Skip to content
Post Views: 1,736
என் ஜீவன் உன்னை சேருமா
அத்தியாயம் – 4
Advertisement
Advertisement
Advertisement
மாயா தன் தந்தை சொல்வதை கேட்டு அதிர்ச்சியானாள்..
” டாட் என்ன டாட்? என்ன சொல்றீங்க!”…
Advertisement
“என்னால உன்னை தனியா அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாது மாயா”.
“டாடி ப்ளீஸ் டாடி. டூ இயர்ஸ் டாடி அமெரிக்காவுல வேலைக்கு போகனுமுன்றது என் கனவு டாடி, ஒரு டூ இயர்ஸ்ல வந்துடுவேன்”…
“நோ மாயா” என்றார் உலகநாதன்..
மாயா அக்னியின் முகத்தை பார்த்து நீங்க ஏதாவது செய்ய முடியுமா என்பது போல் பாவமாக அவனை பார்க்க…
“சார், மாயா ரொம்ப டேலண்டான பொண்ணு அமெரிக்கா தானே போயிட்டு வரட்டுமே” என்றான் அக்னி..
“அக்னி என்னால அவள தனியா எல்லாம் அனுப்ப முடியாது அவ என் கூடவே இருக்கட்டும், அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னால் தாங்க முடியாது” என்று கண்கலங்கி பேசியவரை தோளில் தட்டியபடியே..
” கூல் சார் இப்போ ரொம்ப எமோஷனலா இருக்கீங்க மாயா வீட்டுக்கு வரட்டும், அவளுக்கு உடம்பு சரியாகட்டும் அப்புறம் பேசி பார்க்கலாம்”…
“இல்ல அக்னி மாயாவை நான் இனி தனியா விடுறதா இல்ல, அவ அமெரிக்கா போக வேண்டாம், அவ என்கூடவே இருக்கட்டும், என் கம்பெனியை பார்க்கட்டும், எனக்குன்னு யாரும் இல்லா அக்னி, என் பொண்டாட்டி ஒரு ஆக்சிடன்டுல செத்துப் போயிட்டா, என் பெரிய பொண்ணு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டேன், எனக்குன்னு இருக்குறது இவ ஒருத்தி மட்டும் தான், இவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா,, நான் கண்டிப்பா இந்த உலகத்தில் இருக்க மாட்டேன்”.. என்று கண்கலங்கியவரை..
கையை பிடித்து தட்டி ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தான் அக்னி..
மாயாவுக்கு தந்தை இப்படி வருந்தி பேசியதை கேட்டு மனம் மாறியவள் “நான் அமெரிக்கா போகலை டாடி” என்று கூற..
“அப்போ கல்யாணம் பண்ணிக்கோ டா” என்றார்…
” நோ டாடி ஒரு டூ இயர்ஸ் போகட்டும்”..
“இல்ல மாயா 2 இயர்ஸ் போனா நல்ல மாப்பிள்ளை கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்” என்றார் அக்னியை பார்த்துக் கொண்டே..
“டாடி சொன்னா புரிஞ்சுக்கோங்க டாடி ப்ளீஸ் டாடி”..
“நான் உன் நல்லதுக்கு தான் சொல்வேன்டா, நான் சொன்னா கேட்பியா?”..
“சரி” என்று தலையாட்ட..
“அப்போ அக்னியை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்றதும்..
இருவரும் அதிர்ச்சியாகி உலகநாதனை பார்க்க..
“சார் என்ன பேசுறீங்க”.. என்றான் அக்னி..
“நான் சரியா தான் பேசுறேன் அக்னி”
” சார் இப்படி எல்லாம் பேசாதீங்க உங்க பொண்ணு சின்ன பொண்ணு அவ வயசு என்ன? என் வயசு என்ன? இது சரி வராது சார்” என்றான் அக்னி..
