Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன் உன்னை  சேருமா 28

என் ஜீவன் உன்னை  சேருமா
  அத்தியாயம் -28


Advertisement

Advertisement

Advertisement

   உலகநாதன் “ரதி டீச்சர்” என்றதும்..
 அவரை   முறைத்த பார்த்த  ரதி அமைதியாக உண்ண.

Advertisement

 தனது உணவு தட்டை எடுத்துக் கொண்டு  ரதி அருகில் வந்து அமர்ந்து கொண்டார் உலகநாதன்..
 ரதி அமைதியாக உணவை உண்ண முடியாமல் உண்டு கொண்டிருக்க.
 “ரதி டீச்சர் என்ன கோபம்”என்றார் அவளை பார்த்தபடியே..
” நான் டீச்சர் இல்லை  என்னை  டீச்சர் சொல்லாத”…
” ஏய் நீ டீச்சர் தாண்டி  அதான் கூப்பிட்டேன்”..
” நான் ஒன்னும் டீச்சர் இல்லை என்னை அப்படி கூப்பிடாத” என்றாள் ரதி கோபமாக..
” ஏண்டி என்னாச்சு” என்ற உலகநாதன் அவள் முகம் வாடி போயிருக்க ரதியின்  முகத்தை தன் முன் இழுத்துக்  தன்னை பார்க்க வைத்தவர்  “என்னாச்சு டி?” என்று கேட்க..
” என்னை கேலி பண்ணுறியா? ” என்று ரதி கேட்க..
 “இல்லடா”…என்றதும்..
“அப்போ என்னை குச்சி வச்சி அடிக்க போறியா? ” என்றாள்…
” ஏய் யாருடா  உன்னை அடிச்சா? “.
” எங்க ஊர்ல ரெண்டு பசங்க இருக்காங்க, என்னை எப்பவுமே டீச்சர், டீச்சர் என்று சொல்லி கேலி பண்ணுவாங்க..
நான் அவங்களை திட்டுனா என்னை  கம்பை வச்சு  அடிச்சுட்டாங்க,  அது அப்புகுட்டிக்கு தெரிஞ்சு,,
 அப்பகுட்டி என் கையில் கம்பை குடுத்து அவங்களை  அடிக்க வச்சான்..
 நான் ஒரு அடி தான் அடிச்சேன் பாவம்ன்னு  விட்டுட்டேன்,,  என்னை டீச்சர் என்று கூப்பிடாத! எனக்கு பிடிக்காது” என்றாள்..
 உலகநாதனுக்கு அவர்களின்  மேல் கோபம் வந்தாலும்,
 இனி  நடந்ததை மாத்த முடியாது ரதியை  இதிலிருந்து வெளியே கொண்டு வரணும் என்று நினைத்தவர்…
“அந்த பசங்க உன்னை கேலி பண்ண டீச்சருன்னு  கூப்பிட்டாங்க… ஆனா நான் அப்படி இல்லடா,, என்  ரதி டீச்சர்டா நீ”.. என்றவர்..
 “டீச்சர் குச்சியெல்லாம் வச்சிருக்கியா என்னை  அடிப்பீயா?” என்று அவளை கேலி பேச..
“என்கிட்ட  குச்சி ஒன்னும் இல்லையே” என்றவளின்.
தோளில் கைபோட்டு  தன்னோடு  தன் பக்கத்தில்  இழுத்துக்கொண்டவர்..
 அவளிடம் மெதுவாக “ஏண்டி மாயா கிட்ட நான் பேட் சட் பண்ணேன்னு  சொன்னா?”..
” நீ பேட் டச் பண்ண தானே? “..
 “ஐயோ” என்றவர்..
” நான் டச் பண்ணா  அது பேட் டச் இல்லடி,,   நாம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி அது  புரியுதா உனக்கு”..
 “அப்போ புருஷன் டச் பண்ணா அது  பேட் சட் இல்லையா?!”.. என்றவளிடம் ..
 இவளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என்றே  தெரியவில்லை    உலகநாதனுக்கு..
“ரதி,  ரதி நான் உன் புருஷன்டி. உன் கழுத்துல தாலி கட்டியிருக்கேன்  பாரு,, நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு”..
