Skip to content
Post Views: 8,205
பகுதி 8
நள்ளிரவில் படுத்த போதும் காலை சரியான நேரத்தில் விழித்து கொண்ட ரியான்.. குழந்தையை பார்க்க அவன் இன்னும் அசந்து உறக்குவது தெரிந்தது.
Advertisement
அவனை நெருங்கி நெற்றியில் முத்தமிட்டு, “குட் மார்னிங் கண்ணா..” என மெல்ல குழந்தை தூக்கம் கலைக்காத குரலில் சொல்லி விலகியவன்.. தனது காலை கடன்களை முடிக்க குளியலறை புகுந்தான்.
முகுந்துக்காக எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதால்.. குடிப்பதிலும் நிதானம் தப்பாது.. மருந்தாக எண்ணியே குடிப்பதால், அவனால் அவன் உடலை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறது போலும்.
Advertisement
Advertisement
தனியாக உடற்பயிற்சி என்று செய்யாமல் வீட்டு வேலை அனைத்தும் இழுத்து போட்டு செய்வதோடு.. முகுந்தோடு மல்லுக்கட்டியே அவனின் உடல் கட்டு கோப்பாக இருந்தது.
வேகமாய் சமையலறை சென்று காலை, மதியம் இரு வேளைக்கும் குழந்தைக்கு தனியாக, தனக்கு கொஞ்சம் காரம் சேர்த்து.. என இரு விதமான சமையலை முடித்தவன்,
Advertisement
அடுத்து சத்துமாவு கஞ்சி வைத்து.. அது ஆறுவதற்கு ஏற்ப அகலமான பாத்திரத்தில் வைத்து விட்டு, சமைத்த பாத்திரங்களை வேகமாக கழுவி முடித்து, ஆறியிருந்த கஞ்சியை டம்ளரில் ஊற்றி எடுத்து கொண்டு பெட்ரூமுக்கு வந்தான்.
இரவில் தூக்க கலக்கத்தில், டம்ளரில் முகுந்தால் குடிக்க முடியாது என இரவில் மட்டும் சிப்பரில் குடிப்பவன், பகலில் டம்ளரிலேயே குடித்து கொள்வான் என்பதாலேயே இப்படி..
படுக்க அறையில் இருந்த மேஜையில் டம்ளாரை வைத்தவன், “கண்ணா.. வேக் அப்..” என்று குழந்தையை தூக்கி, தன் மடியில் இருந்தி முகம் பற்றி லேசாக அசைக்க,
“ம்ம்..” என்றபடி கண்விழிக்காமலேயே ரியானின் கழுத்தை கட்டிக்கொண்டான் பிள்ளை.
“என்னாச்சு.. இன்னும் தூங்கனுமா..?” என்ற தந்தைக்கு,
“ம்ம்..” என்ற பதிலை தர,
“ஓகே தூங்கலாம்.. ஆனா, நீங்க இப்போ ரெடியாகி சாப்பிட்டு நேத்து மாதிரி அங்கே ஆஃபீஸ் போயிட்டு தூங்கலாம்.. அப்பாக்கு வேலை இருக்கு கண்ணா..” என்று கொஞ்ச,
“ம்ம்..” என்றான் அதற்கும்.
“இந்த ம்ம்.. எழுந்திருக்கவா..? இல்ல..?” என்று அவன் முதுகை வருடியபடி கேட்க,
“தூங்க..” என்றான் முகுந்த் தெளிவாக.
அதிலேயே அவன் தூக்கம் கலைந்து விட்டதை உணர்ந்த ரியான், “ஓ.. அப்போ இப்படியே தூங்கிட்டு இருக்கனுமா உனக்கு..?” என்றான் சிரிப்போடு.
“எஸ்.. ஐ ஜஸ்ட் லைக் திஸ் ப்பா..” என்றதும்,
“உனக்கு இதுதான் பிடிக்குதுன்னா.. அப்பா வேலை எப்படி பார்க்க கண்ணா..?” என்று கேட்க,
தன் முகத்தை நிமிர்த்தி தந்தையின் முகம் பார்த்தவன், தனது இரு கண்ணையும் சிமிட்டி, “கட் அச்சில்லா..” என்றான் ரகசியம் பேசும் ஹஸ்க்கி குரலில்.
மகனின் அழகான இமை சிமிட்டலில் வாய்விட்டு சிரித்த ரியான், “கண்ணா.. இது நம்ம ஆஃபிஸ் டா. இங்கே நா கட் அடுச்சா நம்ம பிஸ்னஸ் ஹோகையா.. தான்..” என்றிட,
தந்தையின் புன்னகை தன்னையும் தொற்றிக்கொள்ள மலர்ந்து சிரித்தான் குழந்தையும்.
