Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ – 6

பகுதி 6

முகுந்த் நன்றாக உறங்கியதும், அவனை மெத்தையில் மென்மையாக கிடத்தி.. அவனை உச்சி முகர்ந்து விலகியவன், 

எப்போதும் செய்வது போல.. பேபி மானிட்டரை செட் செய்தான். 



Advertisement

மீண்டும் ஃப்ரஷப் ஆகி பார்மலான பேண்ட் சர்ட்டுக்கு மாறி, சந்தீப்பின்‌ உதவியுடன் அந்த அறைக்கு காவலாய் ஒருவரை அந்த அறைக்கு வெளியே சேரில் அமர வைத்துவிட்டு, தனது லேப்டாப்போடு கீழ் தளத்தில் அமைந்திருக்கும் மீட்டிங் ஹாலுக்கு வந்து சேர்ந்தான்.

Advertisement

அங்கு ஏற்கனவே சந்தீப் சொல்லியிருந்ததால் தங்களின் லன்ச் முடித்துவிட்டு.. இவர்களின் வரவுக்காக காத்திருந்தனர் சிலர்.

Advertisement

அங்கிருந்தவர்களுக்கு வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலமாக ஏற்கனவே ரியான் பழக்கம் என்பதால், அவனுக்கு முறையான வணக்கத்தையும், வரவேற்பையும் அங்கிருந்தவர்கள் அளிக்க,

Advertisement

இன்முகமாய் அதை ஏற்றுக்கொண்டவன் சுற்றி வளைக்காமல் நேரடியாக தங்களுக்கு வந்திருக்கும் ப்ராஜெக்ட் பற்றிய சிறு குறிப்பை கொடுத்தவன்,

“இந்த டீம்ல இருக்கற எல்லாரோட ஸ்கில்ஸ் அண்ட் ஏற்கனவே நீங்க செஞ்ச ப்ராஜெக்ட் எல்லாமே மானிட்டர் பண்ணி தான் உங்களை இந்த பர்ட்டிக்குலர் ப்ராஜெக்ட்க்கு அசைன் பண்ணியிருக்கோம்.

ஐ ஆம் ஸ்யூர்.. யூ கேன் கம்பிளீட் திஸ் ப்ராஜெக்ட் வெல்..” என்று அனைத்தையும் ஆங்கிலத்தில் அழகாய் விளக்கம் அளித்து, அந்த டீமிற்கு தலைமை ஏற்பவரின் கருத்தை கேட்க..

“சார், நீங்க சொல்லற வச்சு பார்த்தா இது கொஞ்சம் காம்ப்ளீக்கேட்டான விசயமா இருக்கு. அதோட, நீங்க சொல்லற டெட் லைனுக்குள்ள ன்னா.. இட்ஸ் இம்பாஸிபிள்…” என்றிட,

“வெல், நீங்க சொன்ன மாதிரி இது கொஞ்சம் காம்ப்ளீக்கேட்டான ப்ராஜெக்ட் தான். பட், நம்மளால முடியாதது இல்லை. 

எதுல ரிஸ்க் இல்லை சொல்லுங்க. கொஞ்சம் எக்ஸ்ட்ரா எஃபெக்ட்ஸ் போட்டா போதும். 

அதும் இந்த ப்ராஜெக்ட்டுக்கான காலக்கெடுவும் ரொம்ப கம்மிங்கறதால.. நீங்க நேரம் காலம் பார்க்காம வொர்க் பண்ண வேண்டி இருக்கும். 

இதெல்லாம் நீங்க எதிர் கொள்ள போகும் சவால்.

அப்படி இதுல நீங்க ஜாயின் ஆனா அதுக்கான பெனிபிட் என்னன்னு தோனும் இல்லையா..?!” என்று அவன் நிறுத்த,

அங்கிருந்த அத்தனை பேரின் முகமும்.. எதிர்பார்ப்பையும், ஆவலையும் காட்டி கொண்டிருந்தது அடுத்து ரியான் சொல்ல போகும் பதிலுக்காக. 

“இந்த ப்ராஜெக்ட் நல்லபடியா முடுச்சு கொடுக்கற டீம்.. மொத்தமா அடுத்து அடுத்து வரப் போறா பெரிய ப்ராஜெக்ட்ல அசைன் ஆவீங்க. 

ஐ மீன்.. இன்னும் பல வருஷம் உங்களுக்கான ஜாப் கேரண்டி இதனால உறுதியாகும்.

இந்த மாதிரி பெரிய ப்ராஜெக்ட்ல வொர்க் பண்ணற உங்க எஃபீசியன்ஷி மட்டுமில்ல.. ப்ரமோஷனோட உங்க சேலரியும் இதனால டபுளா இன்க்ரீஸ் ஆகும். 

