Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன் உன்னை சேருமா 17 1

என் ஜீவன் உன்னை  சேருமா



Advertisement

   அத்தியாயம்  – 17

Advertisement

Advertisement

 மாயா பார்த்திபனோடு தந்தையை பார்க்க கிளம்பினாள்..

தந்தையை இப்படியே  எப்படி பார்க்க முடியும் என்று வீட்டுக்கு சென்று உடைமாற்றி முகத்திற்கு மாஸ் அணிந்து கொண்டு சென்றாள்..

Advertisement

 உலகநாதனுக்கு மெல்ல முழிப்பு வருவதும், பின்பு போவதுமாக இருக்க.. முழுமையாக சுயநினைவு வரவில்லை. நான்கு நாள் கழித்து தான் சுய நினைவு கொஞ்சம்  வந்தது, எப்பொழுதும் ஆழ்ந்த தூக்கத்தில் தான் இருப்பார் உலகநாதன்..

 மாயா பக்கத்தில் இருந்தே தந்தையை  பார்த்துக் கொண்டாள்..

 அக்னி   மாயா  ரியாவுக்கு  கொடுக்கவேண்டிய பணத்தை பார்த்திபன் மூலம் கொடுத்து விட. மாயா ரியாவுக்கு 500 கோடி பணம் கொடுத்ததாகவும்,  இனி எந்த சொத்திலும் ரியா   பங்கு கேட்கக் கூடாது என்று பார்த்திபன் ரியாவிடம் எழுதி வாங்கிய பத்திரத்தை மாயாவிடம் வந்து கொடுத்திருந்தான்..

 ரியா பணம் வாங்கி  தோட சரி தந்தையே வந்து ஒரு நாளும் பார்க்கவில்லை.. தந்தை  எப்படி இருக்கிறார் என்று கூட மாயா விடம் ஒரு போன் கூட போட்டு கேட்கவில்லை..

 மாயா அதை எதைப் பற்றியும் நினைப்பதும் இல்லை இனி தந்தைக்கும் தனக்கும்  தொல்லை தராமல் இருந்தால் சரி என்று நினைத்துக் கொண்டாள்.

 பார்வதி உலகநாதனை  பார்க்க வந்திருந்தார்,,

” எப்படி இருக்காங்க மாயா உன் அப்பா?” என்று கேட்க..

 “நல்லா இருக்காங்க ஆன்ட்டி” என்றாள்..

 பார்வதி உலகநாதனை பார்க்க அவர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்..

“வா மாயா  நம்ம வெளியே போய் பேசலாம்” என்று இருவரும் வெளியில் வந்து அமர..

 மாயா தான் பேச்சை ஆரம்பித்தாள் “ஆண்ட்டி  நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்”…

 “சொல்லுடா என்ன கேட்கனும்”?..  என்றார்  பார்வதி…

 “ரதிதேவிக்கு என்னாச்சு அவங்க எப்படி இருக்காங்க எனக்கு அவங்கள  பத்தி சொல்றீங்களா” என்றாள்  மாயா…

 “உனக்கு இப்பதான் அவளை பத்தி கேட்கணும்னு  தோணுச்சா? என்று ரதிதேவியை  பற்றி சொல்ல ஆரம்பித்தார் பார்வதி…

 “என் மாமனார்,மாமியார் ரொம்ப நல்ல குணம் மாயா அவுங்களுக்கு  நாலு பிள்ளைங்க மூத்தவர் என் வீட்டுக்காரு சிவப்பிரகாஷ்,,அடுத்தது ரதிதேவி மூன்றாவது என் கொழுந்தன் ஞான பிரகாஷ்  உனக்கு ஞாபகம் இருக்கா,, உன் கல்யாணத்துல பார்த்தோமே” என்று கூற..

“ஆமாம் ஆண்ட்டி, ஞாபகம் இருக்கு” என்றாள்..

 “அப்புறம் என் சின்ன நாத்தனார் பாக்கிய ரதி,  மொத்தம் நாலு பேரு,, என் மாமனார் மாமியார் படிக்கல  அதனால  எல்லா பிள்ளைகளை  டிகிரி படிக்க வச்சாங்க,,

என் வீட்டுக்காரர் ஒரு பத்திரிகை ஆபீஸ்ல வேலை பார்த்தாரு அந்த பத்திரிக்கை நடத்திக்கிட்டு இருந்தவரு அதை விக்க போக..  என் கணவர் அதை வாங்கி இப்ப பெருசா தமிழ்நாடு முழுக்க சப்ளை பண்ணிட்டு இருக்காரு தின இதழ் கேள்விப்பட்டிருப்பியே ”  என்று கேட்க.

