Skip to content
Post Views: 850
“மூணு பேரும் வெயிட் கம்மியா இருக்காங்க இல்லையா,, அதனால இங்குபேட்டர்ல இருக்கட்டும்,, உங்க ரெண்டு ஆண் பசங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லா, ஒரு பையன் 1600 கிராம்.. இன்னொரு பையன் 1900 கிராம்,, ஆனா பாப்பா மட்டும் 900 கிராம் தான் இருக்காங்க,, உங்க பசங்க ஒரு 3.4 டேஸ்ல வெளியே வந்துருவாங்க..
ஆனா பெண் குழந்தை சரியாகி வர,, கொஞ்சம் இல்ல ரொம்பவே நாளாகும்,, வைட்டு கம்மியா இருக்காங்க, பாக்கலாம்” என்று நம்பிக்கை இல்லாமல் டாக்டர் கூற..
Advertisement
“என்ன டாக்டர் சொல்றீங்க, பாப்பாவுக்கு ஏதும் பெரிய பிரச்சனை இல்லையே” என்று அக்னி கேட்க..
Advertisement
“சாரி அக்னி,, உங்க பெண் குழந்தை ரொம்ப வெயிட் கம்மியா இருக்கா, ஹார்ட் பீட்டும் சரியா இல்ல, ஆக்ஜிசன் மாஸ்க் போட சொல்லி இருக்கேன்,, மே பி சரியானாலும் ஆகலாம்,, நீங்க ரொம்ப ஓப் வச்சுக்காதீங்க” என்று கூற..
Advertisement
அக்னிக்கு மனம் விட்டு போனாது,, மாயா வந்து கேட்டால் நான் என்ன செய்வேன், என்று புலம்பியவன்..
Advertisement
டாக்டருக்கு நன்றி சொல்லி விட்டு மாயாவை பார்க்க வெளியே வந்தான்…
டாக்டரை பார்த்து விட்டு கலங்கி போய் வந்த மகனை பார்த்த பார்வதி,..
அக்னியின் கையை பிடித்துக்கொண்டு “மாயாவுக்கு, குழந்தைகளுக்கு ஒன்னும் ஆகாது, நம்ம குலசாமி அவங்களுக்கு பக்க பலமா இருக்கும்,, எவ்வளவோ தாண்டி வந்துட்டோம்,, இனி நீ தான் தைரியமா இருக்கணும், மூணுபிள்ளைகளுக்கு அப்பா இல்லையா நீ, உன்ன நம்பி மூணுகுழந்தைகள் வந்து இருக்காங்க,, உன் பொண்டாட்டி இருக்கா,, மூணு பிள்ளைகளை நமக்காக உயிர.. குடுத்து காப்பாத்தி நம்ம கையில கொடுத்து இருக்க,, அவ கஷ்டத்த விட நம்ம கஷ்டம் பெருசா, அவ கண்டிப்பா எழுந்து நல்ல படியா வருவா,, உன் பிள்ளைகளை பாரு, மாயாவை போய் பாரு” என்று மகனுக்கு தைரியம் சொல்ல..
பார்வதியை அணைத்துக்கொண்டவன் புது தெம்பு வந்தவனாக,, தன் மனைவியை பார்க்க சென்றான்..
ஐ சி யூவில் அனுமதி பெற்று சென்றான்..
மாயா முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் மாட்டி இருக்க.. கையில் டிரிப்ஸும், ரத்தமும் ஏறிக் கொண்டிருந்தது.. மாயாவை பார்க்கவே முடியவில்லை அவனால்..
“இப்படி ஆகிப்போச்சே எவ்வளவு கனவு கண்டோம் எல்லாம் வீணா போச்சே,, மாயா வேகமாக வாடி என்னால முடியல மாயா” என்று அவள் தோளில் முகம் புதைத்து அழுதவனை..
” சார் சத்தம் போடாதீங்க” என்று நர்ஸ் சொல்ல..