 “எனக்கு  தான் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சே”.
 “என்னது கல்யாணம் ஆயிடுச்சா?”என்றவர்..
” சரி உன் புருஷன் யாருன்னு சொல்லு பாப்போம்” என்றதும்..
“என் புருஷன் உலகநாதன்,உலகம்” என்றாள்.
 “அடியே அது நான் தாண்டி உலகம் உன் உலகநாதன்” என்று கூற..
 “உங்க பேரும் உலகநாதனா” என்று அவள்  முதலில் இருந்து ஆரம்பிக்க…
 “ஆமாண்டா ரதி,, நான் தான்டா உன் உலகம், நான் தான் உனக்கு தாலி கட்டினேன்.”..
“அப்போ தாலி கட்டிட்டு  என்னை விட்டுட்டு போயிட்டியா” என்று கேட்க..
 “நான் எங்கேயும் போகலடி,  இங்கே தாண்டி இருக்கேன்,, உனக்கு தாண்டி பழசு எல்லாம் மறந்து போச்சு” என்று உலகநாதன் கூற..
 “அப்படியா” என்பது போல் ரதி உலகநாதனை பார்க்க….
” ஆமாம்  நான் தான் உன் புருஷன் நான் உன்னை டச் பண்ணா அது பேட் டச் ஆகாது,, புரியுதா” என்று மீண்டும்  கூற..
“உம்ம்”,… என்று தலையாட்டியவள்..
  “அது  மாயா தான் சொன்னா யாரவது பேட் டச் பண்ணா என்கிட்ட சொல்லனு முன்னு அதான் சொன்னேன்”…
” இனி யாரும் உன்னை பேட் டச் பண்ண மாட்டாங்கடா,,  இனி நான் உன்னை டச் பண்ணா அது பேட் டச் இல்ல புரியுதா”  என்றதும்..
“உம்ம்,,”.. என்றாள் ரதி..
 ரதி சரியாக சாப்பிடாமல் உணவை  அளந்து கொண்டே இருக்க..
 “என்னாச்சுடா   சாப்பாடு பிடிக்கலையா உனக்கு” என்றதும்..
 “பிடிக்கல” என்று  ரதி கூற..
“சரி வா வெளியில் போய்  சாப்பிடலாம்” என்று அவளை அழைக்க..
 “நம்ம வெளிய போய் சாப்பிட போறோமா?! ” என்று குஷியானவள்.
“ஆமாடா வெளியில  போய் சாப்பிடலாம்”…
“அப்போ எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தருவியா” என்று  ரதி கேட்க..
 “கண்டிப்பா வாங்கி தரேன், வாடா” என்றார்…
“அப்போ மாயா பொண்ணு”?..
 “கூட்டிட்டு போகலாம்” என்றவர்..
மாயாவின்  அறைக்கதவை தட்ட “உள்ளே  வாங்கப்பா” என்றாள்  மாயா,..
 “மாயா நாங்க வெளியே போறோம் நீயும் வர்ரீயா ஐஸ்கிரீம் சாப்பிட்டு வரலாம்” என்று அழைக்க ..
 “எனக்கு உடம்பு முடியலப்பா நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க” என்று கூற..
“மாயா பொண்ணு நீயும் வா” என்று ரதி அழைக்க..
 “இல்லம்மா இன்னொரு நாளைக்கு போகலாம். நாம காலையில கோவிலுக்கு போயிட்டு வந்ததே  எனக்கு டயர்டா இருக்கு”.. என்று அவள் இடுப்பை பிடித்தபடியே  கட்டிலில் சாய்ந்து கொள்ள..
 “சரிடா  நீ ரெஸ்ட் எடு” என்று ரதியை  அழைத்துக் கொண்டு கிளம்பினார்  உலகநாதன்..
 உலகநாதன் எப்போதும்  கார் ஓட்டினாலும்  ரதியும்,மாயாவும் பின்னாடி அமர்ந்து  வருவார்கள்..
 இன்று ரதி மட்டும் இருக்க.. அவளை  முன்சீட்டில் ஏறி அமர சொன்னவர்,  அவர்  சென்று கார் எடுக்க..
இரவு நேரம், சில்லென்று காற்று ரதி பக்கத்தில் இருக்க அவளை பார்த்துக்கொண்டே காரோட்டினார்  உலகநாதன்….
 எத்தனை நாள் நினைத்து இருப்பார் ரதியுடன்  காரில் செல்ல வேண்டும் என்று..
