Skip to content
Post Views: 1,360
எங்களுக்கு அவகிட்ட பேச முடியல, நீங்க போய் அவரை பார்த்து பேசி கூட்டிட்டு வாங்கன்னு சொன்னா.. உங்க அப்பா மேல அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தாள் ரதி..
ஆனா போன இடத்துல என்ன நடந்துச்சோ எனக்கு யாருன்னு சொல்லல்ல, என் மாமனார் வந்து அன்னைக்கே நெஞ்சு வழி வந்து இறந்து போயிட்டார்,,
Advertisement
பொண்ணு மூலையில் உட்கார்ந்து அழுகிறத அவரால் பார்க்க முடியல.. எவ்வளவு வேலை பார்ப்பார் தெரியுமா,, என் மாமனார் ரொம்ப தங்கமான மனுஷன்,, என்னையே ஒரு வேலை செய்ய விட மாட்டார். பொண்ணுங்கள அப்படி வளர்த்தார்.. பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகிப்போச்சே என்று வருத்தத்திலேயே நெஞ்சு புடிச்சுகிட்டு நைட்டே இறந்து போயிட்டார்..
என் மாமியார் மாமனார் இறந்தவுடனே நடை பிணமா ஆகிட்டாங்க,, அவர் பெயரைச் சொல்லி ,,சொல்லி கூப்பிடுவாங்க, சாப்பிட வாங்க, வேலைக்கு போகலையா? நீச்ச தண்ணி வேணுமா, எங்கே போனீங்க அவர் இருக்கிற மாதிரியே பேசிட்டு இருந்தாங்க,, சரியா ஒரு வாரத்துல சரியா சாப்பிடாம பட்டினியா இருந்து அவங்களும் இறந்து போயிட்டாங்க,,,
Advertisement
என் குடும்பமே நில குளஞ்சு போச்சு,, பத்தாக்குறைக்கு என் சின்ன நாத்தனார் ஒரு குறைந்த இனத்தை சேர்ந்த பையனை விரும்பி ஓடிப் போயிட்டா..
Advertisement
அடிக்கு மேல அடி என்னால ஒன்னும் பண்ண முடியல நிலா பிறந்து இருந்தா,,
எங்க அம்மா என்னை என் புருஷன் வீட்டுக்கு அனுப்பல,,
Advertisement
பச்ச உடம்பு காரி நீ இப்போ அங்க போயி என்ன செய்வ, ஒரு மாசம் கழிச்சு போன்னு அவங்க வீட்டுல என்னை வச்சுக்கிட்டாங்க..
தேவ் என்கூட தான் இருந்தான்.. அக்னி ரதிதேவி விட்டு நகரவே இல்ல..
ரதிதேவி பித்து பிடிச்ச மாதிரி இருந்தா,, பகலெல்லாம் தூங்குவா, ராத்திரியான பேசுவா, நடப்பா குளிக்க மாட்டான், சரியா சாப்பிடமாட்டா, தனியா அவ கூட யாரோ இருக்கிற மாதிரியே ஜாடை காட்டி பேசுவா,,நாங்க முதல்ல அவங்க அப்பா, அம்மா இறந்ததினால் தான் இப்படி ஆகிட்டா அதனால அவங்க கூட பேசுறா போலன்னு நினைச்சோம்..
ஆனா அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அவ உங்க அப்பா பேர சொல்லி கூப்பிடுறான்னு..
அப்புறமா தான் ரதியை ஹாஸ்பெட்டலுக்கு கூட்டிட்டு போக ஆரம்பிச்சோம், ஆனால் எதுவும் சரி ஆகல, நாங்க நிறைய ஹாஸ்பெட்டல் போனோம், ஆனா ரதிதேவியை சரி பண்ணா முடியல, மன அலுத்தம் அதிகமான இப்படி ஆகுமுன்னு சொன்னாங்க,, நிறைய இடத்துக்கு ரதியை கூட்டிட்டு போனோம்,, போகாத ஹாஸ்பிடல் இல்ல போகாத கோயில் இல்ல ஆனா அவள சரி பண்ண முடியல,,
ஊரே தேவதையின்னு சொன்ன பொண்ணு,, அழுக்க துணியை போட்டுக்கிட்டு ஊர சுத்திவர்ரா “என் உலகம், என் உலகமுன்னு உங்க அப்பா பேரை சொல்லிக்கிட்டு திரியுறா,
“நீயே சொல்லு மாயா உங்க வீட்ல இது மாதிரி ஒரு சம்பவம் நடந்தா,, உங்களால அதை தாங்க முடியுமா?”.. என்று பார்வதி கேட்க..
