும் கேட்டு, அவரை படுக்க வைத்துக் கொண்டிருந்தான்..
உலகநாதன் இறந்தது தெரிந்து சிலர் வந்து கொண்டிருந்தார்கள்..
Advertisement
Advertisement
அக்னி சொல்லி தான் பார்த்திபன் ஹாஸ்பெட்டல் வந்திருந்தான்,, அக்னிக்கு ஏதோ பெரியதாக நடக்கப்போகிறது என்று மனதில் தோன்ற,, பார்த்திபனை அழைத்து “நீ போய் மாயாவுடம் இரு, அவள் தனியே கஷ்டபடுவாள்” என்று அவனை அனுப்பி வைத்திருந்தான்..
பார்த்திபனுக்கு ஹாஸ்பிடல் போக தயக்கமாக இருக்க, “சார் மேடம் நீ எதுக்கு இங்க வந்தன்னு கேட்டா நான் என்ன சார் சொல்றது” என்றான் பார்த்திபன்,,
Advertisement
“நீ போய் மாயா கூட இரு” என்று கூற..
தயங்கிய படியே தான் ஹாஸ்பெட்டல் வந்தான், பார்த்திபன்..
மாயாவுடன் பேச அவனுக்கு தயக்கமாக இருக்க,, அக்னியுடன் போன் பேசிக் கொண்டே தான், ஹாஸ்பெட்டலுக்கு மாயாவை பார்க்க வந்தான், மாயா பார்த்திபனிடம் அப்பா, அப்பா என்று பேசி அழுததையும் போன் வழியாக
கேட்டுக் கொண்டிருந்தான் அக்னி..
மாயா கதறி அழுவதை கேட்டவனுக்கு தன் உயிரே போனது போல் வலியை உணர்ந்தான் அக்னி..
அக்னியின் நோக்கம் சத்தியமாக உலகநாதன் இறப்பது அல்ல..
உலகநாதன் தன் அத்தைக்கு பண்ணிய துரோகத்தை மறந்து விட்டு சந்தோஷமாக இருப்பதைத்தான் அவன் வெறுத்தான்..
ரதிதேவிக்கு நடந்ததை நினைத்து உலகநாதன் வருந்த வேண்டும் ,அவனுக்கு அந்த வருத்தத்தை உணர வைக்க என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தவன்.
தன் அத்தைக்கு நடந்தது போலவே அவள் மகளுக்கு நடந்தால், அப்போதுதான் அவன் அந்த வலியை உணர முடியும்,,என்று அதற்கான வழியை வகுத்தான்,,அதில் அவன் தேர்வு செய்தது ரியாவைத்தான்..
ரியாவை ஏமாற்றினாள் போடா என்று அடுத்த நபரை பார்க்க அவள் சென்றுவிடுவாள், தன் அத்தைக்கு நடந்த விசயத்தால் அவன், குடும்பம் அனுபவித்து வேதனைக்கு கொஞ்சம் மறந்துவிடலாம் என்று அவன் நினைத்துக் திட்டமிட..
நடந்ததோ வேறு ரியா ஒருவனை காதலித்து அவனை திருமணம் செய்து கொள்வேன் என்று சென்று விட.. உலக நாதனே எப்படி பழிவாங்குவது என்று யோசித்த போது தான் மாயா வந்தாள்,, அக்னி மாயாவை சின்ன பெண் முதலில் அவளை இதற்கு சரிப்பட்டு வர மாட்டாள், என்று ஒதுக்கி வைக்க, அவர்களே வந்து தன் வழியில் வந்த போது அதை பயன்படுத்திக் கொண்டான் அக்னி..
உலக நாதனை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தானே தவிர,, அவர் சாக வேண்டும் என்று அவன் கனவில் நினைக்கவில்லை என்று தன் வாயால் உலகநாதன் சாகலையா என்று கேட்டது. நடந்துவிட மாயாவை நினைத்து வருந்திக் கொண்டிருந்தவன். அவன் வீட்டிற்கு வர..
பார்வதி பேரப்பிள்ளைகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அக்னி வந்ததை பார்த்தும் பார்க்காமல் அவர் வேலையை அவர் செய்து கொண்டிருக்க..
உலகநாதன் இறந்தது அவர்களுக்கு தெரியவில்லை..
ஹாலில் உள்ள டிவியை சத்தமாக வைத்தான்..
எதற்கு இவ்வளவு சத்தமாக வைத்திருக்கிறான் டிவியை என்று மகனை பார்த்து முறைத்து விட்டு.. பேற பிள்ளைகளுக்கு உணவூட்டி கொண்டிருந்தார் பார்வதி..
அன்று வாசலில் பேசியதோடு சரி மகனிடம் பார்வதி பேசுவதில்லை.. நிலாவும்,தேவின் மனைவியும் பார்வதி கூடவே இருந்து விட..
மாயாவை என்று மகன் ஏற்றுக்கொள்கிறனோ அப்புறம் தான் அவனிடம் பேசணும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்..
டிவியில் முக்கியமான செய்திகள், இன்று என்று வந்து கொண்டிருந்தது. அதில் பிரபல தொழிலதிபர் உலகநாதன் இறந்துவிட்டார். பெண்ணின் கல்யாணம் நின்று போனதால் நெஞ்சு வலியால் மரணம் என்று பிளாஷ் நியூஸ் உலகநாதன் போட்டோவுடன் டிவியில் காண்பிக்க..
பார்வதி கையில் உள்ள உணவு பாத்திரத்தை கீழே போட்டு விட்டு அப்படியே ஷாக் அடித்தது போல் நின்று இருக்க ..
நிலாவும் தேவன் மனைவியும் டிவியின் சத்தம் கேட்டு வெளியே வந்து நியூசை பார்த்தவர்கள்.. ஐயோ என்பது போல் அதிர்ச்சியாகி நிற்க..