 “தெரியும் ஆண்ட்டி”..

 என் குடும்பம் ரொம்ப பெரிய குடும்பம் தான் மாயா..  எல்லாரும் ரொம்ப  நல்லா வாழ்ந்துட்டு இருந்தோம்,, ஊரில் நிறைய  வேலை பார்த்துட்டு இருந்தோம் ஆடு, கோழி, மாடு இருந்தது. எங்களுக்கு விவசாய நிலம் அதிகமா இருக்கு,, அதனால என் மாமனாரும்,  கொழுந்தனார் விவசாயத்தை நல்ல  படியா பார்த்துகிட்டாங்க..

 என் வீட்டுக்காரர் அப்பப்ப வந்து அவங்களுக்கு உதவி பண்ணிட்டு போவாரு  ரதிதேவி டீச்சர் ட்ரைனிங் படிச்சு முடிச்சுட்டு வந்து அதே  ஊர்ல ஒரு ஸ்கூல்ல வேலை பார்த்துட்டு இருந்தா.. சின்ன நாத்தனார்  பாக்கியரதி காலேஜ் படிச்சிட்டு இருந்தா..

 எனக்கு முதலில் அக்னி பிறந்தான். ரொம்ப அமைதியா இருப்பான்,உட்கார வச்ச இடத்தை விட்டு நகர மாட்டான்,அவன் பிறந்ததும் தெரியல வளர்ந்ததும் தெரியல எனக்கு,

அடுத்தது தேவ் பிறந்தான் , அவன் ஒரு இடத்தில் உட்கார மாட்டான் ரொம்ப சேட்டை பண்ணுவான் என்னால அவனை சமாளிக்க முடியல,,

அக்னி மூணு வயசு இருக்கும் போது அவனை   கொண்டு வந்து என் மாமியார் வீட்டுல  விட்டேன், என்னால அக்னியையும், தேவ்வை சேர்த்து பாத்துக்க முடியல,,

ரதி அப்போ காலேஜ் படிச்சிட்டு இருந்தா, பக்கத்துல ஒரு ஊர்ல தான் அவ  டீச்சர்  ட்டிரைனிங்  படிச்சி முடிச்சா ,,அக்னியை  எப்போதும் இடுப்புல தூக்கி வச்சுக்கிட்டே சுத்துவா, அவனை அப்பூ,குட்டி, அப்பூகுட்டியின்னு கூப்பிடவா,, அக்னி அவளை ரதி, ரதிமான்னு கூப்பிடுவான்,,..

ரதி  அக்னியை   அம்மா மாதிரிதான் பார்த்துக்கிட்ட,, அக்னிய ஸ்கூல்ல சேர்க்கிற வயது வந்துச்சு அவனை எங்க கூட கூப்பிட்டோம்,, அவன் ரதியை  விட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டு ஒரே அழுகை,, என் வீட்டுக்காரும் ரதி டீச்சர் டிரைனிங் போற ஸ்கூல்ல அக்னியை  பள்ளி கூடம் சேர்த்து விட்டார்,,

அவன் ரதி கூடாவே போயிட்டு, ரதி கூடாவே வீட்டுக்கு வருவான்,,

 ரதிதேவி டீச்சர்  டிரைவிங் முடிச்சுட்டு அதே ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்த்தா,,

 ரதிதேவிக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருந்தோம்,  உங்க அப்பா வந்தாரு,, அப்போ நான் நிலாவை மாசமா இருந்தேன்,, எனக்கு  உடம்பு ரொம்ப  முடியல..

 எனக்கு கர்பப்பை வீக்  ஆகி கீழே இறங்கி இருந்துச்சு  ரொம்ப வேலை செய்ய முடியல அதனால என் வீட்டுக்காரர்  என்னை என் மாமியார் வீட்டில விட்டுட்டாங்க..

 குழந்தை பிறக்குற  வரைக்கும் அங்கே இரு என்று இருந்தார்  என் வீட்டுக்காரர்..

 ரதிக்கு  மாப்பிள்ளை பார்த்தோம்.. ரதி ரொம்ப தங்கமான பொண்ணு, ரொம்ப அழகா இருப்பா,நல்ல கலரு,,.

