Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன் என்னை சேருமா 30 2

 “வேற ஆப்ஷனே இல்லையா மேடம்” என்று கேட்க..

 “மாயா ஹெல்தியா  இருந்த நானே மூணு பிள்ளை பெத்துக்கறதுக்கு அவளுக்கு ஹெல்ப் பண்ணுவேன்,,  மூணு பிள்ளைகளை பெத்துக்கணும்னா மாயா ஃபுல்லா ஹாஸ்பிடல் இருந்தாகணும் அவளால முடியுமா? அப்படி இருந்தா கூட, நல்லா படியா குழந்தை பிறக்க சான்ஸ் கம்மி, அந்த பெண் குழந்தை ரொம்ப வெய்ட் கம்மிய இருக்கு, யோசிங்க.. அப்பறம் மூனு  பேபிஸ் வெயிட் போட போட சில பேருக்கு வேகமாக டெலிவரி ஆக கூட சான்சஸ் இருக்கு..



Advertisement

அப்புறம் மூன்று குழந்தைகள் வளர்க்கிறது  ரொம்ப கஷ்டமாயிடும்.. கண்டிப்பா ஒரு குழந்தையை வெளியே எடுத்து ஆகணும் இல்லனா மாயாவுக்கு டெலிவரி டைம்ல ரொம்ப கிரிட்டிக்கல் ஆக சான்ஸ் இருக்கு பிள்ளையா அம்மாவான்னு கூட வரலாம், அதனால தான்   நான் கவலைப்படுகிறேன்,..

 நீங்க மாயா ஹஸ்பண்டை வர சொல்லுங்க நான் பேசுறேன்”..

Advertisement

Advertisement

 மகள் 3 குழந்தையை பெற்றுக் கொள்வேன் என்று பிடிவாதமாக இருக்க..

 என்ன செய்வது என்று நினைத்தவர்,

Advertisement

” நான் நாளைக்கு மாயா ஹஸ்பண்டை  வர சொல்லுறேன் மேம்” என்று மாயாவை பார்க்கச் சென்றார்…

 மாயா கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க,  அவள்  தூங்கிக்கொண்டிருந்தாள்..

  ரதி மாயா பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவள் வயிறை தொட்டு பார்த்து “மூணு பாப்பா” என்று சந்தோஷப்பட..

 உலகநாதனிடமும்  “மூனு பாப்பா” என்று ரதியிடம் கூற..

 “உங்களுக்கு ஒன்னு, எனக்கு ஒன்னு மாயாவுக்கு ஒன்னு  மொத்தம் மூணு பாப்பா” என்று ரதி மீண்டும் அதை கூறி சந்தோசப்பட..

 “மூணு பாப்பாவும்  நல்லபடியா பிறக்குமாடா  ரதி?”என்று அவளிடம் கேட்க..

 “உம்ம்…”  வேகமாக தலையாட்டி இருந்தாள் ரதி..

 மாயாவை ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணி இருந்தார்கள்,  இன்று ஒரு நாள் இருந்து ட்ரிப்ஸ் ஏற்றி விட்டு  செல்ல வேண்டுமென்று..

 நீண்ட  நேரம் கழித்து மாயா கண்விழித்தாள்…

 மாயா எழுந்து கொள்ள பார்க்க அவள் கையில் டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்ததாள்  அவளால்  எழுந்து கொள்ள   முடியவில்லை, உலகநாதன் தான்  மகளை  மெதுவாக எழுப்பி உட்கார வைத்தவர்..

 “சாப்பிடுறியாடா” என்று கேட்க..

“உம்ம்”… என்று தலையாட்டி இருந்தாள்..

 ஏற்கனவே உலகநாதன் மகளுக்காக  உணவை வாங்கி வைத்திருந்தவர்..

 மாயாவுக்கு  உணவை ஊட்டி விட போக.

 “நானே சாப்பிடுறேன் டாடி”… என்றாள்..

” பரவாயில்லடா நானே ஊட்டி விடுகிறேன்,  உன் கையில ட்ரிப்ஸ் ஏறுது,  பாரு நீ எப்படி சாப்பிடுவ சாஞ்சி  உக்காந்துக்கோ” என்றவர்..

 மாயாவுக்கு உணவை ஊட்டி கொண்டிருந்தவர், அவள் சாப்பிடும் அளவு தெரிந்து ஊட்டி முடித்தவர், “போதுமாடா” என்று கேட்க..

 “இன்னும் வேணும் டாடி” என்றதும்..

 இன்னும் கொஞ்சம் சாதம் வைத்து அவளுக்கு ஊட்டி விட்டவர் “போதுமா” என்றார்..

