Skip to content
Post Views: 1,033
ரதி சிரிக்க…
“என் பெயரை சொல்லுங்க அத்தை” என்றவன் ரதியின் தோளில் கைபோட..
Advertisement
” ஏய் கைய எடுடா நான் தான், அத்தை மேல கை போடுவேன்” என்று அக்னி சொல்ல..
இருவரும் பேசி சண்டை போடுவதை அனைவரும் வேடிக்கை பார்த்து சிரித்தனர்..
Advertisement
Advertisement
மாயாவுக்கு தேவ் இவ்வளவு பேசுவாரா என்று அவளுக்கு ஆச்சரியம்,, அக்னி பேசுவது பற்றி தான் அவளுக்கு தெரியுமே..
தேவ்யின் மனைவி மாயாவிடம் “பாத்தீயா என் வீட்டுக்காரர் அவங்க அத்தையை பார்த்த உடனே எப்படி பேசுகிறார்” என்று சொல்லி சிரிக்க..
Advertisement
பார்வதி தன் குடும்பம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததை பார்த்தவர் “அப்படியே எல்லாரும் இருக்க சுத்தி போடுறேன்” என்றவர்…
அனைவருக்கும் திருஷ்டி சுத்தி போட்டவர்..என் குடும்பம் இப்படியே எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்..
அன்று இரவே நிலாவுக்கு பிரசவ வலி வந்து விட.. அழகான ஆண் குழந்தை பிறந்து விட்டது அனைவருக்கும் மிகவும் சந்தோஷம்..
மறுநாள் காலையில் ஞானபிரகாஷ் குடும்பத்தோடு வந்திருந்தார்..
பேரப்பிள்ளையை பார்க்க வந்தவர் ரதியையும் பார்க்க வந்திருந்தார்..
ரதியை பார்த்தவருக்கு பேச்சை வரவில்லை தங்கையின் கைகளை பிடித்தவர் தோள் அணைத்தும் கொண்டார்..
உலகநாதன் அமைதியாக இருவரையும் பார்த்திருக்க..
உலகநாதன் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்ட ஞானபிரகாஷ்..
“உங்களுக்கு எவ்வளவு நன்றி சொல்லுறது, எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியல. நான் உங்களை ரொம்ப பேசிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள்”.. என்று ஞானபிரகாஷ் மன்னிப்பு கேட்க..
“பரவாயில்லை நீங்க ரதியை” பாருங்க என்றிருந்தார்..
ஞானபிரகாஷ் இரண்டு நாள் தங்கையோடு பார்வதி வீட்டில் இருந்து விட்டு சென்றிருந்தார்..
நிலா ஹாஸ்பெட்டலில் இருந்து வீட்டுக்கு வர ஒரு வாரம் ஆகியது..
உலகநாதன், ரதி,மாயாவும் அனைவரும் ஒரு வாரமாக பார்வதி வீட்டில் தான் இருந்தார்கள்..
உலகநாதனுக்கு ரதியோடு பேச தனிமை கிடைக்கவில்லை.. மாயா எப்பொழுதும் ரதியுடவே இருக்க,, அவரால் ரதியிடம் மனது விட்டு பேச முடியவில்லை..
நிலா வீட்டுக்கு வந்த மறுநாள் நாங்கள் “எங்க வீட்டுக்கு போறோம்” என்று உலகநாதன் கூற..
பார்வதிக்கு ரதியை அனுப்பி வைக்க மனமே இல்லை.. இருந்தாலும் உலகநாதனை எண்ணி.. அவருக்கு இங்கு இருக்க கஷ்டமா இருக்கும் என்று “போயிட்டு வாங்க” என்று சொன்னார்..
ரதிக்கும் பார்வதி வீட்டை விட்டு போக மனமே வரவில்லை.. அதுவும் மாயா பாசமாக நடந்து கொள்ள.. மாயவை பிரிவதற்க்கு அவருக்கு மிகவும் கஷ்டமாக இருக்க..
