Skip to content
Post Views: 1,118
என் ஜீவன் உன்னை சேருமா
அத்தியாயம் – 20
Advertisement
Advertisement
உலகநாதனுக்கு அம்மா வசந்தா மட்டும் தான்,, அப்பா இல்லை..
Advertisement
உலகநாதன் சிறுபிள்ளையாக இருக்கும் போதே அவருடைய தந்தை மதுப்பழக்கத்தால் இறந்து விட்டார்..
Advertisement
வசந்தா கொஞ்சம் வசதியான வீட்டுப் பெண்,, உலகநாதன் தந்தை கூட கொஞ்சம் வசதியானவரே அதனால் உலகநாதனுக்கு எந்த ஒரு பண கஷ்டமும் இல்லை,,
அவர் நினைத்ததை படித்தார் சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இருந்தாலும் சொந்த பந்தத்தோடு அவ்வளவு ஒட்டுதல் இல்லை அவருக்கு…
சென்னையில் புதிதாக ஒரு கம்பெனி தொடங்க வேண்டும் என்று அதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார், சும்மா இருக்கும் நேரத்தில் பார்ட் டைம் ஜாப் வேலைக்காக பெர்னிலாவோட பால் கம்பெனியில் கணக்கு வழக்கு பார்க்கும் வேலையில் சேர்ந்தார்..
உலகநாதன் வேலைக்கு சேரும்போது பெர்னிலா இல்லை, வெளிநாட்டிற்க்கு சென்று படித்துக் கொண்டிருந்தாள். பால் கம்பெனி என்றால் சாதாரண பால் கம்பெனி இல்லை. ஆயிரம் மாடுகள் இருக்க,, அதில் இருந்து பால் கரந்து அதை பதப்படுத்தி சென்னை முழுக்க பாக்கெட் பால் சப்ளை செய்து கொண்டிருந்தனர்..
பெரிய நிறுவனம் அனைத்து கணக்கு வழக்குகளையும் உலகநாதன் தான் பார்த்துக் கொண்டிருந்தார்..
உலகநாதனுக்கு இந்த வேலை பிடித்திருக்க,, முழு வேலையாக இதையே பார்த்துக் கொண்டிருந்தார்.. வெளிநாட்டிலிருந்து படித்து முடித்து வந்து பெர்னிலா தந்தையின் பால்பண்ணையை பொறுப்பேற்க வர.. உலகநாதன் அதற்கு உதவி செய்தார்..
பெர்னிலாவுக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார். பெர்னிலாவுக்கு உலகநாதனை மிகவும் பிடித்து விட,, அவரின் மேல் காதல் வந்தது..
அதை உலகநாதனிடம் கூற. அவர் அதை மறுத்து விட்டார்..
ஏன் இன்று பெர்னிலா காரணம் கேட்க,,
அவர் நீங்க கிறிஸ்டியன், நான் இந்து.. உங்க அளவுக்கு நான் வசதி இல்லை,
என் ஊரில் எங்க அம்மா இருக்கிறார்.. அவர் பார்க்கும் பெண்ணைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று அவர் கூறி விட..
பெர்னிலா மீண்டும் மீண்டும் உலகநாதனை தன்னை திருமணம் செய்து கொள்ள டார்ச்சர் செய்ய..
உலகநாதன் தன் தாய்க்கு போன் செய்து தனக்கு திருமணத்துக்கு பெண் பார்க்கச் சொல்லி விட்டார்.
நீண்ட நாட்களாக வசந்தா மகனிடம் திருமணத்திற்க்கு பெண் பார்க்கலாமா என்று கேட்டபோது வேண்டாம் என்ற மகன். இன்று திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவே வேகவேகமாக பெண் பார்க்க தொடங்கினார் வசந்தா…
அவர் பக்கத்து ஊரில் உள்ள ரதி தேவியின் புகைப்படத்தை பார்த்ததும் அவருக்கு பிடித்துப் போக…
நேரடியாக ரதி தேவியின் வீட்டிற்கு சென்று பேசினார்.. அவர்களுக்கும் உலக நாதனை பற்றி அனைத்தும் விசயமும் தெரிந்து பிடித்திருக்க. சரி பெண் பார்க்க வாங்க என்று பேசிக் கொண்டனர்..
உலகநாதனுக்கு ரதிதேவியின் புகைப்படத்தை அனுப்பி வைத்தார் வசந்தா..
உலகநாதன் ரதிதேவி புகைப்படத்தை பார்த்ததுமே பிடித்து விட உடனே கிளம்பி ஊருக்கு வந்து விட்டார்…
திடீரென்று காலையில் வீட்டுக்கு வந்து நின்ற மகனை பார்த்த வசந்தா..
