தேவதை போல் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த மாயாவை காதலோடு பார்த்திருந்தான் அக்னி..
Advertisement
உலகநாதன் அக்னியின் பக்கத்தில் மாயாவை நிற்க வைத்துவிட்டு.. அவர்களின் பின்னால் சென்று நின்று கொண்டார்..
சர்ச் பாதர் வந்து மாயா, அக்னி இருவருக்கும் இந்த நிச்சயத்தில் சம்மதமா என்று கேட்க,,
இருவரும் “சம்மதம்”என்று தலையாட்ட இருவர்களுக்கும் மோதிரம் வழங்கப்பட்டது..
அக்னி மாயாவின் கையை பிடித்து அவளுக்கு மோதிரம் போட்டு விட.. அக்னியை பார்த்து சிரித்தவள்.. தன்னவன் கையை பிடித்து அவனுக்கு மாயா மோதிரம் போட.. அங்கே உள்ளவர்கள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்….
மாயாவுக்கும் மிகவும் சந்தோஷம்..
தன் தாய் தன்னோடு இருப்பது போல் உணர்ந்தாள்..அவளும் அவள் தாய் பெர்னிலாவும் நிறைய தடவை இங்கு நடக்கும் திருமணத்திற்கு வந்திருக்கிறார்கள்.
ஒரு முறை, ஒரு திருமணம் பிரம்மாண்டமாக இங்கே நடக்க “அம்மா நம்ம கல்யாணம் இப்படித்தான் நடக்குமா” என்று மாயா கேட்க..
“ஆமாம் மாயா, ரியாவுக்கும் உனக்கும் இங்கேதான் திருமணம் நடக்கும், இதை விட நல்லா கிராண்ட் டா செய்யலாம் சரியா” என்று தன் தாய் பெர்னிலா சொல்லியதை நினைத்து பார்த்தாள்..
உங்கள் ஆசை நிறைவேறிடுச்சா மம்மி, என்று தன் தாய் பெர்னிலாவிடம் மனதில் பேசியவள் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க என்று கேட்டு கொண்டாள் மாயா….
இருவரும் மோதிரம் மாற்றிய பின்பு.ஜெபம் கூட்டம் நடைபெற்றது.. பின்பு சின்ன பிள்ளைகள் நடனமாட ,மதியம் உணவு அனைவருக்கும் அங்கேயே ஏற்பாடு பண்ணியிருக்க அனைவரும் உணவு அருந்திவிட்டு..
இரவு பாண்டிச்சேரியில் நடக்கும் ரிஷப்ஷன் நடக்க இடத்திற்கு வந்து கொண்டிருந்தனர்..
அவரவர் அவர்களின் கார்களில் செல்ல.. மாயா தன்னோடு தன் தந்தை உலக நாதனை அழைத்துக்கொண்டு அக்னியின் காரில் கிளம்பினாள்..
அக்னி மௌனமாக வர.. மாயாவும், உலகநாதனும் சர்ச்சில் நடந்துவற்றை பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்தனர்..
உலகநாதன் பேசிக்கொண்டே வர மாயா சற்று அமைதியாக இருந்தாள். என்னவென்று உலகநாதன் திரும்பி பார்த்தார்..
மாயா அக்னியின் தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் அதை பார்த்து தந்தைக்கு சிரிப்பு வந்துவிட்டது.. “இவள் எப்பொழுதும் இப்படித்தான் மாப்பிள்ளை காரில் ஏறினாள் தூங்கி விடுவாள்” என்றார் அக்னியிடம்…
மூன்று பேரும் ரிசார்ட் வந்து சேர.. மாயாவை எழுப்பினார் உலகநாதன், அவள் நன்றாக தூங்க,,
” மாப்பிள்ளை நீங்க எழுப்பி அவளை கூட்டிட்டு வாங்க” என்று ரிசார்ட் சென்று இருவரின் ரூம் கார்டை வாங்கி வந்து கொடுத்துவிட்டு,,
“நைட் 8 மணிக்கு தான் ரிசப்ஷன் மாப்பிள்ளை நீங்க ரெண்டு பேரும் 7:45க்கு வந்தா போதும்” என்று சொல்லி சென்றுவிட்டார்..
மாயாவை அக்னி மெல்ல தட்டி எழுப்பினான்.. அவளுக்கு இரண்டு மூன்று நாட்களாகவே தூக்கம் சரியில்லாமல் இருக்க.. நிச்சயம் முடிந்ததும் கல்யாணம் முடிந்தது போல் நினைத்து.நிம்மதியாக தூங்கினாள்,, அக்னியின் மடியில்…
அவளை எழுப்பியவன் அவளுக்காக என்று தனி ரூம் ஒதுக்கி இருக்க அங்கே அழைத்துச் சென்றவன் மாயாவை மெல்ல படுக்க வைத்து விட்டு “நல்லா தூங்கி எழு டைம் இருக்கு” என்று ரூம் கதவை சாத்தி விட்டு அவன் அறைக்கு சென்றான்..
