உணவு அவ்வளவு ருசியாக இருந்தது.. உணவு ருசியா? ரதியின் கையில் வாங்கி உண்டது ருசியா? என்று உலகநாதனுக்கு தெரியவில்லை மனம் முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்தது…
இருவரும் பேசிக் கொண்டே சாப்பிட.. உலகநாதன் கேட்டதற்கு பதில் சொல்லிய படியே. அவளும் உண்டு உலகநாதனுக்கு ஊட்டிக்கொண்டே சாப்பிட்டு முடித்தாள் ரதி..
Advertisement
உண்டு முடித்ததும் ஐஸ்கிரீம் என்று அவள் கேட்க..
Advertisement
ஐஸ்கிரீம் இருக்கும் இடத்திற்கு அவளை அழைத்துச் சென்றவர்.. அவளுக்கு பிடித்த பிளேவரில் வாங்கிக்கொண்டு அமர..
ஒரு குழந்தை சாப்பிடுவது போல், சாப்பிடும் ரதியை பார்த்து உலகநாதன் சிரிக்க..
Advertisement
“நீயும் சாப்பிடு” என்று அவரின் வாயில் திணிக்க போக.. வேண்டாம் என்று சொல்ல வாய்யை எடுத்தவரின் வாயில் ஐஸ்கிரீமை தினித்திருந்தாள் ரதி..
..
“ஏண்டி இப்படி என்னை சாப்பாடு குடுத்து டார்ச்சர் பண்ற..
நான் ஏற்கனவே நிறைய சாப்பிட்டேன்,, இதில் ஐஸ்கிரீம் வேறயா,,? வெயிட் போட்டு விடுமே” என்று அவர் புலம்ப..
அவளோ ஐஸ்கிரீம் நன்றாக இருக்க அதை சப்பு கொட்டி சாப்பிட்டு முடித்து..
“போலாம் வளர்ந்தவேன், தாங்யூ” என்று கூறியவளை.
பார்த்து முறைத்த உலகநாதன் “எதுக்கு இப்போ தாங்க்யூ சொல்ற நீ” என்று கேட்க..
“என்னை நீ இங்கே எல்லாம் கூட்டிட்டு வந்து ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கி கொடுத்து இருக்கீயே அதுக்கு தான் தாங்க்யூ சொன்னேன்”.
“நான் உனக்கு புருஷன்டா எனக்கு எதுக்கு தாங்க்யூ சொல்ற, இனி எனக்கு தாங்க்யூ சொல்லாத'”…
“மாயா தான் சொன்னா யாராவது நம்மளுக்கு ஏதாவது வாங்கி குடுத்தா தாங்க்யூ சொல்லணும்னு,, ஆனா மாயா சொல்றதுக்கு முன்னாடியே நான் எனக்கு யாரவது ஏதாவது வாங்கி குடுத்த நான் தாங்க்யூ சொல்வேன்”.என்று கூற….
“அப்ப நான் உனக்கு யாரோவா ரதி” என்று உலகநாதன் கேட்க….
சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்.. பின்பு வெட்கப்படும்போது போல் குனிந்து கொள்ள..
“சொல்லுடா நான் யாரு உனக்கு”? என்றவர்.
“
“என்னை உனக்கு பிடிக்குமா ரதி சொல்லு” என்றதும்..
ரதி குனிந்த படியே இருக்க..
“சொல்லுமா” என்றார் மீண்டும் அவள் வாயால் தன்னை பிடிக்கும் என்று சொல்கிறாளா? அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஆவலில் கூற…
அவள் பேசாமல் இருக்கவும்.. இவ்வளவு நேரம் அவள் எதிரில் அமர்ந்து இருந்தவர்..
அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டு “சொல்லு ரதி” என்றார்…
” தள்ளி போ வளர்ந்தவனே” என்றாள்..
“நீ பதில் சொல்லு நான் யார் உனக்கு?” என்று அவர் கேட்க..
ரதி அவள் புடவைக்குள் இருந்த தாலியை எடுத்துக்காட்டினாள்.. அந்த தாலியில் குங்குமமும் மல்லிகைப்பூவும் சுத்தி இருக்க
“என்ன மல்லிகை பூவும், குங்குமம் இருக்கு” என்று அவர் கேட்டார்..