மெதுவாக மாயாவின் காதில் “சீக்கிரமாக வாடா, நம்ம பிள்ளைகள் பார்க்க வேண்டாமா நீ”?.. என்று சொல்லிவிட்டு அவளின் கைகளை எடுத்து தன் கண்களில் நீண்ட நேரம் வைத்திருந்தவன் அப்படியே அமர்ந்து விட்டான்,,..
நர்ஸ் வந்து “டைம் ஆச்சு சார்” என்று சொல்ல..
மாயாவின் கையை தன்னோடு எடுத்து கொண்டவன் அதில் முத்தமிட்டு பிள்ளைகளை பார்க்க சென்றான்..
நெஞ்சு படபடக்க அந்த குழந்தைகள் வார்டுக்குள் சென்றான்..
அக்னியை பார்த்தது அங்கே உள்ள நர்ஸ் “சார் இங்க வாங்க உங்க மூணு குழந்தைங்களும் இங்கே இருக்காங்க” என்று காட்ட..
வரிசையாக மூன்று குழந்தைகள் இருந்தது,, அந்த பக்கம் பார்த்தால் வேற யாருடையோ குழந்தைகள் வரிசையாக இருக்க, இவன் பிள்ளைகளை வரிசையாக தனியாக வைத்திருந்தார்கள்…
“இதுதான் சார் உங்க பஸ்ட் பையன்” என்று ஒரு ஆண் குழந்தையை காட்ட..
நர்ஸ் காட்டிய அந்த ஆண் குழந்தையை பார்த்தான் அக்னி அச்சு அசல் அவன் ஜாடையும், அவனின் தந்தையின் ஜாடையும் இருந்த தன் மூத்த மகனை பார்த்தவனுக்கு கண்கள் கலங்கி போயிருந்தது..
“இது உங்க ரெண்டாவது பையன்” என்று இரண்டாவது பையனை காண்பிக்க..
அந்த குழந்தையை வித்தியாசமாக இருந்தான் வெள்ளை வெளேர் என்று வெளிநாட்டுக்காரன் மாதிரி இருந்தான் அந்த ஆண் குழந்தை.. “நான் தொட்டு பார்க்கலாமா” என்று கேட்க,..
“சார் உங்க கிட்ட டாக்டர் ஏதும் சொல்லலையா” என்று கேட்க..
” இல்லையே ” என்றான் அக்னி.
” சார் கங்காரு ட்ரீட்மென்ட் ஒன்னு இருக்கு,, குழந்தைகள் வெயிட் கம்மியா பொறந்தா அவங்களை நம்ம கேர் பண்ணிக்கிற மாதிரி ஒரு டிரீட்மென்ட்,, அதாவது கங்காரு குட்டி தன் குட்டியை எப்படி தன்னோடு வச்சு இருக்குமோ.. அது மாதிரி, நீங்க குழந்தைகளை உங்க மார்போடு அணைத்து காலைல ஒரு மணி நேரம் சாயங்காலம் ஒரு மணி நேரம் குழந்தைகளை மார்போடு வச்சு இருக்கனும்,, குழந்தை மதர் இருந்தா ஓகே அவங்களே வச்சுக்கலாம்,, அவங்களு முடியல இல்லையா அதானால இனி நீங்க இத பண்ணுங்க” என்று கூற..
“சரி” என்றிருந்தான்,,..
மூன்றாவதாக பெண் குழந்தையை பார்த்தவனுக்கு நெஞ்சுவலியே வந்துவிட்டது. மிக எடை குறைவாக இருந்தாள் அவள் மகள்,, நரம்பெல்லாம் வெளியே தெரிய அவளை பார்க்கவே அவனுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது..
அச்சிறு குழந்தை முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் மாட்டி இருக்க கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டு இருக்க..
மூச்சு விட சிரமமாக இருப்பது போல அக்னிக்கு தெரிந்தது..
“ஏன் இவ்வளவு மாட்டி வச்சிருக்கீங்க என் பொண்ணுக்கு வலிக்குமே பூ மாதிரி இருக்காளே அவளுக்கு எப்படி வலிக்கும் அதை எடுங்க” என்று நர்ஸிடம் கேட்க..