சாயங்காலம் 4 மணியே, ரிஷப்சனுக்கு இன்னும் நேரம் இருக்க, நம்மளும் தூங்கலாம் என்று அக்னி படுத்த அரை மணி நேரத்தில் அவனின் அறைக்கதவு தட்டப்பட்டது.. யார் என்று கோபத்தில் வெளியே வந்து பார்த்தான்,,அவனின் பீ ஏ பார்த்திபன் நின்று கொண்டிருந்தான் “என்னடா” என்றான் கோபமாக..
“ராஜஸ்தானில் இருந்து நகைகள் எல்லாம் வந்திருச்சு சார், அதான் உங்க கொடுத்துட்டு போக வந்தேன்” என்று நகைகளை அக்னியிடம் தர..
நகைகளை வாங்கிக் கொண்டவன் “உன் வீட்டில் இருந்து எல்லாரும் வந்துட்டாங்களா பார்த்திபா”?..
” வந்துட்டாங்க சார்,என் பேமிலி எல்லாரும்” என்று சொல்ல.
“சரி பார்த்துக்கோ” என்று அவன் அறை கதவை மூடியவன் நகைகள் சரியா இருக்கின்றதா என்று சரிபார்த்தவன் அதை எடுத்துக் கொண்டு மாயா அறைக்கு சென்றான்..
மாயா அப்பொழுது தான் கண்விழித்து எழுந்திருக்க..சற்று சோம்பலாக படுத்திருந்தாள்..
அக்னி கதவை தட்டவும் “இதோ வர்ரேன் அத்தான்” என்று வேகமாக இறங்கிய.
மாயா கதவைத் திறக்க அக்னி கையில் பெரிய நகை பெட்டியோடு நின்றவன்.. மாயாவின் அறைக்கு வந்து நகைகளை தந்து, ” இதை இன்றும் நாளையும் அணிந்து கொள்ள” சொல்லிவிட்டு நீண்ட நேரம் அவளிடம் பேசிவிட்டே சென்றான்..
8 மணிக்கு மகனுக்கு போன் செய்தார் பார்வதி,, “அம்மா நான் ரெடி ஆயிட்டேன், என்று சொல்ல..
” தம்பி நேரம் ஆச்சு,எல்லாம் சரியா இருக்கு நீயும் மாயாவும் ஜோடியா சேர்ந்து வரலாம்” என்று பார்வதி கூறி போனை வைத்திருந்தாள்..
அக்னி மாயாவுக்கு மூன்றாவது முறையாக போன் போட “இதோ 5 மினிட்ஸ் அத்தான், நான் ரெடி” என்று அவளும் மீண்டும் மீண்டும் ஐந்து நிமிடம், ஐந்து நிமிடம் என்று அவனிடம் சொல்லிக் கொண்டே இருக்க..
தன் அறையை சாற்றி விட்டு வெளியே வந்தான் அக்னி..
மாயாவின் அறை கதவை திறந்து கொட்டு அழகு நிலையத்தில் வந்திருந்த பெண்கள் வெளியே செல்வதை பார்த்தவன்..
மாயாவின் அறைக்குள் நுழைந்திருந்தான்..
“ரெடியா மாயா” என்று அவன் உள்ளே வர..
“நான் ரெடி அத்தான்” என்று கண்ணாடி முன் நின்றவள் திரும்பி அக்னியை பார்க்க..
மாயா தேர்வு செய்த சர்வாணியில் ராஜா போல கம்பீரமாக நின்றவனை. பார்த்தவள் அப்படியே கண் சிமிட்டி பார்த்துவிட்டு “ஹாசம் அத்தான்” என்றாள்.
அக்னி விழி விரித்து தன்னவளை பார்த்து நின்றான்,
அவன் தன் உடையை பார்த்து ஒன்றும் சொல்லாமல் இருப்பதை பார்த்தவள் “நல்லா இருக்கா?” என்று அவளின் காக்ரா சோலியை தொட்டு காட்டி சுற்றி காட்ட..
” கார்ஜியஸ் மாயா பேபி” என்றவன்.. அவளை தூக்கி ஒரு சுத்து சுத்தி இருந்தான்..
“ஐயோ அத்தான் மேக்கப் எல்லாம் போய்விடும், அலங்காரம் கலஞ்சிரும் என்னை இறக்கி விடுங்க” என்றாள் மாயா..
அவள் சொல்வது சரி என்று நினைத்து…அவளை இறக்கி விட்டவன், அவளை தலை முதல் கால் வரை உற்று பார்க்க.. “ஏன் அப்படி பாக்குறீங்க” என்றாள் மாயா..
“ஒரு கிஸ் பண்ணிக்கிட்டா மாயா?”..
அவளோ “நோ நோ” என்றாள்..
“கண்டிப்பா கிஸ் பண்ணாமா உன்னை நான் வெளியே விடமாட்டேன்” என்றான்..
“அத்தான் ப்ளீஸ்,, மேக்கப் எல்லாம் அலிஞ்சிடும் ஹேர் ஸ்டைல் எல்லாம் கலஞ்சிடும். ப்ளீஸ் ப்ளீஸ்” என்றாள் மாயா..