 எங்க ஊர் பக்கம் பொம்பள பிள்ளைங்க கொஞ்சம் கலர் கம்மியா தான் இருப்பாங்க, ஆனா ரதி ரொம்ப நிறமா இருப்பா, முடி இடுப்புக்கு கீழே இருக்கும் சொந்தக்கார பசங்க அவளை பொண்ணு கேட்டு நிறைய பேர் வந்தாங்க,, என் வீட்டுக்காரர் வெளியூருக்கு தான் தங்கையே கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன்னு சொல்லிட்டாரு,, அப்போ தான் உங்க அப்பா பொண்ணு பார்க்க வந்தாரு எங்களுக்கு உங்க அப்பாவை பிடிச்சது,,

அவங்களுக்கும் ரவிதேவியை ரொம்ப பிடிச்சது, நான் உங்க அப்பாவை  சரியா கவனிக்கல ஒல்லியா வளர்த்தியா இருந்தாரு சென்னையில வேலை  பார்க்கிறதா சொன்னாரு, சொந்த வீடு இருக்கு, அம்மா மட்டும்தான், கூட பொறந்தவங்க  யாரும் இல்லை,, இவர் மட்டும் தான்,,  கொஞ்சம் காடு  இருக்குன்னு.

 நாங்க உங்க அப்பாவை பத்தி விசாரிச்சு பார்த்தோம்,,எந்த கெட்ட பழக்கமும்  இல்ல நல்ல பையன் படிச்சு இருக்காருன்னு தெரிஞ்சு.. பொண்ணு கொடுக்க சம்மதம் சொன்னோம்…

 எங்களுக்கு  மாப்பிள்ளை ரொம்ப பிடிச்சு போச்சு கல்யாணம் அடுத்த முகூர்த்தத்துல வச்சுக்கலாம்னு பேசி முடித்தோம்,,இரண்டு வாரம் தான் கல்யாணத்துக்கு இருந்தது..

 அப்போதான் சந்திரமுகி படம் வந்திருந்தது அக்னி சூப்பர் ஸ்டார் படத்துக்கு போகணும்னு ஒரே குதி குதிச்சுட்டு இருந்தான்,, ரதியும் கல்யாணம் ஆனாவுடன் சென்னை போயிருவால,  அதனால நானும் என் நாத்தனார் ரதி, தேவ், அக்னி எல்லாரும்  படத்துக்கு போனோம்..

 நாலு பேரும் படம் பார்த்துட்டு வெளியே வந்தோம்,, தேவ் ஒரே அழுகை பேய் படத்துக்கு கூட்டிட்டு வந்தீங்கன்னு சொல்லிட்டு அழுதுட்டே வந்தான்,  ரதி தான் அவனை  இடுப்புல தூக்கி வெச்சிட்டு வந்தா,,

 உன் புருஷன்” என்றவர்,,

மாயா  நிமிர்ந்து பார்க்கவும்,,

” அது  அக்னி” என்று  மாற்றியவர்.. “ரதி   தேவியின்  தாவணியை  புடிச்சுக்கிட்டே  வந்தான்,,

 எனக்கு எட்டு மாசம் நிலா வயித்துல இருந்தா,, ரதி ரொம்ப நேரம் தேவ்வை  தூக்கிட்டு வந்தா நான் கீழே இறக்கி விடு அத்தைக்கு இடுப்பு வலிக்கும் என்று சொன்னேன்,,

உடனே நீ தூக்கு என்று என்கிட்ட வந்து  என்னை தூக்க சொல்லி ஒரே அழுகை..

 என்னால தூக்க முடியாது பாப்பா வைத்துல இருக்குன்னு சொன்னேன்,, உடனே ரதியை தூக்க சொன்னான்.

 அப்பதான் நான் சொன்னேன் ரதிக்கு  இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம் ஆகி அவ புருஷன் வீட்டுக்கு போயிடுவா என்னடா பண்ணுவீங்க அண்ணன் தம்பியும்  என்று கேட்டேன் ரெண்டு பேரும் ஒரே அழுகை.

 ஏண்டா அழுகுறீங்கன்னு கேட்டா.. நான் தான் ரதி அத்தையை  கல்யாணம் பண்ணுவேன்னு அக்னி அழுகுறான்,, அதைக் கேட்ட தேவ்  சொல்றான்  டேய் போடா நான் தான்டா அத்தையை  கட்டுவேன்னு ரெண்டு பேரும்,  ரதிதேவி கைய புடிச்சுகிட்டு நான் தான் அத்தை கல்யாணம் பண்ணுவேன் என்று அக்னி அழுதான்..

