“எங்கேயின்னு சொன்னா தான் கூட வருவியா”?” என்றதும்..
” இல்லையென்றவள்”.. அமைதியாக வர..
உலகநாதன் வண்டி காட்டுப்பாதை போதும் வழி சென்று கொண்டிருந்தது.
இவர் எங்கே போகிறார் என்று பார்த்தவள், அங்கே உள்ள பெரிய ஆர்ச்சு போர்டை பார்த்தவளுக்கு புரிந்தது, அவர் தன் குலதெய்வம் கோயிலுக்கு தன்னை அழைத்து வந்திருக்கிறார் என்று.. ரதி அமைதியாகவே வர..
வண்டியை சிறிது நேரத்தில் நிறுத்திய உலகநாதன்..
“இன்னும் இரண்டு கிலோமீட்டர் நடந்து தான் போகணும் ரதி வா” என்று வண்டியில் இருந்த மாலையையும், கல்யாணம் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டவர் அந்த காட்டுப்பாதையில் ரதியை அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
“உங்க அத்தை கால் வலிக்குதுன்னு சொல்லிட்டாங்க, அதுவும் ரெண்டு கிலோ மீட்டர் எல்லாம் அவங்களால நடக்க முடியாது,,” பாதை மேடு பள்ளமா இருப்பதை சுட்டி காட்டிக் கொண்டே வந்தார் உலகநாதன்..
“நான் உங்க கூட குலதெய்வம் கோவிலுக்கு வருவது அம்மாவுக்கு தெரியுமா”?..
“தெரியாது,, அது நம்ம கல்யாணம் பண்ண மூணாவது நாள் நம்ம சென்னை கிளம்பிடுவோம், குலதெய்வம் கோவிலுக்கு வர முடியாது அதனால இப்பவே உன்னை கூட்டிட்டு வரணும்னு தோணுச்சு கூட்டிட்டு வந்தேன்”என்றார் சிரித்த முகமாக..
பரவால்ல முன்கூட்டியே யோசித்து இருக்கார் என்று நினைத்துக் கொண்டே ரதி அவர் பின்னாடி நடந்து வந்தாள்….
இருவரும் இரண்டு கிலோமீட்டர் நடந்து கோவில் அருகில் வந்திருந்தனர்,,.
உலகநாதனின் குலதெய்வம் பலவேசம் சாமி மற்றும் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு அழைத்து வந்திருந்தார்..
இந்த காட்டுக்குள்ளே இவ்வளவு பெரிய கோவிலா? என்றே நிமிர்ந்து பார்த்தாள் ரதி..
கோவில் கோபுரத்தோடு மிக அழகாக இருந்தது, ரதியை உள்ளே அழைத்து வந்திருந்தார் உலகநாதன்..
கோயிலில் ஒரு பூஜாரி மட்டுமே இருந்தார் வேறு யாருமே இல்லை..
மூன்று கர்ப்பகிரகம் இருந்தது. அதில் சின்ன பலவேசம், பெரிய பலவேசம், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் என்று மூன்று குலதெய்வம் சிலை இருந்தது..
பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது பலவேசம் சாமி,, இந்த கடவுளை சிவன் வடிவிலான முனிஸ்வரர் சாமி என்று அழைப்பார்..
மூன்று தெய்வங்களுக்கும் மாலை பழம் வாங்கி வந்திருந்தார் உலகநாதன் அதை பூஜாரி கையில் கொடுத்தவர், இன்னொரு கவரில் கல்யாணம் பத்திரிக்கையை வைத்து “எனக்கு பத்து நாள்ல கல்யாணம், சாமி பாதத்தில் வச்சு ஆசீர்வாதம் பண்ணி குடுங்க” என்றார்..
உலகநாதனை பூஜாரிக்கு அடையாளம் தெரியவில்லை, அவர் நீண்ட நாள் கோவிலுக்கு வராமல் இருந்ததால், அவரை அடையாளம் தெரியவில்லை,, வந்தவர்களிடமிருந்து பொருளை வாங்கிக் கொண்டு பூஜை செய்ய ஆரம்பித்தார் அவர்…
சாமி பாதத்தில் கல்யாண பத்திரிக்கை வைத்து விட்டு, உலகநாதன் கொண்டு வந்த மாலையை அங்கேயுள்ள சின்ன பலவேசம், பெரிய பலவேசம் அம்பாளுக்கும் மாலையை சாத்தி விட்டு,, அனைத்து தெய்வங்களுக்கு தீபாரனை காட்டி விட்டு , இருவரிடம் வந்து கற்பூர தீபாராதனை தட்டை பூஜாரி நீட்ட…
இருவரும் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்த படியே தீபாராதனையை கண்களில் ஒற்றி கொண்டனர்…
பூஜாரி கல்யாண பத்திரிக்கையின் மீது பூக்களை தூவி பூஜை செய்து,,,. உலகநாதனின் கையில் கொடுத்தார், இருவரும் சிறிது நேரம் கோயிலில் அமர்ந்து விட்டு வெளியே வர..