மாயா இன்னும் சாப்பாடு வேணும் என்பது போல்  சாப்பிட்டுக் கொண்டே இருந்தாள்,, உலகநாதனுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் பயமாகி  போனது “மாயா போதும்டா வயிறு வலிக்கும், அப்புறமா கொஞ்சம் சாப்பிடேன்” என்று கூற..

” இல்ல  டாடி,  இன்னும் கொஞ்சம் சாப்பாடு போடுங்க அப்பதானே எனக்கும்,  என் மூணு பிள்ளைகளுக்கு உணவு பத்தும்,,  நான் இப்போ நாலு பேரு டாடி, நான் நல்லா சாப்பிட்டால் தானே அவங்களை நல்லபடியா பெத்துக்க முடியும்” என்றவள்  உலகநாதன் கையில் இருந்த சாப்பாடு தட்டை வாங்கி   கண்கலங்கிய படியே, மாயா உண்ண..

 மகள் பேசியதை கேட்டவருக்கு அவள் எண்ணம் புரிந்தது..

 அவள் சாப்பிட முடியாமல் உண்ணுவதை பார்த்ததற்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது.. அவள் கையில் இருந்த சாப்பாடு தட்டை பிடுங்கிக் கொண்டவர்.. “போதுண்டா உன்னை கஷ்டப்படுத்திக்காத”..

 தந்தை தட்டைப் புடுங்கியதும் “எனக்கு என் மூணு பிள்ளைகள்  வேணும் டாடி” என்று மாயா உலகநாதன் இடுப்பை கட்டிக்கொண்டு அழ..

” எனக்கு என் பிள்ளை வேணுமேடா அவளை தொலைக்கச் சொல்றியா”?. என்று அவரும் குழுங்கி அழ..

” உங்க பிள்ளைக்கு ஒன்னும் ஆகாது டாடி.  என் பிள்ளைகளுக்கும் ஒன்னும் ஆகாது டாடி,,  எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு ” என்று மாயா அழுதபடியும் கூற..

” ஆனா டாக்டர் சொல்றாங்களே டா உன்னால மூணு குழந்தை சுமக்க முடியாதுன்னு   யோசிடா எனக்கு நீதாண்டா முக்கியம்” என்று அவர் குரல்  தழுதழுக்க கூற..

 “எனக்கு என் பிள்ளைகள்  முக்கியம் இல்லையாபா,,  உங்களுக்கு  உங்க பொண்ணுன்னா,  எனக்கு என் பொண்ணு முக்கியம் இல்லையாப்பா?”..

“நீ ஆரோக்கியமா இருந்தா தானேடா பிள்ளைகளை வளர்க்க முடியும்,  உனக்கு ஏதாவது பிரச்சனையின்ன குழந்தைகளை யாரு பார்ப்பா?”.

 “எனக்கு எதுவும் ஆகாது டாடி,  நான் கண்டிப்பா மூணு  பிள்ளையும் பெத்துப்பேன்” என்று உறுதியாக அவள் கூறி விட..

” டாக்டர் இப்படி சொல்லிட்டாங்களேடா  வேற என்ன பண்ண சொல்லுற”..

” இந்த உலகத்தில் இவங்க மட்டும் தான் டாக்டரா வேற டாக்டரே இல்லையா”?. என்று மாயா சொன்னதும்..

 மகள்  சொல்வது சரி என்றே தோன்ற,,  “சரிடா நாம வேற டாக்டர் ஒப்பினியன் கேட்கலாம் டா” என்று நினைத்தவர்..

 உடனே மாயாவை டிஸ்சார்ச் பண்ணி வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்..

 மறுநாள் காலையில் பார்வதி வந்திருந்தார் உலகநாதன் வீட்டிற்கு..

 பார்வதி வாசலில் நின்று உலகநாதன் வீட்டினுள் பார்க்க..

 ரதி உணவு பரிமாறிக் கொண்டிருக்க உலகநாதன் உண்டு கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் வந்தார்..

 உலகநாதன் யார் வீட்டினுள்ளே வருவது என்பது போல் பார்க்க, பார்வதியை பார்த்தவர் “வாங்க வாங்க” என்று எழுந்து கொள்ள பார்க்க..

” சாப்பிடறப்போ எழுத்துக்க   கூடாது உட்காருங்க  சம்பந்தி” என்றவர்  டைனிங் டேபிள் அருகில் வந்தார்..

 ரதிக்கு தன் அண்ணியை நீண்ட நாள்  கழித்து  பார்த்ததும்,  வெட்கப்பட்டு குனிந்து கொள்ள..

