Skip to content
Post Views: 1,326
உலகநாதன் மகள் அருகில் வந்து “கால் வலிக்குதா கண்ணம்மா”.. என்று கேட்டு மகளுக்கு சூஸ் கொண்டு வந்து கொடுத்தார்..
அவர்களின் பாசத்தை பார்த்த அக்னிக்கு கடுப்பாக வர.. சிரித்தபடியே மேடையேறினான்..
Advertisement
அங்கே கூடியிருந்த அனைவரும் ஜோடி பொருத்தம் பிரமாதம் என்று கூற. அனைவரும் மேடை ஏறி மணமாக போகும் இருவருக்கும் வாழ்த்து சொல்லி போட்டோ எடுத்து செல்ல..
மாயாவின் கவனம் முழுவதும் அக்னி தான்.. அவனை காதல் பார்வை அவள் பார்க்க..
Advertisement
Advertisement
அக்னிக்கு அப்படியில்லை மாயாவோடு தனியாக இருக்கும்போது மட்டும்தான் அவன் காதல் பார்வை பார்ப்பான்..
இப்பொழுது அவன் வந்தவர்களை கவனித்து பேசுவதிலே கவனமாக இருக்க மாயாவோ அக்னியை மட்டுமே கவனிப்பது தன் வேலை என்று அவள் செய்து கொண்டு இருந்தாள்.. அக்னிக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது,, கடுப்பாகவும் இருந்தது..
Advertisement
மெல்ல குனிந்து அவளிடம் “இனிமேல் இப்படி பார்த்த இங்கேயே கிஸ் பண்ணிடுவேண்டி” என்றான் அவளை மிரட்டுவது போல..
அவள் அதற்கும் வெட்கப்பட்டு அவனிடம் ஒன்றுவது போல் அவனோடு ஒன்றி நின்றவளை என்ன செய்ய என்று பார்த்திருந்தான்..
நிலாவுக்கு அண்ணன் படும் அவஸ்தை புரிந்து கொண்டவள் மாயாவிடம் பேசி அவளை தன் பக்கம் திருப்பி இருந்தாள்..
நள்ளிரவு 12 மணி ஆகியது கூட்டம் குறைய ஆட்கள் கொஞ்சம் குறைந்த உடன். அக்னியையும், மாயாவைவும் உண்ண அழைத்துச் சென்றார்கள்.. மாயாவிற்கு கை கால் வலி எடுக்க, உண்ண கூட முடியாமல் கஷ்டப்பட்டவளை பார்த்த அக்னி, உணவை தவிர்த்து அவளுக்கு வெறும் சூஸ்சை மட்டும் தர வைத்து குடிக்க வைத்த அக்னி..
நிலாவை அழைத்து மாயாவை ரூமிற்கு அனுப்பி வைத்தான்..
நிறையா பிஸ்னஸ் பிரண்ட்ஸ் வந்திருக்க, அவர்களிடம் பேசி, கவனித்து வழிஅனுப்பி வைக்க.. அதிகாலை ஆகிவிட்டது..
அக்னி மாயாவின் அறைக்கு வர. நிலாவும், மாயாவும் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தனர்..
அவர்களை எழுப்பி.. “நேரம் ஆச்சு கிளம்புங்க” என்று எழுப்ப.. மாயா கண்ணை கசக்கிய படியே எழுந்து அமர்ந்தாள்..
” கிளம்பு மாயா டைம் ஆச்சு”என்று கூறி அவன் வெளியே வர..
அழகு நிலைய பெண்கள் வந்து கொண்டிருந்தனர் அவர்களைப் பார்த்தவன் மாயாவுக்கு எந்த மாதிரி தலை அலங்காரம் பண்ணனும். எப்படி மேக்கப் பண்ணனும் என்று அவர்களிடம் சொல்லிவிட்டு.. அவன் அறைக்கு சென்றான்.
நிலாவுக்கு போன் செய்தவன் “நான் மண்டபம் போறேன் நீ மாயா ரெடியானதும் கூட்டிட்டு வா” என்று சொல்லி குளித்து முடித்து, பட்டு வேஷ்டி சட்டையில், கல்யாண மண்டபத்துக்கு கிளம்பினான்..
அக்னிக்கு முன்பே உலகநாதன் கல்யாண மண்டபத்துக்கு சென்று.. அங்கு கல்யாண வேலைகள் எப்படி நடக்கிறது என்று மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்..
அக்னியை பார்த்த உலகநாதன் “ஏன் மாப்பிள்ளை சீக்கிரம் வந்துட்டீங்க கொஞ்ச நேரம் தூங்கிட்டு வர வேண்டியதுதானே,” என்று கேட்க..
“இருக்கட்டுமா மாமா” என்று முதல்முறையாக மாமா என்று அழைத்திருந்தான் உலகநாதனை..
“சரி மாப்பிள்ளை மணமகன் ரூம் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க நான் முகூர்த்த நேரம் வந்தவுடன் கூப்பிடுறேன்” என்றவர்.. அக்னியை மணமகன் அறைக்கு அனுப்பி வைத்திருந்தார்..
