Skip to content
Post Views: 1,171
அக்னி தன் இரண்டு கைகளையும் மாயாவை சற்றி வளைத்துக் அணைத்து வைத்துக் கொண்டவன்.. குழந்தையிடம் பேச ஆரம்பித்தான்..
” அம்மா பாவம்டா அவள ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க நீங்க பிறக்கிறதுக்கு முன்னாடியே உங்க மேல எவ்வளவு பாசம் வச்சிருக்க..
நீங்க பிறந்தா சொல்லவா வேணும் உங்களை நல்லா பாத்துக்குவா அம்மாவை தொந்தரவு பண்ணக்கூடாது சரியா” என்றவன் மாயாவின் ஆடையை சரி பண்ணி விட்டவன்,, மீண்டும் தன் பிள்ளைகளுக்கு முத்தம் வைத்தவன்,, எழுந்து கொண்டு மாயாவின் உச்சன் தலையில் முத்தமிட்டவன் ” உடம்ப பாத்துக்கோ தூங்கு நான் ஹாஸ்பெட்டல் போயிட்டு வர்ரேன்” என்றவன் உலகநாதனை அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டான்…
Advertisement
டாக்டர் மாயா பற்றி சொல்லியதை அனைத்தையும் கேட்டவன்.. “சரி டாக்டர் நான் மாயா கிட்ட பேசிட்டு வரேன்” என்று டாக்டரிடம் சொல்லிவிட்டு வெளியே கிளம்ப.
Advertisement
“என்ன பண்ணலாம் அக்னி” என்று உலகநாதன் கேட்டதும்,
Advertisement
“வேற டாக்டர் கிட்ட பேசலாம் மாமா” என்றவன்..
Advertisement
அவனுக்கு தெரிந்த இரண்டு மூன்று டாக்டரிடம் மாயாவின் ரிப்போர்ட்டை காட்டி அபிப்ராயம் கேட்க,, அனைவரும் ஒன்று போல் முதல் டாக்டர் சொன்ன மாதிரி, மாயாவால் மூணுகுழந்தையை பெத்துக்கிறது கஷ்டம் என்று சொல்ல..
உலகநாதன் அக்னியும் பயந்து போனார்கள்..
மாயாவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ இல்ல குழந்தைக்கு ஏதாவது ஆகிடுமோ என்று இருவரும் பயப்பட..
உலகநாதன் அழுதே விட்டார் “என்னால முடியல எல்லா டாக்டரும் ஒரே மாதிரி தான் சொல்றாங்க மாயாவும் கேட்க மாட்டேங்கிறா, எனக்கு என் பொண்ணு வேணும் அக்னி அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது” என்று கண்கலங்கி வாறே உலகநாதன் பேச..
“மாமா பயப்படாதீங்க ஒருத்தனுக்கு கேன்சர் அவன் செத்து போயிடுவான்னு சொல்லி டாக்டர் ஆப்ரேஷன் பண்ணி அவன் பல வருஷம் உயிரோடு வாழ்ந்து இருக்கான்.
ஒருத்தன் சின்ன கட்டியின்னு ஆபரேஷன பண்ணி பயத்துல செத்தே போயிருக்கான் அதனால எதுக்கும் பயப்பட கூடாது.
மாயாவுக்கு தைரியம் சொல்ல வேண்டிய நீங்களே அழுதா அவ பயப்பட மாட்டாளா? டாக்டர் இது மாதிரி நடந்து விடும், அது மாதிரி நடந்துரும் இப்படித்தான் சொன்னாங்களே தவிர,, கன்ஃபார்மா மாயாவுக்கு இப்படி ஆகும், பிள்ளைகளுக்கு கஷ்டம்னு சொல்லல்ல தானே,, நாம எல்லாத்தையுமே பாசிட்டிவாவே நினைப்போமே,, நல்ல டாக்டரா பார்க்கலாமா கவலைப்படாதீங்க மாமா” என்று அக்னி பேசியதும் தான் நிம்மதி ஆனா உலகநாதன் “
“மாயாவுக்கு ஒன்னும் ஆகாதுல” என்றதும்..