“ஏய்  ரதி”  என்று அவளை அணைத்துக்  கொண்டவர்.. “அக்னி  சொன்னப்ப கூட நான் நம்பல  ஆளே மாறிட்ட ரதி” என்று அவளை அணைத்துக் கொண்டே பேசியவர்..

 ரொம்ப சந்தோஷம்டா  என் மனசே நிறைஞ்சு  போச்சு, உங்க அண்ணா மட்டும் உன்னை பார்த்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டு இருந்திருப்பாரு” என்று தன் கணவரை  நினைத்துக் கொண்டார்..

 எத்தனை நாள் தங்கையை  நினைத்து தன்னிடம் வருந்தி பேசியிருப்பார். இப்போ  அவர் இல்லையே என்று வருந்தியவர்..

“மாயா எங்கே” என்று அவர் கேட்க..

” தூங்குறா அண்ணி” என்றதும்.

” இன்னுமா தூங்குறா” என்று பார்வதி கேட்கவும்..

” நேத்து ஹாஸ்பெட்டல் போயிட்டு வந்தோம் கொஞ்சம் உடம்பு சரியில்லை வருவா” என்று உலகநாதன் கூறினார்..

 “சரி”  என்ற பார்வதி சோபாவில் வந்து அமர..

 உலகநாதன் அப்போதுதான் நிலா சோபாவில்  அமர்ந்திருப்பதை  பார்த்தார் “வாம்மா நிலா” என்று அவளை வரவேற்க…

 “நல்லா இருக்கீங்களா அங்கிள்” என்று நிலா உலகநாதனை  விசாரிக்க,,..

 “நாங்க நல்லா இருக்கோம் மா. நீங்க வாங்க எல்லாரும் சேர்ந்து சாப்பிடுங்க” என்று அழைக்க..

 “நாங்க வீட்டுலயே  சாப்பிட்டு தான்  வந்தோம் சம்மந்தி” என்று  பேசிக்கொண்டே இருக்கும்போதே..

 மாயா  தன் அறையிலிருந்து வெளியே வந்தவள் பார்வதியை  பார்த்து,, “அத்தை” என்று சொல்லிக் கொண்டே  வேகமாக வந்தவள் பார்வதி அணைத்துக்கொள்ள..

 “மாயா”  என்றவருக்கு  மருமகளின் தோற்றத்தை பார்த்ததும்  கண்கலங்கியது, தன்  மூத்த மகனின்  வாரிசை சுமந்து கொண்டு  இருப்பவளை அணைத்து முத்தமிட்டார்…

 “நல்லா இருக்கியாடா” என்றதும்..

” நல்லா இருக்கே அத்தை” என்றவள்..

 மாயா நிலாவை  பார்த்து   “அண்ணி நல்லா இருக்கீங்களா” என்று கேட்க..

“நான்  நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க மாயா” என்று நிலா கேட்க..

“ஊம்ம் நல்லா இருக்கேன்” என்று தலையை  ஆட்டினாள்  மாயா..

 ரதிக்கு நிலாவை பார்த்ததும் பேசத்  தோன்ற,, நிலா  அருகில் சென்று அமர்ந்து கொண்டவள்  அவளிடம் பேச,,நிலாவும் ரதியிடம் பேசிக் கொண்டிருந்தாள்..

 பார்வதி மருமகளின்  தலைகோதியவர் “சாரிடா உன்னை பார்க்க வர முடியல,, நிலாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியாம போச்சு. அதுவும் எட்டாம் மாசம் நடந்துட்டு இருந்தது,,  இப்பதான் அவளுக்கு ஒன்பதாம் மாசம் அதான் உன்னை பார்க்க  அவளை கூட்டிட்டு ஓடி வந்துட்டேன்,,  நீ நம்ம வீட்டுக்கு வந்துருறேன்,  உன்னையும் நிலாவையும் சேர்த்து நான் பார்த்துக்கிறேன்” என்று பார்வதி மாயாவை  அழைக்க..

 மாயா பதில் சொல்ல முடியாமல் தந்தையை  பார்த்தாள்..

 உலகநாதன் மகள் பார்வதியிடம் அன்னியோன்யமாக இருப்பதை பார்த்தவர் “உனக்கு விருப்பம் இருந்தா  போடா” என்றார்..

 பார்வதி “வர்ரீயா” என்று பாசமாக கேட்க,, அவர் மடியில் படுத்துக் கொண்டாள் மாயா..

 அவளால் முடியவில்லை பார்வதி பாசமாக பேசி தலை கோதியதும், தன் அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது மாயாவுக்கு..அவர் மடியில் படுத்து  கொண்டு மாயா அழ..