அக்னி மண்மகன் அறைக்கு சென்று 10 நிமிடத்தில் அவன் கதவை திறந்து கொண்டு அவன் சித்தப்பா ஞானபிரகாஷ் கோபமாக வந்திருந்தார்.
இவர் ஏதாவது பிரச்சனை பண்ணிருவாரோ என்று அக்னி பயந்து அவன் சித்தப்பனை பார்க்க..
தன் அண்ணன் மகனின் கன்னத்தை பதம் பார்த்திருந்தார் ஞானபிரகாஷ்.
தன் கன்னத்தைப் பிடித்த படியே அக்னி அவரை பாவமாக பார்த்து நிற்க..
“நீயெல்லாம் என் அண்ணன் பையனா டா?.. அந்த நம்பிக்கை துரோகி உலகநாதன் பெண்ணையா? நீ கல்யாணம் பண்ண போற சீ” என்று அக்னியை திட்டியிருந்தார்….
” சித்தப்பா சொல்றத கேளுங்க” என்று ஏதோ அக்னி சொல்ல வர..
” இன்னையோட உன்னோட உறவு முடிஞ்சது,, இனிமே என் மூஞ்சில முழிக்காத” என்றார்
அக்னி அதிர்ச்சியாகி..
மறுபடியும் “சித்தப்பா நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க” என்றான்..
“என்னடா கேட்கணும் என்ன கேட்கணும்? நீ அந்த உலகநாதன் பையல பார்த்தவுடன் என்ன செஞ்சிருக்கணும்,அவனை கண்ட துண்டமா வெட்டி போட்டு இருக்கணும் தானே அதை விட்டுட்டு , அவனோட உறவாடிட்டு இருக்க,, உன்னை வளர்த்தவளுக்கு நல்லது பண்ணிட்டடா , என்னை விட உனக்கு தானேடா அந்த உலகநாதன் பய மீது கோபம் இருக்கனும்..
எங்கே போச்சுடா அந்த கோபம் நம்ம குடும்ப நிம்மதியை கெடுத்தவன் அவன், நாமா இன்னும் கஷ்டப்படுறதுக்கு காரணமே அவன் தான், அவன் வீட்டு பொண்ண நீ கட்ட போற உன்னை நினைச்சு எனக்கு உடம்பெல்லாம் கொதிக்குதுடா..
எனக்கு மட்டும் ஒரு பெண் பிள்ளை இல்லைன்னு வச்சுக்கோ இந்நேரம் அந்த உலகநாதன் பயல வெட்டி போட்டு ஜெயிலுக்கு போய் இருப்பேன்டா, என் நிலைமை சரியில்லை இப்போ,,,
இல்லன்னா அந்த உலகநாதனை பார்த்தவுடனே கண்டந் துண்டமா வெட்டி போட்டு இருப்பேன்” என்றவர்..
“உன் அத்தை கஷ்ட பட்டதை எல்லாம் மறந்துட்டியா டா நீ எதுக்காண்டி, அந்த பொண்ண கட்ட போற பணம், பணத்துக்காண்டியா,,”?..
“இல்லை சித்தப்பா”.. என்றான் அக்னி..
“ஒரு நிமிஷம் கூட இந்த இடத்தில் நான் இருக்க மாட்டேன், என்குடும்பமும் இருக்காது” என்று அவர் வேகமாக வெளியில் செல்ல..
சித்தப்பாவிடம் இப்போது எது சொன்னாலும் அவருக்கு எதுவும் புரியாது, அவர் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அக்னியின் மனதில் உள்ள கொதிப்பை இன்னும் அதிகரித்திருக்க இறுகி போய் அமர்ந்திருந்தான்..
ஞானபிரகாஷ் அவரின் குடும்பத்தை கீழே கார் பார்க்கிங் வரச் சொல்லிவிட்டு அவர் வெளியே வாசல் அருகில் வர..
சரியாக பொண் அழைப்பு நடந்து கொண்டிருந்தது, மாயா தேவதை போல் டபுள் சாரியில், உடை உடுத்தி மகாராணி போல அணிந்து,, அக்னி வாங்கி கொடுத்த ராஜஸ்தானின் தங்க நகைகளை அணிந்து தலையில் மகாராணி போல் அலங்காரம் பண்ணி ஆரஞ்சு வண்ண பட்டுப்புடவையில் தேவதை போல் காரில் இருந்து இறங்கி வந்த மருமகளை கட்டி அணைத்து முத்தமிட்டார் பார்வதி..
பார்வதி மண்டப வாசலிலே வைத்து மாயாவுக்கு திஷ்டி கழித்து, ஆரத்தி எடுத்துக் கொண்டிருக்க,,தன் கொழுந்தன் வெளியில் வருவதை பார்த்த பார்வதி “வாங்க வாங்க கொழுந்தனாரே வாங்க,வாங்க சரியான நேரத்துக்கு வந்திருக்கீங்க, உங்க மருமகளை அழைக்க” என்ற பார்வதி…
” முன்னாடி வாங்க” என்று அவரை மாயாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்..
