Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன் உன்னை சேருமா 26 1

என் ஜீவன் உன்னை சேருமா


Advertisement

   அத்தியாயம் -26

Advertisement

 அக்னிக்கு பெரும் குற்ற உணர்வு போலானது.. இவ்வளவு நாள் உலகநாதனின்  மேல் கொண்ட கோபத்துக்கு  ஒன்றுமே இல்லாதது போல் அனைத்து விசயமும்  நடந்து விட..

Advertisement

அமைதியாக நின்றிருந்தான்..

Advertisement

 அவன் ரதியைக்கொண்டே  மாயாவையும், உலகநாதனை பழிவாங்கியது,, இப்போது அவன் கோபப்பட்டதற்கு  அர்த்தமே ஒன்றுமில்லை என்று ஆகிய விட தன்னையே நினைத்தே வருத்திக் கொண்டான்…
 தன் வாழ்க்கையும் சேர்த்து தொலைத்துவிட்டு,   மாயா  கேட்கும்  கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவன் அமைதியாக நிற்க..
அவனுக்கு  தெரிந்தது  மாயா இதை சும்மா விட போவதில்லை என்று தெரிந்து கொண்டவன், அமைதியாகி நிற்க..
 “ஹலோ மிஸ்டர் அக்னி சார் பதில் சொல்லுங்க ஓடி ஓடி எங்க அப்பாவை அடிக்க வந்தீங்க,, இப்போ வாங்க,, வந்து  அடிங்க பார்க்கலாம்?” என்றாள்..
 அக்னி எதுவும் பேசவில்லை அமைதியை கடைப்பிடிப்பது போல்   நின்று  கொண்டிருந்தான்..
 ஊர்காரர்கள்  அனைவரும் வேடிக்கை பார்க்க,
ஊர்  தலைவர் உலகநாதனிடம் “எங்களை மன்னிச்சிடுங்க,, உங்களை தப்பா புரிஞ்சுக்கிட்டோம்” என்றவர்..
” எல்லாரும்  போங்க இனி இது அவங்க குடும்ப விஷயம் அவங்க பேசி ஏதாவது முடிவு பண்ணிக்கட்டும்,  வாங்க” என்று அனைவரையும் கலைந்து  போகச் சொன்னவர் அவரும் சென்று விட்டார்….
 ஞான பிரகாஷின் மனைவியும், அவரின் பிள்ளைகளும் விஷயத்தை கேள்விப்பட்டு அந்த இடத்திற்கு வந்து சேர..
 மாயாவின் அருகில் வந்த ஞானபிரகாஷின்  மனைவி ஜானகி “என்னம்மா தலையில ரத்தம்” என்றவர் அவளின்  மேடிட்ட வயிறை  பார்த்தவர் அதிர்ச்சியானார்..
“மாசமா இருக்கீயா” என்றார் மாயாவைப் பார்த்து…
 மாயா, “ஆமாம் ” என்று   கூற..
“இது பார்வதி அக்காவுக்கு தெரியுமா?”…
 “தெரியும் ஆன்ட்டி என்னை செக்கப்பிற்கு  கூட்டிட்டு போனதே  அத்தை தான் ” என்று அவள் கூற..
 ‘அப்போ அம்மாவுக்கு எல்லாம் தெரிஞ்சு இருக்கு என்கிட்ட சொல்லல’ என்று பார்வதியின்  மேல் கோபம் கொண்டான்  அக்னி….
 மாயாவை  “வீட்டுக்கு வாடாம்மா, தலையில்  அடிபட்டு இருக்கு பாரு, இல்லை ஹாஸ்பெட்டல் போலாமா ” என்று ஜானகி  மாயாவை அழைக்க..
” உங்க வீட்டுக்கு வர உரிமை எனக்கு இல்லத்தை  நாங்க கிளம்புறோம்” என்றவள்.. ஞானபிரகாஷிடம் சென்று “ரதியம்மாவை நாங்கள் கூட்டிட்டு போறோம்” என்று அவள் கூற..
 “அது முடியாதுமா,,   நீங்க வேணா எங்க வீட்டுக்கு  வந்து  ரதியை  பார்த்துட்டு போங்க,,  அவளை எல்லாம் அனுப்ப முடியாது” என்றார்..
“நாங்க எங்க வீட்டுக்கு ரதியம்மாவை கூட்டிட்டு போயி, ஹாஸ்பெட்டலுல காட்டி  ரதியம்மாவை சரி பண்ண பார்க்கிறோம், அதுக்கு  எங்களுக்கு அனுமதி  தாங்க”.. என்று மாயா கேட்க..
 “இல்லம்மா இது சரிவராது,  நாங்க பாக்காத ஹாஸ்பெட்டலா?, நாங்க செய்யாத பரிகாரமா? அதெல்லாம் சரி வராது…
ரதி என் கூடவே கடைசி வரைக்கும் இருக்கட்டும்”?..
 “இல்ல சார் இப்போது ட்ரீட்மெண்ட் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு சென்னையில, நாங்க கூட்டிட்டு போய் ரதியம்மாவை நல்லா பார்த்துக்கொள்கிறோம்” என்றாள் மாயா…