“சார் அந்த பாப்பா வெயிட் ரொம்ப கம்மியா இருக்காங்க,,,உங்க ரெண்டு ஆம்பள பசங்களை பத்தி கவலை இல்லை அவங்க வெய்ட் கொஞ்சம் பரவால நல்லபடியா வளர்ந்து வந்திருவாங்க.. ஆனா உங்க பெண் குழந்தை அப்படி இல்ல.. சில உறுப்புகள் இன்னும் சரியா வளராம இருக்கு அதனால மூச்சு விட சிரமப்படுறாங்க, எனக்கு தெரிஞ்சு அவங்க பிழைக்கிறது ரொம்ப கஷ்டம்” என்று சொல்ல..
” நோ சிஸ்டர் அப்படி எல்லாம் சொல்லாதீங்க, எனக்கு என் மூணு குழந்தையும் வேணும்” என்றான்..
“சாரி சார் உங்களுக்கு இது கஷ்டமா தான் இருக்கும்.. சொல்ல வேண்டியது எங்க கடமை உங்க ரெண்டு பசங்களும் இன்னும் 2, 3 டேஸ்ல வெளியே கொடுத்து விடுவோம்,, ஆனா பாப்பா வரதுக்கு கொஞ்சம் மாதம் கூட ஆகலாம்” என்றாள்..
“நோ சிஸ்டர் என் பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது அவ கண்டிப்பா நல்லபடியா வருவா”.. என்றான்
” சரி சார் உங்க பொண்ணு நல்லபடியா வந்தா எங்களுக்கும் சந்தோஷம் தான்”.. என்றவள்.
” சார் உங்க பசங்களுக்கு கங்காரு கேர், பண்றீங்களா” என்றாள்.
“சரிமா சொல்லுங்க நான் என்ன பண்ணனும்” என்று அக்னி கேட்டதும்..
” முதலில் உங்களை சுத்தப்படுத்திட்டு வாங்க சார்” என்றாள் நர்ஸ்..
அக்னி அவனை சுத்தப்படுத்திக் கொண்டு வர..
முகத்துக்கு ஒரு மாஸ்கை அணிய சொன்ன நர்ஸ்,.
அக்னி மாஸ்க்கை அணிந்ததும்..
“சார் முடிஞ்சா சட்டையை கழட்டுங்க இல்லன்னா சட்டையில் இருக்கிற பட்டனை மட்டும் கொஞ்சம் ரிமூவ் பண்றீங்களா” என்று நர்ஸ் சொன்னதும்…
“சரி மா” என்று சட்டையில் உள்ள பட்டனை கொஞ்சம் கழட்டி விட்டான் அக்னி..
ஒரு டவலில் குழந்தை அழகாக சுற்றி,, அக்னியின் தோளின் மீது குழந்தையை வைத்து. அவனை மார்ப்போடு குழந்தையை அணைத்து வைத்திருக்க சொன்னாள் நர்ஸ்…
நர்ஸ் சொல்லிக்கொடுத்தது போலவே குழந்தையை மார்போடு அணைத்து பிடித்து வைத்துக் கொண்டான் அக்னி..
“ஒரு,ஒரு மணி நேரம் அப்படியே இருக்க, சார், முதுகு வலிச்ச கொஞ்சம் சாஞ்சிக்கோங்க, ஒன் ஹவர் கழிச்சு இன்னொரு பையனை கொடுக்குறேன்” என்று நர்ஸ் அவளின் வேலையை பார்க்க சொல்ல..
அக்னிக்கு குழந்தையை மார்போடு அணைத்ததும் சொல்ல முடியாத சந்தோஷம்,, துக்கம் எதுவென்று அவனால் உணர முடியவில்லை,,
மாயாவை நினைத்து வருத்தப்படுவதா,, இல்லை தன் இரண்டு ஆண் பிள்ளைகளை பார்த்து சந்தோஷப்படுவதா? இல்லை தன் பெண் குழந்தை இருக்கும் நிலைமை பார்த்து வேதனை படுவதா என்று மிகவும் வருந்தி போனான்,,,.