அப்புறம் அவளின் அப்புக்குட்டி அவளை சுத்தி சுத்தி அத்தை அத்தை என்று பாசமாக நடந்து கொள்ள அனைவரையும் பிரிவது மிகவும் கஷ்டமாக இருந்தது ரதிக்கு..
ரதியும், உலகநாதனும் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப..
மாயா ரதியின் கையை பிடித்துக் கொண்டு “அப்பாவை நல்ல பாத்துக்கோங்க மா நீங்களும் நல்லா சாப்பிடுங்க ரதிமா” என்று அணைத்துக்கொண்டாள்..
“நீ எங்களோட வர்றியா மாயா” என்று ரதி கேட்க,,
” இல்லம்மா நீங்க அப்பா கூட போங்க நான் இன்னொரு நாளைக்கு வர்ரேன்” என்றாள்..
ரதி அக்னியை நிமிர்ந்து பார்க்க..
தன் அத்தையின் அருகில் வந்தவன் ரதியின் கைகளை எடுத்து உலகநாதன் கைமீது வைத்து,,
“பார்த்துக்கோங்க என் அத்தையை” என்று கண்களால் பேச..
“அவரோ அவனின் கைகளை பிடித்து அழுத்தி ‘நான் பார்த்துக்கிறேன் உன் அத்தையை” என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்..
மாயாவுக்கு ரதியும், உலகநாதனும் சென்றதும் வீடே அன்னியமாகி போனது..
கீழே உள்ள பார்வதியின் அறையில் சென்று படுத்துக் கொண்டாள்..
பார்வதி எப்பொழுதும் நிலாவின் அறையில் நிலாவையும், குழந்தையை பார்த்துக்கொண்டு இருப்பார்..
மாயா இருக்கும் அறையில் அக்னி கதவை தட்டி விட்டு உள்ளே வர..
என்ன என்பது போல் அவனை மாயா நிமிர்ந்து பார்த்தாள்.
அவளிடம் ஒரு வீடியோவை காட்டியவன் “இதைப் பாரு” என்று சொல்ல..
“சரி” என்று வாங்கி அந்த வீடியோவை பார்த்தாள் மாயா.
அதில் ஒரு பிரபலமான டாக்டர் தன் ஹாஸ்பெட்டலில் பிரசவம் நடந்த மூன்று குழந்தைகள், நான்கு குழந்தைகளின் பெற்றோரும், குழந்தைகளையும் காண்பித்து பேசிக்கொண்டிருக்க,, மூன்று குழந்தை, நான்கு குழந்தைகளை கூட ஈசியாக பெத்துக்கலாம்.. எங்க ஹாஸ்பெட்டலுங்க வாங்க நாங்க பார்த்துக்கிறோம் என்று அவர் பேட்டி கொடுக்க..
அதை பார்த்த மாயாவுக்கு பெரிய நம்பிக்கை வந்தது..
“இந்த டாக்டர் எங்கே இருக்கிறார்”? என்று மாயா அக்னியிடம் கேட்க..
“பாண்டிச்சேரியில நாளைக்கு மார்னிங் உனக்காக அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கேன். இப்ப கிளம்பி போய் நைட்டு நம்ம அங்க ஸ்டே பண்ணிட்டு காலையில் ஹாஸ்பெட்டலுக்கு போக சரியா இருக்கும்..
இப்ப கிளம்புறியா?” என்று அக்னி மாயாவிடம் கேட்க..
“கிளம்பலாம்” என்றவள் அரை மணி நேரத்தில் தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்..
அக்னி கிளம்பி வந்தவன், “உன்னுடைய பழைய ரிப்போர்ட் எல்லாத்தையும் எடுத்து கிட்டியா மாயா”..
“ஊம்ம் எடுத்துட்டேன்” என்று கூற..
அவள் எடுத்த வைத்த பேகை வாங்கி தோளில் போட்டவன் மாயாவின் கையை பிடித்துக் அழைத்துக்கொண்டு வெளியில் வந்தவன்..