“என்ன உலகம் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிக்கிற” என்றார்..
” நீங்கதானே பொண்ணு போட்டோ அனுப்பி வச்சீங்க அதான் பார்க்க வந்தேன்” என்றார்..
வசந்தா மகனின் ஆர்வத்தை பார்த்து சிரித்துக் கொண்டவர்..
“பொண்ணு வீட்டிற்கு போக இன்னும் நாலு நாள் இருக்கு..
பொண்ணு பார்க்க நாலு நாள் கழிச்சு தான் வாங்கன்னு சொல்லி இருக்காங்க..
பொண்ணோட அண்ணன் வெளியூர்ல இருக்காராம்,” என்று தகவல் போல் சொல்லி விட்டு சென்றார் வசந்தா…
‘என்ன? இன்னும் நாலு நாளா?, அப்படியின்னா ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் நான் காத்துட்டு இருக்கணுமா என்று உலகநாதன் வருத்தப்பட்டவர்..
” அம்மா நான் சுரேஷை போய் பார்த்துட்டு வாரேன்” என்று உலகநாதன் வெளியே கிளம்பினார்..
நண்பனை பார்க்க அவன் மில்லிற்க்கு சென்றார்.
சுரேஷ் சொந்தமாக மில் வைத்திருக்கிறார்..
உலகநாதனை நீண்ட நாள் கழித்து பார்த்த சுரேஷ்,, “டேய் வாடா உலகம் எப்படி இருக்க? என்னடா திடீர்னு வந்து இருக்க ஊர் பொங்கல் கூட இல்லையே” என்றார்.
“நீ வேற பேசாம இருடா”என்றார் உலகநாதன்..
“என்னடா ஆச்சு” என்று சுரேஷ் கேட்க..
” எனக்கு பொண்ணு பார்த்திருக்காங்க” என்று வருத்தமாக சொல்ல..
“அத ஏன்டா வருத்தமா சொல்லுற சந்தோஷமா சொல்லுடா, ஏன்டா பொண்ணா புடிக்கலையா உனக்கு” என்றார் சுரேஷ்…
“பொண்ணு போட்டோ எல்லாம் பார்த்து பிடிச்சு போய் தான் பார்க்க வந்தேன்,, பொண்ணை இன்னும் நாலு நாள் கழிச்சு தான் கண்ணுல காட்டுவானுங்கலாம்” என்றார் வருத்தத்தோடு..
“பொண்ணு எந்த ஊரு டா?”..
” சேரன்மாதேவி” என்றார் உலகநாதன்..
” அட நம்ம பக்கத்து ஊரு தான்,, பொண்ணு வீடு எங்கடா இருக்கு? போய் பாத்துட்டு வந்துருவோம்” என்று சுரேஷ் சொல்ல..
“அதெல்லாம் எனக்கு தெரியாதுடா பொண்ணு ஹிந்தி டீச்சராம், அந்த ஊரு ஸ்கூல்ல வேலை பாக்குதாம் அப்படின்னு சொன்னாங்க”..
“டேய் ஹிந்தி டீச்சரா பரவால்லடா டீச்சரா புடிச்சிருக்க”..
“நீ வேற கடுப்ப கிளப்பாதடா அந்த பொண்ணு பார்க்க ஏதாவது வழி இருந்தா சொல்லுடா” என்றார் உலகநாதன்….
“பொண்ணு எந்த ஊரில் வேலை பார்க்குதுன்னு சொன்ன”?..
‘டேய் அந்த ஊர்ல இருக்கிற ஒரே ஸ்கூல் தான் “..என்றார் உலகநாதன்..
“சரி அப்போ நீ வா டீச்சரை ஸ்கூல்ல போய் பாத்துட்டு வந்துரலாம்” என்றார் சுரேஷ்..
“டேய் அது தப்புடா”….
“டேய் உனக்கு பொண்ணு புடிச்சிருக்கா இல்லையா?”..
“ஆமாம் பிடிச்சிருக்கு”..
” அப்புறம் என்ன, வாடா, இந்த மாதிரி வாய்ப்பு எல்லாம் யாருக்குமே கிடைக்காது..வா வா என்ஜாய் பண்ணு” என்றவர் மணியை பார்க்க,, அது மதியம் 12 மணி.. “பள்ளி கூடம் விட இன்னும் நேரம் இருக்கே” என்றவர்..
“சரி வாடா நம்ம ரெண்டு பேரும் ஏரல் போய் ஒரு குளியலை போட்டுவிட்டு, அப்படியே கார்த்திக் மெஸ்சுல ஒரு பிரியாணி சாப்பிட்டு வரலாம். 3:30 மணிக்கு மேல் தான் ஸ்கூல் விடுவாங்க நாலு மணிக்கு டீச்சரை பாத்திடலாம் வா”என்று உலகநாதனை அழைத்துக் கொண்டு கிளம்பினார் சுரேஷ்..
