Skip to content
Post Views: 1,076
என் ஜீவன் என்னை சேருமா
அத்தியாயம் – 30
Advertisement
உலகநாதன் மனைவியையும், மாயாவையும் அழைத்துக் கொண்டு ஹாஸ்பெட்டல் வந்திருந்தார்..
Advertisement
Advertisement
இருவருக்கும் பல டெஸ்டுகள் எடுக்கப்பட்டன,, மாயாவோட ரிசல்ட் வர தாமதம் ஆகும் என்பதால்,, முதலில் ரதிக்கு பார்க்கும் டாக்டரை பார்க்க போனார் உலகநாதன்…
Advertisement
“ரதி மேமுக்கு எந்த பிரச்சனையும் இல்லை மெடிசன் சரியாக சாப்பிட்டாலே உடம்பும், மனசும் சரியாகிடும்” என்று டாக்டர் கூற..
அப்பாடா என்று மூச்சை விட்டார் உலகநாதன்,, “வேற எதுவும் தொந்தரவு இல்லையா ரதிக்கு” என்று டாக்டரிடம் கேட்க..
“வேற எந்த பிரச்சனை இல்ல.. அவங்க சரியா மாத்திரை சாப்பிட்டாலே போதும், அப்பறம் மாதம், மாதம் ஒரு இஞ்சக்சன் போடனும் இது போட்டாளே போதும் ஞாபகம் வந்துவிடும்” என்று கூற.
“ரதிக்கு பழயது எல்லாம் ஞாபகம் வந்திடுமா டாக்டர்”என்று கேட்க..
” கண்டிப்பா கொஞ்சம் கொஞ்சமா ஞாபகம் வரும், சில நேரம் அவங்க அமைதியாக இருந்தாகன்னா, அவங்களை அப்படியே விடுங்க,, அவங்க யோசிக்கட்டும், யோசிக்க, யோசிக்க தான் பழையது எல்லாம் ஞாபகம் வரும், அவங்க கிட்ட பழய விஷயங்களை பத்தி பேசுங்க,, கொஞ்சம் நெறுக்கம் காட்டுங்க அதுவே போதும்,, சில நேரம் அவங்க கோபப்படலாம் ஆனால் கோபம் மட்டும் படக்கூடாது அழக்கூடாது ரொம்ப அழாம பார்த்துக்கோங்க சில விஷயங்கள் அவனுக்கு ஞாபகம் வரும் போது சில பேர் கோவப்படுவாங்க சிலர் அழுவாங்க..
அப்படி அழுதாங்கன்னா அவங்களை நீங்க ஹாஸ்பெட்டலுக்கு கூட்டிட்டு வாங்க,, அப்படி முடியலன்னா தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைங்க, தூங்கி எழுந்த கொஞ்சம் சரியாகும்,,” என்று டாக்டர் கூற…
“ரொம்ப நன்றி டாக்டர், நான் ரதியை நல்லா பாத்துக்குறேன், மெடிசன் சரியா கொடுக்கிறேன்” என்று உலகநாதன் கூறிவிட்டு வெளியே வந்தார்,
மனதில் ஒரு பெரிய பாரம் நீங்கியது போல் தெரிந்தது.. அடுத்தது மாயாவை பார்க்கணும் என்று நினைத்தவர் மாயாவை செக் பண்ண பெண் டாக்டரிடம் செல்ல..
மாயா நானும் கண்டிப்பா வருவேன் என்று அவளும் ரதியும் சேர்ந்து வர மூன்று பேரும் டாக்டரை பார்க்க சென்றனர்..
மாயாவின் ரிப்போர்ட்டை பார்த்த டாக்டர் மாயாவை கண்டபடி திட்ட ஆரம்பித்தார்..
மாயா டாக்டர் முன் அமைதியாக அமர்ந்திருக்க..
” நீ முதல்ல உன் ஹஸ்பெண்டை வரச் சொல்லு நான் அவர்கிட்ட பேசிக்கிறேன்” என்று டாக்டர் சொல்ல.
மாயா அமைதியாக இருந்தாளே தவிர வேற எதுவும் பேசவில்லை..
உலகநாதன் டாக்டரிடம் “என்கிட்ட சொல்லுங்கள் மேம்”என்றதும்..
” சார் எத்தனை முறை சார் உங்க பொண்ணு கிட்ட இத பத்தி நான் பேசி இருப்பேன்.. நான் சொல்லுறது மாயாவுக்கு புரியுதா இல்லையா” என்று டாக்டர் கோபமாக பேச..
“மேம் என்கிட்ட சொல்லுங்க மேம்,, மாயா ஹஸ்பெண்ட் வெளியூர்ல இருக்காரு நான் வர சொல்றேன், இப்ப என்கிட்ட சொல்லுங்க”..