பார்வதியிடம் அக்னி அனைத்தையும் கூறி,, “நாங்க ஹாஸ்பெட்டல் போயிட்டு வர்ரோம்” என்று கூற..
“சரி” பத்திரமா போயிட்டு வாங்க,, நிலாவை நான் பார்க்கணும் இல்லையென்றால் நானும் உங்க கூட வருவேன்”.. என்றவர்..
“பத்திரம்” என்றவர் மாயாவுக்கு திருநீர் பூசி,, “எல்லா நல்ல படியா நடக்கும் போயிட்டு வா” என்று மகனோடு அனுப்பி வைத்தார்…
நீண்ட பயணம் அக்னி கார் ஓட்ட மாயா முன்சீட்டில் சாய்ந்து கண் மூடி சாய்ந்து படுத்திருந்தாள்..
அவள் தூங்கவில்லை என்று தெரியும் காரின் பிளேயரில் இளையராஜாவின் பாடல் ஒலித்துக்கொண்டிருக்க..
அந்த பாடலின் ஒலிக்கு ஏற்ப தன் கைகளை தாளம் போட்டுக்கொண்டு ரசித்துக் கொண்டே கண் மூடி வந்தாள் மாயா..
அக்னி தேவையில்லாமல் மாயாவிடம் எதுவும் பேசவில்லை தேவைக்கு மட்டுமே மாயாவிடம் பேசினான்..
அக்னி கேட்டதுக்கு மாயா ஒரு வார்த்தை இல்ல இரண்டு வார்த்தைகளில் மட்டும் பதில் சொல்ல.. அமைதியாகி இருந்து கொண்டான் அக்னி..
அந்த பெரிய பீச் ஹவுஸ் வீட்டின் முன்னாடி அக்னியின் கார் நின்றது..
வாட்ச்மேன் வந்து கேட்டை திறந்து விட அக்னி கார் வீட்டில் உள்ளே நுழைய மாயா தூக்கத்தில் இருந்து மெல்ல கண் விழித்து எழுந்தாள்..
கண் திறந்து பார்த்தவளுக்கு.. கடல் அலையின் சத்தமும்,கடல் காற்று வீச.. ஒரு புத்துணர்ச்சியாக இருந்தது மாயாவுக்கு..
அக்னி முதலில் இறங்கி மாயாவுக்கு சீட் பெல்டை கழட்டியவன் கை கொடுத்து மெல்ல அவளை இறக்கி விட….
மாயாவுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது..
அவளின் தடுமாற்றத்தை பார்த்தவன்.. “என்ன செய்து மாயா”? என்று அவன் கேட்க.. “ஒன்றும் இல்லை” என்றவள்..
மெல்ல இறங்கி கடல் காற்றை சுவாசித்த படியே அப்படியே வாசற்படியிலே அமர்ந்து விட..
“உள்ளே வா மாயா! என்று அக்னி வீட்டினுள் அழைக்க..
“நான் இங்கே உட்கார்ந்து இருக்கிறேன், நன்றாக காத்து வீசுது” என்றவள்.. அப்படியே கண் மூடி அந்த தூணில் சாய்ந்து விட..
அக்னி வீட்டை திறந்து, காரில் இருந்த உடைமைகளை அனைத்தையும் எடுத்துக்கொண்டு அவர்கள் ரூமில் வைத்து விட்டு வந்தான்..
பார்வதி இரவு உணவு கொடுத்திருந்ததை எடுத்துக் கொண்டு டைன்னிங் டேபளில் வைத்தவன்..
“மாயா வா வந்து சாப்பிட்டு படு” என்று அவளை அழைக்க..
மாயாவுக்கு பசி எடுத்து விட்டது.
” நீங்க இங்கு எடுத்துட்டு வாங்க. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்,, எனக்கு எழுந்து வேற ஒரு மாதிரியா இருக்கு” என்று மாயா கூற..
