Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன் உன்னை சேரும் 20 1

என் ஜீவன் உன்னை சேரும்

அத்தியாயம்  – 33



Advertisement

Advertisement

Advertisement

 ரதிக்கு உலகநாதன் ஸ்பரிசம் பட்டதும்..  அவளுக்கு  பழையதெல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக   ஞாபகம் வர

Advertisement

உலகநாதனின் குரல் ஆழ்மனதில் இருந்து  ‘ரதி டீச்சர்’ என்று  அழைப்பது போல் அவள்  காதில் கேட்க…

 நிமிர்ந்து பார்த்தாள் உலகநாதனை..

 அவர் பழைய முகமும், புதிய  முகமும்   போட்டி போட,, கடைசியில் இருவரும் ஒருவர் என்று அவள் மனது  ஏற்றுக்கொண்டது..

 அவளின் கைகளை பிடித்திருந்தவர்  “என்னை தெரியலையா  ரதி?” என்று கேட்க..

ரதிக்கு கண்ணெல்லாம் கலங்குவது போல் இருந்தது.. அவளுக்கு  பேச வாய் வரவில்லை அமைதியாக உலகநாதன் முகத்தையே பார்த்து  அமர்ந்திருக்க.

  தன் துக்கத்தை யாரும் பார்த்துவிடக் கூடாது என்று கண்களை துடைத்தவர், எழுந்து சென்று சோபாவில் அமர்ந்து கொண்டார்..

 தன் எதிரே அமர்ந்திருந்த உலகநாதனை  பார்த்திருந்தாள் ரதி..

 மீண்டும் அவள் காதில்  ‘ஹேய் ரஜினிகாந்த் வந்திருக்கிறார்’ என்று அவளின்  தோழி சவிதாவின்  குரல் கேட்க….

 உலகநாதனை பார்த்தபடியே  அமர்ந்து இருந்தவளுக்கு உலகநாதனின் ஞாபகம்  ஒன்றன்பின் ஒன்றாக மீண்டும் மனதில் வர

 அவரைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தார் ரதி..

 ரதிக்கு வளையல்  போட்டு முடிந்ததும்,, சிறுபிள்ளைகளுக்கு  வளையல் போட  ரதியின்  முன்பு  உட்கார வைத்தனர்…

 சின்ன பிள்ளைகளுக்கு வாங்கிய வளைகளில்  ஒரு பாக்ஸ் மட்டும் அனைத்தும்   உடைந்து போய் இருக்க.. “அச்சோ எல்லா வளையலும் உடைந்து விட்டதே” என்று..

 அதை ரதி முன்பு வைத்துவிட்டு “இன்னொரு பாக்ஸ் இருக்கா பார்வதி” என்று அப்பெரியவர்  கேட்க..

 “இதோ  நிறைய வாங்கி வைத்திருக்கிறேன்” என்ற பார்வதி இன்னும் இரண்டு பாக்ஸை எடுத்துக் கொடுக்க..

சிறு பிள்ளைகளுக்கு வளையல் போட்டு விட்டனர்..

 அந்த உடைந்த கண்ணாடி வளையல் பாக்ஸை ரதி கையில் எடுத்து  அந்த பாக்ஸையே பார்த்திருந்தவள் உலகநாதனை  நிமிர்ந்து பார்க்க..

 ரதியின்  கலங்கிய தோற்றம்…..அவருக்கு ஏதோ சொல்ல.

 அந்த உடைந்த கண்ணாடி வளையங்களை தொட்டுப் பார்த்தவள்,. ” என் கல்யாண வளையல் எல்லாம் உடஞ்சு போச்சு” என்று புலம்ப…

ரதியின்  முகம் ஏதோ சரியில்லை என்று உணர்ந்த உலகநாதன் உடனே  அவள் அருகில் வந்து நிற்க…

 ரதி பேசியது அவருக்கு நன்கு கேட்டது “என்  கல்யாண வளையல் உடைந்து  போச்சு” என்று ரதி அந்த பாக்ஸை தொட்டு  பார்த்து புலம்பியதை கேட்டவர்..

 அவள் ஒரு அருகில் வந்து அமர்ந்து  “என்னடா” என்றார்..

