Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என்  ஜீவன் உன்னை சேருமா 32 1

என்  ஜீவன் உன்னை சேருமா

அத்தியாயம் -32



Advertisement

Advertisement

  அக்னி  மாயாவை அணைத்து படியே தூங்கிக் கொண்டிருந்தான்..

Advertisement

 மாயாவுக்கு மெல்ல விழிப்பு வர..

 எழுந்து  கொள்ள பார்த்தவளுக்கு,, அவளால்   எழ  முடியவில்லை..

Advertisement

 அவளை  அணைத்த படியே தூங்கிக் கொண்டிருந்தவனை, பார்த்தவளுக்கு,,  இவனுக்கு கொஞ்சம் இடம் கொடுத்தா,  இன்னும் ஓவரா பண்றான்,  படுக்க இடம் கொடுத்ததே பெரிய விஷயம், இதில் கட்டிவேற பிடிச்சு  தூங்குறானா, இவனை என்று  கோபப்பட்டவள்..

 அவனிடமிருந்து மெல்ல   தன் உடலை அசைத்தாள் மாயா,..

 அக்னி இன்னும் அவளை இறுக்கமாக அணைத்த படி தூங்க..

 இவன் சரிப்பட்டு வரமாட்டான் என்றவள்,, மெல்ல உடலை மெல்ல நெளித்து மேலே வந்தவள், அவன் கன்னத்தை பிடித்து கடித்து வைத்திருந்தாள்..

 “ஆ ” வென்று அலறிய படியே எழுந்தான்  அக்னி..

 அக்னியின் அலறல் சத்தம் கேட்டு மாயாவின்  அறைக்கதவை திறந்து கொண்டு வந்த ரதி..

” என்னாச்சு மாயா” என்று அவள் வந்து  பார்க்க, அக்னி கன்னத்தை பிடித்தபடியே அமர்ந்திருப்பதை பார்த்தவள்..

 “அப்புக்குட்டி நீ எப்ப வந்த”?.

 “நான் நைட்டே வந்துட்டேன் அத்தை “…

“ஏன் என்னை வந்து பார்க்க வரல”.

 “அது ஒன்னும் இல்லத்தை,,  மாயாவுக்கு தனியா படுத்த பயமா இருக்குன்னு சொன்னா அதான் இங்கே  வந்தேன்” என்றான் மாயாவை பார்த்தபடியே..

 அவளோ அவனை முறைத்தபடியே  ஓய்வறைக்கு சென்றாள்..

 ரதி அக்னியை வெளியே அழைத்து  வந்து, அவனுக்கு குடிக்க காபி கொடுக்க

..

 அதை அவன் குடித்துக்  கொண்டிருந்தான்..

 மாயா வெளிய வரவும்..  அவள் கையில் பாலை எடுத்து  ரதி கொடுக்க..

” நீங்க எதுக்குமா கஷ்டப்படுறீங்க, நான் போய் எடுத்துக்க மாட்டேனா?”  என்றவள்  அதை வாங்கி பருக..

 உலகநாதன் “குட் மார்னிங் மாயாமா,  குட் மார்னிங் அக்னி” என்று அவர்கள் பக்கத்தில் வந்து அமர..

 “உங்களுக்கு காபி  பா ” என்றாள் மாயா..

” நானும் ரதியும் அப்பவே  குடிச்சிட்டோம், டா ” என்றார்..

 பார்வதி காலையில் நிலாவை  அழைத்துக் கொண்டு வந்திருந்தார் கையில் பெரிய பேக்கும், பெரிய சைஸ் கேரியரும் இருக்க என்னவென்று கேட்டாள் மாயா.

 “நீதான சொன்ன எனக்கு புளிப்பா   ஏதாவது சாப்பிடணும் போல இருக்குன்னு,, அதான் காலையிலேயே எழுந்து உனக்கு புளியோதரையும், மாங்கா ஊருகாயும்,  அப்புறம்  கத்திரிக்காய் தொக்கு வைத்து எடுத்துட்டு வந்தேன், வா மாயா வந்து  சாப்பிடுவா”  என்று பார்வதி அழைக்க..

 “அதைவிட என்ன  பெரிய வேலை”  என்றவள்..

 தட்டு நிறைய  பார்வதி  பரிமாறி கொடுத்த உணவை,  நன்றாக கால் நீட்டி சோபாவில்  உட்கார்ந்து கொண்டு உண்டு கொண்டு இருந்தாள்..

 அவள் உண்டு கொண்டிருப்பதை அனைவரும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர் ..

 யார் பார்த்தா எனக்கு என்ன? எனக்கு சோறுதான் முக்கியம் என்பது போல்  மாயா உண்டு கொண்டிருந்தாள்..