மாயா “இல்லை” என்று சொல்லி கண்கலங்கினாள்..
“அவங்க இன்னும் இருக்காங்களா ஆன்ட்டி” என்றதும்..
‘ “ம்ம் ..இருக்கா குளிக்காம சரியா சாப்பிடாம அழுக்கு துணியை போட்டுக்கிட்டு, சாப்பாடு யாரு குடுத்தாலும் வாங்கி சாப்பிட்டுக்கிட்டு ஊரை சுத்திகிட்டு வருவா,,
எங்க குடும்பம் ஊருக்கே சாப்பாடு போட்ட குடும்பம் மாயா,, அதனால ரதிதேவியை எல்லாரும் நல்லா பாத்துப்பாங்க இருந்தாலும் பொண்ணு இல்லையா நல்லவங்க நிறைய பேர் இருந்தாலும்,, கெட்டவங்களும் இருக்க தானே செய்வாங்க,, அவளை பாதுகாக்கிறதே எங்க கொழுந்தனாருக்கு ரொம்ப பெரிய வேலையா போச்சு அதனால ரொம்ப நாளா அவரு கல்யாணம் பண்ணாம இருந்தாரு . நாங்க எல்லோரும் பேசித்தான் ஒரு நல்ல பொண்ண பார்த்து அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்,
இரண்டு பிள்ளை அவருக்கு..
என் கொழுந்தனாருக்கு நண்பர்கள் அந்த ஊரில் அதிகம் அதனால ரதிதேவி எங்கே போனாலும் எல்லாரும் ஒரு கண்ணு அவமேல வச்சுப்பாங்க அதனால கொஞ்சம் நிம்மதி,,
என் கணவருக்கு அவர் தங்கை ரதிதேவியின்னா உயிரு,, தங்கைக்கு இப்படியான தால அவர் ரொம்ப வருத்தத்துல இருந்தாரு. ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ரதிதேவியை ரெண்டு தெரு நாய் சேர்ந்து கடிச்சிருச்சு அவளை காப்பாத்தி கூட்டிட்டு வந்ததே பெரிய விஷயமா ஆகி போச்சு. அதை பார்த்த அதிர்ச்சியில அக்னி அப்பாவுக்கு ஸ்டோக் வந்துருச்சு எப்பயும் அக்னி கிட்ட புலம்பிக்கொண்டே இருப்பாரு. என் தங்கச்சியை பார்த்துக்கோ அவளை விட்டுடாதீங்க,, அவர் சாகுறப்ப கூட அக்னி கிட்ட உன் அத்தை பார்த்துக்கோ என்று சொல்லிட்டு தான் இறந்து போனார்..
அக்னிக்கு அப்பனா உயிர்,, ரொம்ப பாசமா இருப்பான்,, அவர் செத்ததுல இருந்து ரொம்ப வருத்தத்தில் இருந்தான் ரொம்ப கஷ்டப்பட்டான்.. அவன் மீண்டு வந்ததே பெரிய விஷயமாக இருந்தது..
ரதிதேவியை அடிக்கடி ஊருக்கு போய் பாத்துட்டு வருவான் அவனுக்கு அந்த ஊரில் நிறைய நண்பர்கள் இருக்காங்க அதனால அவங்களும் அவளை பார்த்துப்பாங்க ஊரு பூரா சிசிடி கேமரா வச்சிருக்கான் அக்னி.. இங்கிருந்தே ரதிதேவியை பார்த்துப்பான்.. ஏதாவது பிரச்சனையின்னா உடனே இங்கே இருந்தே சரிபண்ணிடுவான்”..
மாயாவுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது.. தன் தந்தை செய்த ஒரு செயலால் அக்னியின் குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறதே என்று எண்ணி வருந்தியவள்,, ஏதாவது செய்தாக வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்..
பார்வதி மாயாவின் தலை கோதியவர் “அக்னிக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் டா,, அவன் நல்லவன்,, சீக்கிரமா நீயும் அவனும் ஒன்னா சேர்ந்து வாழணும் சரியா” என்றார் பார்வதி..
மாயா “சரி” என்று தலையாட்டியவள்,,.