” மாயா உனக்கு இது சின்ன மாமனார், பேரு ஞானபிரகாஷ் ஆசிர்வாதம் வாங்கிக்கோ” என்று கூறியவுடன்..
அவரின் பாதம் பணிந்திருந்தாள் மாயா…
ஞானபிரகாஷ்க்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை தர்மசங்கடமான நிலைமையில் இருந்தார், தன் தங்கை ரதி தேவி போலவே கல்யாணம் ஆக கிளம்பி வந்த பெண்ணை அவரால் திட்ட கூட முடியவில்லை…
மாயா காலில் விழுந்ததும் “நல்லாயிருமா” என்று இருந்தார்..
மாயா கைகூப்பி அவர் முன் நிற்பதை பார்த்தவருக்கு,
இவன் அப்பன் செய்ததற்கு இந்த சின்னப் பிள்ளை என்ன செய்யும் என்று மனதில் தோன்ற,, தன் அண்ணன் மகனுக்காக வாங்கி வந்த தங்க சங்கிலியை மாயாவின் கையில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்..
இதை அனைத்தையும் பால்கனியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் அக்னி..
அக்னி உடனே தன் தம்பி தேவ்வை தன் ரூம்பிற்க்கு அழைத்து அவனுக்கு சில கட்டளைகளையிட.. அவனோ அதிர்ச்சியாகி அண்ணனை பார்க்க… ” சொன்னதை செய்” என்று இருந்தான் அக்னி…
தேவ் அண்ணன் சொன்னதை தட்ட முடியாமல் “சரி ” என்று கீழே வந்து அவன் சொன்னதை செய்து முடிக்க..
மாயாவை மணமேடைக்கு அழைத்து சென்று சில சடங்குகளை ஐயர் செய்தார்.. பின்பு அவளை அவள் அறைக்கு அனுப்பி விட்டு,, மாப்பிள்ளையை கூட்டிட்டு வர சொன்னார்..
அக்னி அமைதியாக வந்து மண மேடையில் அமர்ந்து ஐயர் சொல்வதை ஒவ்வொன்றாக செய்து முடிக்க..
ஐயர் பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ என்றதும்..
மாயா அக்னியை பார்த்தபடியே மணமேடைக்கு வந்து அவன் பக்கத்தில் அமர..
அக்னியோ மாயாவை திரும்பி பார்க்கவே இல்லை அமைதியாக அவன் அமர்ந்திருக்க..
அவள் வந்து அமர்ந்தும் தன்னை திரும்பி பார்க்காதது, ஏன் என்னாச்சு அவருக்கு.. என்றுநினைத்தவள்..
அவனின் கவனம் இங்கே இல்லாமல் இருக்க அக்னியின் கை மீது தன் கையை வைத்திருந்தாள் மாயா..
அதில் உணர்வு வந்தாஅக்னி மாயாவை திரும்பி பார்த்தான்..
அவன் முகம் எந்த ஒரு சந்தோஷமும் இல்லாமல் நிர்மூலமாக இருக்க ஏதோ இழந்தது போல் இருந்த அவன் முகத்தை பார்த்தவளுக்கு பயம் வர..
” என்னாச்சுத்தான் உடம்பு சரியில்லையா, உங்க கை ஏன் இவ்வளவு சூடா இருக்கு” என்றாள்..
“ஒன்னும் இல்லை மாயா” என்று தலையாட்டினான்..
மாயாவுக்கு ஒன்றும் புரியவில்லை அனைத்து சடங்குகளும் நடந்து முடிக்க..
ஐயர் தாலியை வாங்கி பூஜை செய்து அனைவரிடமும் குடுத்து ஆசீர்வாதம் வாங்கி வர சொன்னவர்..
” கெட்டி மேளம், கெட்டி மேளம் என்று சொல்லி தாலி கயிறை அக்னியின் கையில் கொடுக்க..
அக்னி தாலி கயிறை தன் கையில் வாங்கியவன் மாயாவை பார்க்க..
மாயா கண்கள் மின்ன அதித சந்தோஷத்துடன் தன்னவனை பார்த்து கைகூப்பி தலை சாய்ந்து தாலி கட்ட அவனோடு ஒன்றாக சாய்ந்து அமர்ந்திருக்க..
” சாரி மாயா” என்றவன்.. தாலியை அவள் கழுத்தருகே கொண்டு சென்றவன் முதல் முடிச்சை போட போகும் முன் போட்டோகிராப்பரை பார்க்க. அவனோ போட்டோ எடுத்து விட்டேன் என்று கட்டைவிரலை தூக்கி காட்ட..
சட்டென்று அவள் கழுத்தில் முதல் முடிச்சு போடாமல் தன் கையில் இருந்த தாலியை அக்னி குண்டத்தில் தூக்கி எறிந்து இருந்தான் அக்னி….???
error: Content is protected !!