“சார் இது அவங்க ஹஸ்பண்ட் தான் சார் முடிவு பண்ணனும் ஹஸ்பண்ட்,வைஃப் இரண்டு பேரும் சேர்ந்து தான் முடிவு பண்ணனும்,,.
நாளைக்கு மாயாவோட ஹஸ்பண்ட் வந்து என்கிட்ட கேள்வி கேட்டா. நான் என்ன சார் பதில் சொல்றது,, அவரை முதல்ல வர சொல்லுங்க” என்றார் டாக்டர்…
மாயாவுக்கு பயங்கர கோபம் எங்க போனாலும் ஹஸ்பண்ட் இருக்காரா, ஹஸ்பெண்டை வர சொல்லுங்க, ஹஸ்பண்ட் சைன் வேணும்னு என்று கேட்டு, கேட்டு அவளுக்கு புளித்து போக. பயங்கர கோபமாக வந்தது அனைவரின் மேல்..
“என் ஹஸ்பண்ட் இப்ப என் கூட இல்ல போதுமா,, என் பிள்ளைக்கு நான் மட்டும்தான்” என்று டாக்டரிடம் கோபமாக மாயா பேச.
உலகநாதன் மகளிடம் “மாயா அமைதியா இரு டாக்டர் சொல்றத கேளுடா” என்றவர்..
“நான் மாயா ஹஸ்பண்டை கண்டிப்பா நாளைக்கு வர சொல்றேன் மேம் முதல்ல என்கிட்ட சொல்லுங்க”.. என்றார் உலகநாதன்..
டாக்டர் அங்கிருந்த பெண்கள் இருவரையும் பார்க்க..
ரதியையும்,, மாயாவும் “வெளியே கொஞ்ச நேரம் இருங்க” என்று உலகநாதன் கூற..
“நாங்க போக மாட்டோம் இங்கேயே தான் இருப்போம்” என்று இருவரும் அங்கேயே இருக்க..
“பரவாயில்லையே அவங்க இங்கேயே இருக்கட்டும் அவங்களும் நான் சொல்லுற கேட்கட்டுமா அப்பதான் அவங்களுக்கு ஒரு முடிவு எடுக்க முடியும்” என்றார்..
“இப்போ உங்க பொண்ணுக்கு 25வது வாரம் முடிஞ்சி, 26 ஆவது வாரம் நடந்துகிட்டு இருக்கு இன்னும் 14 வாரம் தான் இருக்கு பேபிஸ் வெளியே வர, உங்க பொண்ணு சொன்னாங்களா அவங்களுக்கு ‘ட்ரிப்பில் பேபிஸ்சுன்னு’? “..
“சொன்னா மேம்”..
” உங்க பொண்ணுக்கு மூன்று குழந்தைகளை தாங்குற சக்தி இல்ல, அவங்களுக்கு பிரக்னன்சி சுகர்இருக்கு,, இப்போ லோ பிரஷர் வேற இருக்கு..சின்ன வயசுல மாயாவுக்கு ஏதாவது ஆக்சிடென்ட் ஆச்சா? “…
“ஆமாம்” என்று உலகநாதன் தலையாட்ட..
“அவங்க பேக் ப்போன் அவ்வளவு ஸ்டாங்க இல்ல வீக்கா இருக்கு,, இவ்வளவு பிரச்சனை இருக்கு உங்க பொண்ணு கிட்ட,, உங்க பொண்ணால ஒரு பேபிக்கு மேல பெத்துக்கிறது சிரமம், இதுல மூணு பேபி, முடியவே முடியாது ரொம்ப கஷ்டம்”என்று கூற..
“வேற என்ன பண்ணறது டாக்டர்” என்று உலகநாதன் கேட்க…
” இங்க பாருங்க உங்க பொண்ணோட ஸ்கேன்” என்று காட்ட அதில் மூன்று குழந்தைகள் ஸ்கேனில் பிக்சரில் தெளிவாக தெரிய..
மாயாவுக்கு கண் கலங்கிவிட்டது.. தன் மூன்று பிள்ளைகளின் உருவம் குட்டி குட்டியாக அந்த கருப்பு வெள்ளை ஸ்கேன் பிக்சரில் தெரிய அதை வாங்கி பார்த்தவள், தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்..
“இதை நான் சொல்லக்கூடாத இருந்தாலும் சொல்லித்தான் ஆக வேண்டும் மூன்று பிள்ளைகளில் இரண்டு ஆண் பிள்ளைகள், ஒரு பெண் குழந்தை” என்று சொன்னதும் மகிழ்ந்து போனார் உலகநாதன்..
மாயாவுக்கு சொல்லவா வேண்டும் இன்ப அதிர்ச்சியில் அழுதவளை தோள் அணைத்துக்கொண்டாள் ரதி..
“உனக்கு மூணு பாப்பாவா பொண்ணு “என்று ரதி கேட்டது..
