Skip to content
Post Views: 1,241
என் ஜீவன் உன்னை சேருமா
Advertisement
அத்தியாயம் – 19
Advertisement
Advertisement
மாயா நடந்து கொண்டது அக்னிக்கு பிடிக்கவில்லை..
” தள்ளிப்போ ” என்றான்..
Advertisement
தன்னை முறைத்து நிற்கும் பெண்ணை,,அவனும் முறைத்தவன்..
“என்னடி மேனர்ஸ்சே இல்லையா, கதவை தட்டிட்டு உள்ள வரணுமுன்னு கூட வா உனக்கு தெரியாது”.. என்றான்..
“ஏன் நீங்க கட்டிப்புடிச்சு நின்னத நான் பாத்துட்டேன்னு வருத்தமா இருக்கா,, இல்ல டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு கோபமா இருக்கா “..என்றாள் அவனை முறைத்தபடியே..
” உனக்கு வாய் கூடி போச்சு மாயா கிளம்பு “என்றான்..
“நான் ஏன் கிளம்பனும் முடியாது” என்றவள் அங்கே உள்ள ஒரு சேரில் அமர்ந்து கொள்ள..
“எதுக்கு டி இங்க வந்த, உனக்கு உன் அப்பன் தானே முக்கியம், நாங்க எல்லாம் உன் கண்ணு தெரியாதே, இப்போ எதுக்கு வந்த”.
“என் புருஷனை பார்க்க ஆசையா வந்தான்,, ஆனா அவரோ ஒருத்தியை கட்டி பிடிச்சிட்டு நிக்குறாரு, பார்க்க எனக்கு குளு, குளுன்னு” இருக்கு..
“ஏய் தப்பா பேசாத அவ என் தங்கச்சி மாதிரி” என்றான்.
“எது தங்கச்சி மாதிரியா, தங்கச்சி மாதிரி இருக்கிற பொண்ண தான் கட்டிப்புடிச்சு தோளில் கை போட்டு நிப்பாங்களாக்கும்” என்றாள் நக்கலாக..
“உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையின்னா போடி” என்றான்.
“இருக்கு,, ஆனா அந்த லால் ஏன் உங்களை மாப்பிள்ளைன்னு சொன்னாரு”?..
“அவர் நிலாவோட சின்ன மாமனார், அப்போ! என்னை மாப்பிள்ளையின்னு தானே கூப்பிடுவாரு” என்றான்..
“ஓ….சொந்தக்காரரா” என்றாள் நிம்மதியான மன நிறைவோடு..
” உன் சந்தேக புத்தி, ஏன் தான் இப்படி போகுதோ”..
“ஆமாம் நான் உள்ள வர்ரப்போ நீங்க ஒரு பெண்ணை கட்டிப்புடிச்சு நின்னா எனக்கு கோபம் வராதா”..
“உனக்கு கோபம் வரலன்னா தான் ஏன்னு கேட்கனும்”…
“ரொம்ப பேசாதீங்க ஏன் என் போனை எடுக்கலை”.. என்றாள்..
“நான் இங்க சும்மாவா உட்கார்ந்து வேலையில்லாம ஊஞ்சல் ஆடிட்ட இருக்கேன்,, நீ எப்படா போன் போடுவ,உன் கிட்ட பேசலாம்னு உட்கார்ந்துட்டு இருக்கேன்னு நெனச்சியா”…
“ஓ… உங்களுக்கு கண்டவங்களை கட்டிப்பிடிச்சு தோள அணைச்சு நிக்கறதுக்கு நேரம் இருக்கு,, ஆனா என்கிட்ட ஒரு நிமிஷம் போன் பேச நேரம் இல்ல அப்படித்தானே”..
“மாயா ரொம்ப பேசுற எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு கிளம்பு, என்னை கடுப்பேத்தாத போ”… என்றான்..
“ஏன் என் போனை எடுக்கல பதில் சொல்லுங்க”..