 “என் கண்ணாடி வளையல் உடைஞ்சு போச்சு” என்று அவள் அதயே  மறுபடியும் சொல்ல…

 “நீ எழுந்து வா வேற வாங்கிக்கலாம்”..என்று  அவளை  எழுப்பி கீழே உள்ள அறைக்கு அழைத்து  செல்ல …

 ரதி மீண்டும் மீண்டும் அந்த பாக்ஸை உள்ள வளையலை  தொட்டுப் பார்த்து “என் கல்யாணம் நின்னு போச்சு, என் வளையல் உடஞ்சு  போச்சு” என்று அவள் கண்கலங்கி கூற.

 “வேற வாங்கிக்கலாம் டா வருத்தப்படாத” என்ற உலகநாதன் அவளை பார்த்து கூற..

“நீங்க”?  என்று உலகநாதனை  பார்த்து ரதி கேட்க..

” ஏண்டி இப்படி என்னை  கொல்லுற, பேசாம என்ன ஒரே ஒரு அடி அடிச்சு என்னை கொன்னுடு,, நீ யாருன்னு கேட்டு என்னை கொள்ளாதே” என்று அவர் கண்கலங்கி  கத்தி பேச..

 ரதி சிறிது நேரம்  உலகநாதனை பார்த்து இருந்தவள்,,   பின்பு கதறி அழ..

 அவள் ஏன் அழுகிறாள் என்று தெரியாதவர்..

  “ஏன்டி அழற?  தலை வலிக்குதா என்ன பிரச்சனை சொல்லு,, ரதிமா” என்று கேட்க..

அவள் அதற்கு பதில் சொல்லாமல் முகத்தை மூடி அழ..

 அவளுக்கு எது,   எது? எப்போ  நடந்தது  என்று ஒன்றும் புரியவில்லை,,  ஆனால் உலகநாதன் தன்னை மணமேடையில் விட்டு சென்றது ஞாபகம் வர..

அவளின் தோற்றம்,, உலகநாதனிம்  தோற்றமும் பழைய விஷயங்கள் எல்லாம் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக ஞாபகம் வர..

 தலை வலிப்பது போல் இருந்தது..

 ஏன் என்னை விட்டு சென்றார், இப்போ நான் எங்கே இருக்கிறேன்,, எனக்கு என்ன ஆனது,, ஏதோ பெரிய கனவு போல்  ஒவ்வொன்றாக  தன் முன்  கனவு போல் வர..

 எதற்கு அழுகிறோம் என்று தெரியாமல் ரதி  தேம்பி தேம்பி அழ..

 அவள் அழுவதை தாங்க முடியாத உலகநாதன்..

 அவள் தலை மீது கை வைத்து “அழாதடா அழாத, நீ ஏன் இப்படி அழுகுற, என்னை புடிக்கலை நான் வேணா  வெளியே போறேன்” என்றவர் வெளியே   செல்ல பார்க்க..

 அவரின் கையை சட்டென்று பிடித்துக்கொண்டாள்   ரதி..

 “நீ அமைதியா இரு.. நான் பார்வதியை  வர சொல்றேன்” என்று அவர் கூற..

 அவள்  “வேண்டாம்” என்று தலையாட்ட..

” என்னடா என்ன ஆச்சு” என்று அவள் பக்கத்தில் வந்து அமர..

 அவரின்  தோளில் தன்  முகத்தை புதைத்தவள், அப்படி ஒரு அழுகை அழுதாள் ரதி.

  பயந்து போனார் உலகநாதன்..

 “டேய் என்னாச்சுடா, ஏன் இப்படி அழுகுற  ஆஸ்பத்திரிக்கு போகலாமா”  என்று அவர் கேட்க..

 “வேண்டாம்” என்று அவள் அழுது கொண்டே கூற..

  “நீ வா முதல்ல நம்ம ஹாஸ்பெட்டல் போலாம்,, இல்லன்னா நீ தூங்கு” என்றார்..

” வேண்டாம் மச்சான்,  ஹாஸ்பெட்டல்    போக வேண்டாம், உலகநாதன் மச்சான்” என்று ரதி  அவரின்  கழுத்தைக் கட்டிக் கொண்டு அழ..

 “டேய்” என்றவருக்கு பேச்சு வரவில்லை “மச்சானா? நான் உலகநாதன் மச்சானா” என்று அவள் சொல்லியதை உணர்ந்தவர்..

 அவளை தன்னிடமிருந்து பிரித்தவர்.. அவள் கண்களை துடைத்து விட்டு,, “என்ன சொன்ன ரதி?” என்றார்..