” ஏன் சரி வராது அக்னி, உன்னை விட பெஸ்ட்டா எனக்கு ஒரு மாப்பிள்ளை கிடைப்பானா சொல்லு? “..
“சார் நீங்களா முடிவு பண்ணாதீங்க என் வயசு 33, உங்க பொண்ணுக்கு வயசு 23, பத்து வயசு வித்தியாசம் எப்படி சார் சரியா வரும் சின்ன பொண்ணு சார் மாயா”… என்றான் வருத்தத்துடன்..
” இதெல்லாம் சரியா வரும் அக்னி என் மனைவிக்கும் எனக்கும் 7 வருஷம் வயசு வித்தியாசம் நாங்க நல்லா இருக்கலயா? “..
“சார் அது அந்த காலம் இப்போ இது எல்லாம் சரி வராது சார், இப்ப இருக்குற பொண்ணுங்க எல்லாம் ஒரு வயசு, ரெண்டு வயசு, இல்ல ஆறு மாசம் தான் வயசு வித்தியாசம் இருக்கனுமுன்னு நினைக்கிறாங்க”..
” என் பொண்ணு மாயா அப்படி எல்லாம் சொல்ல மாட்ட அக்னி,, நான் சொன்னா அவ சரின்னு சொல்லுவா, உனக்கு என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க விருப்பமா அத முதல்ல நீ சொல்லு “..
“என்ன சார் நீங்க அவ சின்ன பொண்ணு, என்னையும் மாயாவையும் சேர்த்து வச்சு பேசாதீங்க சார்”..
இவன் சரிபட மாட்டான் என்று மாயா விடம் வந்து கேட்டார்.. “மாயா நீ சொல்லுடா நீ வயசு வித்தியாசம் எல்லாம் பார்ப்பியா,,”?…
” அப்படியெல்லாம் எதுவும் இல்லப்பா” என்றாள் மாயா..
” சரி நீ சொல்லு அக்னியை கல்யாணம் பண்ண உனக்கு விருப்பமா? ” என்று தந்தை கேட்டதும்.
அக்னியை மாயா நிமிர்ந்து பார்க்க தன் முன் 7 அடி உயரத்தில் தன் தந்தையை போல் வளர்ந்து உயரமான உருவம் கொண்டவனை பார்த்தாள், இன்று அவனோடு பேசியதை நினைக்க, இருவருக்கும் ஒரு நல்ல புரிதல் இருப்பது போல் மாயாவுக்கு தோன்ற.. அவனை பார்த்தால் 33 வயது போல் தெரியவில்லை, அவளுக்கு வயது எல்லாம் பெரிய விசயமே இல்லை, தன் தந்தை போல் தன்னை பார்த்துக்கொள்வாரா, அதுவே அவளுக்கு போதும் என்றே தோன்ற, இன்று அவளை ஹாஸ்பெட்டலில் தன்னை சேர்த்தது, அவன் தன்னிடம் உரிமையாக நடந்து கொண்டதை நினைத்துப் பார்த்தவள், இதை விட உனக்கு ஒரு மாப்பிள்ளை கிடைப்பாரா, அதுவும் தன் தந்தைக்கு பிடித்த ஆள் என்றே தோன்ற..
“எனக்கு அக்னி சாரை கல்யாணம் பண்ண ஓகே பா”.. என்றதும்.
உலகநாதன் துள்ளி குதிக்காத குறை தான் மகிழ்ச்சியின் மகளை கையை தொட்டு நன்றி தெரிவித்தார்..
” இப்ப என்ன சொல்ல போற அக்னி” என்று உலகநாதன் கூறியதும்..
குழம்பி போய் நின்றவன்.. ” நான் மாயா கிட்ட தனியா பேசணும் சார்”…என்றான் உலகநாதனை பார்த்து…
“நீ பேசு நான் வெளிய போறேன்” என்று உலகநாதன் ரூம்மை விட்டு வெளியே செல்ல பார்க்க..