“இன்னைக்கு மாயா பொண்ணு, என்னை காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு கூட்டிட்டு போய் சுமங்கலி பூஜை பண்ண சொன்னா..எதுக்கு தெரியுமா.. அவங்க அப்பா நூறு வருஷம் உயிரோட நல்லா இருக்கணுமாம்,, அதுக்குத்தான் இந்த சுமங்கலி பூஜை பண்ண சொன்னா.
என்னை டெய்லி இந்த தாலிக்கு குங்குமம் வச்சு வேண்டிக்க சொன்னா, அப்பத்தான் நீங்க நூறு வருஷம் நல்லா இருப்பீங்களாமே” என்று கூற..
மகள் தனக்காக செய்யும் ஒவ்வொரு செயலிலும், அவளின் பாசம் தெரிய நெகிழ்ந்து போனார் உலகநாதன்..
இவள் என் மகளாக கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ இறைவா என்று தோன்றியது மனதில்..
“அப்புறம் ஒன்னு சொன்னா வளர்ந்தவனே” என்றாள்..
” என்ன சொன்ன என் பொண்ணு மாயா”..என்றதும்
“அவங்க அப்பாவை நான் நல்லா பாத்துக்கனுமாம், வளர்ந்தவனே, சொல்லக்கூடதாம் மாமா, ஹஸ்பண்ட், மச்சான் ஏங்க இந்த மாதிரி மரியாதையாக கூப்பிடனுமாம்” என்று கூற…
மகள் சொல்லி குடுத்ததை தன்னிடம் அப்படியே சொல்லும் மனைவியை பார்த்து சிரித்தவர்..
“ரதி மேடம் என்ன யோசிச்சு வச்சு இருக்கீங்க? என்னை எப்படி கூப்பிடுவீங்க” என்றதும்..
யோசித்தவள் “இப்ப சொல்லவா”..
“சொல்லுடா” என்றார் உலகநாதன்..
அவள் ‘மாமா’ என்று சொல்ல நினைக்க,, ஆனால் அவள் வாயில் இருந்து வந்ததோ “உலகநாதன் மச்சான்” என்று தான் அவள் அறியாமலே அவள் வாயில் இருந்து அந்த வார்த்தைகள் வந்துவிட..
உலகநாதன் அதிர்ந்து போனார்,, பலவருடம் கழித்து அவளின் ‘மச்சான்’ என்ற அழைப்பு அவர் உயிர் வரை செல்ல..
“ரதி” என்று அவளை அணைத்துக் கொண்டார்..
ரதியோ குழம்பிப் போனாள்…
நான் மாமா தானே சொல்ல வாய் எடுத்தேன், எப்படி மச்சான் என்ற வார்த்தை என் வாயில் இருந்து வந்தது என்று யோசித்தவள்..
உலகநாதன் அணைத்ததும் அவள் உடல் சிலிர்த்தது,, இந்த அணைப்பை எப்பையோ உணர்ந்திருக்கிறோமே என்று தோன்ற ..
உலகநாதன் அணைப்பில் அடங்கிப் போனாள்..
இவ்வளவு நேரம் இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அக்னியும், பார்த்திபனும் திரும்பிக் கொண்டனர்..
ஒரு பார்ட்டி முடிந்து கீழே வந்தவர்கள் இவர்களை பார்த்ததும் நின்று விட்டனர்..
தன் அத்தையை பார்த்து அக்னி மெய்மறந்து நின்று இருக்க பார்த்திபன் தான் வாங்க சார் என்று அழைத்து போய்ச் சேரில் அமர வைத்திருந்தான்..
பார்த்திபன் அக்னியிடம் “உங்க மாமா 50 வயசுக்கு மேல லவ் பண்றாரு சார்” என்று சொல்லி சிரிக்க..
“சும்மா இருடா” என்றான் அக்னி..
அக்னியின் மனதில் அவர்கள் இருவரையும் சேர்த்து பார்த்தது மனம் நிறைந்து போனது..
அதுவும் உலகநாதன் கையோடு தன் கையை கோர்த்துக்கொண்டு சிரித்தபடியே வந்த, அத்தையை பார்த்தும்,, இதை விட வேறு என்ன வேண்டும் உனக்கு என்று அவன் மனதில் தோன்றி விட.
தூரத்தில் இருந்து ரசித்துக்கொண்டிருந்தான் அவன் அத்தையை..
