Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன் உன்னை சேருமா 26 2

” பாப்பாவை  எப்போ  எனக்கு தருவ”?…
” இன்னும் நாலு மாசம் கழிச்சு , உங்ககிட்ட  தந்து விடுவேன்” என்றவள் உலகநாதன் அருகில் ரதியை நிற்க வைத்தவள்..


Advertisement

” ரதியம்மா உங்களுக்கு உடம்பு சரியில்ல,  அதனால அப்பா உங்க கழுத்துல எந்த கயிறை  கட்டுவாரு உங்களுக்கு குணமாகிடும், நம்ம ஊருக்கு போகலாம்,,  அப்போதான் பாப்பா  பிறக்கும் நான் உங்களுக்கு தருவேன்” என்று கூற.
ரதிக்கு மாயா சொல்வதை கேட்டும், கேட்கததாது போல் அமைதியாக நின்றாள்,, அவளுக்கு குழந்தைகள் என்றால் பிடிக்கும்,, அதற்காக மாயா சொல்வதை கேட்டு அமைதியாக இருக்க..

Advertisement

Advertisement

அனைவரும் ரதியின் பக்கத்திலும் நின்று கொண்டு   இருக்க..
 உலகநாதனின் கை நடுங்கியது.. அன்று போலவே இன்றும் தாலியை கையில் பிடித்துக் கொண்டவருக்கு, கை  கால்கலெல்லாம் நடுங்க,,  கையை மெல்ல  ரதியிடம் கொண்டு சென்றார்,,  ரதி இவரை பார்த்து முறைக்க,, அவளின் முறைப்பு இவருக்கு ஒரு தைரியத்தை தர..