“என் பொண்டாட்டிக்கு எதுவும் ஆகா நான் விடமாட்டேன்” என்றவன்,.. ” அப்புறம் நான் மாயா கூட உங்க வீட்ல இருக்கலாமா? “..
” இது என்ன கேள்வி, அது நம்ம வீடு அக்னி நீங்க எப்பையுமே , தங்கிக்கலாம், பர்மிஷன் எல்லாம் கேட்கக்கூடாது” என்று உலகநாதன் கூறிவிட.
இருவரும் பேசி “ஒரு நல்ல டாக்டரை பார்க்கலாம்” என்று முடிவு எடுத்துவிட்டு வீட்டுக்கு வர..
உலகநாதன் வீட்டு ஹாலில் நான்கு பெண்களும் சிரித்து பேசியபடி அமர்ந்திருக்க..
இதை பார்த்த இரு ஆண்களுக்கும் இருந்த கவலை எங்கேயோ போய்விட்டது போல உணர்ந்தார்கள்,.
அவரவர் துணையோடு சென்று அமர்ந்து கொள்ள..
“என்ன சொன்னாங்க டாக்டர்” என்று பார்வதி பேச்சை ஆரம்பிக்க.
“எல்லாம் நல்லபடியா தான் சொன்னாங்க அம்மா,, மாயாவுக்கு குழந்தைகளை சுமக்குறது தான் கஷ்டம் மத்தபடி ஒரு பிரச்சனையும் இல்லை,,
மாயாவை நல்லபடியா பார்த்துக்கணும் அவ்வளவுதான்” என்று பேச்சை முடித்துக்கொண்டான்..
மாயா தந்தையின் முகத்தை பார்க்க அவர் முகத்திலும் ஒரு நிம்மதி தெரிய அப்பாட என்று நிம்மதி கொண்டாள்.
இரவு உணவை அனைவரும் உலகநாதன் வீட்டிலேயே முடித்துக் கொண்டு கிளம்ப..
பார்வதி மாயாவை பார்த்து “நம்ம வீட்டுக்கு வர்றீயாடா” என்று கேட்க..
” இன்னொரு நாளைக்கு வர்ரேன் அத்தை” என்று அவரிடம் கூறினாள்..
நிலாவும், பார்வதியும் மாயாவிடம் சொல்லிவிட்டு கிளம்ப..
அக்னி எதுவும் மாயாவிடம் சொல்லவில்லை வேகமாக சென்றவன் கார் எடுக்க..
இவன் என்ன இவ்வளவு வேகமாக போறான் ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லிட்டு போனா என்ன? போடா போ.. உன்னை யார் இங்க எதிர்பார்த்தா போ என்று மாயா ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து கொண்டு
டி, வியில் சத்தமாக பாட்டு போட்டுக் விட்டு அமர்ந்து விட்டாள்,..
டிவியின் பாட்டு சத்தத்தை வைத்தே மகள் கோபமாக இருக்கிறாள் என்று உணர்ந்த உலகநாதன்..
“மாயா தூங்க போ ” என்றதும்..
“பகல்ல தூங்கிட்டேன் டாடி,, கொஞ்ச நேரம் டிவி பார்க்கிறேன்” என்றவள் டிவி பார்த்த படியே அமர்ந்திருக்க..
அவளோடு ரதியும் சேர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க,, “வா” என்று அழைத்தார் உலகநாதன் ரதியை..
“நான் வரமாட்டேன்” என்பது போல் ரதி தலையாட்ட அவளை பிடித்து இழுத்துக்கொண்டு அவர் அறைக்கு சென்றார் உலகநாதன்…
“ஏன் என்னை இழுத்துட்டு வந்தீங்க” என்று ரதி கோபமாக பேச…
“இதுக்குத் தான்” என்று அவளுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரை கொடுத்துவிட்டு அவளை அணைத்த படியே “தூங்கு” என்று சொல்ல..
அவரை முறைத்தபடியே தூங்கினாள் ரதி..