 இந்த பக்கம் தேவ்  ரதி கைய புடிச்சுகிட்டு நான் தான் அத்தையை கட்டுவேன்னு சொல்லிட்டு வீடு வரைக்கும் ஒரே அழுகை வீட்டுக்கு வந்து அவங்க ரெண்டு பேரும் அழகையை தாங்க முடியல என் வீட்டுக்காரர் தான் கேட்டார் எதுக்குடா அழுவுறீங்க.

அவனுங்க இரண்டு பேரும் ரதி தேவி  கைய புடிச்சுகிட்டு, நான்  தான் அத்தையை  கல்யாணம் பண்ணுவேன்,, அத்தையை வீட்ட  விட்டு அனுப்பிடாதீங்கன்னு சொல்லி அக்னி அழுகுறான்..

 அதை பார்த்து தேவ் போடா டேய் நான் தாண்டா  அத்தையை கட்டுவேன்னு சொல்லி அவன்  அழ  எங்க எல்லாருக்கும் சிரிப்பு தாங்க முடியல, ரதி மேல ரொம்ப பாசம் அவனுங்களுக்கு,, இவனுக்கு ரெண்டு பேரும் பண்ற கூத்த பார்த்து , என் மாமனார், மாமியார் இவங்களை தூக்கி வச்சு சமாதானம் பண்ணாங்க..

 மாயாவுக்கு அந்த குட்டி அக்னியை நினைத்து சிரிப்புதான் வந்தது..

 “அப்புறம் என்ன ஆச்சு ஆன்ட்டி “..

 “எனக்கு தான் ரொம்ப உடம்பு  முடியாம போயிடுச்சு மாயா,

 என் மாமியாரும், மாமனாரும் எல்லோரும் கல்யாண வேலை பார்த்துட்டு இருந்தாங்க அதனால நான் வீட்டு வேலையெல்லாம் பார்த்துட்டு இருந்தேனா திடீர்னு எனக்கு ப்ளீடிங் ஆக ஆரம்பிச்சிருச்சு, வெள்ளை வேர பட ஆரம்பிச்சுருச்சு உடனே ஹாஸ்பிடல் சேர்த்துட்டாங்க,, டாக்டர்  என்னை செக் பண்ணி பார்த்துட்டு  கம்லீட்  பெட் ரெஸ்ட் எடுக்கணுமுன்னு  சொல்லிட்டாங்க,,

 உடனே என்னோட வீட்டுக்காரர் எங்க  அம்மா வீட்டுக்கு , என்னை அனுப்பி வச்சிட்டாரு,, கல்யாணத்தை நாங்க பாத்துக்கிறோம், நீ குழந்தையை பாருன்னு,, நீ இங்க இருந்தா கல்யாண வேலை இருக்கும் எப்படியாவது நீ வேலை செய்ற மாதிரி தான் வரும் அதனால நீ அம்மா வீட்டுக்கு போன்னு சொல்லி,, என்னை கொண்டு  போய் எங்க அம்மா வீட்ல விட்டுட்டாரு”..

 அதனால ரதி கல்யாணம் நின்னு போனது எனக்கு தெரியாது. ரெண்டு நாள் கழிச்சு தான் எனக்கே தெரியும் என்கிட்ட சொன்னது எல்லாம் மாப்பிள்ளை பையனை  ஒரு பொண்ணு விரும்பி இருக்கு போல,,

 அந்த பொண்ணு விஷம் குடிச்சிடுச்சு மாப்பிள்ளை அந்த பொண்ண பார்க்க போயிட்டாரு அதனால கல்யாணம் நின்னு போச்சு அப்படின்னு சொன்னாங்க..

 உன்  அப்பா போன உடனே.

 எங்க சொந்தக்கார பசங்களுக்கு ரதி தேவியை கல்யாணம் பண்ண போட்டி போட்டுக் கிட்டு  வந்தாங்க..

 ஆனா  ரதி கல்யாண மேடையை விட்டு எழுந்து  போயிட்டா.. ..

 சரி ஒரு வாரம் கழிச்சு,பேசி மறுபடியும் நல்ல மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணலாம்னு நினைச்சோம் ரதி சம்மதிக்க மாட்டேன்னு சொல்லிட்டா..

 நான் கல்யாணம் பண்ண உலகநாதனை  தான் கல்யாணம் பண்ணுவேன்,, இல்லனா எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டா,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!