” இப்ப வேண்டாம் சார், மாயாவுக்கு உடம்பு சரி ஆகட்டும் நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு, ஒரு முடிவ சொல்றோம்”.. என்றதும்..
” சரி உன் இஷ்டம் அக்னி சீக்கிரம் ஒரு பதிலை சொல்லு”..
” சரி சார் நான் கிளம்புறேன்” என்றவன்.. மாயாவின் அருகில் வந்து ” உடம்பை பார்த்து கொள் மாயா” என்று சொல்லி சென்று விட்டான்..
அக்னி இந்த திருமணம் சரி வருமா? என்று ஆயிரம் முறை யோசித்தான்..
இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில், பார்வதி ஒரு பெண்ணின் போட்டோவை அக்னியிடம் காண்பித்து “பிடிச்சிருக்கா பாருடா” என்று கூற.
அந்த புகைப்படத்தை வாங்கி பார்க்காமல் கீழே வைத்தவன்..
தன் போனில் இருந்த மாயாவின் புகைப்படத்தை பார்வதியிடம் காண்பிக்க,, ” யாருடா இந்த பொண்ணு? ” என்றார் பார்வதி..
” இந்த பொண்ணு எப்படி இருக்கா? உங்களுக்கு புடிச்சிருக்கா? “..
நீயாடா என்பது போல் மகனை பார்த்தார்.. மீண்டும் அக்னியின் மொபைலில் இருந்து மாயாவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு, “எந்த ஒரு அழகிடா இந்த பொண்ணு மூக்கு முழியுமா அழகா இருக்கா?”..
” எனக்கு தெரிஞ்சவங்களோட பொண்ணு, அவங்களுக்கு என்னை பிடிச்சிருக்காம் இந்த பொண்ண கல்யாணம் பண்ண கேக்குறாங்க, நான் யோசிச்சு சொல்றேன்னு, சொல்லிட்டேன்”..
“இந்த பொண்ணையா பார்த்து யோசிச்சு சொல்றேன்னு சொன்ன? டேய்! லட்டு லட்டு மாதிரி இருக்குறா இந்த பொண்ணு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு, எவ்வளவு அழகா இருக்கா அமைதியான முகம், நல்ல கலரு ரொம்ப பிடிச்சிருக்கு டா எனக்கு இந்த பிள்ளையை”..
“அழகா தான் இருக்கா இருந்தாலும் யோசிக்கணும்”..
“என்னடா யோசிக்கணும், நீ யோசிக்குறதுக்குள்ள வேற யாராவது வந்து இவளை கல்யாணம் பண்ணிட்டு போயிட போறாங்க”..
” அம்மா அந்த பொண்ணு என்னோட பத்து வயசு சின்ன பொண்ணுமா, யோசிக்காமல் எதுவும் செய்யக்கூடாது, அதான் யோசிக்கிறேன்”..
” அது எல்லாம் சரியா வரும் அக்னி,, உங்க அப்பாவுக்கும் எனக்கும் 12 வயசு வித்தியாசம் நாங்க கல்யாணம் பண்ணிக்கலையா, குழந்தை பெத்துக்களையா, சரியின்னு சொல்லுடா”..
” இந்த பொண்ணு கிட்ட பேசிட்டு சொல்றேன் அம்மா”..
“இன்னும் அந்த பிள்ளை கிட்ட நீ பேசவே இல்லையா?”..
“பேசணும்”..
“டேய் அந்த பொண்ண எப்ப பாக்க போலாம்” என்று ஆவலோடு பார்வதி கேட்க..
” நான் முதல்ல பேசிட்டு உன் கிட்ட சொல்றேன் அப்புறமா போலாம்”..
“சீக்கிரம் சொல்லுடா” என்று பார்வதி மகளின் தோளில் தட்டி விட்டு சந்தோசமாக சென்றார்..