” போனை எடுத்து பேச முடியாது என்னடி பண்ணுவ” என்றான்..
மாயாவுக்கு கோபம் வந்து அவள் பக்கத்தில் உள்ள பொருளை தூக்கி போட்டு உடைக்க..
“ஏய் பைத்தியமா உனக்கு” என்றான்..
“ஆமாம் நான் பைத்தியம் தான் உங்க அத்தை மாதிரி நானும் தெருத் தெருவா அக்னி அக்னி என்று சொல்லிட்டு திரிய போறேன்” என்றாள்..
“யூ இடியட் ” என்று இன்னும் சில கெட்ட வார்த்தையால் அவளை திட்டி.. மாயாவை பளார் என்று அடித்து .. “வெளியே போடி”என்றான்..
மாயா கன்னத்தில் கை வைத்துக் கொண்டே ,கண் கலங்கியவாறே “நான் போனாள் திரும்பி வர மாட்டேன்” என்றாள்..
“திரும்பி வரமாட்டேன் பதில் சொல்லுற போடி, போ, வராத” என்று கத்தினான்….
“என்னை போக சொல்லிட்டீங்கள, ரொம்ப வருத்தப்படுவீங்க, நான் இனி உங்களுக்கு போன் பண்ண மாட்டேன்,, உங்களை பார்க்க வரமாட்டேன்” என்றவள் அழுது கொண்டே வேகமாக கிளம்ப..
தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் அக்னி..
இவளை என்ன பண்ணுவது,,? அவனுக்கு ஆயிரம் வேலைகள் இருக்க,,
லால் வந்து மகளின் கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுத்து வெகு நேரம் பேசி அவன் பொழுதல வீணாக்க,,
இவ வேற வந்து, என் வேலையை கெடுக்கவே வந்திருக்கிறாள்,,
எங்க போய் விடுவாள் மாயா தன்னிடம் திரும்பி தானே வரணும் என்றுஅக்னி நினைத்துக் கொள்ள..
மாயா கேரளா சென்று விட்டாள்.. அவள் சென்று 5 மாதங்கள் ஆனது,,
உலகநாதனுக்கு பரிபூரணமாக குணமாகிவிட்டது.. நாளை நீங்கள் கிளம்பலாம் என்று ஆசிரமத்தில் சொல்ல..
சரி என்று இருவரும் கிளம்ப தயாரானார்கள்.
பார்வதி மாயாவையும், உலகநாதனையும் கேரளா அழைத்து வந்து மருமகளோடு இரண்டு மாதம் இருந்துவிட்டு.. பின்பு நிலா இரண்டாவது கருவுற்று கஷ்டப்படுவதாக சொல்ல.. மகளை பார்ப்பதற்காக சிங்கப்பூர் சென்று விட்டார்.. பார்வதி போகும் போது மாயாவை அழைத்து.
“அக்னியிடம் நீ மாசமாக இருக்கும் விஷயத்தை சொல்லு,, இரண்டு பேரும் சண்டை போடாதீங்க,, உன் வயித்துல உள்ள பிள்ளைகளுக்கு அப்பா தேவை, மாயா” என்று மாயாவிடம் சொல்லி விட்டு சென்றார்..
உலகநாதன் குடமாகி உள்ளதால் கேரளாவில் இருந்து கொண்டே அவரின் கம்பெனி வேலைகளை ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருந்தார்…
பார்த்திபன் அதற்கு உதவி செய்தான். பார்த்திபன் மாயா உண்டாகி இருப்பது தெரியும். அக்னிடம் சொல்ல வேண்டாம் என்று மாயா உறுதியாக சொல்லிவிட்டாள்…
உலகநாதன் இங்கே வந்து ஒரு மாதத்தில் மகள் உண்டாகி இருப்பது தெரிந்து கொண்டவர் அவளிடம் எதுவும் சொல்லவில்லை,,மகள் சோர்ந்து எப்பவும் இருப்பதை பார்த்தவர் அவளிடம் கேட்பார். “நீ வேணா அக்னி கிட்ட போ மாயா நான் பார்த்துக்கிறேன் என் உடம்பு பரவாயில்ல இப்போ” என்று கூறுவார்..
