Skip to content
Post Views: 9,197
அதில் உற்சாகமானவன், “அப்போ, அவங்கள இந்த ப்ராஜெக்ட்டுக்கு அசைன் பண்ணு..” என்றிட,
“புரியாம பேசாத ரியான். அவங்க இன்னைக்கு தான் ஜாயின் பண்ணியிருக்காங்க. இன்னும் ட்ரைனிங் பீரியட் கூட முடியல.
Advertisement
அதுக்குள்ள அவங்கள இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட்ல சேர்த்தா.. கண்டிப்பா இப்ப டீம்ல இருக்கறவங்களே யோசிப்பாங்கடா..” என்றான் அங்குள்ள அரசியல் புரிந்தவனாக.
“ஓகே.. அப்போ வேற எதாவது சோர்ஸ் இருந்தா சொல்லு..?” என்றான் அவனிடமே பொறுப்பை ஒப்படைத்தவனாய்.
Advertisement
Advertisement
மீண்டும் தனது கணினியில் சிறிது நேரம் செலவிட்டவன், அவனுக்கு தேவையான நபர்கள் அனைவரும், அவர்கள் வேலை பார்க்கும் இடத்திலிருந்து வெளியே கொண்டு வர சாத்தியமே இல்லை.. என்ற நிலையில் இருப்பது புரிந்து ரியானை பார்க்க..
“என்னாச்சு.. எனி சோர்ஸ்..?” என்றான் ஒற்றை புருவமுயர்த்தி கேள்வியாய்.
Advertisement
‘இல்லை..’ என தனது உதட்டை பிதுக்கி காட்ட, “அப்போ அதையே சொல்லி, அவங்கள இந்த டீம்ல கொண்டு வர்ற வழிய பாரு..” என்றான் கட்டளையாக.
“எல்லாம் சரி டா. ஆனா, இங்கே டைம் ரொம்ப கம்மி.. அவங்களுக்கு அந்த லேங்குவேஜ் தெரியுமின்னாலும்.. ப்ராக்டிக்கலா அதை இந்த ப்ராஜெக்ட்ல எப்படி இம்ப்ளிமென்ட் பண்ணனுமின்னு கத்துகொடுக்கவும், சரியா பண்ணறாங்களா ன்னு மானிட்டர் பண்ணவும் ஆள் வேணுமே..?
இங்கே அவங்க வேலையே பெண்டு கழண்டும் போது.. அவங்கள யாரு ட்ரைன் பண்ணுவா..?” என்றிட,
“இதான் இப்போ பிரச்சினைன்னா, அதை நானே சரி பண்ணறேன்.
அவங்களுக்கு இந்த ப்ராஜெக்ட்டுக்கு வேணுமுங்கறதை ஒன் ஆர் டூ டேஸ்ல நானே சொல்லி கொடுத்துக்கறேன்.
மத்தவங்க அவங்களுக்கு அசைன் ஆகறத மட்டும் பார்த்தா போதும்.
டே த்ரீல இருந்து அவங்களுக்கான வேலையை அவங்க முடிச்சிடுவாங்க. அதை நேரடியா நானே மானிட்டர் பண்ணிக்கறேன். இப்போ பாராப்ளம் சால்வ்டா..” என்று சொல்லிவிட,
இதை விட வேறு தீர்வும் இல்லாத நிலையில்.. ரியானின் முடிவே இறுதியானது.
“சரிடா இன்னைக்கு அவங்க பார்மாலிட்டீஸ் முடுச்சிட்டு கிளம்பட்டும்.
டீம் கூட மத்த விசயத்தை பேசிட்டு, நாளைக்கு மார்னிங் வந்ததும் உன்னை வந்து பார்க்க சொல்றேன்..” என்றிட,
“அதுக்கும் முன்னாடி அவங்களோட பயோவ எனக்கு அனுப்பிடு..” என்று சொல்லவும்,
டீம் மேட்ஸ் அனைவரும் அனுமதி கேட்டு உள்ளே வரவும் சரியாக இருக்க, அதன் பிறகான நேரம் மின்னலாய் ஓடி மறைந்தது ரியானுக்கும்.
