Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன் என்னை சேருமா 37 Final 2 1

என் ஜீவன் என்னை சேருமா



Advertisement

 அத்தியாயம் -37     Final  2

Advertisement

Advertisement

   அக்னியின்  பெண் குழந்தை இரண்டு மாதம் கழித்து  அக்னியான் வீடு வந்து சேர்ந்தாள்..

Advertisement

அனைவரும்  சந்தோஷமாக அதை கொண்டடினார்கள்,,, அடுத்த நாள் மூன்று குழந்தைகளும் பெயர் சூட்டும்  விழா   ஏற்பாடு  பண்ணியிருந்தான் அக்னி,,.

 அக்னி அவனின்  ஆபீஸ்சில் வேலை செய்பவர் அனைவருக்கும்  போனஸ் வழங்கியிருந்தான்,,  மற்றும் நிறைய  அனாதை இல்லத்திற்கு,, உணவும், பண  உதவியும் செய்து,..தன்னுடைய மகிழ்ச்சியை  அனைவருக்கும் தெரிவித்து இருந்தான்..

பார்வதியிடம் இருந்த ஆண் குழந்தை அக்னியின் வீட்டில் இருக்க,, இன்னொரு ஆண் குழந்தை ரதியின் வீட்டில் வளர்ந்தது கொண்டு  இருந்தது,,,

குழந்தைகள்  மூன்று பேருக்கு ஒன்றாக அக்னியின் வீட்டில் வைத்து பெயர் சூட்டும்  விழா நடைபெற ஏற்பாடு செய்திருந்தனர்.. குழந்தைகளுக்கு  என்ன பெயர் என்று யாருக்கும் தெரியவில்லை…

 பாண்டிச்சேரியிலிருந்து மாயா   வந்ததும்,..

 மாயாவின் குழந்தையை  ரதி  மாயாவிடம் வந்து  தர..

“நீங்க தான்   என்  மகனை வளர்க்கணும்   ரதிமா,, அக்னி அத்தான் உங்ககிட்ட சொல்லலீயா,, நாங்க இரண்டு பேரும் சேர்ந்து தான் ஒரு குழந்தையை உங்களுக்கு குடுக்க  முடிவு எடுத்தோம், இதுல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்ல ரொம்ப சந்தோஷமா தான் குழந்தையை  உங்க கிட்ட கொடுத்தோம்,, அவன் உங்க பையன் மா உங்க வீட்டுல தான் இருப்பான்,, நீங்க எப்ப எனக்கிட்ட  ஒரு பாப்பா தருவீயா மாயான்னு கேட்டீங்களோ?,, அப்பையே நான் முடிவு பண்ணிட்டேன்மா”  என்று மாயா சொல்ல அவளை அணைத்துக்கொண்டாள் ரதி..

ரதிக்கு குழந்தையை வளர்க்க ஆசை தான்,, இருந்தாலும் அவருக்கு மனதில் ஒரு வருத்தம் இருந்தது,, மாயா தனக்கு எந்த ஒரு வருத்தம் இல்லாமல் குழந்தையை தர வேண்டும் என்று தோன்றியது, இப்போ மாயா கூறியதும்,,, சந்தோஷமாக அவளை  அணைத்துக்கொண்டவள்..

பார்வதியை பார்க்க.. “எனக்கு எந்த வருத்தம் இல்ல ரதி, குழந்தை எங்ககிட்ட இருந்தா என்ன? நீ வளர்த்தா  என்ன, எல்லாம் நம்ம வீடு தான்,, நீ வருத்த பட ஏதுவும் இல்லை” என்று பார்வதி கூறி விட..

உலகநாதன் அருகில் வந்த ரதி “நம்ம பையன்” என்று கூற, “நம்ம பிள்ளை தான்” என்றார் அவரும்..

பேர் வைக்கும் வைபவம் நடக்க ஏற்பாடு ஆகிக்கொண்டிருந்தது,, குழந்தைகள் நல்லபடியாக திரும்பி வந்ததர்க்கு  பார்வதி ஒரு ஹோமம் ஏற்பாடு பண்ணி இருந்தார்,, காலையிலே ஹோமம் நடந்து  முடிந்து இருக்க,, ஐயர் ஒரு, ஒரு பிள்ளைகளை அழைத்து பெயர்  வைக்க வர  சொல்ல..