 நிலா, சோர்ந்து போய் சோபாவில்  படுத்திருக்க,,அதை பார்த்து உலகநாதன்..

 “ஏன் மா  நிலாவை  ரொம்ப கஷ்டப்படுத்துறீங்க” என்றவர் நிலாவை  கெஸ்ட் ரூம் அழைத்து செல்ல கூற,  அக்னி நிலாவை அழைத்துச் சென்றான்..

 ரதியும் கூட   சென்று நிலாவை  படுக்க வைத்து விட்டு வந்தாள்..

 பார்வதியும் என்ன தான்  செய்வார்.. அவருக்கு மாயாவும் முக்கியம் நிலாவும் முக்கியம் இவ்வளவு நாளாக  நிலாவை பார்த்துவிட்டோம்,, இனி  மாயாவையும்  பார்த்துக் கொள்ள வேண்டும்,  என்று அவர்  அனைத்தையும் செய்து கொண்டிருந்தார்..

 “நல்லா இருக்காடா  சாப்பாடு?” என்று பார்வதி மருமகளிடம் கேட்டு  மீண்டும் பரிமாறினார்,,

“நல்லா இருக்கு அத்தை” என்று கேட்டு வாங்கி சாப்பிட்டாள்.. மாயா.

 உலகநாதன் பார்வதியை பார்த்திருந்தவர்..

 “ஏன் நிலாவை  கஷ்டப்படுத்தறீங்கம்மா,  நாங்க மாயாவை  பாத்துக்க மாட்டோம்”?..

 “என் பேரப்பிள்ளைகளை சுமந்துகிட்டு இருக்கிற மாயாவை நான் எப்படி விட  முடியும் சொல்லுங்க, அதுவும்  மூணு  பேர பிள்ளைங்க  என் வீட்டுக்கு அனுப்பி வச்சிருங்களேன் நான் மாயாவை  நல்லா பாத்துக்குறேன்” என்ற உலகநாதனிடம்  கெஞ்சுவது போல  பார்க்க..

 “உங்க மருமக நீங்க கூட்டிட்டு போங்க” என்றார்….

 உலகநாதனுக்கு பயம்.. மூன்று பேரப்பிள்ளைகளை எப்படி பார்ப்பது ஒரு பெண் துணையில்லாமல், அனுபவம் இருக்கிறவர்கள் இல்லாமல் எப்படி பார்த்துக்க முடியும்  என்று பயம் வந்திருக்க, பார்வதியிடம் எப்படியாவது பேசி அனுப்பி வைத்து விடலாம் என்று அவர் நினைத்துக்  கொண்டிருந்தார்..

 “மாயாம்மா  நீ என்னடா சொல்லுற”.. என்றார் பார்வதி..

 “உடனே எல்லாம் வர முடியாது அத்தை,,  உங்க பையன் பண்ணது என்னால மறக்க முடியாது” என்றாள்..

 “அவன் பண்ணது தப்புதான்டா நான் இல்லைன்னு சொல்லல்ல உன் பிள்ளைகளை  நீ பார்க்கணும் இல்லையா, உன் பிள்ளைக்கு  அப்பா வேணும் இல்லையா”??..

 “என் மனசுல நிறைய கோபம் இருக்கு , ஆத்திரம் இருக்கு அத்தை அதை வெளியில்  காட்டினால் என் பிள்ளைகளுக்கு தான்  கஷ்டம், பிரஷர்  ஏறிடும், என்று  நான் அமைதியா இருக்கேன் அதனால உங்க பிள்ளையை  மன்னிச்சுட்டேன் என்று அர்த்தம் இல்லை”..

 “நான் அக்னியை  உடனே மன்னிக்கணும் சொல்லல அவனை  அடி, திட்டு என்ன வேணாலும் பண்ணு,,அதை நான் தடுக்க மாட்டேன்,,  நமக்கு இப்போதைக்கு  அந்த மூணு பிள்ளைகள் உயிர்தான் முக்கியம் நீ என்கிட்ட வாடா நான் உன்னை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கிறேன் வா மாயா ” என்று அவளை  கெஞ்சுவது  போல் பார்க்க..

 “கொஞ்ச நாள் கழிச்சு வரேன் அத்தை இல்லனா நீங்க வாங்க” என்றாள்..

 “எனக்கு நிலா  இருக்காடா, அவளையும் நான் பார்க்கணும், இல்லையென்றால் நான் உன் கூடவே வந்து இருந்து விடுவேன்” என்று அவர் கூற..

 மாயா அமைதியாக இருந்தாளே தவிர எதுவும் பேசவில்லை..