பார்வதி கொடுத்த உணவையும், வாட்டர் பாட்டிலையும் எடுத்துக் கொண்டவன் மாயாவிடம் வந்து தர.
முதலில் அவனுக்கு ஒரு பாக்ஸ் உணவை எடுத்து பரிமாறியவள் அவனிடம் தந்துவிட்டு அவளும் உண்ண..
” உனக்கு இங்க பிடிச்சிருக்கா மாயா”? என்று அக்னி கேட்க..
” ரொம்ப பிடிச்சிருக்கு நல்ல காத்து பீச்சோட சவுண்டு, ஐ லைக் இட்” என்றவள் உணவை உண்ண ஆரம்பித்தாள்..
இருவரும் உண்டு முடிக்க எல்லா பாத்திரத்தையும் எடுத்து சிங்கிள் போட்டு வந்தவன்..
“இப்பவாச்சும் உள்ள வர்ரீயா தூங்கலாம்” என்று அவளை அழைக்க..
” நான் ஒரு வாக் போகணும் பீச்சு கிட்ட ” என்று அவள் சொல்ல..
“இப்ப வா! வேண்டாம் மாயா ரொம்ப குளிரும், நம்ம காலையில போகலாம் டா” என்று அவளிடம் சொல்ல..
” இல்ல எனக்கு இப்போ பீச்சை பார்க்கணும்” என்றாள் சிறு குழந்தை போல..
“வா” என்று அவளின் கைப்பிடித்து அழைத்து சென்றான் அக்னி..
மாயாவுக்கு மணலில் நடக்க மிகவும் சிரமமாக இருந்தது அக்னியின் கையை கோர்த்தபடியே அவள் பீச்சை பார்த்து ரசித்தபடி வர…
அக்னி மாயாவை ரசித்துக் கொண்டே வந்தான்..
கடல் அலையின் பக்கத்தில் வந்தவள்.. “கொஞ்சம் காலை நனைச்சுக்கட்டுமா” என்று கேட்க..
“நீ விடவா போற வா” என்றவன் அவள் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நிற்க..
சில்லென்ற தண்ணீர் அவள் காலில் பட்டதும் அக்னியின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டவள்..
“ஹே….. ஊ…” என்று சந்தோசமாக கத்த..
அக்னி மாயாவின் சிரிப்பில் அவனும் மகிழ்ந்து படி அவளோடு சேர்ந்து சிரிக்க..
“அங்க பாத்திங்களா பெரிய அலை வருது,, வருது” என்று அவனோட ஒட்டி நிற்க….
கடல் அலையின் சத்தம், வேகமாக வீசும் காற்று, நிலா வெளிச்சம், பக்கத்தில் மாயா இருக்க…
அக்னி மிகவும் சந்தோஷமாக இருந்தவன்.. ஒரு கை மாயாவை இடுப்போடு சேர்த்துக் அணைத்துகொள்ள….
மாயா அவனை முறைத்துப் பார்த்தாள்..
“என்ன ? என்ன முறைச்சு பார்க்கிற கீழே விழுந்துட்டா என்ன பண்றது” என்றவன் அவளை இறுக்கி தன்னோடு வைத்துக் கொள்ள….
சிறிது நேரம் கடல் தண்ணீரில் நின்றார்கள்,, “குளிரும் மாயா வா” என்று அவளை கறையோரம் அழைத்து சென்றவன்..
அவளை அமர வைத்து விட்டு காலை பார்க்க.. அவள் அணிந்திருந்த ஷூ முழுதும் மண்ணாகிப் போயிருந்தது..
“ஏய் மாயா உன் ஷூ மண்ணா இருக்கு பாரு” என்றவன்..
மாயா வேண்டாம் சொல்வதற்குள்..அவளின் ஷூவை கழட்டி..
கடல் தண்ணீரில் கழுவி விட்டு வந்து மாயா கால் பக்கம் அமர்ந்த அக்னி ஷூவை அவளுக்கு மாட்டி விட..