அதே சிரிப்போடு பல் துலக்க வைத்து.. கஞ்சியை குடிக்க வைத்தவன், குழந்தையின் முதுகிலிருந்து கால் வரை டாக்டர் சொன்னபடி ஆயில்மெண்ட் தடவி.. மசாஜ் செய்துவிட்டு, மடக்கி நிமிர்த்தி என பிஸியோதெரபிஸ்ட் கற்று கொடுத்ததையும் செய்து முடித்தான், குழந்தைக்கு வலித்து விடக்கூடாதே.. என்ற கவலையோடு.
பிஞ்சு குழந்தையாக இருக்கும் போதே, இது போன்றதை எதிர் கொண்டதாலோ என்னவோ.. முகுந்தும் அதை பக்குவமாக ஏற்று படுத்திருந்தான் தந்தை செய்வதை அவதானித்தபடி.
அடுத்து கடகடவென குளித்து, சாப்பிட்டு.. என இவர்கள் நேரம் கழிய, சரியாக இவர்கள் கிளம்ப வேண்டும்.. என்ற நேரத்திற்கு ஆர்டர் செய்திருந்த காரும் வந்து சேர்ந்தது.
மற்ற பார்மாலிட்டிஸ் எல்லாம் சரி பார்த்து.. புது காரில் பயணம் போகும் குஷியில் தந்தையும், மகனும் உற்சாகமாகவே அலுவலகம் வந்து சேர்ந்திருந்தனர்.
****
நேற்று முதல் நாள் என்பதால் ஆட்டோவில் வந்த சம்யுக்தா, இன்று பேருந்தில் வந்திருக்க, பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஐந்து நிமிட நடை பயணத்தை மேற்கொண்டவள் சாவகாசமாக அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.
எப்படியும் சரியான நேரத்திற்கு வந்துவிடுவோம்.. என்ற நம்பிக்கை கொடுத்த அலட்சியம் அது.
அவளின் எண்ணம் போலவே சரியான நேரத்திற்கு வந்தவள்.. முந்தைய நாளின் அறிவுறுத்தல் படியே சென்று வெங்கடேஷிடம் தனது வருகையை பதிவு செய்தாள்.
அவளோடு மற்றவர்களும் வந்து சேர்ந்து கொள்ள அவர்களுக்கான பயிற்சி துவங்கியது.
நேற்றே அவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டிய மடிக்கணினி.. இப்போது தான் வழங்கப்பட்டிருக்க அது வேறு புது உற்சாகத்தை அவர்களுக்கு கொடுத்தது.
‘புது வேலை, புது லேப் டாப்.. என்ஜாய்..’ என்ற மனநிலை தான் அவர்களுக்கு.
அதே புத்துணர்ச்சியோடு இருந்த சம்யுக்தாவிற்கு முகுந்தின் நியாபகமும் எழாமல் இல்லை.
அலுவலகம் வந்ததுமே முகுந்தின் நியாபகமும் கூடவே வந்துவிட்டிருந்தது.
வீட்டிருந்து கிளம்பும் போது, இனியாள் வேறு, “சம்யூ ம்மா.. போன இடத்துல நமக்கு கொடுக்கற வேலைய மட்டும் பார்த்தோமா.. வந்தோமா.. ன்னு இருக்கனும் டா. தேவையில்லாத வேலை பார்க்காத.. சரியா..?” எனச் சொல்லி அனுப்பியிருக்க,
அவனை சந்திக்க முயற்சி எடுக்காமல்.. தான் வேலை பார்க்கும் தளத்திலேயே இறங்கியிருந்தாள்.
நேற்று அந்த அறைக்குள் சென்றதும், பெண்களுக்கே உண்டான எச்சரிக்கை உணர்வோடு அந்த அறையை பார்வையால் அலசியவளுக்கு, குழந்தையின் உடைகளும்.. மெத்தை அருகே இருந்த சிப்பரும்.. மேலும் சில பொருட்களும், முகுந்த் அங்கே தங்கியிருப்பதாய் காட்ட அதையே உறுதியாய் பற்றி கொண்டவளுக்கு இப்போது அவனின் நினைவே.
‘நேற்று அழுதது போல இன்னைக்கும் பிள்ளை அழுதுட்டு இருப்பானோ..?
அந்த வெள்ளக்கொக்கு.. அவனை சரியா பார்த்திருப்பானா..?
நம்ம அட்வைஸ் பண்ணப்ப சரி.. சரி.. ன்னு மண்டைய ஆட்டினானே.. அதை ஃபாலோ பண்ணியிருப்பானா..?’ இப்படி அவளின் சிந்தனை ஓடிக்கொண்டிருக்க,
“மிஸ் சம்யுக்தா…” என்ற பெரும் சத்தத்தில் திடுக்கிட்டு பார்த்தாள், எதிரில் முறைத்துக்கொண்டு நின்றிருந்த வெங்கடேஷை.
