Skip to content
Post Views: 1,022
என் ஜீவன் உன்னை சேருமா
அத்தியாயம் -36 Final 1
Advertisement
Advertisement
மூன்று நாள் கழித்து இன்ங்குபெட்டரில் இருந்த அக்னியின் ஆண் குழந்தையை அவனிடம் கொடுத்து விட்டனர்..
Advertisement
பெண் குழந்தை இன்னும் ஆக்சிஜன் உதவியோட சுவாசித்துக் கொண்டு இன்ங்குபெட்டரில் இருக்க..
Advertisement
அக்னிக்கு பெண் குழந்தையை பார்க்கும் போதெல்லாம் நெஞ்செல்லாம் வலிக்கும்,, தன் இதயத்தை யாரோ உயிரோட பிடுங்குவது போல் வலி எடுக்கும் அவனுக்கு..
மகள் இப்பவே இதையெல்லாம் எப்படி தாங்கிக் கொள்கிறாளோ, அந்த வலியை எனக்கு கொடுக்க கூடாதா இறைவா, என்று வருந்தி அழுவான்..
நர்ஸ் இரண்டு குழந்தைகளையும் அவனிடம் கொடுத்து விட..
தன் இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டு கைகளில் அணைத்து வாறே வெளியில் தூக்கிக்கொண்டு வந்தான்..
மனதில் சொல்ல முடியாத வருத்தம் அவனுக்கு,, பிள்ளைகளின் முகத்தை பார்த்தும் சந்தோஷ பட முடியவில்லை அவனால்..
அவன் நன்றாக வெளியில் வந்த ஆண் குழந்தைகளை பார்த்து சந்தோஷப்படுவானா, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தன் பெண் குழந்தையை பார்ப்பானா? இல்லை பிள்ளையை பெற்று கோமாவுக்கு சென்ற தன் மாயாவை பார்ப்பானா? ஒன்றும் புரியவில்லை அவனுக்கு..
ஆண் பிள்ளைகளை வெளியில் கொடுத்தாலும் நிறைய அறிவுறை கூறிய அனுப்பினர்..
ஒரு குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை 10 எம்மல் பால் தான்ஸகொடுக்க வேண்டும் குழந்தைகளை குளிக்க வைக்க கூடாது.. துடைத்து தான் எடுக்க வேண்டும்..
பிள்ளைகள் இருக்கும் இடத்தில் ஃபேன், ஏசி உபயோகப்படுத்த கூடாது குழந்தைகளை பத்திரமாக அணைத்து வைத்து பார்த்து கொள்ள வேண்டும்,, என்று நிறைய கண்டிஷன் போட்டே குழந்தையை அக்னியிடம் கொடுத்திருந்தனர்..
பார்வதி, ரதி, உலகநாதன் மூன்று பேர் மட்டும் வெளியில் அமர்ந்திருந்தனர்..
பார்வதியிடம் தன் தந்தையைப் போல இருந்த தன் மூத்த மகனை அவரிடம் தந்தவன்..
” நீங்கதான் இனி மாயா வர்ற வரைக்கும் இந்த குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று நர்ஸ் சொல்லியதை சொல்லி குழந்தை பத்திரமாக பார்த்துக்க சொல்லி கொடுத்தவன்..
அடுத்தது ரதியை அழைத்து இன்னொரு ஆண்மகனை அவளிடம் கொடுத்தான்..
“நான் எப்படி” என்று சொல்லிக் கொண்டே குழந்தையை வாங்கிய ரதி தன் மார்போடு அணைத்து வைத்துக்கொள்ள..
“இப்படித்தான் அத்தை” என்று அவள் தன் குழந்தையை மார்போடு அணைத்து வைத்திருந்ததை சுட்டிக் காட்டியவன்.. “மாயா என்கிட்ட சொல்லி இருக்கா, எனக்கு பிறக்கிற ஒரு குழந்தையை ரதி அம்மா கிட்ட கொடுக்கணும்னு,, ஏன் என் குழந்தையை நீங்கள் பார்த்துக்க மாட்டீங்களா”? என்று கேட்க..
“பாத்துக்கிறேன் அக்னி” என்று ரதி குழந்தையை வாங்கிக் கொண்டாள்..