முதலில் பார்வதி தான் தன் முதல் பேரனை தூக்கிகொண்டு  ஐயர் முன்னாடி  வந்து அமர,, “பேர் சொல்லுங்க”  என்றார்  ஐயர்..

பார்வதி தன் பேரனுக்கு “சிவ அக்னிஸ்வரன்” என்ற பேரை சொல்ல..

“குழந்தை காதில் மூணு தடவை சொல்லுங்க” என்று  ஐயர் கூறியதும்..

 அதே மாதிரி தன் பேரன் காதில் மூன்று முறை “சிவ அக்னிஸ்வரன்” என்று கூறினார் பார்வதி..

ஐயர் சிவ அக்னிஸ்வரன் நல்லா இருக்க வேண்டும் என்று பூஜை செய்தவர்..

“அடுத்தது “என்று  ஐயர் அழைக்க..

“நீங்க போங்க ரதிமா” என்றாள் மாயா..

ரதி உலகநாதனோடு குழந்தையை தூக்கிக்கொண்டு  வந்து ஐயர் முன் அமர..

“பேர் சொல்லுங்க”?

ரதி மாயாவை பார்த்து,, “நீ சொல்லு மாயா” என்றாள்..

“உங்க பையனுக்கு நீங்க தான் பேர் வைக்கனும் ரதிமா” என்றாள் மாயா..

ரதி அக்னியை பார்க்க,, “உங்க கிட்ட எப்போ குடுத்தோமோ அப்பவே அவன் உங்க பொறுப்பு அத்தை, சந்தோஷமா பேர் வைங்க, உங்க மகனுக்கு” என்றான்  அக்னி

உலகநாதனை பார்த்த ரதி “நீங்க” என்று ஏதோ சொல்ல வர..

“உன் இஷ்டம் டா உனக்கு பிடிச்சமாதிரி வை” என்றதும்..

ஐயரை பார்த்த ரதி “சிரஞ்சீவி உலகநாதன்” என்று பெயரை  சொல்ல..

அனைவரும் “ஹே.. சூப்பரா இருக்கு அத்தை”  என்று நிலா  சொல்ல..

ரதி வெட்க பட்டு கொண்டார்..

“எங்க மாமாவை எங்கையும் விட மாட்டீங்க போல அத்தை, குழந்தை பேருல கூட  எங்க  உலகநாதன் மாமாவை சேர்த்துட்டீங்க,” என்று தேவ் ரதியை கிண்டல்  பண்ணி சிரித்தவன் “அப்பாட” என்றான்…

ஏன் இந்த அப்பாடா என்று அனைவரும் பார்த்து கேட்க..

“நல்ல வேளை  அக்னி பெயரை சேர்த்து, அப்புக்குட்டியின்னு அத்தை  வைக்கல” என்றான்..

“ஆமாம் டா “என்று பார்வதி சிரிக்க..

“என்ன ஏன் அத்தையை கேலி பண்ணுறீங்க,  அடுத்த குழந்தைக்கு அத்தை என் பேர் தான்  வைப்பாங்க,என்ன அத்தை” என்று அக்னி  கூற..

அனைவரும் முகத்திலும் புன்னகை..

“ஏன் அக்னி என்னை கேலி பண்ணுற”, என்றாள் ரதி..

“ஏன் அத்தை, நீ என் மாமா கூட சேர்ந்து வாழ வேண்டாமா, அதை நாங்க பார்த்து  சந்தோஷ பட வேண்டாமா” என்றவன்..

“உனக்கு இன்னொரு குழந்தை பொறக்கனும் அத்தை,, அந்த குழந்தையை  நான் ஆசை திற கொஞ்சனும்” என்றான்..