“அவரே என்னை தேடி வருவார் பா” என்று சொல்லிவிட்டாள்..
மாயா ஆசிரமத்தில் இருந்தாலும்.. வெளியில் ஒரு மகப்பேறு மருத்துவமனையில் சென்று குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து தடுப்பூசி போட்டு அனைத்தையும் தனியாக பார்த்துக் கொண்டாள்.
டாக்டர் குழந்தைகளின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து மாயாவின் தலையை இடியே இறக்கினார். துடித்து போனாள் மாயா..
நான் நிம்மதியாக இருக்கக் கூடாது என்று என் தலையில் எழுதியிருக்கு போல்,, கடவுளே என் குழந்தைகளுக்கு எதுவும் ஆக கூடாது என்று கடவுளை வேண்டி கொண்டாள்,,, இருந்தாலும் குழந்தைகளை எண்ணி வருத்தப்பட்டாள்..
டாக்டர் சொல்லியதை நினைத்து எப்போதும் வருத்தப்பட்டு மாயாவின் கண்ணில் இருந்து நீர் கசியும்,,
அதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டாள்..
இதன் வெளிப்பாடு அக்னியின் மீது கோபமாக மாறியது..
அவனுக்கு நான் கர்ப்பமாக இருப்பதை யாரும் சொல்லக்கூடாது, இதுவே நான் அவனுக்கு கொடுக்கும் தண்டனை,, என்று நினைத்தவள் அது அவளுக்குமே தண்டனை என்று தெரியாமல் வேதனைப்பட்டுக் கொண்டு இருந்தாள்..
கேரளாவில் இருந்து மாயாவும் உலகநாதன் கிளம்பினார்கள்..
சென்னை விமானம் அழைப்புக்காக காத்திருக்க.. “மாயா வா போகலாம்” என்றார் உலகநாதன்..
“அப்பா நம்ம பிளைட் கிளம்ப இன்னும் நேரம் ஆகும் இது தூத்துக்குடி பிளைட் “என்று கூற..
“அதற்குத்தான் நம்ம போக போறோம்” என்றார் உலகநாதன்..
” தூத்துக்குடியா? அங்கே எதுக்குப்பா” என்றாள் மாயா..
” ரதி தேவியை பார்க்க”.. என்றதும்..
மாயாவுக்கு அதிர்ச்சி பிளஸ் சந்தோஷம்..
“சரிப்பா எனக்கும் அவங்களை பார்க்கணும் போகலாம்” என்று இருவரும் கிளம்பினார்கள்..
தூத்துக்குடி வந்து, அங்கே இருந்து ஒரு காரில் கிளம்பினார்கள் இருவரும்,,.
உலகநாதன் மனம் படபடவென அடிக்க தொடங்கியது மாயா தந்தையை பார்த்தவள் அவர் உணர்ச்சி வேஷப்பட்டுக் கொண்டிருப்பதை,, பார்த்து,
அவரின் கையைப் பிடித்துக் கொண்டு “அப்பா நிதானமா இருக்க அவங்கள பார்த்து நம்ம பேசலாம்,, அவங்க விருப்பப்பட்ட ஹாஸ்பெட்டலில் சேர்த்து சரி பண்ணிடலாம்”. என்று மாயா உலகநாதனுக்கு தைரியம் சொல்லியபடியே, ‘சேரன் மா தேவி’ ஊர்வந்து சேர்ந்தனர்..
மதிய வெயில் மண்டையைப் போலக்க,, இதமாக காற்றும் வீசியது “ஏதாவது சாப்பிடுறியே மாயா” என்ற உலகநாதன் கேட்க..
மாயா “வேண்டாம் டாடி, ஏதாவது கூல் டிரிங் மாதிரி” என்று சொல்ல..