“மேக்கப் கலையாம உன்னை கிஸ் பண்றேன் மாயா” என்றான் “அவள் நோ அத்தான்”..என்றவள் பின்பு எப்படி என்பது போல் அவனை பார்க்க..
அவனுக்கும் புரிந்தது தான் அணைத்து முத்தமிட்டால் அவள் அலங்காரம் கண்டிப்பாக கலையும், ஆனாலும் மாயாவை அப்படியா விட முடியவில்லை அவளை கொஞ்சிய தீரா வேண்டாம்.. என்று நினைத்தவன்.. என்ன செய்வது என்று யோசித்தவன். அவள் முன் மண்டியிட்டு அமர..
என்ன செய்யப் போகிறார் இவர். என்று மாயா அவனேயே பயமாக பார்த்து நிற்க..
மாயாவின் உடையை பார்த்தான். அவள் காக்ரா சோலி அணிந்தது அவனுக்கு வசதியாகி போனது.. அவளின் காக்ரா சோலி நன்றாக அவளின் இடுப்பை காட்ட.. உடை மறைக்காத அவளின் இடுப்பில் தன் முகத்தை புதைத்தவன்.. அந்த இடத்தில் அவன் எண்ணில் அடங்கா முத்தத்தை பதிக்க..
அவன் முத்தமிட்டதும் கூச்சத்தில் நெழிந்தவள் “போதும்,, போதும் போதும்,, என்று அவன் தலையை பிடித்து ஆட்டி இருந்தாள்..
“போதும் எழுந்திருங்கா” என்று அவனின் தோளில் அடித்தாள் மாயா.
“இதுக்கே இப்படியா? அப்போ நாளைக்கு என்ன செய்வ”?. என்று அவளை இன்னும் ஏதேதோ சொல்லி சிவக்க வைத்தே ரிசப்ஷன் மேடைக்கு அழைத்து வந்தான்…
அந்த ரெசார்ட் முழுவதும் வண்ண, வண்ண நறுமணம் உள்ள பூக்களை வைத்து அலங்காரம் பண்ணி இருந்தனர்..
மாயாவின் காக்ரா சோலி சந்தன நிறத்தில் ஒரிஜினல் தாமரை பூவை பதபடுத்தி அவளின் உடையில் வைத்து தைத்திருந்தனர், அங்கங்கே பிங் வண்ண நிறத்தில் கல் பதித்து வெர்க் பண்ணி இருக்க பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தது,, அவள் தலை முதல் கால் வரை தாமரை பூ போல் டிசைன் பண்ணி அலங்காரம் பண்ணி இருக்க.. உண்மையில் ஒரு தாமரை பூ போல இருந்தாள் மாயா….
அவளுக்கு ஏற்ற மாதிரியே அக்னி பர்பிள் கலர் சர்வானி அணிந்து இருக்க.. இருவரின் ஜோடி பொறுத்தம் அமோகமாக இருந்தது..
இவர்களை மேடைக்கு அழைத்து செல்ல,, நடன குழுவினர் நடனமாடி அவர்களையும் நடனம் ஆட சொல்ல.. அக்னி எனக்கு நடனம் ஆட வராது என்று கூறி விலகி விட.. மாயா சிக்கி கொண்டாள்.. அவளுக்கு தான் நடனம் ஆட தெரியுமே….
அனைவரும் அவளை ஆட சொல்ல.. மாயா அக்னியை பார்த்தாள்.. அவன் “உன் இஷ்டம்”என்று சொல்லி விட..
அவன் நண்பனை பார்த்து கண் காட்டினாள் மாயா..
பின்னாடி ஒலி பெருக்கில் பாடல் ஒலித்தது,, ‘சித்தாடை கட்டிகிட்டு, சிங்காரம் பண்ணிக்கிட்டு, மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தளாம்,, அத்தானை பார்த்து அசந்து போய் நின்னாளம், என்ற பழய பாடலை புது மியூசிக் போட்டு லேட்டஸ் பாட்டு போல் ஒலிக்க அதற்கு மாயா அக்னியை சுத்தி, சுத்தி வந்து பாடி ஆட.. அக்னியே சிரித்து விட்டான், அவள் நடனம் குழந்தை ஆடுவது போல் சிரித்தபடியே ஆடினாள்..கடைசியில் அத்தானை பார்த்து அசந்து போயி நின்னாளாம் என்ற வரிக்கு, அக்னியை பார்த்து அத்தானை பார்த்து அசந்து போயி நின்னாளாம்’ என்று அவனை தொட்டு இழுத்து வம்பு பண்ணி அவள் பெண் தோழிகளோடு ஆட..
அவளை பார்த்து சிரிப்பு தான் வந்ததது அவனுக்கு.. அவள் உடையை தூக்கி ஆட முடையவில்லை அவளால், எப்படியோ அவள் ஆடி முடிக்க அனைவரும் கைதட்ட.. அக்னி மாயாவை பார்த்து சிரித்திருந்தான்…