அவன் சொல்லி வாய் முகூர்த்தமோ , என்னவோ அடுத்த ஒரு வருடத்தில்  ரதிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்திருந்தது…

5 வருடம் கழித்து,,

அக்னியின்  மூன்று பிள்ளைகளின் பிறந்த நாள் இன்று ,, அந்த கொண்டாட்டதிற்காக, அனைவரும்  அவரவர்கள்  வீட்டில் இருந்து   பார்ட்டி ஹாலிற்க்கு வர  தயாராகி கொண்டிருக்க….

அக்னி தன் பிள்ளைகளின் பிறந்தநாளை கொண்டாட ஒரு பார்ட்டி  ஹால் புக் பண்ணி இருக்க, அங்கே தான் அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர்..

“நான்  ரெடி ” என்று  மாயா பிங் நிற லாங் பிராங் அணிந்து அக்னியின் முன் வந்து  நிற்க..

அதே வண்ணத்தில் மாயாவின் மகள் பெர்னிலாஅக்னியும் பிங் வண்ண நிறத்தில் உடை அணிந்திருந்தாள்.. அக்னி குழந்தைக்கு மேக்கப் பண்ணி விட்டு  கொண்டிருக்க..

 மகளை  பார்த்து மாயா,..

“இன்னும் உங்க மேக்கப் முடியலயா”.. என்றாள்..

“டு மினிட்ஸ் மாயா பேபி” என்றது குழந்தை…

“உனக்கு நான் பேபியாடி”.

“எஸ்,, டாடி அப்படி தானே கூப்பிடுறாங்க ,, அப்போ நானும் இப்படி தான் கூப்பிடுவேன் மாயா டார்லிங் ” என்று  குழந்தை சொல்ல..

மானம் போச்சு… இவரை என்று அக்னியை பார்த்து  முறைக்க..

அவனோ மகளின் தலைக்கு வித, விதமான ஆலங்கார குட்டி கிளிப்புகளை மகளின் தலையில் வைத்து,,  “முடிஞ்சது  ப்பர்த்தடே பேபி” என்று தன் மகளை கொஞ்ச..

“தாங்யூ டாடி” என்றவள் அவனுக்கு முத்தம் வைக்க..

மகளை பூபோல அணைத்து  தூக்கி வைத்துக்கொண்டான் அக்னி..

“உங்க  அம்மா நம்மல பார்த்து முறைக்குற பாரு,, அவளுக்கு ஒரு முத்தம் கொடு” என்றதும்..

“ஓகே டாடி” என்றவள்..

அவனிடமிருந்து இறங்கிய குழந்தை மாயாவிடம் வந்து அவளின் கையை பிடித்து கீழே இழுத்து,, அவளின் கன்னத்தில் முத்தமிட..

“ஹாப்பி ப்பர்த்தடே பேபி” என்றாள்..

“தாங்யூ மாயா பேபி ” என்றது குழந்தை,,

“டி மம்மி சொல்லுடி”  என்றாள் மாயா குழந்தையிடம்..

“நோ ஒன்லி மாயா பேபி, டாடி அப்படி தான் கூப்பிட சொல்லியிருக்காரு”..என்று சொல்ல..

எல்லாம்  இவர் பண்ண வேல தான்…

“நீ கீழ போயி பாட்டியும் அண்ணாவும் கிளம்பிட்டாங்கலன்னு பாரு” என்று அனுப்பி வைத்தவள்..

அக்னியை பார்க்க..

அவனோ  கால்  மேல் கால் போட்டு கட்டிலில் அமர்ந்து கொண்டு “எப்படி என் பொண்ணு”?.. என்றவுடன்..

பாய்ந்து வந்து அவன் மேலே விழுந்தவள்,, அவன் இதழை கடித்து வைத்திருந்தாள்..

“அடி பாவி எத்தனை நாளா இந்த கொல  வெறி” என்றான் அவள் கடித்து வைத்த இதழை தொட்டு பார்த்து ..

“பின்ன குழந்த முன்னாடி, என்னை மாயா பேபியின்னு சொல்லாதீங்கன்னு சொன்னா? அவமுன்னாடியே என்னை மாயா பேபி, டார்லிங்குன்னு கொஞ்சுறது,, அவ என்னை எப்படி கூப்பிடற பாருங்க”..