சரியாக சுரேஷ் சொன்னபடி ஏரல் ஆத்துக்கு சென்று குளித்துவிட்டு. அப்படியே அங்கு உள்ள ஏரல் ஈஸ்வரனை பார்த்து சாமி கும்பிட்டு, ஏரல் மை அங்கே பேமஸ் அதை வாங்கி நெத்தில் இட்டு கொண்டு , ஹோட்டலில் சாப்பிட்டு ரதிதேவி வேலை செய்யும் ஸ்கூலுக்கு வர.. 4 மணி ஆனது…
நண்பர்கள் இருவரும் பள்ளிக்கூடத்தில் இருந்து சற்று தள்ளி நின்று கொண்டனர்.. முதல் ஸ்கூல் பெல் அடித்ததும் சிறு பிள்ளைகள் முதலில் வர,, அடுத்த பெல் அடித்ததும் பெரிய பிள்ளைகள் எல்லாம் வெளியே வந்தார்கள்..
உலகநாதன் புலம்பியபடி இருந்தார் “என்னடா இன்னும் காணும் ரதியை” என்று..
” பொறுமையா நில்லுடா வருவாங்க, ” என்று சுரேஷ் சொல்ல..
உலகநாதனுக்கு பொறுமை கடந்து போயிற்று.. அவர்கள் வந்து ஒரு மணி நேரத்துக்கு மேலே ஆகிவிட ரவிதேவி இன்னும் காணும் என்றவர் வாசலிலே பார்த்திருக்க எப்போது டா ரதி வருவாள் என்று ஸ்கூல் கேட்டையே பார்த்திருந்தார்..
சரியாக 5:00 மணிக்கு மேல் டீச்சர்கள் எல்லாம் ஒருவர் ஒருவறாக வெளியே வர ,,…
ரதி அவளுடைய வேலைகள் அனைத்தும் முடித்துவிட்டு, எட்டு வயது அக்னியை தன் கையில் பிடித்து கொண்டு வெளியே வந்தாள்,, அவள் கூட அவளின் தோழி சவிதாவும் வந்தாள்..
சவிதா ரதிதேவிக்கு நல்ல தோழி கணக்கு வகுப்பு எடுக்கிறார்.. கொஞ்சம் தூரத்து சொந்தமும் கூட…
மூன்று பேரும் சேர்ந்து வெளியே வந்தனர்,, ரதி குனிந்து கொண்டே அக்னிடம் பேசிக் கொண்டே வர..
சவிதா நாலா பக்கமும் வேடிக்கை பார்த்து அப்படியே வந்தாள்..
புதிதாக இருவர் ஸ்கூலின் வாசலில் பைக்கில் இருப்பதை பார்த்தாள் சவிதா..
அதில் ஒருவன் ரோட்டில் செல்லும் மனிதர்களை வேடிக்கை பார்க்க, இன்னொருவன் மட்டும் தன் பக்கத்தில் உள்ள ரதிதேவியை ஆர்வமாக பார்ப்பதை பார்த்தாள்..
உலகநாதனுக்கு எப்போதுடா ரதி வருவாள் என்று காத்திருந்தவர்..
ரதி வெளியே வரவும் உலகநாதன் மனது சிறகில்லாமல் மேலே பறந்தது..
போட்டோவில் பார்த்தை விட நேரில் இன்னும் அழகாய் இருக்கிறாள், என்ன பொண்ணுடா என்றே பார்த்திருந்தார், யார் தன்னை பார்க்கிறார்கள் என்றெல்லாம் அவருக்கு கவலை இல்லை,முழு வீச்சாக ரதியை வைத்த கண் வைத்து படியே பார்த்தபடியே நின்று கொண்டிருந்தார். அந்த பச்சை வண்ண காட்டன் புடவையில்,, நீண்ட கூந்தலை அழகாய் பின்னலிட்டு,காய்ந்த பிச்சிப்பூ கருத்து தலையில் இருக்க,, காதில் பெரிய வளையம், நெத்தியில் கோபுர சைஸ் மெருன் கலர் பொட்டு, கழுத்தில் லாங் செயின் மட்டும் அணிந்து,, ஒரு கையில் கருப்பு வாட்ச், இன்னொரு கையில் தங்க வளையல் ஒன்று மட்டும் அணிந்து, தன்னை கடந்து போன ரதிதேவியின் பின் தன் மனது மொத்தமாக போனது போல் பார்த்தபடியே நின்றிருந்தார்..
error: Content is protected !!