Skip to content
Post Views: 799
என் ஜீவன் உன்னை சேருமா
Advertisement
அத்தியாயம் -35
Advertisement
Advertisement
தான் மட்டும் தப்பித்தால் போதும் என்று நினைத்தாள் ரியா..
Advertisement
ஒருபோதும் அவளுக்கு மாயாவை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றவில்லை..
மாயாவின் கத்தல் சத்தம் கேட்டுக் கூட அவள் நிற்கவில்லை வீட்டை விட்டு ஓடி இருந்தாள்..
வேலைக்கார பெண்மணிதான் மாயாவின் சத்தம் கேட்டு அவள் அருகில் ஓடி வந்து..
“என்னம்மா ஆச்சு” என்று கேட்க..
” என்னால எழ முடியல,, தூக்கி விடுங்க” என்றாள்..
பாவம் வேலைக்கார பெண்மணியாள் மாயாவை தூக்கிவிட முடியவில்லை… எப்படியோ அவள் தோளை பிடித்து மெல்ல தூக்கி விட..
மாயாவும் கொஞ்சம் முயற்சி செய்து எழுந்து கீழே அமர்ந்தவள்..
” என் போனை எடுத்துட்டு வாங்க” என்று அவரிடம் சொல்ல..
அந்த வேலைக்கார பெண்மணி மாயாவின் போனை எடுத்துக்கொண்டு வந்து அவளிடம் தர..
மாயாவுக்கு தெரிந்தது தனக்கு ஏதோ நடக்கப்போகிறது குழந்தைகள் வர போகிறார்கள் என்று நினைத்தாள்.. அவளுக்கு அடிவயிற்றில் பயங்கரமாக வலி எடுக்க.. ஏதோ ஈரம் கசிவது போல் இருந்தது அவள் உடலில் இருந்து..
அவள் முதலில் ஹாஸ்பெட்டலுக்கு அழைத்து ஆம்புலன்ஸை வீட்டுக்கு வர சொல்லி விட்டு.. பின்பு அக்னிக்கு போன் போட,, அக்னி போனை எடுக்கவில்லை அவன் மீட்டிங்கில் இருந்ததால் போனை சைலண்டில் போட்டிருந்தான்..
அவனுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ்ஜை அனுப்பி வைத்தவள்..
அடுத்தது உலகநாதனுக்கு அழைத்து ஹாஸ்பெட்டலுக்கு ரதியை அழைத்துக் கொண்டு வரச் சொல்லிவிட்டு..
மாமியாருக்கு போனில் அழைத்தாள் பார்வதி ஃபோனை வீட்டில் வைத்துவிட்டு சென்றிருக்க..
வேலைக்கார பெண்மணியை பார்த்து..
“அக்கா என்னை கொஞ்சம் தூக்குங்க” என்றாள்..
வேலைக்கார பெண் அவளை தூக்க,,, அவரால் தூக்க முடியவில்லை எப்படியோ தம் கட்டி,,அவளை தூக்க… மாயாவும் கொஞ்சம் முயற்சி செய்து எழுந்து விட்டாள்….
“கொஞ்சம் பொறுங்கம்மா
ஐயா வந்துவிடுவாங்க, பார்வதி அம்மா வரட்டும் ஹாஸ்பெட்டல் போகலாம்” என்று அந்த பெண் கூற….
“இல்ல இன்னும் அஞ்சு நிமிஷம் ஆம்புலன்ஸ் வந்துடும் நான் போகணும்” என்றாள் நடக்க..
அப்போதுதான் வேலைக்கார பெண்மணி மாயாவின் காலை பார்த்தாள் அதில் ரத்தம் வடிவது தெரிய “அம்மா இரத்தம்” என்று கத்தி இருந்தாள்….
“எனக்கு தெரியும் கா” என்றவள் வலியில் கண்முடியபடியே வேலைக்கார பெண்ணின் கையை பிடித்து கொண்டே நடந்து வெளியே வர..
சரியாக ஆம்புலன்ஸ் வரவும், பார்வதி வரவும் சரியாக இருந்தது. பார்வதி மருமகளை பார்த்து..
“என்னடி ஆச்சு உனக்கு” என்று வாங்கி வந்த மீன்களை கீழே போட்டு விட்டு ஓடி வர…
“அத்தை” என்று கண்மூடிய படியே பேசி இருந்தாள்..
“என் ரிப்போர்ட் எல்லாம் எடுத்துட்டு வாங்க ஆம்புலன்ஸ் வந்துடுச்சு” என்று அவள் கூற..
பார்வதி மறுபடியும் “என்னடி ஆச்சு,, இப்படி நிக்குற” என்று அழ..