“நம்ம குழந்தை தானே டி கூப்பிட்ட என்ன தப்பு டார்லிங்” என்று அவள் இதழை இதழ் ஒற்றிய படியே அவளிடம் பேச….

“தள்ளிபோங்க,, டார்லிங் டார்லிங்குன்னு பக்கம் வர்ரது,, நாம கிட்ட போன தள்ளி போறது,”,…

“நான் எப்படி டி தள்ளி  போனேன்,, ஐ யம் ஆல்   வேஸ் யுவர் ப்பிராப்பர்ட்டி மாயா பேபி,” என்றான் அக்னி..

“பேச்ச மாத்தீங்க அடுத்த குழந்தை பெத்துகிற பத்தி உங்க கிட்ட  கேட்ட,, ஏன்  என்க்கிட்ட  இருந்து நீங்க தள்ளி போறீங்க”..

“ஒரு தடவை நீ செத்து பிளச்சது போதாத,, குழந்தை வேணாம்டி, நம்ம ரெண்டு பிள்ளைங்க போதும்,, உன்னை கஷ்ட படுத்த நான் விரும்பல” என்றான் அக்னி..

“எனக்கு உங்களை மாதிரி ஒரு பெண் குழந்தை வேணும்” என்று மாயா அடம் பிடிக்க..

“நீ தலை கீலா நின்னாலும் இது நடக்காது, நீ கஷ்டம் படுற மாதிரி, இனி நான் எதுவும் பண்ண மாட்டேன்” என்று சொல்ல..

“போயா”  என்று  தன்னோடு இருந்தவனை தள்ளி விட..

அக்னியின் போன் ஒலித்தது..

அவன் மகன் சிவாஅக்னிஸ்வரன் போன் பண்ணியிருந்தான்..

“அப்பா  அப்பாயி வர சொன்னாங்க” என்று கூற..

“இதோ டா”..

என்றவன் கிளம்ப..

மாயா அவனை பார்த்து முறைத்த படியே, ” பக்கத்தில் வராதீங்க” என்று முணங்கியபடியே  வெளியில் செல்ல..

அவர் வீட்டில், தேவ் குடும்பம், நிலா குடும்பம் என்று  அனைவரும் ரெடியாக இருக்க..

இன்னும்  உலகநாதன் குடும்பம் மட்டும்  வராமல் இருக்க..

“மாமாவுக்கு போன் போடு மாயா அவங்க  கிளம்பிட்டாங்கலான்னு கேளு” என்றான் அக்னி…

மாயா உலகநாதனுக்கு  போன் போட…

போனை எடுத்த சீரஞ்சிவி உலகநாதன். “மீ சொல்லுங்க” என்றான்..

 “சீரஞ்சிவி  கண்ணா எல்லாரும்  கிளம்பிட்டீங்களா?. என்றாள் மாயா…

“இல்லா மீ,, தங்க பாப்பாவுக்கு உடம்பு சரியில்ல அழுகுற, அப்பாவும்,அம்மாவும் பாப்பாவை  ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க மீ” என்றான் சிரஞ்சீவி உலகநாதன்..

 “என்ன கண்ணா ஆச்சு தங்கரதி பாப்பாவுக்கு” என்று மாயா கேட்க..

 “ஒன்னும் இல்ல மீ லைட்டா  ஃபீவர் தான் இப்ப ஓகே,, கிளம்பிட்டே இருக்கோம்னு ஆஃப் ஆன் ஹவர்ல வந்துடுவோம் மீ” என்று போனை வைத்தான்…

 “என்ன  உங்க அப்பா கிளம்பிட்டாரா  மாயா”?.. என்றான் அக்னி.

 “தங்கரதி பாப்பாவுக்கு உடம்பு முடியலையாம் சிரஞ்சீவி சொன்னான் அதனால கொஞ்சம் லேட்டா வருவாங்க போல இன்னும் கொஞ்ச   நேரத்துல வந்துருவாங்க,, நாமா கிளம்பலாம்” என்று  அக்னியின் குடும்பம் கிளம்பினார்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!