இருந்தாலும் மகனை அணைத்ததும் ஏதோ சொல்ல முடியாத சந்தோஷம் மனதில் தோன்ற கண்கள் லேசாக கலங்கியது.. தன் மகனை ஆசை தீரா பார்த்தவன்,, அவனோடு பேச ஆரம்பித்தான்..
“உங்க அம்மா சொன்ன மாதிரியே பிறந்திருக்கடா மகனே” என்று நெத்தியில் முத்தமிட்டான்…
தந்தை முத்தமிட்டதும் அவன் மகன் கண்மூடி சிரிக்க..
அவன் சிரித்ததை பார்த்தவனுக்கு அவன் தந்தை ஞாபகத்துக்கு வந்தார் தன் தந்தை இப்படித்தான் தன்னை தூக்கி கொஞ்சி இருப்பாரோ,, என்று நினைத்தவனுக்கு.. உடல் சிலிர்த்தது..
அம்மா இவனை சரியா பார்த்தார்களா, இல்லையா தெரியவில்லையே, என்று அவனுக்கு தோன்ற ஒரு மணி நேரம் கழித்து “சிஸ்டர்” என்று நர்சை அழைத்தான்..
“சொல்லுங்க சார்”..
“குழந்தையை எங்க அம்மா கிட்ட காட்டலாமா” என்று கேட்க..
“யோசித்த நர்ஸ் சரி சார் ஒரு 10 மினிட்ஸ் தான் காட்டணும் யாரும் குழந்தையை தூக்கக்கூடாது சார்” என்று சொல்ல..
” சரி சிஸ்டர் ” என்று வெளியில் குழந்தையை தூக்கி கொண்டு வந்தான்….
அக்னியின் மொத்த குடும்பமும் வந்திருந்தது குழந்தைகளை பார்க்க.. மாயாவுக்கு இப்படி ஆனதும் அனைவரும் வருத்தமாக இருக்க..
“அம்மா” என்று அக்னி அழைத்ததும் நிமிர்ந்து பார்த்தார் பார்வதி..
குழந்தை என்று கண்களால் தாயை அழைக்க..
வேகமாக வந்தவர், குழந்தையை பார்த்து தூக்க கையை நீண்டியிருந்தார்..
நர்ஸ் சொல்லியதை பற்றி நிணைக்காமல் குழந்தையை தன் தாயின் கையில் கொடுத்திருந்தான் அக்னி..
அக்னியோட தங்கை, தம்பி அனைவரும் சுற்றி நின்று குழந்தையை வேடிக்கை பார்த்து ,,..
“அண்ணா அப்பா மாதிரியே இருக்கான்” என்று நிலாவும், தேவும் கூற..
“ஆமாம் டா இந்த பொடி பய என் புருஷனை மாதிரியே இருக்கான்” என்று கூறி பார்வதி சந்தோசப்பட..
“அண்ணா இன்னொரு பையனையும் தூக்கிட்டு வரியா நாங்க அந்த பையனையும் பாக்கணும்” என்று நிலா கூற..
“இவனையே யாரும் தூக்கக்கூடாதுன்னு சொன்னாங்க டா, இப்ப அவனை எப்படி கொடுப்பாங்கன்னு தெரியல” என்றான்..
“பரவால்ல நீ போய் தூக்கிட்டு வா ஒரு ஐஞ்சு நிமிசம்” என்றாள் நிலா..
அனைவரும் அங்கே இருக்க உலகநாதன் மட்டும் காணவில்லை..”எங்கே உலகநாதன் மாமா” என்று அக்னி கேட்க….
“அவர் மாயா பக்கத்தில் இருக்கார்” என்று ரதி கூற.
“அவரை போய் கூட்டிட்டு வாங்க அத்தை” என்றான் அக்னி..
ரதி சென்று உலகநாதனை அழைக்க அவர் வர மாட்டேன் என்று மாயா பக்கத்திலே அமர்ந்து மகளை பார்த்தபடியே இருக்க..
ரதி தனியாக வந்ததும் அக்னி சென்றிருந்தான் உலகநாதனை அழைக்க.