“ரைட்டு வா” என்று அவளை பால்ஸ் இருக்கும் இடத்திற்கு அழைத்துக்கொண்டு போனார்..
தண்ணீர் விழும் சத்தம் பலமாக கேட்க இருவரும் நீர்வீழ்ச்சி பக்கம் வந்திருந்தனர்..
இரண்டு சிறிய அருவிகள்,, இரண்டு அருவிகளிலும் தண்ணீர் மிதமாக விழுந்து கொண்டிருந்தது,,
அருவி பெரிய பள்ளத்தாக்கு மேலே இருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டு இருந்தது..
அந்த அருவியை பக்கத்தில் பார்க்க அந்த பள்ளதாக்கில் இறங்கி தான் செல்ல வேண்டும்..
ரதி பள்ளதாக்கில் மேலே இருந்தவாறே அருவியை ரசித்து பார்த்தவளுக்கு அருகில் சென்று பார்க்கும் ஆசை வர உலகநாதனை பார்த்தாள்..
அவள் முகத்தையே பார்த்திருந்தவர்,, “அருவி பக்கத்தில் போகணுமா?”என்று கேட்க..
அவள் “ஆமாம்” என்று தலையாட்ட..
டக்கென்று அந்த பள்ளதாக்கில் குதித்தவர்,, “இறங்கு” என்று அவளுக்கு கை கொடுக்க..
ரதிக்கு பயம் எங்கே விழுந்து விடவோமோ என்று அவள் பயந்த படியே நிற்க.
அது பெரிய பள்ளத்தாக்கு கை கொடுக்கவே ரதிக்கு பயமாக இருந்தது,, உலகநாதன் கை மட்டும் மேலே நீண்டிருக்க அந்த கைக்கு பக்கத்தில் இவளுக்கு செல்லவே பயமாக இருந்தது..
அதை பார்த்தவர் “கை கொடுக்க வேண்டாம் ரதி உன் காலை என் தோள்மேல் வை நான் இறக்கி விடுகிறேன்” என்றார்..
ரதி மெதுவாக அமர்ந்து திரும்பிக் கொண்டு, காலை உலகநாதன் தோள் மீது வைக்க…
அவளை அப்படியே இடுப்போடு பிடித்து தூக்கி கீழே நிறுத்தி இருந்தார் உலகநாதன்..
அவளுக்கு அப்பாடா வந்துட்டோம் என்று இருந்தது,, அருவியின் பக்கத்தில் ரதி வேகமாக செல்ல..
“ரதி பார்த்து போ, பாறை வலுக்கும்” என்றார்..
ரதி அருவியை பார்த்த படியே பாறை மீது அமர்ந்து கொண்டாள்,,…
“அவளோ, எனக்கு குளிக்கயெல்லாம் பிடிக்காது,, அருவியை பார்த்து ரசிப்பது தான் எனக்கு பிடிக்கும்” என்றாள்.
“நீ அருவியை பார்த்து ரசிச்சு கிட்டு இரு,, நான் போய் ஒரு குளியலை போட்டு வர்ரேன்” என்றவர்,, வேகமாக சட்டையை கழட்டி கீழே போட்டு விட்டு,, அருவியை நோக்கி சென்றவர்.. ஒரு பத்து நிமிடம் குளித்துவிட்டு வந்தார்..
ரதிக்கு தான் உலக நாதனை சட்டை இல்லாமல் பார்க்க ஒரு மாதிரி இருந்தது,, உடனே அவள் தலையை குனிந்து கொள்ள..
அவளை பார்த்து சிரித்துக் கொண்டே சட்டையை அணிந்து கொண்டார் உலகநாதன்..
ரதியை பார்த்தவர் “அந்த பேக்ல என்ன வச்சி இருக்க” என்றார்,,
ரதி “லஞ்ச்” என்று சொல்ல..
“எனக்கு பசிக்குது, உன் லஞ்சை கொண்டா” என்று கேட்க உடனே அவளின் பாக்ஸை திருந்து அவரிடம் நீட்டியவளை பார்த்து..
“அது சின்ன அண்ணா ஆசைப்பட்டு கேட்டாரு,, அதான் பார்வதி அண்ணி” செஞ்சு கொடுத்தாங்க”..
“பார்வதினா, உன்னை பார்க்க வந்தப்போ கர்ப்பமா இருந்தாங்களே அவங்கள..”?. என்றதும்..
ரதி “ஆமாம்”என்றாள்..
“உங்க சிவாபிரகாஷ் அண்ணா வோட வைஃப், ரைட்டா”..
ரதி “எஸ்” என்றதும்..
ரதிக்கு கொஞ்சம் உணவை எடுத்து வைத்துவிட்டு,, உலகநாதன் உணவை சாப்பிட..
“நீங்க இதையும் சாப்பிடுங்க நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டுகிறேன்” என்று ரதி சொல்ல..
“பரவாயில்லை நீயும் சாப்பிடு உனக்கும் பசிக்கும் தானே” என்று உணவை அவளுக்கு வைத்து விட
..