“அத்தை அழுவதற்கு இது நேரம் இல்லை, எனக்கு ஒன்னும் ஆகாது போய் ரிப்போர்ட்டை எடுத்துட்டு வாங்க” என்றவள்..
ஆம்புலன்ஸில் ஏறி இருந்தாள்..
பார்வதி ரிப்போர்ட் எடுத்துக்கொண்டு வேகமாக ஆம்புலன்ஸில் ஏறிக்கொள்ள. வேலைக்கார பெண்மணியை பார்த்து “யாராவது வந்தால் ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லு” என்று சொல்ல, ஆம்புலன்ஸ் கிளம்பியது..
ஆம்புலன்சில் உள்ள நர்ஸ் மாயாவுக்கு முதலுதவி செய்து.. ஹாஸ்பெட்டலுக்கு போன் செய்து “ஆப்ரேஷன் தியேட்டரை ரெடியாக வைக்குமாறு சொல்ல”….
ஆம்புலன்சில் ஏறியதும் கண்மூடியவள் தான் மாயா கண்ணை திறக்கவில்லை,,வாய்யையையும் திறக்கவில்லை ,, அங்கே உள்ளவர்கள் பேசியதை மட்டும் காதில் கேட்டுக் கொண்டாள்..
மனதில் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் எதுவும் ஆகாது, எதுவும் தப்பா நடக்காது என்று கடவுளை வேண்டிக் கொண்டே வந்தாள்..
பார்வதி மருமகளை பார்த்து வாய் மூடி அழுதவர் திடீரென்று அவருக்கு அக்னிக்கு தகவல் சொல்ல வேண்டும் என்று தோன்ற….. போனை எடுத்தவர்..
அவர் போன் செய் முன்.. மாயாவிடம் இருந்து வந்து தவறிய போன் அழைப்பை பார்த்தவன் அவளின் வாய்ஸ் மெசேஜ்ஜை கேட்டு அதிர்ந்து போன அக்னி..
மாயாவுக்கு போன் செய்ய..
அது பார்வதியிடமிருந்தது..
அவர் மகனுக்கு போன் செய்ய நினைக்க.. மகன் மாயாவுக்கு போனில் அழைத்ததும்..
போனை காதில் வைத்தார்..
“என்னாச்சுமா மாயாவுக்கு ஏன் ஹாஸ்பெட்டல் போறேன்னு வாய்ஸ் மேசேஜ் போட்டு இருக்கா” என்றான்..
அக்னி என்றவர் மாயாவை பார்த்தது முதல் இப்போ ஹாஸ்பெட்டலுக்கு சென்று கொண்டு இருப்பதை வரை அவனிடம் சொல்லி முடிக்க..
“இப்ப அவ எப்படி இருக்கமா, என்ன பண்ணுற மாயா அவ கிட்ட போனை குடுங்க” என்றான்..
” நாங்க ஆம்புலன்ஸில் போய்க்கிட்டு இருக்கோம் தம்பி,, அவ கண் மூடி படுத்து இருக்கா போன் பேச முடியுமான்னு எனக்கு தெரியல, ” என்றார்..
“நீங்க அவ காதுல போனை வைங்கம்மா” என்றான்..
பார்வதி உடனே போனை எடுத்து மாயாவின் காதில் வைக்க..
” மாயா மாயா டே…” என்றான்..
அக்னி குரல் அவள் காதில் கேட்டதும்…
அவள் சிந்தனையில் இருந்து வெளியே வந்தவள்..
“எங்கே இருக்கீங்க” என்றாள்..
” நான் வந்துட்டு இருக்கேன் டா உனக்கு ஒன்னும் ஆகாது.. நீ பயப்படக்கூடாது,, நாம என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் தைரியமா இருக்கணும்” என்றவனுக்கு குரல் கமறியது..
” நீங்க வாங்க நான் உங்களை பார்க்கணும்” என்றாள் சிறு குழந்தை போல..
“டேய் நான் வந்துட்டே இருக்கேன் டா,, நீ பேசிட்டு இரு நான் வந்துடுவேன்” என்றவன்….
டிரைவரை பார்த்து “வேகமா போ” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
” அக்னி அத்தான் சீக்கிரம் வாங்க, எனக்கு பயமா இருக்கு” என்று அவள் சொல்ல….
எத்தனை மாதம் கழித்து தன்னை அத்தான் என்று அழைத்திருந்தவளை. என்ன சொல்வது,,, விதி. என்று தன்னை நொந்து கொண்டவன்..
” பேசுங்க ஏன் பேசாம இருக்கீங்க” என்றாள் மாயா..