அக்னி உலகநாதனை போனில் அழைத்தான்..
“சொல்லு அக்னி” என்று உலகநாதன் கேட்டதும்..
“நான் மாயா கிட்ட பேசணும் சார் மாயா எங்க இருக்கா?”..
“அவள தான் பிக் பண்ண காலேஜுக்கு போயிட்டு இருக்கேன் அக்னி”..
‘சார் நான் மாயாவை பிக் பண்ணிக்கட்டுமா அவ கிட்ட பேசனும்”..
” ஓகே,, நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு சீக்கிரமா ஒரு நல்ல முடிவா சொல்லுங்க”..
“சாரி சார்” என்று அக்னி சொன்னது..
அக்னியிடம் “கிண்டி ஸ்டாப் கேட் நம்பர் 3”.. என்று அவனுக்கு முகவரியை கூற..
“நான் மாயா கிட்ட பேசிட்டு உங்க வீட்டுல கொண்டு வந்து விடுறேன் சார்” என்று போனை வைத்தான்..
மாயாவிடம் என்ன பேச வேண்டும் என்று நினைத்து கொண்டே கிண்டிக்கு சென்றான்..
காலேஜ் வண்ணமயமாக இருந்தது, இன்று நிறைவு நாளாக இருக்க அனைவரும் பாரம்பரிய உடையணிந்து வந்திருந்தனர்,.
தனது காரை கேட் நம்பர் 3 இல் நிறுத்தி இருந்தவன், மாயாவை தேட, சில பெண்கள் செல்வதை பார்த்தவன் அதில் மாயாவை தேடினான்..
அதில் மாயா இல்லை என்றவுடன், மாயாவை தேட…
தூரத்தில் மாயா வருவது போல் தெரிய, அவள் தானா என்று பார்த்தபடியே நின்றிருந்தான் அக்னி..
மாயா தனியே வேகமாக அவனை பார்த்தபடியே நடந்து வந்து கொண்டிருந்தாள்..
இன்று மாயா இளமஞ்சள் நிற காட்டன் பட்டுப்புடவையில் தேவதை போல் தன்னை நோக்கி வந்த பெண்ணை ரசிக்காமல் இருக்க முடியவில்லை அக்னியால்..
மாடல் உடையில் சின்ன பெண்ணாகவும், புடவையில் பெரிய பொண்ணாகவும் தனக்கு மேட்ச் ஆக இருக்கும் மாயாவை ரசனையோடு பார்த்து இருந்தான்..
அவன் பார்வை மாற்றத்தை பார்த்த படியே வந்தாள் மாயா..
“சாரி சார் ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா?”..
“இல்லை மாயா” என்று தலையாட்டியவன் முன் பக்க கார் கதவை அவளுக்காக திறந்து விட…
ஒரு புன்னகையோடு அக்னியின் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்..
அக்னி இன்று கம்பெனிக்கு செல்லவில்லை அதனால் ஜீன்ஸ் டீ சர்ட் அணிந்து அழகாய் வந்த அக்னியை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் மாயா.. “சீட் பெல்ட் போடு மாயா” என்றவன் காரை ஸ்டாட் பண்ணி மாயாவிடம் பேசாமல் ஓட்டிக்கொண்டே வர..
அக்னி மாயாவிடம் பேசாமல் காரை வெகுநேரமாக ஓட்டிக் கொண்டே வருவதை பார்த்தவள்.
ஒருவேளை என்னை பிடிக்கவில்லையோ திருமணம் வேண்டாம் என்று சொல்லி விடுவாரோ என்று அவன் , முகத்தையே அவள் பார்க்க.
அவள் தன்னை பார்ப்பதை அறிந்து கொண்டவன் அவளை திரும்பிப் பார்த்து என்னவென்பது போல் புருவத்தை உயர்த்தி கேட்க. “ஒன்றும் இல்லை” என்று திரும்பிக் கொண்டாள்..