Advertisement

ரதியின் கழுத்தில் அந்த மஞ்சள் கயிறை கட்டினார்..
அனைவரும் ரதியின் கழுத்தில்  தாலி ஏறியதும் கண் கலங்கி நிற்க..
 “இது தாலி மாதிரியே இருக்கே” என்றாள் ரதி..
” நீ தாலி இல்லம்மா நீங்க எங்க கூட வர்றதுக்கான உரிமை,, நீங்களும், அப்பாவும்  இவ்வளவு கஷ்டப்பட்டதுக்கு கிடைத்தபலன்,, இந்த ரதி தேவதையை   பார்த்துக்க சொல்லி கடவுள் எங்களை அனுப்பி வச்சிருக்காருமா,,”..
என்று மாயா  நெகிழ்ச்சியாகி ரதியின் கையைபிடித்து கூற…
“நீ என்னவோ சொல்லுற,,இது தாலி தான்”  என்ற ரதி.. உலகநாதன் கட்டிய மஞ்சள் கயிறை  தொட்டு பார்க்க…
 உலகநாதனுக்கு இது கனவா?,  நிஜமா?  என் ரதிக்கும்,  எனக்கும் கல்யாணம் முடிந்து விட்டதா,? இனி என் ரதி என்னோடு, என் மனைவி என்று மனதில் சொல்லிக் கொண்டவருக்கு சந்தோஷம் தாங்காமல் கண் கலங்கியது..
” அப்பா” என்று  உலக நாதனை நினைத்துக் கொண்டாள் மாயா..
 ரதி முளித்தபடியே நிற்க..
” நாங்க கிளம்புறோம்” என்று உலகநாதன் கூற..
 ஞானபிரகாஷும், அக்னியும் அமைதியாக நின்றிருந்தனர்,,
ஞானபிரகாஷின் மனைவி  “வீடு வரைக்கும் வந்துட்டு போகலாமே” மாயா என்று கூற..
 “இன்னொரு நாள் வர்ரேன் ஆண்ட்டி” என்ற  மாயா ரதியை  காரில் உட்கார வைத்து விட்டு, அவளும் ஏறிக்கொள்ள அனைவரும் காரில் ஏறிய ரதியையும், மாயாவைவும்  பார்த்தபடியே  நிற்க கார் கிளம்பியது…
 மாயா அக்னியை  திரும்பி கூட பார்க்கவில்லை,, கார் கிளம்பியதும், சீட்டில் சாய்ந்து  கண்களை  மூடிக்கொண்டாள்..
சிறிது நேரம் காரை  ஓட்டிக் கொண்டிருந்த உலகநாதன் “இப்போ எங்கம்மா போறது” என்று கேட்க..
” முதலில் ஒரு ஹாஸ்பிட்டல் போகணும் பா தலை, உடம்பு எல்லாம் வலிக்குது” என்றவள் தலையை பிடித்துக் கொள்ள..
 “சரிமா”  என்று உலகநாதன். திருநெல்வேலியில்  உள்ள, ஒரு பிரபல மகப்பேறு மருத்துவமனைக்கு மாயாவை அழைத்து வந்திருந்தார்..
 மாயாவை  செக் பண்ணிய டாக்டர் “மிகவும் சோர்வா இருக்காங்க உடனே அட்மிட் பண்ணனும்! என்று சொல்லி மாயாவை  அட்மிட் பண்ணி ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க,.
 “என்னாச்சு” என்று உலகநாதன் டாக்டரிடம் கேட்க,,..
 “அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க ட்ரிப்ஸ் ஒரு பாட்டில்  ஏத்தி முடிச்சுட்டு, நீங்க கூட்டிட்டு போகலாம்” என்றார்…
 ரதி அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டே  மாயா பக்கத்தில் அமர்ந்து அவளின் கையை பிடித்து வைத்து கொண்டவர்,, “ஊசி குத்தியது வலிக்குதா பொண்ணு” என்று கேட்க…
“இல்லம்மா வலி இல்ல,, என்னை மாயான்னு கூப்பிடுங்க,,” என்று மாயா  கூற..
 “சரி “என்று தலையாட்டி இருந்தாள் ரதி…
 சிறிது நேரத்தில் மாயாவுக்கு டிப்ஸ் ஏற்றி முடிக்க..
 டாக்டர் “உங்க ரிப்போர்ட் குடுங்க, ஒரு தடவை செக் பண்றேன்” என்று மாயாவிடம்  கேட்க.
 “என் ரிப்போர்ட் இப்ப என்கிட்ட இல்ல டாக்டர் ஊர்ல இருக்கு” என்றாள்..
 “சரிமா   உடம்பை பார்த்துக்கோங்க” என்று வழி அனுப்பி வைத்தார்..
 அன்று இரவே மூன்று பேரும் விமானத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்தனர்..
 உலகநாதன் வீட்டை பார்த்த ரதி அது பெரிய வீடாக இருக்க..
“நம்ம ரெண்டு பேரும் கண்ணாமூச்சி ஆடலாம் போலயே மாயா வீடு ரொம்ப பெருசா இருக்கு” என்று சுத்தி பார்த்துக்கொண்டே  வர..
 உலகநாதன் சிரித்துக் கொண்டார்..
 மாயா ரதியையும,  உலகநாதனையும்  வாசலிலே நிற்க  வைத்து ஆரத்தி  எடுத்தே  வீட்டினுள் விட்டாள்..
 ரதி வீட்டினுள்  வேகமாக வந்தவள்.. ஒரு  பெரிய சோபாவில் அமர்ந்து கொண்டு  “இந்த  புஸ் புஸ் சேர் நல்லா இருக்கே, புஸ் புஸ் சேர் நல்லா இருக்கு” என்று உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்து அமர்ந்து விளையாட..
 மாயாவும், உலகநாதனும் ரதியை  பார்த்து சிரித்தபடியே நிற்க..
 உலகநாதன் வீட்டில் வேலை செய்பவர்கள், ரதியின் தோற்றத்தை  ஒரு மாதிரியாக பார்த்து  நிற்க.. அந்த  பார்வையை பிடிக்காத உலகநாதன்..
 “மாயா ரதியை  கூட்டிட்டு உன் ரூமுக்கு போ” என்றார்.
 “மாயா வாங்கம்மா போலாம்” என்று அழைக்க..
“நான் வரலை நான் புஸ், புஸ் சேர்ல உர்காந்து விளையாட போறேன், நீ  போ ” என்று கூற.
 “ரதிமா வாங்க நம்ம குளிச்சிட்டு வந்து சாப்பிட்டு விளையாடலாம்” என்று மாயா கூற..
” நான்  வாரத்துக்கு ஒரு வாட்டி தான் குளிப்பேன்,, நான் குளிக்க வரல பசிக்குது,  எனக்கு சாப்பாடு கொடு” என்று ரதி கேட்க..