“கொஞ்சம் வெளியில் வந்து உட்காருடா காத்து நல்லா வருது” என்று கூறி மாயாவை காரில் இருந்து இறக்கியவர்..
பக்கத்தில் ஒரு இளநீர் கடை இருக்க, அந்த இளநீர் கடையில் மகளுக்கு ஒரு இளநீர் வாங்கி கொடுத்து “இதை குடிச்சிட்டு இங்க உட்கார்ந்து இருடா நான் ரதிதேவியை பற்றி விசாரிச்சுட்டு வரேன்” என்று அவர் சொல்லி செல்ல…
அந்த வெயிலிலும் நன்றாக காற்று வீசியது, கடல் பக்கம் இருப்பதால் உப்புக் காற்று வீசியது,, அந்த ஊர் மிகவும் அழகாக இருந்தது எங்கு பார்த்தாலும் கொய்யா தோப்பு, மாந்தோப்பு, தென்னை மரங்கள் பனை மரங்கள் என்று தோப்புகளாகவே இருக்க,மாயா அதை ரசித்தபடியே அமர்ந்து கொண்டிருந்தாள்..
மாயா சேரில் சாய்ந்து தன் மேடிட்ட வயிறை பிடித்துக் கொண்டு. இளநீரை மெல்ல பருக..
மாயாவின் முன் ஒருவர் வேஷ்டி சட்டையில் அணிந்து வந்து நின்றார்,,
மாயா யார் என்பது போல் பார்க்க..
அவர் பார்க்கவே கொஞ்சம் வித்தியாசமாக தெரிய,, தன் முன்னாடி வந்து நின்றதும் மாயாவுக்கு பயம் வந்துவிட்டது..
மாயாவின் முன் வந்து நின்றவர் “எனக்கு ஒரு இளநீர் வாங்கி கொடு” என்று கேட்க..
அவர் கேட்டதில் மாயாவுக்கு பயம் வர “நீங்களே வாங்கிக்கோங்க”.. என்றாள்..
” என்கிட்ட காசு இல்ல நீ வாங்கி கொடு” என்றார் அவர்..
மாயா தந்தையை தேட..
“வாங்கி தாடி” என்று அவர் சற்று கோபமாக கேட்க..
இள நீர் வெட்டி கொடுப்பவரை பார்த்த மாயா “அவங்களுக்கு ஒரு இளநீர் குடுங்க,, என்கிட்ட காசு இல்ல, என் அப்பா வந்தவுடனே வாங்கி தரேன்” என்று கூற..
“சரி” என்ற கடைக்காரர் இளநீரை வெட்டி அவரிடம் தர..
” நீ தர வேண்டாம் அந்த பொண்ணு கிட்ட கொடுத்து என்கிட்ட தர சொல்லு” என்றார் அவர்..
மாயாவுக்கு இது என்னடா வேதனை என்று நினைத்தாள்.. இளநீர் கடைக்காரர் மாயாவிடம் இளநீரை தர.
அந்த இளநீரை வாங்கியவள் அந்த வேஷ்டி சட்டை அணிந்தவரிடம் தர “தேங்க்யூ சோ மச்” என்று சொல்லி விட்டு இளநீர் வாங்கிக்கொண்டவர் கடைகாரரிடம் ” இரண்டு ஸ்டுரா தா” என்று கேட்டு வாங்கி கொண்டு அந்த வேயிலில் காலில் செருப்பு கூட இல்லாமல் கொய்யா தோப்பை நோக்கி சென்றார்..
உலகநாத கோபமாக வந்தார்..
” என்ன டாடி” என்று மாயா கேட்க..
” யாருமே சரியா பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க, ரதிதேவி இந்த ஊர்ல இல்லைன்னு சொல்றாங்க”.. என்றார் உலகநாதன்..
” அப்போ அவங்க இந்த ஊர்ல இல்லையா டாடி” என்றாள் மாயா..
” இல்லம்மா எல்லோரும் பொய் சொல்றாங்க என் பிரண்டு சொன்னான் ரதி இந்த ஊர்ல தான் இருக்கா”..