அவனின் வேலை முடிக்கவும், பேபி மானிட்டர் அவனை அலாட் செய்யவும் சரியாக இருக்க, மீதியை சந்தீப்பை பார்க்க சொன்னவன் விரைந்தான் தன் மகனிடம்.
அடுத்து அவனின் நேரத்தை முகுந்த் ஆக்கிரமித்து கொள்ள,
சந்தீப் வந்து, “ரியான், நீ கேட்டபடி கார் ரெடியா இருக்காம். இன்னைக்கே எடுத்திடலாமா..? இல்ல, நாளைக்கு பார்க்கறையா..?” என கேட்க,
“ஷோரூம் வில்லா போற வழியா..? இல்லை வேற வேற ரூட்டா..?”
“சேம் வே தான்..”
“அப்ப ஒண்ணு செய்வோம்.. நீ பொருளெல்லாம் அரேன்ஜ் பண்ண ஆட்களை அப்பார்ட்மெண்ட்டுக்கு வர சொல்லு.
நாமும் போற வழியில பார்மாலிட்டிஸ் முடுச்சுட்டோமுன்னா.. காலைல வீட்டுல டெலிவரி பண்ண சொல்லிடலாம்.
நாங்க நாளைக்கு ஆஃபீஸ் வர ஈஸியா இருக்கும்..” என சொல்ல,
அதன்படி கிளம்பி போகிற வழியில் செய்ய வேண்டியதை முடித்துவிட்டு, அவர்கள் தங்கும் இடத்தை வந்தடைந்தனர்.
அது ஒரு கேட்டேட் கம்யூனிட்டி என்பதால்.. முறையான அனுமதி பெற்று உள்ளே செல்ல, ரியானின் முகம் யோசனையை தத்தெடுத்தது.
“சந்தீப், நா தங்கப்போறது வில்லா டைப் தனி ப்ளாட் தானே..” என்றான், யோசனை மாறாமல்.
“ஆமாடா. ஏன் கேட்கறே..?” என புரியாமல் சந்தீப் கேட்டான்.
ஏனெனில் அவன் வாங்கும் வீட்டின் அமைப்பு முதற்கொண்டு.. உள் டிசைன் வரை அனைத்தும்.. ரியானின் மேற்பார்வையில் தான் ஆன் லைன் மூலமாக நடந்ததே.. அப்புறமும் இந்த கேள்வி ஏன்..? என்ற சந்தேகம் சந்தீப்புக்கு.
“இல்ல, இந்த அப்பார்ட்மெண்ட் எல்லாம் க்ராஸ் பண்ணி தான் வில்லா போகனுமா..? செப்பரேட் என்ட்ரன்ஸ் இல்லையா.. அதுக்கு..?” என்றான் குழப்பமாக.
“நீ அதை நோட்டீஸ் பண்ணலையா..? உனக்கு அனுப்பின ப்ளூ ப்ரிண்ட்ல.. அது மென்ஷன் ஆகியிருந்துச்சே..!” என்றவன் தொடர்ந்து,
“நீ எதிர்பார்த்த ரேன்ஜ்ல.. உனக்கு ஆஃபீஸ் அண்ட் முகுந்துக்கு ஹாஸ்பிடல், அதோட பார்க் எல்லாமே அட்டேச் ஆகியிருக்கற வில்லா.. இவ்வளவு ரேட் குறைஞ்சு அவன் விற்க காரணமே இது தான்.
இங்கே இருந்து வெளியே போக, வர இந்த என்ட்ரன்ஸ் மட்டும் தான் யூஸ் பண்ண முடியும்.
மத்த சைட் எல்லாமே, வேற பில்டிங்ஸ் கவர் ஆகறதால எங்கேயும் ஓப்பன் வைக்க முடியல.
வில்லாவுல இருக்கறவங்களுக்கு ப்ரைவசி வேணுமின்னு தான், முன்னாடி சிங்கிள் அண்ட் டபுள் பெட்ரூம் அப்பார்ட்மெண்ட்ஸ் வச்சிட்டு லாஸ்ட்ல வில்லாஸ் வர்ற மாதிரி கட்டியிருக்காங்க..” என விளக்கினான்.