மாயா பாதத்தை பார்க்க அது வீங்கி போய் இருந்தது….
“என்னடா உன் பாதம் இப்படி வீங்கி போய் இருக்கு” என்றவன்..
அவள் பாதத்தை எடுத்து தன் மடி மீது வைத்து பிடித்து விட..
“ரொம்ப என் மேல பாசம் காட்டுற மாதிரி நடிக்காதீங்க,, அப்புறம் கோபப்பட்டு என்னை திட்டி அனுப்புவீங்க,, அப்புறம் நான் தான் கஷ்டப்படனும்” என்றாள்..
“நான் ஏண்டி உன்மேல் கோபப்பட போறேன், என்னை நீ புரிஞ்சிக்கவே மாட்டியா மாயா?”..
“நீங்க நம்ம கல்யாணம் நின்ன அன்னையிருந்து, என்கிட்ட சண்டை போட்டுகிட்டு தானே இருக்கீங்க.. என்னை திட்டி, என்கூட வம்பு பண்ணிட்டு தானே இருக்கீங்க,, நான் உங்களை எப்படி நம்புவது, சும்மா என் மேல் பாசம் காட்டுற மாதிரி நடிக்க வேண்டாம்”…
“நான் நடிக்குறேனா, என்ன பார்த்த உனக்கு நடிக்குற மாதிரியா இருக்கு,,?”..
“பின்ன? என் மேல உங்களுக்கு என்ன அவ்வளவு லவ்வா? அவ்ளோ லவ் பண்ணுறவரு தான் என்னை இப்படி பைத்தியக்காரி மாதிரி ஆக்கி வைச்சு இருக்காறா, நீங்களே சொல்லுங்க என் அப்பா மட்டும் இல்லன்னா நான் இப்போ இப்படி இருந்திருப்பேனா,,.. எப்போவோ செத்து சாம்பலா ஆகிபோயிருப்பேன்..
நான் உயிரோட இருக்குறதுக்கு காரணம் என் அப்பா, என் பிள்ளைங்க,, அந்த பிள்ளைகளை காரணம் காட்டி உங்களை என் கூட சேர்த்து வச்சிருக்காங்க”…
அக்னி அமைதியாக இருக்க..
” பேசுங்க நீங்க தான் ரொம்ப பேசுவீங்களே, பேசி அடிக்க வருவீங்க,, இப்ப என்ன ரொம்ப அமைதியா இருக்கீங்க” என்றாள்..
அவள் மனதில் உள்ள கோபத்தை எல்லாம் என்னை திட்டியாவது அவள் குறைக்கட்டும் என்று அக்னி அமைதியாக இருக்க..
“இவளை என்ன திட்டலாமுன்னு யோசிக்கிறீங்களா?”.. என்றாள்..
” இல்லை” என்று அக்னி தலையாட்ட..
‘வேற என்ன யோசிக்கிறீங்க” என்றாள்..
“என்னை திட்டவாவது நீ வாய திறந்தால் அது எனக்கு போதும் தாயே” என்றான்..
“எனக்கு நீங்க ஒரு உதவி பண்ணனும்” என்றாள்.
“என்ன மாயா” என்று அக்னி கேட்க..
“எனக்கு இந்த இடம் ரொம்ப புடிச்சிருக்கு, நம்ம குழந்தை பிறக்கிற வரைக்கும் நாம இங்கே இருக்கலாமா?” என்று கேட்க.
“உன் இஷ்டம் மாயா,இனிமே உன் பேச்சை தவிர, நான் எதுவும் செய்ய மாட்டேன்” என்றான்..
“நம்பிட்டேன், நம்பிட்டேன்” என்று அவள் கூற..
“நீ நம்பினாலும், நான் சொல்றது அது தான்,, நீ நம்பாம போனாலும் நான் சொல்றது அது தான் நிஜம்.. வா ரூமுக்கு போகலாம்” என்று அவளை அழைத்துச் பீச் ஹவுஸ்சிற்கு சென்றான்..
error: Content is protected !!