 “என்னாச்சுடா ஏன் அழுகுற,  உடம்பு முடியலையா”?. என்று பாசமாக கேட்க..

 அதுக்கும் அழுகை  தான் வந்தது மாயாவுக்கு,,  ஏன் அழுகிறாள்  என்று அவளுக்கே தெரியவில்லை  பார்வதியின்  பாசமான  பேச்சு அவளுக்கு அழுகை வந்தது,

பார்வதியிடம்  தனக்கு இருக்கும் பிரச்சினையை சொல்லி அழ தோன்ற கண்களை  துடைத்துக் கொண்டவள் எழுந்த அமர போக..

அவளை எழவிடாமல்..

 “கொஞ்ச நேரம் படு மாயா” என்று பார்வதி மாயாவை தட்டிக் கொடுத்துக்கொண்டிருக்க..

 போன் பேசி முடித்துவிட்டு உலகநாதன் வீட்டிற்குள் வந்தான் அக்னி..

 பார்வதி, நிலா, அக்னி  மூன்று பேரும் ஒன்றாகத்தான் வந்தார்கள் உலகநாதன் வீட்டிற்க்கு..

 அக்னிக்கு  ஒரு முக்கியமான போன் கால் வர, அதை பேசி முடித்து விட்டு, வீட்டிற்க்குள் வந்தான்..

 வந்தவன் பார்த்தது.

 மாயா தன் அம்மா மடியில் சுருண்டு படுத்திருப்பதை பார்த்தவனுக்கு என்னாச்சு இவளுக்கு என்று மனதில் தோன்ற.. ரதி அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

 “அப்புக்குட்டி” என்று ரதி அழைத்ததும்..

இவன் எப்ப வந்தான் என்று மாயா அக்னியை திரும்பி பார்த்தாள்…

 அவனின் பேச்சு ரதியிடம் இருந்தாலும் பார்வை முழுவதும் மாயாவின் மேல்தான் இருந்தது..

 அவளின்  சோர்ந்த முகமும், கலங்கி சிவந்திருந்த கண்களும்  அவனுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்ற..

 உலகநாதனின் முகத்தை  பார்த்தான் அக்னி..

 அவரோ ஏதோ தன்னிடம் மறைப்பது போல் தெரிய..

 ரதி ஏதோ  நிலாவிடம் பேச.. கவனத்தை அந்த பக்கம் திருப்பினான் அக்னி.

“உன் வயித்துல   எத்தனை பாப்பா இருக்கு”  என்று ரதி நிலாவிடம் கேட்க..

” ஒரு பாப்பா தான் அத்தை” என்றாள் நிலா..

” எங்க மாயா வயித்துல  எத்தனை பாப்பா இருக்கு தெரியுமா உனக்கு” என்றதும்..

” எத்தனை பாப்பா இருக்கு” என்று நிலா கேட்டது..

“ரதிம்மா இங்க வாங்க” என்று மாயா ரதியை அழைக்க..

 ” நீ  இரு  மாயா  நான் சொல்லிட்டு வரேன்” என்றாள்  ரதி..

 “அம்மா நீங்க வாங்க ” என்று மாயா வேகமாக எழுந்து வர..

 அக்னிக்கு மாயா ஏதோ  தடுத்து மறைப்பது போல் தெரிய.

 “எத்தனை பாப்பா அத்தை” என்று அக்னி ரதியிடம் கேட்க..

” மூணு பாப்பா இருக்கு அப்புக்குட்டி “என்று ரதி கூறியதும்..

” இல்ல அப்படி ஒன்னும் இல்ல” என்று மாயா கூற..

” ஏய் மாயா பொண்ணு நேத்துதான் டாக்டர் கருப்பு போட்டோல காட்டினாரே அதில் மூணு பாப்பா போட்டோ இருந்துச்சில்ல”  என்று ரதி சொல்லி முடிக்க.

 அந்த இடமே  ஒரு நிமிடம் நிசப்தமாக இருந்தது..

அக்னி உலகநாதனை  பார்க்க அவர் தலை “ஆமாம்” என்று ஆடியது..

 அக்னியின் கண்கள் மாயாவை பார்க்க..

 அவளோ அவன் பார்வையை தவிர்த்து, தன் வயிறை பிடித்து படியே கண்கலங்கிய  வாறே நின்று இருக்க..

பார்வதி மருமகளை அணைத்துக் கொண்டார்..

 மூன்று பேரப்பிள்ளைகளா எனக்கு  என்றவருக்கு கண் கலங்கியது..

 அங்கே ஒருவன் மாயாவை  தீயாக முறைத்த படியே நின்றிருந்தான்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!