அக்னி வருவான் என்று தெரிந்தே மகளை தனியே விட்டு ரூம் வந்தார் உலகநாதன்…
அக்னி அம்மாவையும், தங்கையும் வீட்டில் விட்டவன் சிறிது நேரத்தில் அவன் உடைகளை எடுத்துக் கொண்டு உலகநாதன் வீட்டிற்க்கு வந்து நிற்க..
என்ன இவர் இப்பத்தானே போனார்,. அதுக்குள்ள வந்துட்டார் என்றவள், அவன் கையில் இருந்த ட்ராலி பேக்கை பார்க்க..
அவனோ அவனின் ட்ராலி பேக்கை எடுத்துக்கொண்டு மாயாவின் அறைக்கு சென்று வைத்து விட்டு வந்தவன்..
மாயா அருகில் அமர்ந்து கொண்டு “ஹாய் பொண்டாட்டி தூங்கலையா? ” என்று கேட்க..
“நீங்க என்ன இங்கே வந்து இருக்கீங்க, உங்க வீட்டுக்கு போகலையா? ” என்று மாயா கேட்க..
“இதுவும் என் வீடுதான் என் மாமனார் சொல்லிட்டார்..இது நம்ம வீடு மாப்பிள்ளை நீங்க எவ்வளவு நாள் வேணாலும் இங்கு இருக்கலாம்.. உங்களுக்கு இல்லாத உரிமையான்னு, என் மாமனார் சொல்லிட்டார்..
“என்ன திடீர்னு நேத்து உங்க வீட்டுக்கு வா என்னை கூப்பிட்டீங்க, இப்ப இங்க வந்து தங்குறீங்க என்ன விஷயம்?” என்றாள்..
“அது என் பொண்டாட்டி மாசமா இருக்கா அவளுக்கு ஹெல்ப் பண்ண கூட இருக்கலாமுன்னு வந்தேன்”..
“உங்க ஹெல்ப் ஒன்னும் எனக்கு தேவை இல்லை நீங்க கிளம்பலாம்” என்றாள் மாயா.
“ஐயோ நீ என்னை போன்னு சொன்னா, எனக்கு போக இடமில்லை நான் எங்கே போவேன் மாயா,, எனக்கு என் பொண்டாட்டி இருக்கிற இடம் தான் சொர்க்கம்” என்று வீடு இல்லாதவன் போல் பேசி நடிக்க..
” ஓவரா நடிக்காதீங்க அக்னி சார், ஏதோ எனக்கு குழந்தை விஷயத்துல சாதகமாக பேசுனீங்கன்னு கொஞ்சம் இடம் கொடுத்தா, இடுப்புல ஏறி உட்கார பாக்குறீங்களா? ” என்று அவள் கேட்க..
“நான் உன் இடுப்புல ஏறி உட்கார முடியாது மாயா டார்லிங்,,என் பிள்ளைகள் வேணா உன் இடுப்புல உட்கார்ந்துட்டு விளையாடலாம்..
நீ வேணா என் இடுப்பில் உட்கார்ந்துகோ நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் டார்லிங்” என்று அவளிடம் வம்பு பேச..
“ரொம்ப ஆசை தான்” என்றவள் “ஆமாம் அது என்ன புதுசா டார்லிங்” என்றாள்.
“இன்னும் புதுசா நிறைய இருக்கு சொல்லட்டுமா” என்று அவன் கேட்க..
” ஒன்னும் வேண்டாம் நீங்க கிளம்பளாம்” என்றவள் டிவியை ஆஃப் பண்ணிவிட்டு கிளம்புங்க”.
என்று சொல்ல.
அவன் கிளம்புவது போல் தெரியவில்லை,, நீ பாட்டுக்கு நில்லு என்றவள்.. அவள் வீட்டின் கதவை அனைத்தும் சாத்தி விட்டு, லைட் ஆப் பண்ணிட்டு அவள் அறைக்கு வர..
அவள் பின்னாடி அவளோடு அவள் அறைக்கு வந்தவனை,
மாயா என்ன என்பது போல அவனைப் பார்க்க..
“இனிமே இது தான் என்னுடைய ரூம்” என்றான்..
“ரொம்ப ஆசைதான் உங்களுக்கு, பக்கத்து ரூம் கெஸ்ட் ரூம் அங்க போய் தங்கிகோங்க”…என்றாள்..