அவனின் விளக்கத்தில், ‘தான்.. தான் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டு, தங்களுக்காக மெனக்கெட்டு இவ்வளவு செய்தும் குறை சொல்வது சரியில்லை..’ என மனதில் கொண்டு அமைதியாய் வந்தவனை கண்ட சந்தீப்,
“எனக்கும் இது பிடிக்கல தான்டா. அதனால வேற நிறைய தேடினேன்.. ஏன் தனி வீடா கூட பார்த்தேன்.
அப்படி பார்த்தா இன்னும் அமவுண்ட் தேவைப்பட்டுச்சு. உன் பட்ஜெட் எவ்வளவுன்னு தெரியும். எவ்வளவு உன்னால சமாளிக்க முடியுமுன்னும் எனக்கு ஓரளவு புரியும்.
இப்போது ஆஃபீஸ், இந்த வீடு எல்லாத்துக்கும் ஈஎம்ஐ கால்க்குலேட் பண்ணி பார்த்துட்டேன்.
இதுல இன்னும் உனக்கு ரிஸ்க் எடுக்க வைக்க வேணாமுன்னு தான்.. இதை செலக்ட் பண்ணேன்.
உங்க தாத்தா சொத்தை மொத்தமா வித்திருந்தா.. இந்த பிரச்சினையே இல்லை. நீ தான் அதை ஃப்ளச் மட்டும் பண்ண சொன்னே..” என்று நீண்ட விளக்கம் கொடுத்து முடித்தான்.
சந்தீப் சொன்ன எல்லாமே.. நூற்றுக்கு நூறு உண்மை.. என்பதை உணர்ந்த ரியான்,
“இல்லடா.. தாத்தாக்கு அவரோட வீடும், அந்த காடும் உயிர் டா. அதை விட்டு வர மாட்டேன்னு, பாட்டி இறந்த போதும் தனியா அங்கேயே இருந்தார். அதை யாரோ சொந்தம் கொண்டாட விட என்னால முடியாது..” என்றான் உறுதியாய்.
“புரியுது ரியான். கொஞ்சம் நம்ம கம்பெனி டெவலப் ஆச்சுன்னா.. இதை விட இன்னும் பெட்டரா பார்த்து வாங்கிடலாம்.. நம்ம லிட்டில்மாஸ்டர் பேர்ல..” என அருகே இருந்த சீட்டில், தந்தையின் மடியில் அமர்ந்திருந்த முகுந்த்தின் வயிற்றில் கிச்சு கிச்சு மூட்டி சொல்ல,
சட்டென அவன் கரத்தை தட்டி விட்டவன், “டோண்ட் டச்..” என்றான் விரல் நீட்டி.
“பார்ரா.. ஏன்டா நா தொட்டா தேஞ்சு போயிடுவீயோ..?” என சிரிப்போடு கேட்க,
“ப்பா.. இவ தொடாம்..” என்றான் ரியானிடம்..
“என்னடா பாசை இது..?” என்ற புன்னகையோடு சந்தீப் கேட்க,
“நீ அவனை தொட வேணாமாம்.. வேற யாரும் தொட்டா என் செல்லத்துக்கு பிடிக்காது..” என்றான் மகனை செல்லம் கொஞ்சிக்கொண்டே.
ஆனால் மனக்கண்ணில்.. அன்று காலை முகுந்த் தானாகவே ஒரு பெண்ணிடம் தாவி சென்ற கணம்.. மின்னலாய் தோன்றி மறைந்தது.
அதையே யோசிக்க ரியானின் முகம் இன்னமும் பூரித்து தெரிந்தது. அது அந்த இறைவனுக்கு பொறுக்க வில்லை போலும்.. அந்த இதத்தை கெடுக்கவென சந்தீப்பின் வாய் மூலமாக,
“இப்படி யாரும் தொடாம.. உங்க அப்பா மட்டும் போதுமுன்னு சொன்னா எப்படிடா..?