“நீ அத்தான் என்றதும் நான் பிரீசாயிட்டேன்டா ” என்றான் அவளை மாற்றும் எண்ணத்தோடு..
“அத்தான் சீக்கிரம் வாங்க எனக்கு பயமா இருக்கு உடம்பெல்லாம் வலிக்குது ” என்று அவள் சொல்ல..
“டேய் என்னடா” என்றான் உயிரை கையில் பிடித்துக் கொண்டு..
மீண்டும் ” எனக்கு இடுப்பு வலிக்கு அக்னி அத்தான் நீங்க வாங்க” என்றாள்..
” ஹேய்…. செல்லம், என் தங்கமுல்லா பயப்படக்கூடாது”.. என்றான்..
“நம்ம பேபிஸுக்கு எதுவும், ஆகாதுல “?.. என்றாள்..
“கண்டிப்பா எதுவும், ஆகாதுடா.. நான்அதுக்கு விடமாட்டேன், நீ தைரியமா இருக்கனும் டா” என்றான்…
அவள் “ஊம்ம்” என்று தலையாட்ட..
பேசிக் கொண்டிருக்கும்போதே ஹாஸ்பெட்டல் வந்துவிட..
மாயாவை கீழே இறங்க நர்ஸ் சொல்லியதும்.. அவளால் போன் பேச முடியாமல் பார்வதியிடம் போனை தந்தாள்..
” அக்னி” என்றார் பார்வதி.. “இன்னும் இருபது நிமிடத்தில் நான் வந்து விடுவேன் மா” என்றவன், வேகமாக ஹாஸ்பெட்டலுக்கு வந்து கொண்டிருந்தான்..
மாயாவை நேராக ஆப்ரேஷன் தியேட்டருக்குத்தான் அழைத்துச் சென்றார்கள்..
பார்வதி மாயாவை தனியே விட்டு சென்றிருக்கக் கூடாது என்று வருத்தப்பட்டு அழுதார்..
“மாயாவோட அட்டெண்டர் யாரு மா” என்று நர்ஸ் வந்து கேட்க..
“நான் தான் மாயாவோட மாமியார்” என்று பார்வதி கூற..
“மாயவோட ஹஸ்பண்ட் வரலையா”..
“இதோ மா பத்து நிமிஷத்துல வந்துருவான் என் பையன்” என்று பார்வதி கூற..
“ஓகே மா, இதுல நீங்க ஒரு சைன் பண்ணுங்க, அவர் வந்தவுடன் நான் அவர்கிட்ட சைன் வாங்கிக்கிறேன்”.. என்று பார்வதியிடம் சைன் வாங்கி விட்டு சொல்ல.
“மாயா எப்படி இருக்க மா” என்றார் பார்வதி..
“மா ஆப்ரேசன் பண்ணுறது டாக்டர் ஹரி,, அவர் ஆப்ரேசன் பண்ணா நல்லா படியா குழந்தை பிறக்கும் கவலைபடாதீங்க” என்று அந்த செவிலி பார்வதியிடம் சொல்லி விட்டு சென்றாள்..
ஆப்ரேசன் தியேட்டரில் டாக்டர் ஹரி ஒரு, ஒரு குழந்தைகளாக வெளியே எடுத்துக்கொண்டிருந்தார்…
அக்னி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான் பார்வதி மகனை பார்த்து ஓவென்று சத்தம் போட்டு கதறி அழுதிருந்தார்..
“நான் மாயாவை தனியா விட்டுப் போயிருக்க கூடாது அக்னி,, ஆசையா மீன் கேட்டான்னு வாங்க போனேன் இப்படி ஆகி போச்சே” என்று அவர் புலம்ப.
“எப்படி மாயாவுக்கு அடிபட்டுச்சுமா” என்றான்..
” எனக்கு தெரியல அக்னி யாரோ ஒரு பொண்ணு வந்து மாயா கிட்ட பேசிட்டு இருந்ததா வேலைக்கார பொண்ணு சொன்னா, எனக்கு யாருன்னு தெரியல” என்றார் பார்வதி..
அக்னி ஞாபகம் வந்ததாக வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவை.. அவன் போனில் செக் பண்ணி பார்க்க..
ரியா வீட்டினுள் வந்தது பின்பு பயந்து ஓடுவது வீடியோவில் பதிவாகி இருக்க ..
“இவளுக்கு இருக்கு” என்று அக்னி கர்ஜித்தான்..
“யார் அக்னி? யார் அவ? என் மருமகளை என்ன பண்ணா” என்று கேட்க..