ரதியிடம் குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு,, இனி இந்த குழந்தைகள் உங்க ரெண்டு பேரும் பொறுப்பு” என்று சொல்லி விட்டு.
டாக்டரை பார்க்க சென்றான்..
“வாங்க அக்னி ஆண் குழந்தையை எப்படி இருக்காங்க உங்க அம்மா கிட்ட கொடுத்துட்டீங்களா’!? என்று கேட்க…
“கொடுத்துட்டேன் டாக்டர் நல்லா இருக்காங்க” என்றவன்..
“மாயா எப்போ கண் முழிப்பா டாக்டர்” என்றான்..
“மாயா பர்பெக்ட்லி ஆல்ட்ரைட் நௌவ் அக்னி, மாயாவுக்கு ஹார்ட் பீட், பல்ஸ் எல்லாம் நார்மலா இருக்கு அவங்க எப்ப வேணாலும் கண் முழிக்கலாம்,, மாயாவை பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்”,, என்றார்
..
“அப்போ என் பெண் குழந்தைக்கு எப்போ டாக்டர் சரியாகும்”..
” சில மாதம்கள் கூட ஆகலாம்,, குறைந்தது ஒரு ரெண்டு மாசமாவது ஆகும் அக்னி.. அப்பறம் ஒரு விசயம் என் பிரண்ட் கல்கத்தாவில் ஒரு பெரிய ஹாஸ்பெட்டல் வச்சு இருக்கான்.. இங்கே விட அங்க பேபிக்கு இன்னும் வேகமாக க்யூர் ஆகும், நிறைய எக்ஸ்பீரியன்ஸ் ஆன டாக்டர் இருக்காங்க, இங்க விட அங்க இன்னும் எக்ஸ்பிரியன்ஸ் ஆனா டாக்டர்ஸ் இருக்காங்க அதனால நீங்க கல்கத்தாவுக்கு உங்க பெண் குழந்தையை கூட்டிட்டு போக முடியுமா? என்று டாக்டர் ஹரி கூற..
“என் பொண்ணுக்கு சரியாகணும்னா, நான் எங்க வேணா போவேன் டாக்டர், உடனே நான் பிளைட்ல கல்கத்தா போறேன், ஆனா மாயா” என்றான்..
” மாயாவை பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம் முதலில் பேபியை தான் பார்க்கணும் நீங்க எப்போ கிளம்புறீங்களோ அப்போ கிளம்புங்க “..
“உடனே கிளம்புறேன் சார்,” என்றவன்..
பார்வதியிடம் குழந்தைக்காக கல்கத்தா போவதாக சொல்ல..
“மருமகளை விட்டு ஏன்டா போற” என்று பார்வதி மகனிடம் சண்டை போட்டார்…
“பேபி அங்க போன வேகமா க்யூர் ஆகுமுன்னு டாக்டர் சொல்லுறாரு.. மாயாவுக்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லையா, எப்ப வேணா கண் முழிப்பான்னு டாக்டர் சொல்லுறாரு,,அவ கண் முழிச்சதும்
குழந்தையைப் பற்றி தான் கேட்பா, அவளுக்கு நான் என்ன பதில் சொல்வேன் அவள் கண்முழிக்கறதுக்குள்ள,, பேபிக்கு எல்லாம் சரியாகனும்” என்றான்.
“டேய் மாயாவை விட்டு போகாத டா,, அவ எழுந்ததும் உன்னைத்தான் கேட்பா,,, நான் என்ன பதில் சொல்வேன்” என்று அவர் புலம்ப…
” எனக்கு இப்போ என் பொண்ணு தான் முக்கியம்,, என்றவன் மாயாவை எல்லோரும் பார்த்துக்கோங்க” என்று அடுத்த நாள் தனி விமானத்தில் மகளோடு கல்கத்தா கிளம்பி விட்டான்…
அக்னிக்கு என்று அந்த ஹாஸ்பெட்டலில் தனி அறை ஒதுக்கப்பட்டு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட..
எப்போதும் தன் மகளை தன் உடல் சூட்டிலேயே வைத்திருந்தான் அக்னி..
திடீரென்று குழந்தையின் ஹார்ட் பீட் குறைய ஆரம்பித்து இருந்தது..