இருவரும் உண்டு முடித்ததும். “கிளம்பலாமா ரதி” என்றதும்..
ரதிக்கு கிளம்பும் மனசே இல்லை,, “இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே” என்று கூற..
உலகநாதன் சிரித்தவர்.
“இது மிருகங்கள் தண்ணீர் குடிக்க வருகிற நேரம் ரதி, சோ கிளம்பலாம்”…
“என்ன மிருகமா?”..என்றாள்…
“ஆமாம் ரதி இங்கே மிருகங்கள் தண்ணீர் குடிக்க வரும், இன்னும் கொஞ்ச நேரம் நம்ம இங்கே இருந்தோம்னா நைட்டுக்கு நம்ம தான் அதுகளுக்கு டின்னர்,நம்மல அதுங்க யூஸ் பண்ணிக்கும் கிளம்பலாம்” என்று கூறி சிரிக்க..
உலகநாதன் ரதியை பார்த்து சிரித்ததும் “பொய் சொல்றீங்களா”?.. என்றாள் ரதி..
அவர்கள் பக்கத்தில் காயந்து இருந்த யானை கழிவுகளை காட்டி “இது யானையோடது” என்று கூற..
“அய்யய்யோ யானையெல்லாம் இங்கே வருமா? யானை தண்ணி குடிக்க வரும் இடத்திலேயே நான் இவ்வளவு நேரம் உட்கார்ந்துட்டு இருந்தேன்,, அய்யய்யோ வாங்க, வாங்க” என்று பயந்து உலகநாதன் கையை பிடித்துக் கொண்டு வேகமாக இழுத்துச் சென்றாள் வெளியே..
உலகநாதனுக்கு சிரிப்பு இவ்வளவு நேரம் அருவியை வேடிக்கை பார்த்தவளுக்கு, இப்போது இப்படி பயப்படுறாளே என்றவர், ” வா” என்று காட்டை விட்டு இருவரும் வெளியே வர…
ரதி வெளியே வரும் வரை உலகநாதனின் கையை விடாவே இல்லை,, பயந்து கொண்டே வந்தவளை சீண்டி பார்க்க எண்ணி,, உலகநாதன் ” புலி, புலி” என்று கத்த….
உலகநாதன் கத்தியதும் பயந்து போனவள் “ஆ” வென்று கத்தி..
உலகநாதன் பின்னாடி சென்று அவரின் சட்டையை பிடித்து நின்று கொண்டவளுக்கு பயத்தில் உடல் நடுங்கியது.
ரதி இப்படி பயப்படுவாள் என்று உலகநாதன் நினைக்க வில்லை,.. அவள் உடல் நடுக்கத்தை பார்த்தவர்..
“டேய் ரதி சும்மா சொன்னேன் டா, பயப்படதா”,, என்று கூற.. அப்போது தான் ரதி சுத்தி, முத்தி பார்த்து கண்கலங்கி வாறே உலகநாதனை பொய் சொல்லியதை உணர்ந்து அவரை முறைக்க..
“என் ரதிக்கு முறைக்க எல்லாம் தெரியுமா,”? என்றவர் அவளின் மூக்கை பிடித்து ஆட்டி சிரிக்க.
“போங்க” என்றவள் அவரின் தோளில் ஒரு அடி அடித்து திரும்பிக்கொள்ள..
அவள் உடல் இன்னும் நடங்குவதை பார்த்தவர், ரதியின் தோளில் கைபோட்டு “சாரிடா இனிமே இப்படி பண்ணமாட்டேன், ரிலாக்ஸ் ஆகு”, என்று கூற…. “சரி” என்று தலையாட்டியவள் உலகநாதன் பின்னாடி ஏதோ வருவது போல் பயந்தது பார்த்தவள் “ஐயோ யானை வருது” என்று ரதி கத்த…
“என்ன யானையா”? என்று உலகநாதன் பயந்து மெல்ல திரும்பி பார்க்க..
அங்கே யானையும் இல்லை, பூனையும் இல்லை. தன்னை யானை வருது என்று ஏமாற்றி விட்டாள் என்று உலகநாதன் ரதியை பார்க்க.
“ஆஆஆஆ… ஏமாந்தீங்களா” என்றவள், நாக்கை துறுத்தி காட்டி சிரிக்க..
“என்னை ஏமாத்தீட்டீயா நீ, புடி அவளை” என்று அவளை துரத்த.
“விடு சூட்” என்றவள் ஓட…
ரதி என்று அவளை துரத்திக்கொண்டே ஓடினார் உலகநாதன்….
அவளோ “ஏமாந்தீங்களா”… என்று சிரித்த படியே ஓட..அவருக்கு சிக்காமல் ரதி ஓடினாள்.. வழியில் மேடு பள்ளமாக வர, மெதுவாக ஓடியவளை பின்னாடி இருந்து அவளை பிடித்துக்கொண்டவர்..”என்னை ஏமாத்திட்டு எங்க ஓட பாக்குற” என்று ரதியை கோழி பிடிப்பது போல் அவளை பிடித்து வைத்துக்கொள்ள….