அண்ட் ஆல் சோ, ஆன் சைட் ஆஃபரும் உங்க டீம் மெம்பர்ஸ்ஸூக்கு கிடைக்கும்.

இதுமட்டுமல்ல..” என்றவன்,

அவர்கள் அந்த ப்ராஜெக்ட்டில் சேர்ந்தால் பெற கூடியதாக சொன்னதில், அங்கிருந்த அத்தனை பேரும் மறுப்பின்றி தங்களின் ஒப்புதலை வழங்கிட,

அது சம்மந்தமான அனைத்து அடிப்படை விசயங்களும் அடுத்து நடந்தேற துவங்கியது.

‘இவன ஏன் அந்த கம்பெனி விடாம புடுச்சு வச்சுதுன்னு இப்ப தானே புரியுது. இவ்வளவு மண்டமூளை உள்ளவன விட அந்த கம்பெனிக்காரன்.. மூளை கெட்டவனாவா இருப்பான்..?

இங்கே இருக்கறதுங்க கிட்ட.. இதே விசயத்தை நா சொல்லியிருந்தா, அத்தன நாள்ல எல்லாம் எங்களால முடுச்சு கொடுக்க முடியாது போடா.. ன்னு ஒரே போடா போட்டுட்டு போயிருக்குங்க. 

ஆனா, இவன் எப்படியோ மூளைய கழுவி சம்மதிக்க வச்சிட்டானே..!’ என்று ரியானின் சாமர்த்தியமான பேச்சை கேட்ட சந்தீப்பின் மனம் தனி ஆவர்த்தனம் வாசித்து கொண்டிருந்தது‌.

இதில் பல முறை ரியான் அழைத்தும் கேட்காது போக ஓங்கி அவன் முதுகில் அடிக்க, “அம்மோ…!” என அலறியவன், 

“ஏன்டா..?” என்றான் பரிதாபமாக தனது புறங்கை கொண்டு முதுகை தேய்த்தபடி.

“எத்தன முறை கூப்பிடுறேன்.. உட்கார்ந்து தூங்கிட்டு இருக்கீயா..?” என்றான் கடுப்பாக.

“நீ கூப்பிட்டும் பார்க்கலன்னா தூங்க மட்டுமா செய்வாங்க..? ஏதோ யோசனையில கூட இருக்கலாம் இல்லையா..?” என்றிட,

“ஓ.. அப்படி என்ன யோசிச்சீங்க சார்..?” என்றான் தீவிரமான குரலில்.

“வேற என்ன இந்த ப்ராஜெக்ட் பத்தி தான்..” என்றவனின் பதிலில், அதிசயத்தவன்,

“ஹோ.. ரியல்லீ..! அப்போ நா இவங்களுக்கு இந்த ப்ராஜெக்ட் சம்மந்தமா ஹின்ட் மட்டும் தான் சொல்லியிருக்கேன். 

டீட்டெய்லா.. நீ அவங்க ப்ரேக் முடுஞ்சு வந்ததும் எக்ஸ்பிளைன் பண்ணு..” என்று கூலாக சொல்ல,

“ஏதே.. நானா..! டேய், ஏன்டா இப்படி கோர்த்து விடறே…? 

நா இந்த ப்ராஜெக்ட் பத்தி யோசிச்சேன்னு சொன்னேன் தான். ஆனா, அது எப்படி செய்யறதுன்னு இல்ல. 

இவனுங்ககிட்ட இதையே நா சொன்னா.. செய்யறோமுன்னு ஒத்துக்கிட்டு இருப்பாங்களா..? ன்னு யோசிச்சேன்..” என்று உண்மையை சொல்ல..

“அது என்னமோ வாஸ்தவம் தான். நீயே தூங்கி வழியறே. உனக்கு கீழே ஒரு டீம் இருந்தா.. அது எப்படி உருப்படுமுன்னு அவங்களுக்கும் தோனும் தானே..” என்றான் படு நக்கலாய்.

“டேய் ரியான்.. ஓவரா டேமேஜ் பண்ணாத. நீ இல்லாத அப்போ நான் தான் இங்கே எல்லாமே பார்த்துக்கிட்டேன்னு நியாபகத்துல வச்சுக்கோ..” என்றான் ரோஷமாக. 

“அந்த டேஸூக்கு தான்டா.. அப்ப புடுச்சு உன்னை கூப்பிட்டு இருக்கேன் வென்ரூ…” என்றான் கோபமாக.