 அவளோ சொல்ல மாட்டேன். என்பது போல் திரும்பி,, அமர்ந்து கொள்ள..

 “ரதி இப்போ என்ன சொன்ன திருப்பி சொல்லு?” என்றார்..

 “நீங்கதானே  என் உலகநாதன்   மச்சான்,  அதைத்தான் நான் சொன்னேன்” என்றதும்..

“ஆமாண்டி நான்,, தாண்டி உன் உலகநாதன்  மச்சான்” என்றவர் அவளை  இறுக்கமாக அணைத்துக்கொண்டவர்..

 “உனக்கு  என்னை தெரியுதா ரதி, உனக்கு ஞாபகம் வந்துடுச்சா? என்றவர் அவள் முகத்தை தடவி தன்னை பார்க்க வைத்து கேட்க..

 “ஊம்ம், என் மச்சான் உலகநாதன்” என்று  ரதி சொல்ல..

 “ஆமாண்டி என்  ராஜாத்தி, நான் உன்  உலகநாதன் மச்சான்” என்று  அவளை இழுத்து அணைத்துக் கொண்டார்..

 சிறிது நேரம் அவளை அணைதிருந்தவர்  மீண்டும்,

” என்னை தெரியுதாடா”? என்று அவளிடம் கேட்க..

 அவரை  தள்ளிவிட்டவள் “போங்க நான் பேசமாட்டேன்,,  என்னை விட்டுட்டு போயிட்டீங்கல”  என்று அவள் செல்ல கோபம் கொள்ள..

 “டேய் பட்டுக்குட்டி நான் எங்கடா போனேன், உன் கூட தான் டா,  இருக்கேன் கண்மணி” என்று அவளை அணைக்க வர..

“போங்க நான் கோபமாக இருக்கேன்,, என்னை விட்டுட்டு போயிட்டீங்கள, “?. என்றவளை விட முடியாமல்..

 அவள் அவரிடம் வர மறக்க. அவள் மறுப்பை   எல்லாத்தையும் தடுத்து   அவளை தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டவர்..

அவள் காதில்  அவருக்கு நடந்த அனைத்தையும் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தார்..

 முதலில் அவரிடமிருந்து திமிறியவள் அவர் சொல்ல சொல்ல,,  அவரின்  கழுத்தை  கட்டிக்கொண்டு, அவருக்கு நடந்ததை ஒவ்வொன்றாக கேட்க ஆரம்பித்தாள்..

 அவளுக்கு  திருமணம் முடிந்து விட்டது என்று அவர் தெரிந்து கொண்டு தூர சென்றதையும்..

 அவர் கல்யாணமே முடிக்காமல் இருந்ததையும், பெர்னிலாவின் பிள்ளைகள் மாயா, ரியாவை பற்றி சொல்லியவர்..

  பின்பு அக்னி நடந்து கொண்டதையும் அனைத்தையும் சொல்லி முடித்து..

 இப்பொழுது எல்லா  பிரச்சனைகளும் முடிந்து எல்லோரும் நன்றாக இருக்கிறோம்” என்று  சொல்லி முடித்தார்….

 ரதிக்கு உலகநாதன் சொல்லியதை கேட்டு தன் வாழ்வில் இத்தனை நடந்திருக்கிறதா,, அவரும் தன் இல்லாமல்  எவ்வளவு துன்பம்  அனுபவித்து, தனக்காக காத்திருந்திருக்கிறார்  என்று அவர் முகத்தை பார்த்தவள்..

 “நீங்க இப்பவும் என் உலகநாதனா  இருக்கீங்களா”? என்று அவள் கேட்க..

 “நான் எப்பொழுதும் உன்  உலகநாதன் தாண்டி.. நீ எப்பொழுதும் என் ரதி தான்டி”  என்றவர் அவளை   அணைத்து முகம்  முழுவதும் முத்தம் வைத்து அணைத்துக்கொள்ள..

  அவருடன் ஒன்றி  போய் அணைத்துக் கொண்டிருந்தாள் ரதி..

 வளைகாப்பு முடிந்து அக்னி ரதியை தேடிக்கொண்டு அந்த அறைக்கு வர..

 இருவரும் அணைத்து அமர்ந்திருப்பதை  பார்த்துக் கொண்டே அக்னி சிரித்தபடியே வந்தவன். “உள்ளே வரலாமா” என்று கேட்டுக் கொண்டே தயங்கி நிற்க…

 “வா அக்னி” என்று ரதியிடமிருந்து விலகிக் கொண்டு மருமகனை  உள்ளே  அழைக்க..