டாக்டர் வந்து குழந்தையை பார்த்துவிட்டு “பேபி பிழைப்பது ரொம்ப கஷ்டம் ஹார்ட் பீட் ரொம்ப குறைந்து கொண்டே வருகிறது மனசை தேத்திக்கோங்க” என்று அவர் சொல்ல..
“என் பொண்ணுக்கு எதுவும் ஆகாது டாக்டர்,, இன்னும் கொஞ்ச நேரத்துல ஹார்ட் பீட் சரியா துடிக்கும் பாருங்க.. என் பொண்ணுக்கு எதுவும் ஆகாது” என்று அவன் சொல்ல..
அக்னியின் தோளை தட்டியவர் “பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு,, அங்கே உள்ள நர்ஸிடம் கண்காண்பித்து “பார்த்துக்கோங்க” என்று சொல்லி விட்டு சென்றார் அவர்…
அக்னி குழந்தையை இறக்கிவிடவே இல்லை இரவும் பகலும் தன் மார்போடு அணைத்து வைத்துக் கொண்டு பேசிக் கொண்டே இருந்தான்.
“உனக்கு ஒன்னும் ஆகாது தங்க குட்டி,, பேபி டால் நீங்கள் சீக்கிரம் சரியாகிடுவீங்க,, பெருசா வளருவீங்கலாம் அப்போ தான் நான் உன்னை தூக்கிக்கொண்டு இந்த உலகத்தை பூரா சுத்தி வர போறேன்,, சீக்கிரம் குணமாகி வளரனும் நீங்க,, என் தங்க குட்டில” என்று அவன் மகளிடம் பேசிக்கொண்டே இருக்க..
நர்ஸ் ஒருவர் வந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை குழந்தையின் ஹார்ட் பீட்டை செக் பண்ணி விட்டு செல்ல..
குழந்தையின் பல்சு மிக குறைந்து கொண்டே வந்தது..
அதை டாக்டரிடம் தெரிவித்தார் அந்த நர்ஸ்..
டாக்டர் உடனே ஆக்சிஜன் மாஸ்கை எடுக்கச் சொல்லி விட்டார்..
நர்ஸ் வந்து குழந்தையின் ஆக்சிசன் மாஸ்கை கழட்ட போக…
“ஏன் கழட்டுறீங்க” என்றான்..
” டாக்டர் கலட்ட சொல்லிட்டாங்க சார்,, ஹார்ட் பீட் ரொம்ப குறைஞ்சிடுச்சு இனிமே பேபி பிழைக்கிறது கஷ்டம்” என்று அவள் சொல்லி விட்டு ஆக்சிசன் டூப்பை அவள் கலட்டா..
“நீங்க ஆக்சிசன் மாஸ்க்கை முதல்ல மாட்டுங்க பேபிக்கு.. என் பேபிக்கு ஒன்னும் ஆகாது” என்றவன் மாஸ்கை கலட்ட விட வில்லை..
அவன் மாஸ்கை கழட்ட விடாததை.. நர்ஸ் சென்று டாக்டரிடம் சொல்ல..
” அப்படியா,! ஒரு வேலை அந்த குழந்தை அவங்க அப்பா பிரார்த்தனையால கூட உயிர் பிழைக்கலாம் இல்லையா,, இன்னும் 2 டேஸ் பாருங்க பல்ஸ் குறஞ்சா ஆக்சிசன் மாஸ்கை எடுத்திடலாம், இல்லன்னா இதையே கண்டினியூ பண்ணுங்க” என்று டாக்டர் கூற..
நர்ஸ் வந்து மாஸ்க்கை கலட்டவும் பயந்து போனான் அக்னி..
எங்கே தன்மகள் தன்னை விட்டு போய்விடுவாளோ என்று பயந்தவன்,, “அம்முகுட்டி, பேபிமா என்ன பண்ணுதுடா உங்களுக்கு ஏன் மூச்சு விட சிரமப்படுறீங்க,, உங்களுக்கு ஒன்னும் ஆகாது'” என்று மகளை பார்த்து பேசிப்படியே இருந்தான்.
குழந்தை ஒவ்வொரு முறை மூச்சை இழுத்து விட கஷ்டபடும் போதும் துடித்து போனவனுக்கு., தன் இதயத்தை யாரோ ஊசி வைத்து குத்துவது போல் வலியை உணர்ந்தவன்..