உலகநாதன் அணைத்ததும் அவள் உடல் சிலிர்த்து.. அவள் காதில் “மச்சான் எனக்கு பயமா இருக்கு நமக்கு நாளைக்கு கல்யாணம் நடக்கும் தானே” என்ற ஒரு குரல் அவள் காதில் கேட்க, பயந்து போனாள் ரதி…
அவள் அமைதியாக இருக்க.
இருக்கும் இடம் கருதி உலகநாதன் அவளிடமிருந்து பிரிந்து விலகி அமர..
குழம்பி போய் அமர்ந்திருந்தவளிடம், “சாரிடா, என்றவர், “என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க”..
“ஒன்னும் இல்லை” என்றவளுக்கு உலகநாதனின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வர ஆரம்பித்தது..
அவள் அவரின் முகத்தையே உற்றுப் பார்க்க ‘”வா வீட்டுக்கு போகலாம்” என்று இருவரும் கிளம்ப..
இவர்கள் கிளம்புவதை பார்த்த அக்னி “அத்தை” என்று அழைக்க..
தனக்கு பரீட்சையமான குறலை கேட்டது ரதி,.
திரும்பிப் பார்க்க,, தன் அப்புக்குட்டி வருவதை பார்த்தவள்.
“அப்புக்குட்டி” என்று அழைத்துக்கொண்டே வேகமாக அவனிடம் செல்ல.
வேகமாக வந்தா அக்னி “அத்தை”என்று அணைத்துக்கொண்டான்.
“அப்புக்குட்டி” என்றவள் அவள் அணைப்பில் இருந்தபடியே அவனை அன்னார்ந்து பார்க்க…
” உன்னை இப்படி பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? அத்தை” என்றவன்..
அவளை “ஏய்” என்று தூக்கி சுத்த..
“டேய் போதும்டா, அப்புக்குட்டி என்னை விடு” என்றாள் ரதி..
அவளை இறக்கி விட்டவன் தன் முன் நிற்க வைத்து அவளின் தோற்றத்தை பார்த்து “ரொம்ப அழகா இருக்க அத்தை அழகா இருக்க” என்றவனுக்கு கண்ணீர் வந்துவிட்டது..
எங்கே நான் தவறினேன்..
நானும் என் அத்தையை அப்படியே அந்த கிராமத்தில் விட்டு இருக்கக் கூடாது..
சித்தப்பா சொல்லை கேட்டு இருக்க கூடாது. அத்தையை தன்னோடு அழைத்து வந்து நன்றாக பார்த்திருந்திருக்க வேண்டும் என்று மனதில் தோன்ற..
தோற்றம் முற்றிலும் மாறி தன் முன் தேவதை போல் இருந்த தன் அத்தையை பார்த்து ரசித்து சிரித்துக்கொண்டிருந்தான்…
உலகநாதன் அக்னியின் ஒவ்வொரு உணர்வுகளையும் பார்த்துக் ரசித்த படியே சற்று தள்ளி நின்று கொண்டிருந்தார்…
ரதியிடமிருந்து பிரிந்தவன் உலக நாதனை பார்த்து அணைத்துக்கொண்டான்..
“தாங்க்யூ மாமா, தாங்க்யூ மாமா” என்று அவன் பலமுறை சொல்லிக் கொண்டிருக்க..
அவரின் கையை எடுத்து தன் கண்ணில் வைத்துக் கொண்டவனின் கண்கள் கலங்கி போயிருந்தது,, “அக்னி” என்று உலகநாதன் அக்னியின் தோளை தட்டி கொடுக்க.
” தப்பு பண்ணிட்டேன் மாமா நான் தப்பு பண்ணிட்டேன் நான் என் அத்தையை நான் நல்லா பார்த்திருந்திருக்கணும், அப்படியே கிராமத்தில் விட்டுட்டேன்” என்று அவன் புலம்ப..
“அக்னி அப்படி எல்லாம் ஒன்னும் இல்லப்பா” என்று அவர் கூற வர..
“என் அத்தையை பாருங்க எப்படி இருக்காங்க பாருங்க,, கிராமத்துல இவங்க இப்படியா இருந்தாங்க,,?
நீங்க ஒரு வாரத்தில் எப்படி மாத்தி வச்சு இருக்கீங்க, நான் என் அத்தையை கிராமத்தில் எப்படி வச்சிருந்தேன், தப்பு பண்ணிட்டேன்” என்று அவன் தலையில் அடித்துக்கொண்டு தவித்து நிற்க..