“எவ்வளவு நேரம் கூப்பிடுறேன். லேப்டாப்ல கண்ண வச்சிட்டு, உங்க மைண்ட் எங்கே போச்சு..?” என்று கோபமாக கேட்க,
பள்ளி செல்லும் மாணவி, ஆசிரியருக்கு பயந்து எழுவது போல் எழுந்து நின்று திருதிருவென விழித்து வைத்தவள்,
“அது வந்து சார்..” என ‘என்ன சொல்வது..?’ என தெரியாமல் இழுக்க,
“வாட் சாரா..! யூ டோண்ட் நோ.. கார்ப்பரேட் கல்ச்சர்..? கால் மீ வெங்கடேஷ் ஆர் வெங்கீ..” என்றான் அதிகாரமாய்.
‘என்னது வெங்கீயா..? மங்க்கீன்னு வேணுமின்னா கூப்பிடலாம் போல. ஆளும்.. மூஞ்சியும்.
முகம் புல்லா முடிய வச்சுட்டு.. மூக்கெது வாயேது ன்னு தேடனும் போல..’ என மனதில் வெங்கடேஷை கலாய்த்துக் கொண்டு, வெளியே பாவமாய் அவனையே பார்த்து கொண்டிருந்தாள் கேடி.
அது தெரியாத வெங்கடேஷோ, அவளின் அந்த அப்புராணி லுக்கில் கவிழ்ந்து,
“ஹோய்.. டோண்ட் பேனிங்.. ஜஸ்ட் எப்படி இங்கே பேசனுமின்னு டீச் பண்ணேன்.. தட்ஸ் ஆல்..” என்று சொன்னான்.
அதற்கும் நல்ல பிள்ளையாய் தலையசைத்தவளை கண்டு, இன்னும்.. ‘அப்பாவி..’ என நம்பும் இவன், ‘அவள் ஆளே கேடி..’ என்பது எப்போது விளங்க போகிறதோ..?!
“அப்புறம் மிஸ் சம்யுக்தா.. உங்கள வேற டீமுக்கு மாத்தியிருக்காங்க..” என்று வெங்கடேஷ் சொல்ல,
சம்யுக்தாவின் மைண்ட் வாய்ஸ், “அப்பாடா.. இந்த குரங்கு மூஞ்சிய விட்டு எஸ்கேப்பா…” என்று கவுன்ட்டர் கொடுத்தது.
“அது பத்தி பேச உங்கள எம்டி அவர் கேபினுக்கு வரச்சொன்னார். உங்க திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு நீங்க எம்டிய போய் பாருங்க..” என்றதும்,
“அப்போ.. நா உங்க டீமுல வொர்க் பண்ண வேண்டாமா..?” என்றாள் பரிதாப பாவனையில்.
‘ச்சே.. நம்ம டீமை விட்டு போக மனசே இல்ல போல இந்த புள்ளைக்கு..’ என்று பெருமிதமாய் நினைத்த வெங்கடேஷ்,
“இல்ல மிஸ்.சம்யுக்தா.. இது பாஸோட டெசிஷன். இதுல நானே நினைச்சாலும் உங்கள இந்த டீமுல வச்சுக்க முடியாது.. சாரி..” என்றான் ஆறுதலாக.
“ஓ.. அப்படியா..? அப்போ.. நா இங்கிருந்து கண்டிப்பா போய் தான் ஆகனுமா..?” என்றாள், அப்போதும் அங்கிருந்து செல்ல விருப்பமே இல்லாதவள் போல.
“எனக்கு கிடைச்ச தகவல் படி.. இப்போ நீங்க போற ப்ராஜெக்ட்ல உங்க கான்ட்ரீப்யூஷன் கண்டிப்பா வேணுமுன்னு எம்டியே உங்கள அந்த டீமுக்கு போட்டுருக்கார்.
அந்த டீம்ல தான் இன்னும் சில ப்ராஜெக்ட் நீங்க பண்ண வேண்டி வரும் சம்யுக்தா.
சோ, இப்போதைக்கு வேற வழியே இல்லை. நீங்க எங்க டீமை விட்டு அங்கே போய் தான் ஆகனும்..” என்று அக்கறையும்,
‘இப்படியும் ஒரு பொண்ணா..?! இந்த டீமை விட்டு போக மனசே வரல போலவே.. இந்த பொண்ணுக்கு..!
ஒருவேள என்னை விட்டு போக மனசு வரலையோ..?