 அக்னி அருகில் வந்ததும்.. ரதி யார் என்று நிமிர்ந்து பார்க்க..

 “உன் அண்ணன் பையன் அக்னி.. உன் அப்புக்குட்டி” என்றார் உலகநாதன்..

 “அப்புக்குட்டியா?” என்று அந்த நெடுமரம் போல்  வளர்ந்திருந்த தன்  அண்ணன்   மகனை நிமிர்ந்து பார்க்க…

 “என்ன மாமா அத்தை கிட்ட என்ன பத்தி சொல்றீங்க? அத்தைக்கு என்னை தெரியுதா”? என்றவன் ஆர்வமாக  ரதி பக்கத்தில் வர..

 என் அண்ணன் பையனா இது எப்படி வளர்ந்து இருக்கான் என்று அக்னியை நிமிர்ந்து பார்த்தாள்..

 “அத்தை நான் அப்புக்குட்டி, என்னை  உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று அவள் அருகில் வந்து கேட்க..

 ரதி “ஊம்ம்”  என்று தலையாட்ட..

 வளைகாப்பு முடிந்து பார்வதி மாயா, தேவ் என்று அனைவரும் ரதியை  தேடி  கொண்டு வர…

 “அம்மா அத்தைக்கு ஞாபகம்  வந்திருச்சு”  என்று பார்வதியிடம் அக்னி கூறியதும்..

 அனைவரும்  ரதியின்  பக்கத்தில் வந்த அமர்ந்து  பேச..

 பார்வதி ரதியின்  பக்கத்தில் வந்து “உனக்கு எப்படிடா இருக்கு?  எல்லாம் ஞாபகம்  வந்துருச்சா?”  என்று அவர் கேட்க..

“எல்லாரையும்  ஞாபகம் இருக்கு அண்ணி,” என்றவள்.. “உங்களுக்கு மூணாவது என்ன குழந்தை பிறந்தது அண்ணி” என்று கேட்க..

 நிலாவை அழைத்தவர் “இவதாண்டா எனக்கு பிறந்த மூணாவது பொண்ணு இப்போ இவளுக்கு தான் குழந்தை பிறக்கப் போகுது,,  இன்னைக்கு இவளுக்கு, உன் பொண்ணு மாயாவுக்கு  தான் வளைகாப்பு”  என்று நிலாவை ரதியிடம்   அறிமுகப்படுத்தி வைக்க..

அண்ணன் மகள் கன்னத்தை பாசமாக தடவி கொடுத்தாள் ரதி..

 “நிலா ரதியை பார்த்து நல்லா இருக்கீங்களா அத்தை  உங்களுக்கு உடம்பு பரவாயில்லையா ” என்று கேட்க..

 “நான் நல்லா இருக்கேன் டா”என்றார் .

 “மாயா  இங்கே வா” என்று  உலகநாதன் மாயாவை  அழைத்து, ரதியின் பக்கத்தில்  அமர வைத்து..

” நம்ம பொண்ணு மாயா” என்று கூற..

  மாயாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் ரதி..

“என் அப்பாவை  உங்களுக்கு தெரியுத ரதிமா” என்று மாயா கேட்டதும்..

” என் மச்சானை  எனக்கு தெரியாதா?”  என்றதும்..

 “அம்மா” என்று அவளை அணைத்த மாயா..

” நான் உங்களை அம்மாவென்று சொல்லலாமா? ” என்று கேட்க..

 அவளின் கன்னத்தையும் தலையையும் தடவி கொடுத்த ரதி.. “மச்சான் எல்லாம் சொன்னாங்க அவங்களுக்கு  நீதான் எல்லாமாகவும்  இருந்தீயாமே மச்சானுக்கு நீதான் அம்மாவாம்,, பொண்ணாம், ப்ரெண்டாம்,,  அவர் வாழ்றதுக்கு காரணமே நீ தான்னு  சொன்னாங்க”..என்றும்.

 தந்தை  தன்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறார் என்று புரிந்து கொண்டவள் “டாடி’ என்று உலகநாதன் அணைத்துக் கொள்ள..

 அவர்களின் பாசத்தை அனைவரும் பார்த்திருந்தனர் என்ன மாதிரியான பாசம் இது? எந்த  ரத்த உறவு  இல்லாமலே. அதற்கு மேலான உறவு இவர்களின் தந்தை மகள் பாசம் என்று பார்வதி அவர்களை  பார்த்திருக்க..