பார்வதிக்கு நெஞ்சு வலி வரும் போல் இருந்தது தடுமாறி கீழே அமர்ந்த வரை பிடித்துக் கொண்டனர் நிலாவுமா, தேவின் மனைவியும்,,
பார்வதிக்கு நெஞ்சில் சுருக்கென்று ஒரு வலி, எது நடக்கக்கூடாது என்று நினைத்தாரோ அது நடந்துவிட.. என் மருமகளை அனாதையா ஆக்கிட்டானே இவன் என்று மகனை மனதில் திட்டியவர், அக்னியை அடிக்க தொடக் கூட அவருக்கு பிடிக்கவில்லை.. அவனின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை பார்வதி…
பார்வதி வேகமாக எழுந்தவர் “நான் போறேன், மாயா என் மருமகள் அங்கே தனியாக இருப்பாள் நான் போறேன்” என்று கிளம்ப..
“நிலா அம்மாவை போக வேண்டாமுன்னு சொல்லு” என்றான் அக்னி..
“எனக்கு எல்லாம் தெரியும் நிலா உன் அண்ணனை என் கண் முன்னாடி வர வேண்டாம்னு சொல்லு,, இல்லன்னா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது,, பெத்த பிள்ளையை சாபம் விடகூடாதுன்னு, கட்டு படுத்திட்டு இருக்கேன்,” என்றவர் கோபமாக மாயா வீட்டிற்கு காரில் கிளம்பினார்..
அக்னி பார்த்திபனுக்கு அழைத்து பார்வதி வரும் விசயத்தை சொல்ல,, “சரி சார், நான் பாத்துக்கிறேன்” என்றான் பார்த்திபன்..
நிலாவும் தேவின் மனைவியும் அக்னியை முறைத்தபடியே வீட்டில் உள்ளே சென்றனர்..
ரியா தன் பெரிய குடும்பத்தோடு உலகநாதன் வீட்டிற்குள் நுழைந்தாள்..
தந்தை இறந்ததை கேட்டு அவளால் நம்ப முடியவில்லை எவ்வளவு ஹெல்தியாக இருப்பவர் தன் தந்தை, என்று அவளுக்கு தெரியும், அவருக்கா இப்படி நடந்து விட்டது என்று அவளால் நம்ப முடியவில்லை..
ஹாலில் உலகநாதனின் உடலை வைத்திருக்க தந்தையின் உடலை பார்த்தவள்,, “டாடி, டாடி” என்று கதறி அழுத்தாள் ரியா….
ரியாவின் கணவன் ரிஷி, “ரொம்ப அழாத, பேபிக்கு ஏதாவது ஆகிடப்போகுது” என்றான் மூன்று மாத கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியிடம்.. “ரிஷி என் டாடி” என்று கணவனையும் கட்டிக்கொண்டு அழுதாள் “டாடி டாடி” என்று..
அக்காவின் அழு குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த மாயா “அக்கா” என்று அவள் அருகில் வர..
பளார் என்று தங்கையின் கன்னத்தில் அறைந்திருந்தாள் ரியா, கன்னத்தில் கைவைத்தபடி “அக்கா” என்று மாயா அழைக்க..
“என் அப்பாவை கொன்னுட்டல நீ.. என் டாடி எனக்கு திருப்பிகொடு, என் டாடி எனக்கு வேணும்” என்று மாயாவை கண்டபடி அடித்தவள்,, “டாடி,” என்று ரியா கதறி அழ.
ரியாவின் கணவனும் அவள் உறவுகளும் ரியாவை தாங்கி சமாதானம் செய்ய…
ரியா சிறிது நேரம் அழுதவள். தந்தையை இழந்ததற்கு காரணம் மாயா என்று தோன்ற, அவளை மீண்டும் அடிக்க ஆரம்பித்தாள்.
பார்த்திபனும், கேசவணும் வந்து மாயாவை அடிப்பதை தடுக்க, “நீங்க யாருடா என் தங்கையை அடிப்பதை தடக்க, தள்ளி போடா” என்று பார்த்திபனின் கேசவனையும், தள்ளிவிட்டவள்..
தங்கையை அடித்தவள் “வீட்டை விட்டு வெளியே போடி எங்க அப்பாவை கொன்னவ எங்க வீட்ல இருக்க கூடாது” என்று மாயாவை பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளினாள்..
பார்வதி மருமகளை ஒரு பெண் வெளியே தள்ளி விடுவதை பார்த்துக் கொண்டே வந்தவர் மருமகளை கீழே விழாதவாறு பிடித்துக்கொண்டார்..
கீழே விழாதவாறு யாரோ தன்னை பிடித்து இருப்பதை உணர்ந்த மாயா நிமிர்ந்து பார்க்க…
பார்வதியை பார்த்ததும் “அத்தே..” என்று கேவலோடு பார்வதியை அணைத்துக் கொண்டு அழுதாள்..
“அழாதடா” என்று மருமகளை சமாதானம் பண்ணி மாயாவை வீட்டில் உள்ள அழைத்து வர..
ரியா மாயாவை மீண்டும் அடிக்க வர..
“ஏய்” என்று ஒரு கத்து கத்தினார் பார்வதி ரியாவை பார்த்து,,
அவர் கத்தியதில் பயந்து போனா ரியா,, தங்கையை முறைத்து, “வெளியே போடி” என்று மாயை அவள் திட்ட..
” அவ எதுக்கு வெளியே போகணும்” என்றார் பார்வதி..
ரியாவுக்கு பயங்கரமாக கோபம் வர பார்வதியையும் அடிக்க வந்திருந்தாள் ரியா…..
error: Content is protected !!