“என்னடா.. அண்ணனை இப்படி பொசுக்குன்னு திட்டிட்டே..?” என அதிர, 

“இன்னும் இப்படியே டைம் ஓட்டினா.. இன்னும் வண்ண வண்ணமா கேட்க வேண்டி வரும். முதல்ல நா கேக்கறதுக்கு பதிலை சொல்லி தொல..” என்றான் எரிச்சல் மிக.

“என்னடா.. என்ன வேணும்..?” என்றான் அப்போதும் அலட்சியமாக.

அதில் கடுப்பான ரியான், “மீட்டிங்ல இவ்வளவு நேரம் பேசினதை முழுசா கவனிச்சையா..? இல்லையா..?” என்றிட, 

சந்தீப்பின் தலை நாலாபுறமும் ஆட்டியதிலேயே, ‘அவன் அங்கு பிசிக்கலி பிரஷன்ட்.. மென்ட்டலி ஆப்சென்ட்..’ என்பது விளங்க,

“உன்னையெல்லாம் வச்சுட்டு..” என்றவன், 

“ப்ராஜெக்ட் டெவலப் பண்ண.. லேங்குவேஜ் நாலேஜ் உள்ள பர்ஷன் இன்னும் ஒருத்தங்க இருந்தா பெட்டர்ன்னு டீஎல் கேட்கறாங்க.

யோசிச்சு பார்த்தா இந்த டீமுக்கு அப்படி இன்னும் ஒருத்தங்க இருந்தா நல்லதுன்னு தான் எனக்கும் தோணுது.

சோ, அந்த பர்ட்டிக்குலர் லேங்குவேஜ்ல ப்ரோகிராம் பண்ணற பர்ஷன் யாராவது இப்போ கம்ப்ளீட் ஆக போற ப்ராஜெக்ட்ல இருக்காங்களா.. ன்னு கேட்டேன்..” என்றான் விளக்கமாக.

“ம்ம், தெரியலடா. எனக்கு கொஞ்சம் டைம் கொடு, செக் பண்ணிட்டு சொல்றேன்..” என்றவன், தனது மடிக்கணினியில் மூழ்கி போனான்.

சந்தீப் அவனின் வேலையில் மூழ்கியிருந்த நேரத்தில்.. தனது போனில் இணைக்கப்பட்டிருந்த சிசிடிவி மூலமாக முகுந்தின் இப்போதைய நிலையை கவனித்தவன் முகம் கனிந்து போனது மகனை கண்ட நொடியே..

நீண்ட வருடம் சென்று.. வரமாய் கிடைத்தும், போராடி காப்பாற்றிய பேரின்பம் அல்லவா அவன்..! 

அவனுக்காக தானே பல சலுகையோடு கூடிய வேலையையே வேண்டாம்.. என விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறான்.

அப்படியிருக்க அவனை காணும் போது.. அவனின் முகம் கனியாதிருக்குமா என்ன..?!

தனது வேலையை முடித்து, “ரி..” என ஆரம்பித்த அழைப்பை நிறுத்திவிட்டு, அவனை பார்த்த சந்தீப்புக்கு உள்ளம் உருகி போனது.. அந்த தந்தையின் பாசமான பரிமாணம் கண்டு.

அவனின் முகமே காட்டி கொடுத்ததே.. அவன் யாரை பார்த்து கொண்டிருக்கிறான் என. 

‘அவனுக்கு அதீத கவலையை கொடுப்பவனும் அவனே.. கவலைக்கு மருந்தும் அவனே..’ என எண்ணியபடி ரியானை பார்த்திருக்க,

சில நிமிடத்தில் சுதாரித்த ரியான், நிமிர்ந்து சந்தீப்பை பார்க்கும் நேரத்தில் தனது முகபாவனையை இயல்பாக மாற்றிக்கொண்ட சந்தீப்,

“டேய், நீ கேட்ட மாதிரி அந்த ஸ்கில் உள்ள பர்ஷன் யாரும் அவைலபிள் இல்லடா. எல்லாருமே இப்ப போயிட்டிருக்க ப்ராஜெக்ட்ஸ்ல தான் இருக்காங்க..

அவங்க அதுல இருந்து ரிலீவ் ஆக இன்னும் ஃப்யூ வீக்ஸ் ஆகும்..” என்றிட,

“ஓ..!” என தன் நெற்றியை தேய்த்தபடி, ‘என்ன செய்யலாம்..’ என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தவனை கலைத்தது,

சந்தீப்பின், “ஆனா.. இன்னைக்கு புதுசா ஜாயின் பண்ண ஒரு ஃப்ரஷர் அந்த லேங்குவேஜ்ல சர்ட்டிபிகேட் சம்மிட் பண்ணியிருக்காங்க..” என்ற வார்த்தை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!