“அப்போ ஏன் எல்லோரும் ரதிதேவி இங்கே இல்லைன்னு சொல்றாங்க”..
” எல்லாம் இந்த அக்னி பண்ணி வச்ச வேல,, யாரு வந்தாலும் ரதிதேவியை பத்தி சொல்ல கூடாதுன்னு சொல்லி வச்சிருக்கான் அந்த பய”.. என்றார் கோபமாக..
“நாம ரதிதேவி அம்மாவை தேடலாம் பா” என்றவள்..
“அப்பாக்கு ஒரு இளநீர் கொடுங்க” என்று உலகநாதனுக்கு பருக இளநீர் வாங்கி கொடுத்தாள் மாயா..
அந்த கடைக்கு இந்த ஊரில் புதிதாக கடை வைத்திருப்பவர் இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை கேட்டவர்..
” யாரை தேடி வந்திருக்கீங்க” என்று கேட்க..
யாருமே ரதிதேவி பற்றி சொல்லல்லை இவன் மட்டும் சொல்லவா போறான் என்று உலகநாதன் அமைதியாக இருக்க..
மாயா அந்த கடைக்காரரிடம் “ரதிதேவியின்னு ஒருத்தங்களை தேடி வந்திருக்கிறோம்” என்று கூற..
“ரதி தேவியா?”.. என்றார் அந்த கடைக்காரர்..
“ஆமாம் அவங்க பெயர் ரதிதேவி ஹிந்தி டிச்சரா வேலை பார்த்தாங்க,, அவங்க அண்ணா கூட தின இதழ் பத்திரிக்கையை வச்சிருக்காங்க,, அப்புறம் அவங்க சின்ன அண்ணா கூட இந்த ஊர்ல தான் இருக்காரு பேரு ஞானபிரகாஷ் இந்த ஊருல தான் இருக்காங்க” என்று மாயா கூற..
” ஓ அவங்களா”… என்ற அந்த கடைக்காரர்..
“ஏம்மா இப்ப தானே நீங்க அந்த ரதிதேவிக்கு இளநீர் வாங்கி கொடுத்தீங்க,”?. என்றதும்..
என்ன? என்று மாயா அதிர!..
யார் என்று உலகநாதன் எழுந்து வந்து,,கடைக்காரரிடம் கேட்க..
” ஆமா சார் உங்க பொண்ணு தான் இப்ப கொஞ்சம் நிமிஷத்துக்கு முன்னாடி ரதிதேவிக்கு இளநீர் வாங்கி கொடுத்தாங்க” என்றார்..
மாயா அதிர்ந்து “அட அவங்கள ரதிதேவி” என்றாள் மாயா..
” ஆமாம்” என்றார் அந்த கடைக்காரர்..
“அவங்களை பார்க்க பையன் மாதிரி வேஷ்டி சட்டை போட்டு முடி எல்லாம் வெட்டி, பையன் மாதிரி இருந்தாங்களே” என்று கூற..
“ஆமாம் நான் இங்கு வந்ததுல இருந்து பாத்துட்டு தான் இருக்கேன்,அவங்க அப்படித்தான் இருக்காங்க, கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவங்க” என்று கூற.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த உலகநாதன் கடைகாரரிடம், “நன்றி” என்று சொல்லிவிட்டு..
” மாயா வா போலாம்” என்று காரில் ஏறி கிளம்ப போக,,
“அப்பா அவங்க இந்த பக்கம் தான் போனாங்க” என்றாள் மாயா..
மாயா சொன்ன திசை பக்கம் காரை செலுத்தினார் உலகநாதன்..
தூரத்தில் ஒருவர் வேஷ்டி சட்டை அணிந்து செல்வதை பார்த்தவள்,,
“டாடி.. அவங்க தான், அவங்க தான்” என்று கூற,,
காரை அவர் முன் நிறுத்தினார் உலகநாதன்..
உலகநாதன் வேகமாக காரில் இருந்து இறங்கி, ரதி தேவி முன் சென்று நிற்க..