ஒரு அரை மணி நேரம் பயணத்தின் பிறகு ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் முன்பு காரை நிறுத்தினான் அக்னி.
“எங்கே வந்து இருக்கோம்” என்றாள் மாயா..
“வா சொல்றேன்” என்று லிப்ட் வழி முன்னாடி அக்னி செல்ல, அவன் பின்னாடியே சென்றாள் மாயா.
ஆறாவது மாடி செல்வதற்கான பட்டனை அழுத்தினான் அக்னி..
மாயா அமைதியாக அக்னியை பார்த்தபடியே அவனுடன் வந்தாள். லிப்ட் ஆறாவது மாடியில் நின்றவுடன் அவளை அழைத்து கொண்டு ஒரு வீட்டின் முன் நின்றவன்..
“நான் முதல் முதல்ல சம்பாதிச்சு வாங்கின வீடு மாயா வா” என்று அவளை வீட்டிற்கு அழைத்து சென்றான்..
அவன் சொல்லியதை கேட்டவாறே அவனோடு வந்தாள் மாயா..
வீடு எந்த ஒரு தூசி இல்லாமல் சுத்தமாக அழகாய் இருந்தது,,
ஒரு புன்னகையோடு வீட்டை சுற்றி பார்த்தாள் மாயா, மூன்று படுக்கையறை கொண்ட அழகான வீடு,, ஹாலின் சுவரில் அக்னி காலேஜில் எடுத்த நிறைய புகைப்படங்கள் அழகாய் பெரியதாக ப்பிரேம் போட்டு படங்கள், சுவர்ரில் நிறைய இருந்தன, அவன் சின்னவயது போட்டோ, அவன் தந்தையோடு எடுத்து கொண்ட போட்டோ, தங்கை கல்யாணம், தம்பி கல்யாணம் என்று அவன் வாழ்க்கையில் முக்கியமான தருணங்களில் எடுத்த அனைத்து போட்டோக்களையும், சுவர்ரில் மாட்டி இருக்க, மாயா அனைத்தையும் பார்த்தாவாறே நிற்க ஒவ்வொரு புகைப்படமும் அவளுக்கு ஒவ்வொரு கதை சொல்ல அந்த போட்டோவை ஆசைகாக பார்த்து நின்றவளை..
அக்னியால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை..
“மாயா” என்று அவளிடம் காப்பி கோப்பையை நீட்ட.. “நீங்க போட்டீங்களா?” என்று..
மலர்ந்த முகத்தோடு “தாங்யூ சார்” என்று வாங்கி பருகினாள்..
அவன் குடும்ப புகைப்படங்களை பார்த்து “இது யாரு, இவங்க” என்று அனைவரையும் கேட்டு தெரிந்துக்கொண்டாள்..
அக்னி போட்டோவில் உள்ள தன் குடும்ப நபர்களை ஒவ்வொருவரையும் பற்றி சொல்லிக்கொண்டு இருக்க..
“புயூட்டிஃபுல் பேமிலி” என்றாள் மாயா ஒரு புன்னகையோடு.
காபி காலியாகவும் “வா உட்காரு” என்றான் சோபாவை காட்டி..
காலியான காப்பி கோப்பை அவனின் கையில் இருந்து வாங்கி கொண்டவள் அதை சுத்தப்படுத்தி கிச்சனில் வைத்து விட்டு வந்தாள் மாயா..
அக்னி கண் மூடி அமைதியாக சோபாவில் சாய்ந்து அமர்ந்து இருக்க.
அவனையே பார்த்தபடி ஒரு நிமிடம் இருந்தவள்..
” என்னை உங்களுக்கு பிடிக்கலையா”?. என்றாள் கண்மூடி இருந்த அக்னியிடம்..
அவள் பேசியதும் கண் திறந்து பார்த்தவன் “என்ன”? என்றான்..