 அது இன்று நிறைவேற அதை ரசித்துக்கொண்டே மெதுவாக கார் ஓட்டிக்கொண்டிருந்தவர்…
 ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் முன் காரை நிப்பாட்ட..
 “இது என்ன இவ்வளவு  பெருசா இருக்கு” என்று கேட்க..
 “இது பைவ் ஸ்டார் ஹோட்டல் டா உனக்கு புடிச்சிருக்கா வா உள்ள” என்று அவளை கைபிடித்து  அழைத்துச் செல்ல ..
 உலகநாதன் கையோடு தன் கையை கோர்த்துக் கொண்டவள் சுத்தி  முத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டே வர..
 ஹோட்டலின்  முன் பகுதி பார்க் போல அமைந்து இருக்க, பார்க்க அழகாக இருந்து,, ஹோட்டலின் ஓரத்தில்  சின்னதாக நீர்வீழ்ச்சி போல் அமைத்திருக்க, சில்லென்று   காற்று வீச,, வண்ண வண்ண விளக்குகள் கொண்டு அலங்காரம் பண்ணி இருந்த அந்த ஹோட்டலின் பளபளப்பே  அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது..
 புடவை கட்டிகொண்டு  அவளுக்கு அந்த ஹோட்டலின் நடப்பதற்க்கு சிரமமாக இருக்க,, தரை வழுக்குவது போல தெரிந்ததும்  உலகநாதனின் கையை  இறுக்கமாக  பிடித்துக் கொண்டு நடந்துவர..
“என்னாச்சு ரதி” என்றார்..,,
“இந்த   தரை வழுக்குது” என்று கூற….
“நல்லா புடிச்சுக்கோ” என்றவர்..
 அவர் இங்கே வரும்  முன்பே இடத்தை புக் பண்ணி இருக்க..
 அந்த இடத்திற்கு ரதியை  அழைத்துக்  கொண்டு சென்றார்…
 இருவரும் அமர்ந்ததும்.. உலகநாதன் மெனு கார்டை எடுத்து ரதியிடம் தர..
“என்ன?”  என்பது போல் அதை திருப்பி திருப்பி பார்த்தவள்.
 உலகநாதனிடம்  தந்து விட..
 “உனக்கு பிடிச்சதை  ஆர்டர் பண்ணுடா ரதி ” என்று கூற..
” இதுல இருக்குறது எனக்கு ஒண்ணுமே  தெரியலையே” என்றவளை…
 “சரி வாடா” என்று செல்ஃப்  சர்வீஸ் இடம் நோக்கி அழைத்துச் சென்றார்..
 அங்கே வகை வகையான உணவுகள் சூடான பாத்திரத்தில் மூடி வைத்திருக்க.. அங்கே ரதியை  அழைத்து வந்தவர் ரதியின் கையில் ஒரு பிளேட்டை கொடுத்து.. “உனக்கு என்ன பிடிக்குமோ எடுத்துக்கோடா  என்று கூற..
 ரதி அவளுக்கு பிடித்தமான  உணவை  அளவாக எடுத்துக்கொண்டு  வந்து சேரில் அமர..
 “போதுமாடா உனக்கு”.
” போதும் வளர்ந்தவனே” என்றவள்…
 “நீங்க சாப்பிடலையா” என்று கேட்க..
” நான் வீட்டிலேயே சாப்பிட்டேன் டா நீ சாப்பிடு”…
 அவளுக்கு தனியாக சாப்பிட பிடிக்காமல் “நீயும் கொஞ்சம் சாப்பிடு” என்று  உலகநாதனின் வாய்யருகே உணவை ரதி நீட்ட”..
 “நீ சாப்பிடுமா” என்று அவர் கூற..
” நீ கொஞ்சம் சாப்பிடு” என்ற ரதி   அவர்  வாய் அருகே உணவைக்  கொண்டு செல்ல…
 வேண்டாம் என்று சொல்ல மனம் வராமல் உலகநாதன் ரதியை பார்க்க… “கொஞ்சம் சாப்பிடேன்” என்று அவள் கெஞ்சிய பார்வையில்,,
 சொக்கி போனவர் வாய் தானாக விறிய,, அவர் வாயில் உணவை திணித்திருந்தாள்  ரதி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!