உலகநாதன் மாயா பக்கத்தில் அமர்ந்திருக்க..
அவரின் தோளின் மீது கை வைத்தான் அக்னி..
“என் பொண்ணை பார்த்தீயா அக்னி எப்படி படுத்து இருக்க பாரு” என்று அழுதார் உலகநாதன்…
“மாயாவுக்கு ஒன்னும் ஆகாது மாமா, வாங்க உங்க பேரனை பார்க்கலாம்”..
“குழந்தையை கொடுத்துட்டாங்களா அக்னி” என்று கேட்க..
“ஆமாம் மாமா ஒரு பத்து நிமிஷம் பார்க்க சொல்லி இருக்காங்க, வாங்க” என்று அழைத்து சென்றவன்.
உலகநாதனை கையில் தன் மகனை கொடுத்திருந்தான் அக்னி…
குழந்தையை வாங்கிக் கொண்டவருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை,, “என் தங்கம், என் வைரம், என் மாயாவோட சிங்கக்குட்டியா நீ என் தங்கமே” என்று குழந்தையை மார்போடு அணைத்து முத்தமிட்டார்..
“நல்லா இருக்கான் மாப்பிள்ளை என் பேரன்” என்று அவர் கண்களை துடைத்துக் கொண்டே கூற..
“அவனை கொடுங்க மாமா இன்னொரு பேரனை, தூக்கிட்டு வரேன்” என்று உள்ளே சென்றான் அக்னி..
நர்ஸிடம் “ஒரு பத்து நிமிசம் சிஸ்டர்,, இந்த குழந்தையை என் ஃபேமிலி கிட்ட காட்டிட்டு வந்திடுறேன்” என்று நர்ஸிடம் அனுமதி கேட்டு இரண்டாவது மகனை தூக்கி வெளியே வந்தான் அக்னி..
இந்த முறை ரதியை அழைத்து ரதி கையில் அவன் மகனை கொடுக்க..
“நானா” என்று தயங்கியபடியே குழந்தையை வாங்கிக் கொண்டாள் ரதி….
எல்லாரும் குழந்தையை பார்த்துவிட்டு “இது என்ன இவன் வெள்ளைக்காரன் மாதிரி இவ்வளவு வெள்ளையா இருக்கான்” என்று சொல்ல அப்போதுதான் அனைவரும் குழந்தை நன்றாக பார்த்தனர் “ஆமாம் வெள்ளைக்காரன் மாதிரி இருக்கான்” என்று நிலா கூற…
“அண்ணா சூப்பர்ணா செம கலரா இருக்கான்” என்று தேவ் கூறினான்….
பார்வதி அக்னியிடம் “என்னடா இந்த பையன் இவ்ளோ கலரா இருக்கான்” என்று கேட்க..
“மாயாவோட அப்பா ரொம்ப கலரா இருப்பார் அவர் ஒரு பாரினர் அதான் குழந்தை அவர மாதிரி இருக்கான்” என்று கூற..
ரதி குழந்தையை ‘என்னோட சின்ன அப்புக்குட்டி” என்று கொஞ்ச..
“ஆரம்பிச்சுட்டாங்கடா இவங்க மீண்டும் இந்த அப்புக்குட்டியை” என்று சொல்லி சிரித்திருந்தான் தேவ்..
நர்ஸ் வந்து குழந்தையை கேட்க..
அவரிடம் குழந்தையை கொடுத்து விட்ட அக்னி,,
பார்வதி ஏக்கமாக குழந்தைகளை பார்க்கவும்..
“இன்னும் இரண்டு நாள் பொறுத்துக்கோங்கமா குழந்தை கொடுத்துடுவாங்க” என்றவன் தன் மகளை பார்க்க சென்றான்….
“அண்ணா பாப்பாவை பார்க்க முடியாதா” என்று நிலா கேட்க..
“பெரிய மாயாவும், குட்டி மாயாவும் சீக்கிரமா நல்லபடியா வருவாங்கடா” என்று குழந்தைகள் வார்ட்க்குள் நுழைந்தான் அக்னி….
error: Content is protected !!