“மாயா தான் ரொம்ப கஷ்டப்பட்டு ரதியை மாத்தி இருக்கா, நடந்தது நடந்து போச்சு இனி எதையும் மாத்த முடியாது,, உங்க அத்தையை பாரு நீ அழுததும் அவளும் ஒரு மாதிரி கஷ்டப்படுற,, அவளை சந்தோஷமா பார்த்துக்கணும்” என்று அவர் கூற.
உலகநாதன் சொன்னதும் தான் ரதியை பார்த்தான்..அவள் தன் அப்புக்குட்டி அழுததும் அவளுக்கும் கண் கலங்கி போயிருக்கு,
“அத்தை” என்று அவளை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான் அக்னி..
இருவரும் பேசுவதை பார்த்த உலகநாதன், என்ன மாதிரியான உறவு இது அத்தை, மருமகனின் உறவு, தாய் பாசத்தை விட அதிகமாக இருப்பது போல அவருக்கு தோன்றியது..
பார்த்திபன் உலகநாதன் அருகில் வந்து.
அக்னியும் ரதியும் பேசிக் கொள்வதை பார்த்து “இந்த மாதிரி ஒரு உறவு கிடைக்கிறது எல்லாம் வரம் இல்லையா சார்” என்று கூற..
“ஆமாம்” என்று தலையாட்டி இருந்தார் உலகநாதன்…
“மாயா மேடம் எப்படி இருக்காங்க சார்” என்று பார்த்திபன் கேட்க..
“நல்லா இருக்காளே பார்த்திபா” என்று அவர் கூற..
“குழந்தைகளை பத்தி என்ன முடிவு பண்ணி இருக்காங்கன்னு கேட்டீங்களா சார்” என்றதும்..
“குழந்தைங்களா நீ சொல்றது எனக்கு புரியல பார்த்திபா” என்றார் உலகநாதன்…
“மேம் உங்க கிட்ட எதுவும் சொல்லலையா சார்?”…
“பார்த்திபா என்கிட்ட அவ எதுவுமே சொல்லல்ல குழந்தைகளுனா, என்ன அர்த்தம் அவளுக்கு ரெட்டை குழந்தையா?” என்று அவர் கேட்க..
“அவங்க சொல்லாமா அதை நான் சொல்ல கூடாது சார் “என்று பார்த்திபன் கூற…
“ப்ளீஸ் பார்த்திபா என்கிட்ட எல்லாத்தையும் சொல்லு” என்று அவர் கூற..
“சாரி சார் நான் அக்னி சார்கிட்டயே ஒன்னும் சொல்லல உங்ககிட்ட எப்படி சொல்றது” என்று பார்த்திபன் தடுமாற..
“என் மேல ஆணை நீ மாயாவை உன் தங்கச்சியின்னு நெனச்சி இருந்தா எல்லாம் உண்மையை என்கிட்ட சொல்லு” என்று உலகநாதன் கூற….
“இது நான் உங்களுக்காக சொல்லல்ல மாயாக்காக சொல்றேன்” என்று மாயாவை பற்றி அவனுக்கு தெரிந்ததை உலகநாதனிடம் கூறி முடிக்க…..
இனி என்னவெல்லாம் தன் மகள் அனுபவிக்க போகிறாளோ என்று வருத்தப்பட்டவர்,, பார்த்திபன் கூறியது அக்னியிடம் சொல்ல போக..
“வேண்டாம் சார் நான் சொன்னதை அக்னிக்கு தெரிஞ்சா, மேம் என்னை கொன்னுடுவாங்க..
உங்ககிட்ட சொன்னதே மேம் இன்னும் ஒரு முடிவு எடுக்காம இருக்காங்க அதனால தான்,, உங்ககிட்ட இப்ப நான் சொன்னேன்,, அக்னியிடம் சொல்ல வேண்டாம்..
அக்னிக்கு விஷயம் தெரிந்தால்.. மாயா தான் முக்கியமுன்னு குழந்தைகளை அழிச்சிடுவார் என்று அவன் கூற…
“இதுக்கு என்னதான் வழி பார்த்திபா”என்று கூற.
“மேம் நம்பிக்கையோடு இருக்காங்க சார் எல்லாமே நல்லபடியா நடக்கும்” என்றான் பார்த்திபன்..
அக்னியிடம் வர்ரோம் என்று சொல்லிக் விட்டு ரதியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்திருந்தார் உலகநாதன்…