 “நீங்க என்ன சொல்றீங்க,, சம்பந்தி” என்று  உலகநாதனிடம் பார்வதி கேட்க..

” எல்லாம் மாயா முடிவு தான்  மா.. அவ மனசு  கஷ்டப்படக்கூடாது அவ்வளவுதான்”…

 பார்வதி மாயாவின் கையை பிடித்துக் கொண்டு,, “நான் சொல்வதை கேட்பியா டா” என்றார்.

 “மாயா  சரி” என்று தலையாட்ட..

 “இப்ப நம்ம கோபத்தை விட நம் பிள்ளைகள் தான் முக்கியம். அதை நீ மனசுல வச்சுக்கோ சரியா” என்றவர்..

 “நீ கழுத்துல  தாலி இல்லாமா பிள்ளையை  சுமந்துட்டு இருக்கிறது பார்க்க என்னால முடியலடா”. என்று கண்கலங்கியவர்  “நீ என் பையனை கல்யாணம் பண்ணிக்கிறியா” என்றார்..

 “இனிமே கல்யாணம் பண்ணி என்னத்தை  ஆக போகுது அதெல்லாம் வேண்டாமே”?.

 “இல்லடா உனக்குன்னு  ஒரு அங்கீகாரம்   இருக்கணும், பிறக்க போற  என் பேரப்பிள்ளைகளுக்கு   எந்த ஒரு   அவச்  சொல்லும்  இல்லாமா நல்ல படியா  பிறக்கனும்,,  அவங்க என் வீட்டு வாரிசு,, அவனை  பெத்த பாவத்திற்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கட்டுமா” என்றவர் டக்கென்று  மாயா பாதம் பணிய போக..

” ஐயோ அத்தை”  என்றவள் அவரை தடுத்து பிடித்து கொண்டு “ஏன் அத்தை எப்படியெல்லாம் பண்ணுறீங்க, எனக்கு  இப்போ நீங்க பண்ணுறது  ரொம்ப வேதனையா இருக்கு,,” என்றாள் கண்கலங்கிய படியே..

 “ஏதாவது சொல்லுடா” என்று பார்வதி  கெஞ்சுவது போல அவளை பார்க்க.

 “நான் வர்ரேன் அத்தை  உங்க வீட்டுக்கு”,,என்றாள்….

 “கல்யாணம்” என்றாள் பார்வதி..

 “உம்ம்” என்று தலையாட்ட..

 “ரொம்ப சந்தோஷம்டா” என்று மருமகளை அணைத்து முத்தமிட்டவர் உலகநாதனிடம் திரும்பி..

 “வர்ர  வெள்ளிக்கிழமை நாள் ரொம்ப நல்லா இருக்கு நீங்க வியாழக்கிழமை எங்க வீட்டுக்கு வந்துருங்க சம்பந்தி,, அன்னைக்கு காலையில நம்ம வீட்ல சிம்பிளா மாயாவுக்கும்,, அக்னிக்கும்  கல்யாணம் பண்ணிடலாம்,, காலை பத்து மணிக்கு  மேல நிலாவுக்கும்,,  மாயாவுக்கும் வளைகாப்பு பண்ணிடலாம்” என்று அவர் கூற.

 “சரி சம்பந்தி அம்மா” என்றார் உலகநாதன்..

 மாயாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை அவளுக்கு பார்வதியும், ரதியும் ரொம்ப முக்கியம்,  அதைவிட அவளுக்கு  அவள் பிள்ளைகள் பிறக்க  போகிறது  முக்கியம், இப்பொழுது கோபம் கொள்வதில் ஒரு  பயனும்  கிடையாது,, என்று  மனதில் தோன்ற அமைதியாக இருந்து கொண்டாள்..

 வியாழக்கிழமை சாயங்காலம் அக்னி ரதியையும் மாயாவையும்  அழைத்துக் கொண்டு அவர் இல்லம் வந்து சேர்ந்தான்…

 பார்வதி வீட்டை பூக்களால் அலங்காரம் பண்ணி இருந்தார்…

 ரதி  வீட்டைப் பார்த்துக் கொண்டு வந்தவள்,  “ரொம்ப அழகா இருக்கு” என்று சொல்லிக் கொண்டே வர..