“அவதான் மாயாவோட அக்கா ரியா, ஏதோ மாயா கிட்ட பேசி சண்டை போட்டு,, ஏதோ பிரச்சனையாகி மாயாவை கீழே தள்ளி கூட இருப்பா அவளை” என்று அவன் பல்லை கடிக்க.
“அப்படி யா அக்னி” என்று பார்வதி நெஞ்சில் கை வைத்திருந்தார்..
சரியாக அப்போது உலகநாதன் வர,,
“எங்கே உங்க மூத்த பொண்ணு ரியா அவ என் கண்ணுல பட்டா அவளை கொன்னுடுவேன்” என்று அக்னி கர்ஜித்தான்..
“அக்னி ” என்று உலகநாதன் அவன் அருகில் வர.. பார்வதி அனைத்தையும் சொல்லி இருந்தார்..
பார்வதி அழவே ஆரம்பித்தார் “என் மருமக எப்படி இருக்காளோ..
கடவுளே மூணு பிள்ளைகளும் நல்ல படியா பிறக்கனும்” என்று கடவுள்களை வேண்டிக்கொண்டிருக்க..
ஆப்ரேஷன் தியேட்டர் இருந்து ஒரு நர்ஸ் வந்து “பேபிஸ் பொறந்துட்டாங்க,, மூணு பேபீஸ் இரண்டு பசங்க முதல்ல பையன் அடுத்தது பையன் மூன்றாவது பெண் குழந்தை” என்று சொல்ல..
” மாயா எப்படி இருக்கா நர்ஸ்” என்று அக்னி கேட்க..
“மயக்கத்துல இருக்காங்க சார் டாக்டர் சிச்சஸ் போட்டுட்டு இருக்காங்க ஆப்ரேஷன் நடந்து முடிஞ்சிருக்கு,, இன்னும் கொஞ்ச நேரத்துல ரூம்புக்கு ஷிப்ட் பண்ணுவாங்க அப்போ நீங்க பார்க்கலாம்”.. என்று கூறி விட்டு சென்றாள்..
ஒரு பத்து நிமிசம் கழித்து,, மூணு இன்குபெட்டர் வந்து டெலிவரி வார்ட் முன் வந்திருங்க..
மூன்று நர்ஸ் மூன்று குழந்தைகளை தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்கள்.. அனைவரும் குழந்தைகளை பார்க்க..
“அப்படியே பாருங்க, குழந்தைகளை தூக்க கூடாது வெயிட் ரொம்ப கம்மியா பிறந்திருக்காங்க,, அதனால அவங்களை இன்குபேட்டரில் வைக்கணும்,, ஒரு டு டேஸ் கழிச்சு குழந்தைகளை பார்க்கலாம்” என்று அனைவருக்கு ஒரு நிமிடமே குழந்தையை பார்க்க அனுமதி கொடுத்து விட்டு . மூன்று குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து குழந்தைகள் ஐ சி யூ வார்டிற்கு அழைத்து சென்றனர்..
பார்வதி, அக்னியும் குழந்தையின் பின்னே செல்ல..
” நாங்க பாத்துக்கிறோம் சார் நீங்க மாயா மேடமை பாருங்க” என்று சொல்லி சென்றார்கள்..
மாயா நீண்ட நேரம் ஆகியும் கண் விழிக்கவே இல்லை..அனைத்து டெஸ்ட்களும் மாயாவுக்கு எடுக்க.. மாயா ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்..
அதாவது கோமாவுக்கு சென்றிருந்தாள்..
உலகநாதனும், அக்னியும் டாக்டரை பார்க்க வந்திருந்தனர்…
என்னாச்சு மாயாவுக்கு இன்னும் கண்ணு முழிக்களியே என்று கேட்க..
உலகநாதனையும், அக்னியை பார்த்த டாக்டர் “வாங்க” என்று உட்கார சொல்ல..
இருவர் அமர்ந்து விட்டு.. “மாயாவுக்கு என்ன ஆச்சு ஏன் அவள் , இன்னும் கண்ணு முழிக்கவில்லை” என்று கேட்க..
“அது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை மாயா, மாதிரி நான் நிறைய பேஷன்டை பார்த்திருக்கேன்,, ஒரு 3 , 4 டேஸ்ல மாயாவுக்கு எல்லாம் சரியாகிவிடும் கவலைப்பட வேண்டாம்” என்று கூறியவர்..
“உங்க குழந்தைகளை பார்த்தீர்களா” என்று கேட்க அவன் பார்த்தேன் சார், கொஞ்சம் நேரம் தான் பார்த்தோம், சரியா கூட பார்க்கல” என்றான்..
error: Content is protected !!