மனதில் இது என்று ரதிதேவி இல்லை இது என் ரதிதேவி இல்லை என்று சொன்னாலும்.
“ரதி” என்று அவள் முன் சென்று நிற்க…
ரதி யார் இவன் என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு இளநீரை தன் கையில் எடுத்துக்கொண்டு அவர் அவர் செல்லும் வழியில் நடந்து செல்ல..
“ரதி, ரதி” என்று கண்ணீரோடு அவள் முன் சென்று மீண்டும் உலகநாதன் நிற்க..
ரவிதேவிக்கு தன் முன் ஒருவர் ரதி, ரதி என்று வந்து நிற்பது கோபத்தை தர,,
“போடா தள்ளி போடா’ என்றவர் ரோட்டை பார்த்து நடக்க..
“ரதி, ரதிமா” என்ற உலகநாதன் “உனக்கு என்னை ஞாபகம் இல்லையா” என்று ரதி முன் வந்து மறுபடியும் சொல்லி கதற..
” டேய் போடா, பக்கத்தில் வந்த கல்லெடுத்து அடிச்சிடுவேன்” என்றவர் கல்லை தூக்கி காட்டி உலகநாதனை அடிப்பது போல் செய்கை செய்ய..
“ஐயோ ரதி என்னை யாருன்னு உனக்கு தெரியலையா நான்தான் உன் உலகநாதன்” என்று நடு ரோட்டில் மண்டியிட்டு கதறி அழுதார்,,
உலகநாதன் தன்னையே வெறுத்தார், தன்னால் ரதிதேவிக்கு இப்படி ஆகி விட்டதே என்று நடு ரோட்டில் அமர்ந்து கதறி அழ..
மாயாவுக்கு தந்தையை பார்க்க வேதனையாக இருந்தது. “டாடி, டாடி அழாதீங்க, அவங்க உங்களை மறந்திருப்பாங்க டாடி அழாதீங்க எழுந்திருங்க” என்று உலகநாதனை எழுப்பியவள் குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
மகள் கொடுத்த தண்ணீரை கூட வாங்கி பருகாமல்,, “மாயா என் ரவிதேவியை பார்த்தியா எப்படி இருக்கா,, ஆம்பள உடை உடுத்தி, முடியெல்லாம் வெட்டி,, என்னால அவளை இந்த கோலத்துல, பார்க்க முடியலயே,, ஐயோ அவ எப்படி இருப்பா தெரியுமா,, உண்மையான ரதிதேவி மாதிரி இருப்பாளே,, என் ரதிதேவியை நானே இப்படி பண்ணி வச்சுட்டேனே,, எனக்கு நல்ல சாவே வராது,, என் உயிர் இப்பவே போகட்டும், இறைவா” என்று கதறி அழுதவரை, பார்த்த மாயாவுக்கு பயம் வந்தது,, எங்கே தந்தைக்கு மீண்டும் ஏதாவது ஆகி விடுமா என்று பயந்தவள்..
“அப்பா அமைதியா இருங்கப்பா,, ஏற்கனவே உங்களுக்கு உடம்பு சரியில்ல இப்பதான் குணமாகி வந்திருக்கீங்க மறுபடியும் அழுது ஏதாவது ஆகிட போகுது பா,,” என்றவள் தந்தையின் மார்பை தடவி விட….
“நான் ஏன் இன்னும் உயிரோட இருக்கேன் மாயா.. என் ரதியை இந்த கோலத்தில் பார்க்கவா,, ரதி, ரதி என் ரதி இப்படி ஆகிட்டாளே என்னால, என்னால” என்று அவர் தன்னை தானே தலையில் அடித்து கொண்டு புலம்பியவர்..
“என் ரதி எப்படி இருப்பா தெரியுமா?,, என்று முதல் முதலில் ரதி தேவியை பார்த்த ஞாபகம் வந்தது….. உலகநாதனுக்கு…
error: Content is protected !!