“இல்லை என்னை உங்களுக்கு பிடிக்கலையா, அத சொல்லத்தான் இங்க கூட்டிட்டு வந்தீங்களா, அதனால தான் என்கிட்ட சரியாவே பேச மாட்டேங்குறீங்க”…
“அப்படியெல்லாம் இல்ல மாயா, உட்காரு” என்றான்.
எதிரில் உள்ள சோபாவை காட்டி அவளை அமர சொல்ல.. அவளோ அவன் பக்கத்தில் உள்ள சோபாவில் வந்து அமர்ந்து கொண்டு.. அவனை பார்த்த படியே அமர்ந்து.
“அப்போ ஏன் என்கிட்ட சரியா பேச மாட்டேங்கறீங்க அன்னைக்கு காலேஜ்ல என்கிட்ட நல்லா தானே பேசுனீங்க, ஏன் இன்னைக்கு என்கிட்ட பேச மாட்டேங்குறீங்க? நான் உங்களுக்கு செட்டாக மாட்டேனா?”.. என்றதும்..
நான் பேச வேண்டியது எல்லாம் இவ பேசுறா. என்று…
நீண்ட மூச்சை உள்ள இழுத்து விட்ட அக்னி பேச ஆரம்பித்தான்.
” உனக்கு நான் ஒகேவா மாயா”?..
” அது நான் அன்னைக்கே உங்க கிட்ட ஹாஸ்பெட்டல்ல வச்சு ஓகே சொல்லிட்டேனே சார், உங்களை கல்யாணம் பண்ணுறதுக்கு சம்மதமுன்னு”…
“அது வேற மாயா அது உங்க அப்பா உன்னை கல்யாணம் பண்ண சொல்லி கட்டாயப் படுத்துனாரு அதனால தானே நீ ஓகே சொன்னா? இப்ப சொல்லு என்னை கல்யாணம் பண்ண உனக்கு சம்மதமா?”..
“உம்ம்”.. என்று மாயா தலையாட்ட..
” நல்லா யோசிச்சு சொல்லு மாயா நாளைக்கு உன் பிரண்டு வந்து உன் ஹஸ்பண்ட் உன்னை விட பத்து வயசு மூத்தவரு, வயசு அதிகமா தெரியுது, நீ சின்ன பொண்ணா தெரியுற, அப்படின்னு சொன்னா , நீ வருத்தப்படக் கூடாது, உனக்கு டைம் தரேன், யோசிச்சு சொல்லு” என்றதும்..
” உங்களுக்கு என்ன வேணும் சார்? நான் எப்படி சம்மதம் சொன்னா என்னை புரிஞ்சிப்பீங்க நீங்க”..
” நீ மனப்பூர்வமா தான் என்னை கல்யாணம் பண்ண சம்மதம் சொன்னியா? “”.
” ஆமாம் ,ஆமாம் சார் “.. என்றாள் கடுப்பாக..
“உங்க அப்பா சொன்னதால தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னியா?”..
“கண்டிப்பா இல்ல சார்,
“உங்க அப்பா சொன்னாதால தானே என்னை கல்யாணம் பண்ண ஓகே சொன்ன?”.. என்று அக்னி சொன்னதையே மீண்டும், மீண்டும் அவளிடம் கேட்க.
ஐ யோ இவரை எப்படி சொல்லி புரியவைக்க! என்று சிரித்தவளை.. “என்ன சிரிக்குற”? என்றான் கோபமாக..
” சார் உங்களை ஏற்கனவே எனக்கு தெரியும் சார்.. உங்களை நான் சாராதா ஆசிரமத்துல நான் பார்த்திருக்கேனே உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றதும்..
” என்ன ஏற்கனவே என்னை தெரியுமா உனக்கு?”….
“ஆமாம்” என்றளின் நினைவு முதல் முதலில் அக்னியை பார்த்த ஞாபகம் மனதில் தோன்ற…
error: Content is protected !!