“ஆன்ட்டி நீங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சு வாங்க கேன்டின் போய் ஏதாவது குடிக்கலாம்” என்று கேன்டீன் அழைத்து வந்தாள்..
இருவருக்கும் இரண்டு ஜூசை ஆர்டர் பண்ணிவிட்டு பேசிக் கொண்டிருக்க மாயாவுக்கு ஜூஸ் குடிக்கவே பிடிக்கவில்லை..
பார்வதி வேகமாக குடித்து முடித்தவர் “ஏன்டா என்ன ஆச்சு குடிக்க பிடிக்கலையா”?.. என்றார்..
” தெரியல ஆன்ட்டி என்னவோ எதுவுமே சாப்பிட பிடிக்கவில்லை” என்றவள் மெல்ல மெல்லமாக ஜூசை குடித்து முடித்தவள்,, குடித்து முடித்தவுடனே ஓய்வு அரைநோக்கி ஓடினாள்…
பார்வதி மாயாவுக்கு என்ன ஆச்சோ என்று பின்னாடியே வர அவள் வாந்தி எடுப்பதை பார்த்தவர்,, “என்ன ஆச்சு மாயா? சாப்பிட ஜூஸ் உனக்கு ஒத்துக்கலையா தண்ணி குடி” என்று அவள் பக்கத்தில் வந்து தண்ணீர் கொடுக்க..
“இல்ல ஆன்ட்டி ரெண்டு, மூனு நாளாவே இப்படித்தான் இருக்கு சாப்பிடறது எல்லாமே கொமட்டுது வாந்தி வருது என்னன்னே தெரியல ஆண்ட்டி” என்றாள் மாயா,,..
மாயா சொல்வதைக் கேட்டு பார்வதிக்கு பயம் வர..
“உனக்கு லாஸ்ட் பீரியட்ஸ் இப்ப வந்தது மாயா?”…
“அது கல்யாணத்துக்கு முன்னாடி வந்தது அத்தை இன்னும் வரல” என்றதும்..
“சரி வா” என்று ஒரு பெண் மகபேரு மருத்துவரிடம் மாயாவை அழைத்து சென்றார்..
மாயாவை செக் பண்ணி பார்த்த மருத்துவர்,, அவள் கர்பமாக இருப்பதை உறுதி செய்து கூற.
இரண்டு பேருக்கும் அதிர்ச்சி..
பார்வதிக்கு சந்தோஷமாக இருந்தாலும்,தன் மகன் செய்து செயல எண்ணி வருந்தியது.. மாயாவோடு திருமணத்திற்கு முன்பே மகன் நடந்து கொண்ட விதம் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை,, மாயாவோடு குடும்பம் நடத்திவிட்டு தாலி கட்டாமல் இருப்பவனின் மேல் கோபம் வர..
கோபமாக இருந்த பார்வதியை பார்த்த மாயாவுக்கு ,,பார்வதி தன்னை தப்பாக நினைத்து விடுவாரோ என்று பயம் வர.
“ஆன்ட்டி” என்று மாயா பார்வதியின் கைமீது கையை வைக்க,, ஏதோ சொல்ல வர..
பார்வதி மாயாவை அணைத்துக் கொண்டார் ‘”ரொம்ப சந்தோஷம்டா, ரொம்ப சந்தோசம்” என்று மருமகளை அணைத்து விடுவித்தவர்.. அவள் கன்னத்தில் முத்தமிட்டு “சீக்கிரம் உன் புருஷன் கிட்ட சொல்லிட்டு நம்ம வீட்டுக்கு வந்து சேரு” என்றார்..
“அத்தை” என்றவள் “என் மீது கோபம் இல்லையே” என்றாள்..
“கோபம் எல்லாம் இல்லடா” என்ற பார்வதி…
“உன் புருஷன், உன் குழந்தை நீங்க மூணு பேரும் சந்தோஷமா இருந்தாவே எனக்கு போதும்டா, உடம்பை பார்த்துக்கோ” என்று சொல்லி கிளம்பி விட்டார்..
மாயாவுக்கு அக்னியிடம் இதை எப்படி சொல்ல என்று நினைத்தாள்,, அவர் என்ன சொல்லுவார்,, சந்தோஷபடுவாரு,? அதிர்ச்சி அடைவாரா,, என்று பல விதமான உணர்ச்சிகள் பொங்க,, தன்னவனிடம் உருகி நின்ற நாள் ஞாபகம் வந்தது..
error: Content is protected !!