மாயா “ஆம்” என்று தலையாட்டியவள் ரதியின் தோளில் சாயந்து கொண்டாள்..
“அப்போ எனக்கு ஒரு பாப்பா.. உன் உலகநாதன் டாடிக்கு ஒரு பாப்பா, உனக்கு ஒரு பாப்பா மொத்தம் மூணு பாப்பா ஏய்… ஜாலி” என்று சந்தோஷப்பட..
“மூன்று பிள்ளைகளில் அந்த பெண் பிள்ளை மட்டும் வளர்ச்சியை கொஞ்சம் கம்மியா இருக்கு அதனால அந்த பெண் பிள்ளையை மட்டும் வெளியே எடுத்திடலாம்” என்று டாக்டர் கூற..
அதிர்ச்சியான மாயா “நோ மேடம் நோ” என்று அழ.
“மாயா நான் சொல்றதை கேளுமா இரண்டு குழந்தைக்கு மேலயே இது ஒரு ப்ரொசீஜர் தான்,, ரெண்டு குழந்தைக்கு மேல யாரா இருந்தாலும் பெத்துக்கிறது ரொம்ப கஷ்டம்,,..
நீ வீக்க வேற இருக்க எப்படி பெத்துப்ப சொல்லு,, இந்த ஒரு குழந்தை நினைச்சு அந்த ரெண்டு குழந்தைக்கு கஷ்டம் கொடுத்திராத,, உன்னால இரண்டு குழந்தையை பெத்துக்கிறதே ரொம்ப கஷ்டம்,, இதுல மூணாவது எல்லாம் சான்சே இல்ல..
நான் சொல்றது புரிஞ்சுக்கோ உனக்கு முதல்ல ரெண்டு குழந்தை நல்லபடியா பிறக்கணும்னு அத நினைச்சுக்கோ,, இந்த ஒரு குழந்தை பற்றி கவலைப்படாதே..
ஒரு குழந்தை நினைச்சு, அந்த ரெண்டு குழந்தையை கஷ்டபடுத்தாத,உன்னால மூனு குழந்தையை பெத்துக்க முடியாது சொன்னா புரிஞ்சுக்கோ, உனக்கு ரெண்டு குழந்தைக்கு மேல பெத்துக்கிறதுக்கு கஷ்டம்.
இந்த ரெண்டு குழந்தைக்குமே நீ சாப்பிடற சாப்பாடு பத்தாது இதுக்கு மேல உனக்கு புரோட்டீன் இஞ்செக்சன், ட்ரிப்ஸ் போடுனும் இன்னும் நிறைய இருக்கு…
இதுல மூணு குழந்தைனா உன் டெலிவரி அப்போ ரொம்ப கஷ்டம் மாயா, ஒரு குழந்தையை விட்டுக் கொடுத்தா தான், ரெண்டு குழந்தை நல்லபடியா பெற்றெடுக்க முடியும்”..
“மேடம் நோ மேடம் என் பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது நான் நல்லபடியா மூணு குழந்தையை பெத்து எடுப்பேன், அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு மேடம் என்று கண்கலங்கிய வாறே” கூற..
“சார் உங்க பொண்ணோட ஹஸ்பண்டை வர சொல்லுங்க அவர்கிட்ட நான் பேசிக்கிறேன்”.
“ஏன் எல்லாரும் ஹஸ்பண்ட், ஹஸ்பண்ட் சொல்லி என்னை சாகடிக்கிறீங்க, எங்க போனாலும் ஹஸ்பண்ட், ஹண்பண்டுன்னு கேக்குறது… கஷ்டப்பட்டு பெத்துக்க போறது நானு, இதில் அவரு எங்கிருந்து வந்தாரு” என்று மாயா எமோஷனலாக பேச..
“நீ வா மாயா” என்ற டாக்டர் அவளை அந்த பக்கம் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்று,அவளை படுக்க வைத்து, ஒரு ஊசி போட்டு அவளை தூங்க வைத்து விட்டு வந்தார்..
“சாரி டாக்டர்” என்று டாக்டரிடம் உலகநாதன் மன்னிப்பு கேட்க.
“இஸ் ஓகே சார்,, என் பேஷன்ட் தானே”,, என்று கூற..
“மாயா மூணு பிள்ளையை பெத்துக்க முடியாத மேடம்”..
“சார் ரெண்டு பிள்ளைகளுக்கு மேல பெத்துக்கிறது ரொம்ப கஷ்டம், பேபிஸ் ரொம்ப வெயிட் கம்மியா இருப்பாங்க மூணு பிள்ளையை கேரி பண்றது ரொம்ப கஷ்டம், மாயாவோட ஹெல்த் ரிப்போர்ட் சரியா இருந்தா, நானே சொல்வேன்,, அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க.. அவங்க பிபி, ஏறுது, இறங்குது..
error: Content is protected !!