உன்னோட கெப்பாசிட்டி தெரியாமலேயே இத்தன நாள் வேஸ்ட் பண்ணிட்ட டா மடையா..’ என்று தனக்குத்தானே யோசனையோடு,
ரசனை பார்வை பார்ப்பதாக எண்ணி.. கவுண்டமணியின் ஆஸ்த்தான ரொமாண்டிக் லுக்கை சம்யுக்தாவை நோக்கி விட, கார்த்திக் அலறியதை விட அதிகமாய் ஜர்க் ஆனாள் சம்யுக்தா.
‘என்ன இந்த லூசு இப்படி பாக்குது. கண்ணுல திடீர்ன்னு எதாவது கோளாறா..?’ என்று நினைத்தவள்,
“வெங்கீ.. என்னாச்சு..?” என அவனின் தோள் தொட்டு கேட்க,
அவ்வளவு தான்.. அவளின் வெங்கீ.. க்கே தலை சுத்தி போனவன், அவளின் தொடுகையில்.. அவனை சுற்றி வெள்ளை உடை தேவதைகள் நம்தன நம்தன.. பாட தொடங்கிவிட்டனர்.
வெங்கடேஷ் கனவில் கலந்துவிட, சம்யுக்தா அவனை அழைத்து பார்த்து.. பின், தனது தோளை குலுக்கிக்கொண்டு தனது பொருட்களோடு அங்கிருந்து சென்றிருந்தாள்.
வெங்கடேஷ் நிலையை கண்ட அவனின் டீமில் ஏற்கனவே இருந்த சிலர், “டேய் அங்கே பாருங்கடா.. நம்ம டிஎல்.. ஃப்ரீஷ் மோடுக்கு போயிட்டாரு..” என்று அவர்களுக்குள் கிசுகிசுத்து கமுக்கமாக சிரித்துக்கொண்டனர்.
“பாவம்டா, எத்தன நாள் தான் பேச்சுலராவே சுத்துவாரு..? அவரும் செட்டில் ஆகட்டுமே..!” என்றாள் அதில் ஒருத்தி.
“ஹலோ.. என்னமோ நாங்க அவரு கைய புடுச்சு தடுத்த மாதிரி பேசறே..?
இப்படி அழகான பொண்ணு பேசும் போது ட்ரீமுக்கு போய்.. ப்ரீஷ் ஆகி நின்னா.. எப்படி லைஃப்ல செட்டில் ஆகறது..?” என்று சம்யுக்தா அங்கிருந்து சென்றது கூட தெரியாமல் நின்றிருந்த வெங்கடேஷை காட்டியவன்,
“டேய்.. யாராச்சும் அவர உசுப்புங்கடா. இல்ல மனுஷன் நாள் ஃபுல்லா இப்படியே நிற்கபோறாரூ..” என்றிட,
“நின்னா நல்லது தானே..? நம்ம ஜாலியா ஓப்பி அடிக்கலாம்..” என்றான் புதிதாக வந்ததில் ஒருவன்.
“அடி ராசா.. அந்த ஆள் தெளிஞ்சதும்.. நீ ஓப்பி அடுச்சதுக்கும் சேர்த்து வச்சு வேலை வாங்கிட்டு தான் வீட்டுக்கு விடுவான்.. பரவாயில்லையா..?” என்றதும்,
வெங்கியை பற்றி நன்கு அறிந்திருந்த மற்றொருவனோ,
“அய்யோ..! ஆமாடா. இவன் ஒரு சின்சியர் சிகாமணி வேற.
அதனால தான் இந்த சின்ன வயசுலையே நமக்கு டிஎல்லா உட்கார்ந்து இருக்கான்..” என்றுவிட்டு,
அவனை நெருங்கி, “வெங்கி.. ஐ ஹேவ் ஏ டவுட்..” என்றான் அவனை உசுப்பி.
அதில் தெளிந்தவன்.. எதிரில் இருந்த சம்யுக்தாவை தேடி அவள் இல்லை என்றதும் சுற்றிலும் தேடியவன், “எங்கே அந்த பொண்ணு..?” என்றான் பரபரப்பாக.
“அந்த பொண்ணு இங்கிருந்து போய் ரொம்ப நேரமாச்சு வெங்கி..” என அருகே இருந்தவன் சொல்ல,
‘என்ன போயிடுச்சா..?’ என்று மானசீகமாக தலையில் கை வைத்தவன்,
‘நோ.. டோண்ட் கிவ் அப் வெங்கி..’ என தனக்கு தானே உருவேற்றி கொண்டு, இருக்கும் இடமும் சூழலும் உணர்ந்து, “ஓகே கைஸ்..” என ஆரம்பிக்க,
“பேக் டூ ஃபார்ம் டா.. நம்ம வெங்கி. இனி ப்ரேக் வரை வச்சு செஞ்சிடுவான்..” என்று முணுமுணுப்புடன் சிறு புன்னகையும் சேர வேலையை தொடர்ந்தனர் அவனின் டீம்மெட்ஸ்.
error: Content is protected !!