” பேபிமா என்னடா பண்ணுது உங்களுக்கு,, ஒன்னும் ஆகாது டா,, அப்பா இருக்கேன்,, அப்பா பாத்துப்பேன்,, ஐயோ என் பிள்ளை இப்படி மூச்சு விட கஷ்டப்படுற பார்க்கவா, நான் இருக்கேன்” என்றவன்,, “பேபி, பேபி” என்று குழந்தையின் கையை எடுத்து தன் கண்களில் வைத்துக்கொண்டவன்,,”அப்பா இருக்கேன்டா, அப்பா எல்லாத்தையும் பாத்துக்கிறேன்,, எங்க வீட்டு முதல் பெண் குழந்தைடா நீ,, எங்க குல சாமி நீ,,உன்ன இப்படி கஷ்டபட வச்சுட்டோமோ,, நீ எங்களுக்கு வேணும்டா, வந்துடு, என் கிட்ட வந்துடு பேபி”என்றவன் குழந்தையை மார்போடு அணைத்து வைத்து கொண்டவன்..
குழந்தையை பார்த்தபடியே இருந்தான்,, குழந்தை கையை காலை ஆட்டாமல் அமைதியாக இருக்க..
“அடே பாப்பா,, என் தங்கமே என் விட்டு போயிடதடா,, உங்க அம்மா வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன் அம்மு குட்டி” என்று அழுதவன்..
இரவெல்லாம் மகளுடன் பேசியபடி நடந்து கொண்டே இருந்தான்..
நர்ஸ் வந்து அடிக்கடி வந்து பார்த்து சென்றாள்.. அவன் நடையும் ஓயவில்லை, பேச்சும் ஓயவில்லை.. அந்த ஹாலில் பேசிக்கொண்டே அவன் நடந்து கொண்டே இருக்க..
அங்கே உள்ள டாக்டருக்கும் நர்சுக்கும் இவனை பார்க்க பாவமாக இருந்தது..
தன் சட்டையை கழட்டியவன் தன் பெண் குழந்தையை தன் மார்போடு அணைத்தப்படியே பேசியபடியே நடந்தான்..
நர்ஸ் காலையில் வந்து பார்க்க.. நின்று கொண்டே மகளை தொளில் வைத்து கண் மூடி படியே இருந்தவனிடம்..
” சார்” என்று நர்ஸ் அழைக்க..
“ம்ம்ம்ம்..” என்றான்..
“சார் நீங்க இன்னும் தூங்கவே இல்லையா” என்று கேட்க..
“தூக்கம் வரலமா” என்று தலையாட்டி இருந்தான்..
“உக்காருங்க சார்” என்று அக்னியை உட்கார வைத்து விட்டு.
வார்ட் பாய்யை அழைத்து அக்னிக்கு ஒரு காபி வாங்கிட்டு வரச் சொன்னவள்..
குழந்தைக்கு பல்ஸ் செக் பண்ண..
“குழந்தைக்கு எப்படிம்மா இருக்கு” என்றான்…
“இதோ சார் செக் பண்றேன்” என்று அவள் குழந்தையின் பல்ஸையும், இதயத்துடிப்பையும் செக் பண்ண…
எல்லாம் நார்மலாக துடிக்க..
ஆச்சரியப்பட்டு போன நர்ஸ்..
“சார் பேபிக்கு எல்லாம் நார்மலா இருக்கு சார்” என்று ஆக்சிசன் மாஸ்கை கழட்ட,..
“ஏன்மா கழட்டுற” என்றான் நர்சிடம்….
“சார் பேபிக்கு நார்மலா இதயம் துடிக்குது இனிமே ஆக்சிஜன் மாஸ்கே தேவை இல்லை” என்று அதை கழட்ட…
மாஸ்கை கழட்டியதும், “பேபி அப்பா பேசியது உனக்கு கேட்டுச்சா டா என் தங்கமே,, என்கிட்ட திரும்பி வந்துட்டீங்களா டா,, உன் டாடிக்கிட்ட வந்துட்டீங்களா” என்று அவன் பேபியை தூக்கி அணைத்து வைத்துக் கொண்டான்…..
error: Content is protected !!