 “குளிச்சிட்டு வந்தா  தான் சாப்பாடு மாயா, ரதி கூட்டிட்டு போ” என்று உலகநாதன் சத்தம் போட..
 அவர் போட்ட சத்தத்தில்  பயந்து போன ரதி  மெல்ல எழுந்து கொண்டவள்  மாயாவோடு அவள் அறைக்கு  செல்ல…
 உலகநாதன்  தன் வீட்டில் வேலை செய்யும் அனைவரையும் அழைத்தவர்..
 ” நம்ம வீட்டுக்கு புதுசா வந்திருக்காங்கள அவங்க  பேரு ரதி,,  அவங்களை  நான் கல்யாணம் பண்ணி இருக்கேன், அவங்களுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல,  அதனால அப்படி இருக்காங்க எனக்கு கொடுக்கிற மரியாதை அவங்களுக்கும் கொடுக்கணும்,, இந்த வீட்டுல அவங்க தான் எல்லாமே புரிஞ்சுதா” என்று அனைவரும் பார்த்து கூற..
 “சரி, சார்  என்று தலையாட்டிக் கொண்டு அனைவரும் சென்றனர்..
 ரதியை அவர்கள் பார்த்து பார்வையில் மிகவும் கலங்கிப் போனார் உலகநாதன்..
 ரதி புது  மனுசியாக மாற்ற வேண்டும் என்று தன் மனதில் நினைத்துக் கொண்டார்….
மாயா ரதியை குளிக்க வைத்து, அவளின் புது லாங் டாப்பை ரதியை அணிய சொல்ல..
 “எனக்கு வேஷ்டி  சட்டைதான்   வேண்டும் இந்த டிரஸ் எல்லாம் நான் போட மாட்டேன்” என்று ரதி  சொல்ல..
 “என்கிட்ட  வேஷ்டி சட்டை இல்லம்மா,, நாமா நாளைக்கு வெளியில போகும் போது வாங்கிக்கலாம்,, இப்போ இதை போடுங்க”  என்று ரதியை சமாதானம் பண்ணி உடையணிய வைத்து அவளும் குளித்து விட்டு வெளியேவர….
 இவர்களுக்காக டைனிங் டேபிளில்  உலகநாதன் காத்துக் கொண்டிருந்தார்..
 மாயா ரதியை அழைத்து வந்து டைனிங் டேபிளில் உட்கார வைக்க தட்டில் உணவு பரிமாறிய, ரதியை உண்ண சொல்ல..
 “நான் அந்த புஷ் புஷ்  சேரில் போய் உட்கார்ந்து சாப்பிட போறேன்” என்று  ரதி கூற..
 “ரதிமா  சாப்பிட்டு போய் உட்காரலாம் சரியா” என்று மாயா  ரதிக்கு பார்த்து பரிமாற..
 வேகமாக உண்ட  ரதி.. சாப்பிட்டு முடித்தவுடன் அந்த சேரில்  போய் அமர்ந்து கொண்டு உட்கார்ந்து, உட்கார்ந்து எழுந்தவள்  “நல்லா இருக்கு மாயா நீயும் வா” என்று அவளை இழுக்க..
 மாயாவை ரதி  வேகமாக இழுத்ததால் அவள் கால் டீப்பாயின் மேல் இடித்து விட.. வலி தாங்க முடியாத மாயா  “ஆவென்று” சத்தம் போட..
” மாயா என்னாச்சு” என்று உலகநாதன்  அவள் அருகில் வர…
 மகள் காலை பிடித்து படியே வலியில் கலங்கி  நிற்பதை பார்த்தவர்,, “ரதி அவள் வயித்துல குழந்தை இருக்கு பார்த்து நடந்துக்கோ” என்று குரலை உயர்த்த..
” மாயா உனக்கு வலிக்குதா? ” என்று ரதி மாயா காலை தொட்டு பார்க்க..
 “எனக்கு ஒன்னும் இல்ல ரதியம்மா” என்றதும்..
” அப்போ ஏன் அந்த வளந்து கெட்டவன் என்னை திட்டுறான்” என்று உலகநாதனை பார்த்த ரதி முறைக்க..
” என்ன?  என்னசொன்னீங்க டாடியை” என்று மாயா  சிரிக்க..
 “அதான் தேவையில்லாம இவ்வளவு  வளர்ந்து இருக்கானே உங்கப்பன்,, அத தான் சொன்னேன்  வளர்ந்து கெட்டவனுன்னு”..
என்று உலகநாதனை பார்த்து ரதி முறைக்க..
உலகநாதனுக்கும் ரதி தன்னை வளந்து கெட்டவன்னு சொன்னதற்கு  மனதில்  சிரித்து கொண்டவர்,, வெளியில் ரதியின் மேல் கோபமாக இருப்பது போல காட்டிக்கொள்ள..
 “அப்பாவை அப்படி சொல்லாதீங்கம்மா”  என்று மாயா சொல்ல.
 “சும்மா என்னை திட்டுறது நிறுத்த சொல்லு,, அந்த வளந்து கெட்டவனை, இல்லன்னா குதிரை காரன் கிட்ட புடிச்சு கொடுத்திடுவேன்” என்று மிரட்ட…
 என் வீட்டுக்கு வந்து என்னையே மிரட்டுறா என் ரதி,,  என்பது போல் ரதியை  பார்க்க..
” என்ன அப்படி பாக்குறா” என்றாள் ரதி..
 “நீ என்னை குதிரை காரன் கிட்ட புடிச்சு கொடுத்தனா? நான் உன்னை வரிக்குதிரை   காரன் கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன்” என்று உலகநாதன் ரதியை  மிரட்ட..
 “ஆஆ ..ஆவென்று”  ரதி வாயை பிளந்து  உலகநாதனை பார்க்க..
 இருவரும் பேசிக் கொள்வதை பார்த்து மாயா விழுந்து விழுந்து சிரித்தாள்…
 நீண்ட நாள் கழித்து மகள் சிரிப்பதை பார்த்த உலகநாதனுக்கும் சிரிப்பு வந்தது…
 “ஏன் ரெண்டு பேரும் லூசு மாதிரி சிரிக்கிறீங்க” என்றாள் ரதி….
 “எங்க ரெண்டு பேருக்கும் தூக்கம் வருது, நாங்க  தூங்க போறோம்,, தூங்க போகும் போது, சிரிச்சா நல்லா  தூக்கம்  வருமாம்? நாங்க தூங்க போறோம்,, அதனால சிரிக்கிறோம்,, நீங்க தூங்க போறீங்க தானே  அப்போ நீங்களும் சிரிங்க”  என்று  மாயா  கூற..
“அப்படியா” என்று  கேட்ட ரதியும்  சிரித்தாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!