உங்க அப்பா பேபி சிட்டர் வேணுமுன்னு சொல்லியிருக்கான். அப்போ அவங்க வந்தா உன்னை அவங்க தொடாம இருப்பாங்களா..?” என சொல்ல வைக்க,
சந்தீப் சொன்னதில் அதிர்ந்து, நடுக்கத்தோடு.. தந்தையின் முகம் பார்த்த குழந்தையின் கண்களில் மெல்லிய நீர் படலம் உண்டாக, அதை கண்டு கொண்ட ரியான் பதறி,
“முகுந்த் கண்ணா, அப்பா உன்னை அப்படி யாரையோ நம்பி இன்னொரு முறை விடுவேனா..?
நா.. நமக்கு குக் பண்ண.. வீடு க்ளின் பண்ண.. தான் மெய்டுக்கு கேட்டேன்.
அதை உன்னோட பெரியப்பா தப்பா அன்டர்ஸ்டேன்ட் பண்ணிட்டாங்க.
தங்கத்துக்கு வேணாமுன்னா, அவங்களும் வேணாம்.. அப்பாவே எல்லாம் பார்த்துக்கறேன்.. சரியா..?”
என்றான் ஆறுதலாய் அவனை அணைத்து கொண்டு.
அதில் தன் தந்தையை இறுக்கி அணைத்து கொண்டவனின் பயம் உணர்ந்த ரியானுக்கு நெஞ்சமெல்லாம் தவித்து போனது.
அதில் உண்டாக கழிவிரக்கத்தில் அவனின் கண்களும் கலங்கிடுமோ..? என்பதாய் பயம் காட்ட, அதை அடக்க முயன்றவனின் வெண்ணிற கண்களை சுற்றிய வெண்படலம் செவ்வண்ணமாக மாறியது.
தந்தை மகன் இருவரின் நிலை கண்ட சந்தீப், தான் ஏதோ வேண்டாத எண்ணத்தை இருவருக்கும் உண்டாக்கி விட்டது புரிய, “சாரிடா..” எனும் வண்ணம் ரியானிடம் பார்வை பதிக்க,
“இட்ஸ் ஓகே..” என தனது கரம் கொண்டு, கியரில் இருந்த சந்தீப்பின் கரத்தை தட்டி காட்டினான்.
அவர்களுக்கான வில்லா.. அப்பார்ட்மெண்ட்க்கள் முடிந்தவுடன் வரும் துவக்கத்தில் இருக்க, இங்கிருந்து பார்த்தால்.. சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு திடல் நன்றாக தெரிந்தது.
ரியானுக்கு அந்த சூழ்நிலை ஒரு வித இதத்தை கொடுக்க, காரை விட்டு இறங்கியதும், “முகுந்த் கண்ணா.. அங்கே பாருங்க உங்கள மாதிரி குட்டீஸ் எல்லாம் எவ்வளவு ஜாலியா ப்ளே பண்ணிட்டு இருக்காங்க..” எனக் காட்ட,
குழந்தையும் இதற்கு முன் இருந்த மனநிலை மாறி, அங்கிருந்தே ஆவலாக அதை பார்க்க துவங்கினான்.
அவனின் ஆவலை கலைக்க விருப்பாத சந்தீப், உள்ளே அழைத்து சென்று.. பால்க்கனியை திறந்து விட, அங்கிருந்து இன்னும் நன்றாக தெரிந்தது அந்த விளையாட்டு பூங்கா.
அதனால் முகுந்தின் வாக்கர் சேரை எடுத்து வந்து.. அங்கு அமர வைத்த ரியான், அடுத்த வேலையை கவனிக்க துவங்கினாலும் மகனின் மீது மட்டும் பார்வை நொடிக்கொரு முறை தழுவி சென்றது.
சந்தீப் ஏற்பாடு செய்திருந்தவர்கள் வந்து காத்திருக்க, அடுத்து ரியானிடம் கேட்டு பொருட்களை அடுக்குவதிலும், மற்றதை ஒழுங்கு படுத்துவதிலும் நேரம் கழிந்தது.
இதில் சந்தீப் அனுப்பிய அந்த புதிய நபரை பற்றிய தகவலை பார்க்க வேண்டும்.. என்ற சிந்தனை மறந்து தான் போனது அவனுக்கு.
இவன் தனது நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக ஏற்பாடு செய்யும் இச்செயல்.. அவனின் வாழ்க்கை பாதையை மாற்றுமா..?
error: Content is protected !!