 ரெண்டு பேரையும்  “வெளியே  நில்லுங்க” என்ற பார்வதி, மாயாவுக்கும், ரதிக்கும் ஆரத்தி எடுக்க,, மாயா அமைதியாக நின்று  இருக்க,, ரதி சிரித்தபடியே இருந்தாள்,, ரதிக்கு பொட்டு வைத்த பார்வதி “இப்படியே சிரிச்சுக்கிட்டே  இருக்கணும் நீ” என்று வாழ்த்தியவர்,,  “உலகநாதன் சம்பந்தி எங்கே”  என்று கேட்க…

“மாமா நைட்டு வருவாங்க மா” என்றான் அக்னி…

 “மாயாவை கைய புடித்து  கூட்டிட்டு வா” என்றார் பார்வதி..

 அவர் சொன்னது போலவே மாயாவின் கையைப் பிடித்து  மெதுவாக வீட்டின் உள்ளே அழைத்து வந்தான் அக்னி…

மாயா உள்ளே வந்ததும்   சோபாவில் அமைதியாக அமர்ந்து  கொள்ள…

 ரதி  வீட்டை சுத்தி, சுத்தி பார்த்துக் கொண்டிருக்க..

 பார்வதி தான் அக்னி அழைத்து “ரதிக்கு வீட்டை சுத்தி காட்டு” என்று கூறினார்… அக்னி ரதியை அழைத்துக் கொண்டு வீட்டை சுத்தி காட்டிக் கொண்டிருந்தவனுக்கு

 போன்  வந்ததும் “நீ போய் பாரு அத்தை” என்றவன், போன் பேசிக்கொண்டே ரதி மேல் ஒரு கண் வைத்திருங்க,, ரதி ஒவ்வொரு அறையாக சுத்தி பார்த்து, வந்தாள்..  ஒரு  அறைக்கு  சென்ற  ரதி  மீண்டும் திரும்ப வராமல் இருக்க,, அக்னி  போன் பேசி முடித்தவன் அந்த அறைக்கு சென்று ரதியை  பார்க்க….

 ரதியின் கையில் ஒரு போட்டோ இருக்க, அதை தொட்டு  தடவி பார்த்தவளில்  கண்களில் கண்ணீர்..

 “என்னத்தை ஆச்சு” என்று அக்னி ரதியின் அருகில்  வர அவனை  ஒரு அன்னிய பார்வை பார்த்தவள்..

 “அண்ணா,அப்பா, அம்மா ”  என்று ரதி அழ..

“என்ன அத்தை? என்னாச்சு?”. என்று ரதியின் கையில் இருந்த போட்டோவை வாங்கி பார்த்தான்,,

 அது பல வருடம் முன் எடுத்த பழைய  குடும்ப புகைப்படம்,, அதைப் பார்த்து “அப்பா, அம்மா, அண்ணா” என்று ரதி அழ..

 “என்னாச்சு அத்தை? ஏன் அழுகுற” என்றான்..

அவனை ஒரு மாதிரி பார்த்தவன் “சிவா அண்ணா எங்கே, அப்பா எங்கே, அம்மா எங்கே என்று கேட்க,..

என்ன சொல்வது அத்தையிடம் என்று யோசித்தவன்,,

“ஒன்னும் இல்லத்தை நீ அமைதியா இரு” என்றவன்..  ரதி வைத்திருந்த  போட்டோவை வாங்கி கபோர்டு மேலே  வைத்தான்….

 “மீண்டும் அம்மா எங்கே, “என்று கேட்டவளை..

 “எல்லாரும் இருக்காங்க நீ அமைதியா இரு” என்றான்..

 சட்டென்று ஞாபகம் வந்தவளாக  “ஞானபிரகாஷ்  எங்கே” என்றாள்..

 “சித்தப்பா ஊர்ல இருக்காற பேசுறியா” என்றான்..

 அவளுக்கு என்ன  புரிந்ததோ “உம்ம்”  என்று தலையாட்ட..

 ஞானபிரகாஷ்க்கு வீடியோ காலில் அழைத்தான் அக்னி..

 ஞானபிரகாஷ்  வீடியோ காலை அட்டென்ட் பண்ணி “என்னடா மகனே” என்று கேட்க..

“சித்தப்பா ரதி அத்தை  பேசுறாங்க” என்றவன்..  ரதியிடம் போனை தர..

 போனை வாங்கிய ரதி  போனில் தெரிந்த  ஞானபிரகாஷின் பிம்பத்தை பார்த்தபடியே இருக்க..

 ரதியின்  தோற்றத்தை பார்த்து சந்தோஷப்பட்ட ஞானபிரகாஷ்  “ரதி” என்று அழைக்க..

 “யாரு இவன்?  இது என் ஞானம் இல்லை”?.. என்று ரதி கூற..

 “அத்தை இது  ஞானபிரகாஷ்   சித்தப்பா தான், உன்  சின்ன அண்ணன்” என்று  அக்னி கூற..

“அண்ணா வா”?.

 என்றாள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!