“நான் உன்கூட தான் இருக்க வந்தேன், உன்னை தனியா விட முடியல புரிஞ்சுக்கோ”..
“ஒரே ரூம்ல இருக்கிற அளவுக்கு என் மனசு இன்னும் மாறல நீங்க பக்கத்து ரூமுக்கு போங்க “.
“பக்கத்து ரூம்புக்கு போய் தங்குறதுக்கு நான் ஒன்னும் கெஸ்ட் கிடையாது உன் புருஷன்”.. என்றவன்..
அவனின் ஆடைகளை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றான்…
ஓவரா தான் பண்றான் இவன் என்று அவனை பார்த்துக் கொண்டிருக்க.. குளித்து உடை மாற்றி வந்தவன், மாயாவின் கட்டிலில் ஒய்யாரமாக படுத்துக்கொள்ள..
மாயா சிறிது நேரம் அந்த ரூம்பில் நடந்தவள், கட்டிலில் வந்து படுக்க…
அவள் படுத்ததும், அவள் பக்கம் திரும்பி படுத்தவன்,,.
” நான் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா”..
” உம்ம்.. கேளுங்க” என்றாள் மாயா..
” உன் உயிரை விட குழந்தைகள் உயிர் பெரிசா” என்றான்..
அவள் “ஆமாம்’ என்று தலையாட்ட,..
ஏன் என்பது போல அவளை பார்க்க?..
அது உன் ரத்தமடா, என் உயிருடா அதை எப்படி தான் அழிப்பேன் என்று சொல்ல வாய் வந்தவளுக்கு வாயால் சொல்ல முடியவில்லை, அவன் கண்ணை பார்த்து அவள் பேச,, அவளின் கண்ணில் என்ன இருந்ததோ அது அவனுக்கு புரிந்துவிட….
சிறிது நேரம் இருவரும் மௌனமாக இருக்க….
அக்னி தன் தலையின் மேல் கையை வைத்து படுத்துக் கொண்டவன், மாயாவை பார்த்து “தூங்கு” என்றான்..
“தூக்கம் வரலை” என்றவள்.. உடலை நெளித்தபடியே படுத்துக் கொண்டிருக்க, ” என்ன ஆச்சு” என்றான்..
” உடம்பெல்லாம் வலிக்குது” என்றாள். உடனே எழுந்தவன் அவள் தோள்களை மெல்ல பிடித்து விட..
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்”.. என்றாள் மாயா.
“நீ வேற,, சும்மா இரு நான் உலகநாதன் வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்து ரெண்டு நாள் ஆச்சு நீ என்ன சொன்னாலும் நான் செய்வேன்”..
என்றவன் அவளின் தோள்களை மெதுவாக மீண்டும் பிடித்து விட..
“என்னது வாக்கப்பட்டு வந்தீங்களா” என்றவள் சிரிக்க,.
“ஆமாம்” என்றான்..
மாயாவுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை, அவன் உலகநாதன் வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்தேன், என்று சொன்னதை நினைத்து சிரித்தாள்,, அவன் ஏதோ வீட்டுக்கு வந்த மருமகள் போல பேச.. இவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை..
மகளின் சிரிப்பு சத்தத்தை கேட்டு வெளியே வந்த உலகம்…
மாயாவும் அக்னியும், பேசி சிரிப்பதை கேட்டுக்கொண்டே அவர் அறைக்கு நிம்மதியாக சென்றார்..
மாயாவுக்கு அவள் எப்போது தூங்கினாள் என்று கூட தெரியவில்லை, அவளை பேசி பேசி சிரிக்க வைத்துக் கொண்டே தூங்க வைத்திருந்தான்,,..
தன் கையில் அவள் முகத்தை வைத்து தூங்கிக் கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு, தெரிந்தது அவள் தன்னை எவ்வளவு தேடி இருக்கிறாள் என்று .
இனி ஒரு நிமிடம் கூட உன்னை பிரிய மாட்டேன் செல்லமே என்று அவள் உச்சி முகர்ந்தான் அக்னி..
error: Content is protected !!