 “ரதி இந்த ஊரை விட்டு வரமாட்டாமா”  என்று ஞானபிரகாஷ்  கூற
 “ரதியம்மா என் கூட வரேன்னு சொன்னா  நான் கூட்டிட்டு போகட்டுமா”…
 “அவ சரி சொல்ல மாட்டா அவளுக்கு இங்கே எல்லாம் பழகிடுச்சு,, நீங்க அவளை தனியா  பார்த்துக்க முடியாது,,நீங்க கிளம்புங்க” என்றார் ஞானபிரகாஷ்..
” சின்ன மாமா ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க,, ரதியம்மாவும்  பாவம்,,  எங்க அப்பாவும் பாவம் இனிமேலாவது  அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கட்டுமே”..
 “அது எப்படிம்மா கல்யாணம் ஆகாம ரெண்டு பேரையும் சேர்த்து ஒன்னா அனுப்ப முடியும்” என்றார்..
“அப்போ ரதியம்மாவை , அப்பா கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போகலாமா” என்று  மாயா கேட்க..
” இத்தனை வயசுக்கு அப்புறம் இது எல்லாம் எதுக்குமா?, எங்க ரதி  இப்படியே  இருக்கட்டுமே,  நாங்க பாத்துக்குறோம்  நீங்க கிளம்புங்க” என்றார் ஞான பிரகாஷ்..
 “ரதியம்மா இல்லாம,  நாங்க போக மாட்டோம், உங்ககிட்ட  நான் கெஞ்சி கேட்கிறேன்  ரதியம்மாவை நான்  நல்லா பாத்துக்குவேன்,, அவங்களை குணப்படுத்தி உங்க கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிக்க வைக்கிறது என் பொறுப்பு,, ப்ளீஸ் அங்கிள் என்னை நம்புங்க என்னை நம்பி ரதியம்மாவை  என் கூட அனுப்பி வைங்க” என்றாள் மாயா,,.
 ஞான பிரகாஷ் மாயா கேட்பதற்கு பதில் சொல்லாமல் தயங்கி நிற்க..
 “கூட்டிட்டு போகட்டும் சித்தப்பா” என்றான் அக்னி ..
 மாயா இவன்னா?  சொன்னான்  என்று  அதிர்ச்சியாகி அக்னியை  பார்க்க..
” அது எப்படிப்பா நாம”  என்று அவர் யோசிக்க..
 “நானும் பல தடவை உங்ககிட்ட கேட்டுட்டேன்,, நீங்களும் வெளியூருக்கு ரதியம்மாவை அனுப்ப சம்மதிக்கல,,  இப்போ வெளியூர்ல ட்ரீட்மென்ட் பார்க்க  ஒரு வாய்ப்பு
 கிடைச்சிருக்கு” என்று அவன் கூற..
 ஞானபிரகாஷ் அமைதியா இருக்கவும்,,..
“நான் ரதியம்மாவை நல்லா  பார்த்துப்பேன் சின்ன மாமா” என்று மறுபடியும் மாயா கேட்க..
 இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த  ஞானபிரகாஷின் மனைவி ஜானகி வாயை திறந்திருந்தார்..
” எந்த உரிமையும் இல்லாம, எப்படிமா எங்க ரதியை,  நீங்க கூட்டிட்டு போவீங்க, உங்க அப்பாவை ரதி கழுத்தில் தாலி கட்டி கூட்டிட்டு போக சொல்லு”… என்றதும்…
 மாயாக்கும் இது சரி என்றே தோன்ற..
 அவள் ஞானபிரகாஷை பார்த்தாள்..
 ஞானபிரகாஷ் மனைவியை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார்..
 அவருக்கு ரதியை மாயாவோட அனுப்ப விருப்பமில்லை கடைசி வரைக்கும் ரதி தன்னுடைய கண் முன்னாடியே  உயிரோட  இருந்தா போதும் என்று  அவர் நினைத்திருக்க..
 மனைவியை முறைத்தபடி அவர் நிற்க..
அவரை கண்டுகொள்ளாத அவரின் மனைவி..
” நான் சொன்னதை செஞ்சிட்டு ரதியை கூட்டிட்டு போங்க’ என்றாள்..
 மாயா ஞானபிரகாஷிடம் சென்று “சின்னத்தை சொல்லுற மாதிரி செஞ்சிரலாமா, சின்ன மாமா” என்று கேட்க..
 “வேண்டாமா இது சரிவராது” என்றார் ஞானபிரகாஷ்….
  ஞானபிரகாஷின் மனைவி அவர் அருகில் சென்று,..
“இன்னும் எத்தனை நாளைக்கு தான் இவளை இப்படியே பார்த்துட்டு இருக்க போறீங்க” என்று ரதியை காட்டிக் பேசியவர்..
” நீங்க கூட்டிட்டு போங்கம்மா ரதியை,  நல்லா இருக்கணும் அவ” என்றவர்..