 தேவ் ரதியின் முன் வந்து “அத்தை  என்னை ஞாபகம் இருக்கா” என்று தேவ் கேட்க..

 ரதி முழித்து  பார்த்தவள்.. அவன் தேவ் என்றதும் தன்  அண்ணன் இரண்டாவது மகன் என்று புரிந்து கொண்டவள்..

 பார்வதியை பார்க்க என் “இரண்டாவது  மகன் தேவ்  தான்” என்றார் பார்வதி…

 ரதிக்கு  ஞாபகம் வந்து  அண்ணன் மகனிடம்  கைப்பிடித்து பேச..

 “மா தள்ளி உட்காரு” என்று   பார்வதியை தள்ளி உட்கார சொல்லிவிட்டு தேவ்  ரதியின் பக்கத்தில் அமர்ந்தான்..

 ஒரு பக்கம் தேவ்  அமர்ந்திருக்க இன்னொரு பக்கம் மாயா அமர்ந்திருந்தாள்….

 தேவ்  அமர்ந்ததும் அக்னி மாயாவை  “கொஞ்சம் எழுந்துக்கோ” என்று அக்னி  ரதியின் பக்கத்தில் அமர்ந்து கொள்ள…

 “அண்ணா நான் தான் அத்தை கிட்ட பேசுவேன் நீ தள்ளிப்போ” என்றான் தேவ்..

 “நான் ஏன்டா  தள்ளி போகணும் இது என் அத்தைடா  அப்படித்தான்  பக்கத்தில் உட்காருவேன்,, நீ தள்ளி போடா ” என்றான் தம்பியை முறைத்தபடியே..

 பார்வதி இருவரையும் பார்த்தவர் “ஆரம்பிச்சுட்டானுங்க இவங்க பஞ்சாயத்தை  டேய்… அவ உலகநாதன் பொண்டாட்டி டா அவருக்கு தான் முதல் உரிமை, நீங்க   இரண்டு பேரும் தள்ளி போங்கடா” என்று மகன்களை  பார்வதி விரட்ட..

 “மா….  எங்க அத்தை எங்களுக்கு  தான் முதல் உரிமை நாங்க பேசிக்கிறோம். அப்புறமா மாமாவை பேச சொல்லு” என்றதும்..

 “அதானே நாங்க தான் முதல்ல” என்று  அக்னியும்  தம்பி சொன்னதுக்கு சரி என்று கூற…

  பார்வதிக்கு சிரிப்பு தான் இரண்டு  பசங்களும்  ரதியிடம் பாசமாக நடந்து கொள்வதை ஆசையாக பார்த்திருந்தவர். உலக நாதனை பார்த்து “உங்களுக்கு எதுவும் கோபம் இல்லை”என்று கேட்க..

 அவர் அப்படி ஒன்றும் இல்லை என்பது போல் தலையாட்டி சிரிக்க..

 “அத்தை நீங்க நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லவில்லை என்றான் தேவ்…

” என்னப்பா”  என்று அண்ணன் மகனிடம்  ரதி கேட்க..

 “நம்ம எல்லோரும்  சந்திரமுகி படம் பாத்துட்டு வந்தோமே அப்போ நான் உங்ககிட்ட ஒன்னு கேட்டேனே என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களா? இல்லை  என்  அண்ணன் அக்னியை கல்யாணம் பண்ணிக்குவீங்களான்னு நான் கேட்டதுக்கு  நீங்கள்  இன்னும் பதில் சொல்லல இப்ப சொல்லுங்க” என்று தேவ் கேட்க..

 அங்கே  உள்ள அனைவரும் தேவ் சொல்லியதை  கேட்டு சிரிக்க..

 “டேய் அத நீ இன்னும் மறக்கலையா” என்றார் பார்வதி மகனிடம்…

 “அதை மறக்க முடியுமா சொல்லுங்க அத்தை” என்றான்.

 ” டேய் என்னடா கேள்வி இது” என்று பார்வதி  கேட்டு சிரிக்க..

” இது எனக்கும், என்  அண்ணாவுக்கும் இருக்கிற உரிமை பிரச்சனை,, நீ இதுல தலையிடாதே” என்றவன்..

“அத்தை சொல்லுங்க அத்தை” என்றான் தேவ்..

 +

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!