 தன் மகனை அழைத்தவர்,,
“நீ போய் மாரியம்மன் கோவிலில் ஒரு  மஞ்சக்கயிறை  வாங்கிட்டு வா போ!”என்று அவனை விரட்டி விட..
 ஐந்து நிமிடத்தில் மாரியம்மன் கோவிலில் இருந்து மஞ்சக்கயிறை  மஞ்சள் கட்டி வாங்கி வந்திருந்தவன் அதை அவன் அம்மாவின் கையில் கொடுக்க..
 மகனிடம் இருந்து மஞ்சள் கயிறு வாங்கியவர் மாயாவின் கையில் அதை கொடுத்து,,
” இதை உங்க அப்பா கையில் கொடுத்து,  ரதி கழுத்துல  கட்டி உரிமையோடு  கூட்டிட்டு போகச் சொல்லு” என்று அவர் கூற..
 மாயா மஞ்சள் கயிறை வாங்கிக்கொண்டு  உலகநாதன் அருகில் வர..
“இதை  என்ன பண்ண சொல்லாத மாயா” என்றார்..
” ஏன்ப்பா ரதியம்மாவை நாம கூட்டிட்டு போக வேண்டாமா?”..
 “அவளை நாம கூட்டிட்டு போகலாம், அவளுக்கு குணமானவுடன் நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்,  இப்போ  வேண்டாமா அவளுக்கு நான் யாருன்னே  தெரியல,, என்னை பார்த்து திட்டுற,  அடிக்கிறா , அவ  இப்படி இருக்கும்போது எப்படிம்மா இது,,  வேண்டாமே” என்று அவர் கூற..
 மாயாவுக்கு  தந்தை சொல்வது சரி என்று தோன்ற  யோசித்தபடியே  நின்றாள்..
” உன் அப்பா  தாலி கட்டாமா  என் அத்தையே கூட்டிட்டு போக முடியாது,, அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்” என்று அக்னி கூற..
” உங்ககிட்ட யாரு இங்க பர்மிஷன் கேட்டது மிஸ்டர் அக்னி” என்றாள்  மாயா..
 “மாயாம்மா  சண்டை வேண்டாம் ரதியை நீ கூப்பிட்டு வா நாம  போகலாம்” என்று உலகநாதன் கூற.
 ஞானபிரகாஷ் மனைவியை அழைத்தவர் “ரதி கழுத்தில்  தாலி கட்டி அவங்களை  கூட்டிட்டு போகிறதா இருந்தா கூட்டிட்டு போக சொல்லு,,இல்லன்னா ரதி நம்ம கூடவே இருக்கட்டும்” என்று ஞானபிரகாஷ்  கூறி விட…
  ஞானபிரகாஷ் பேசியதை கேட்ட மாயா ,, ” அப்பா  உங்களுக்கு ரதியம்மாவை  கூட்டிட்டு போக வேண்டும்? வேண்டாமா? அப்போ  நான் சொன்னத  செய்ங்க” என்று தந்தையின் கையில் மஞ்சள் கயிறை கொடுத்தவள்..
 ரதியின் அருகில் வந்தாள்.
இங்கே நடந்த சண்டையையும், கூச்சலையும் பார்த்து பயந்து போன ரதி  அக்னியின் கையை  இறுக்கமாக பிடித்திருக்க..
” ரதிம்மா இங்கே வாங்க” என்று மாயா ரதியை  அவள் பக்கத்தில் அழைக்க,,
” நான் வரமாட்டேன் எல்லோரும் சண்டை போட்டு கத்துறீங்க அதனால நான் வரமாட்டேன் எனக்கு பயமா இருக்கு,, நான் அப்புகுட்டி கூடவே இருக்கிறேன்” என்ற ரதி அக்னியின் கையை பிடித்துக்கொள்ள..
“ரதியம்மா  உங்களுக்கு என் பாப்பா வேணுமா? வேண்டாமா?” என்று மாயா கேட்டதும்..
“வேணும்” என்று ரதி கூற..
 “அப்போ என்கிட்ட வந்தா தான் தருவேன் என்கிட்ட வாங்க” என்று ரதியை  அவள்  பக்கத்தில் அழைக்க,,..
அக்னியின் கையில் இருந்து தன் கையை எடுத்துக் கொண்டவர் மாயாவின் அருகில் செல்ல…
 அக்னிக்கு ஆச்சரியம் அது எப்படி அத்தை மாயாவின் பேச்சைக் கேட்டு அவள் பின்னே செல்கிறார் என்று பார்க்க,,
 அப்போதுதான் அவள் குழந்தை என்று எதோ சொல்லியது ஞாபகம் வர அக்னிக்கு மனம் பாரமாகி போனது..
 என்னை வளர்த்த அத்தை என் பிள்ளை வேணும் என்று மாயாவிடம் சென்றதை பார்த்து நின்றவன்..
நான் எவ்வளவு பாக்கிய சாலி, என்று தன்னை தானே தேற்றிக்கொண்டான்..
 ரதி  மாயா அருகில் வந்தவுடன், “நம்ம  கிளம்பலாமா”? என்று மாயா  கேட்டதும்,,.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!