Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ 8.1

வெங்கடேஷ் சொன்னபடி தனது பொருட்களுடன் லிஃப்டுக்கு வந்தவள் எம் டி.. என்றதும், நேற்று சந்தித்த சந்தீப்பை மனதில் வைத்து அவனின் அறையை லேசாக தட்டி, “எக்ஸ்கியூஸ் மீ.. மே ஐ கம்மின் சார்..?” என்றாள் மெல்லிய குரலில்.

உள்ளிருந்து எந்த பதிலும் வராது போக, “என்னடா..! என்னை வரச்சொல்லிட்டு சார் எங்கையாச்சும் போயிட்டாரா..?” என்று யோசித்தவள்,



Advertisement

ரிசப்ஷனிஸ்டிடம் சென்று, “எம்டி ரூம்ல இருக்காறா..? இல்ல வெளியே போயிருக்காறா..?” என்று கேட்க,

Advertisement

“சார் ரூம்ல தான் இருக்காங்க..” என்று அவர் சொன்னதும்..

Advertisement

“ஓ.. ஓகே..” என்று விட்டு மீண்டும் வந்தவள், 

Advertisement

கதவை இம்முறை கொஞ்சம் அழுத்தமாக தட்டி மறுபடியும் அனுமதி கேட்டவள் கதவை திறந்து உள்ளே சென்றிருந்தாள் பதிலுக்கு காத்திருக்காமல்.

உள்ளே நடு நாயகமாய் விற்றிருந்த டேபிள் ச்சேர் தவிர யாரும் இருப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லாது இருக்க, 

“என்னடா இது..?” என்ற யோசனையோடு.. அறையை சுற்றி பார்வையை சுழற்றினாள்.

அப்படி சுழற்றியவள் பார்வையில், அந்த அறையோடு ஒட்டியிருந்த பால்க்கனியில் யாரோ நின்றிருப்பது மூடியிருந்த கண்ணாடியில் இருந்த டிசைனால் கலங்கல் பிம்பமாக தெரிந்தது.

அந்த பிம்பம் நிற்கும் விதமும், கை வைத்திருக்கும் விதமுமே.. அவர் போனில் யாருடனோ பேசி கொண்டிருப்பதை விளங்க வைக்க அவரின் வருகைக்காக காத்திருந்தாள் சம்யுக்தா.

ஐந்து நிமிடம் பத்து நிமிடமாக மாற அவளின் பொறுமையும் மெல்ல கரைய துவங்கியது. 

“காலங்காத்தால இப்படி நிற்க வச்சிட்டாங்களே.. அட ஆண்டவா..” என்று மானசீகமாக தலையில் கைவைத்தவள் தனது கண்களை அந்த அறையிலுள்ள மற்ற விசயங்களில் பதிக்க ஆரம்பித்தாள்.

அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நேர்த்தியான ஃபைல்கள், அந்த அறையின் வண்ணத்திற்கு ஏற்ப இருந்த ஜன்னல் ஸ்கிரீன், 

சுவற்றில் இருந்த அழகான ஓவியம்.. என பார்த்துக் கொண்டே, தன்னைத் தானே ஒரு சுற்று சுற்றி முடித்தவள்.. கடைசியாக கண்டது.. 

பால்கனி கதவில் தனது இரு கையையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு.. சம்யுக்தாவையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த உருவத்தை தான்.

அந்த உருவத்தை கண்டதும் கண்கள் மின்ன, “ஹாய் வெள்ளக்கொக்கு..” என்றிருந்தாள் தன்னை மறந்து உற்சாகத்தில்.

அவளின் அந்த அழைப்பில் லேசாக ஜர்க் ஆன ரியான் தனது பார்வையில் லேசான முறைப்பை காட்ட, 

அவனின் பார்வை மாற்றத்திலேயே.. தான் அவனை அழைத்த விதம் மனதில் தோன்ற,

‘அச்சோ, காலைல இருந்து அப்படி சொல்லி.. அதே வந்திடுச்சே..!’ என்று நொந்து கொண்டவள், 

‘அட, அவனுக்கு தான் தமிழே தெரியாதே..! அப்போ வெள்ளக்கொக்கு மட்டும் அவனுக்கு தெரிஞ்சிருக்குமா..?

அவன் முறைக்கல. அதுக்கு அர்த்தம் தெரியாமல் முழுச்சிருக்கான். 

நா வேற சட்டுன்னு பயந்து போயிட்டதால, அவன் லுக் அப்படி தெரிஞ்சிருக்கு..’ என தனக்கு தானே விளக்கம் சொல்லி தேற்றிக்கொண்டவள்,

“ஹலோ பேபி சிட்டர்.. இங்கே என்ன பண்ணறீங்க..? 

ஆமா முகுந்த் எங்கே..? அவனை விட்டுட்டு இங்கே சுத்திட்டு இருக்கீங்க..!

எங்க எம்டீய பார்க்க வந்தீங்களோ..? அப்போ, முகுந்த் எங்க எம் டி பையனா..?” என வரிசையாக மூச்சு விடாமல் ஆங்கிலத்தில் இத்தனையும் கேட்டு முடித்தவள் ரியானின் பதிலுக்காக அவனின் முகத்தையே பார்த்திருந்தாள்.

“ம்ம், யூ ஆர் ரைட். முகுந்த் ஈஸ் சன் ஆஃப் யுவர் எம்டி..” என்று சொல்ல,

“பாத்தியா எப்படி கண்டுபிடிச்சேன்னு. அதான் சம்யுக்தா..” என்று இல்லாத காலரை தூக்கிவிட்டு சொன்னவள், 

“ஆமா.. அப்பவே கேட்டேனே.. நீ இங்கே என்ன பண்ணறே.. முகுந்த் கூட இல்லாம..? 

நேத்து அவன அழ வச்சே. இப்போ பொறுப்பே இல்லாம குழந்தைய விட்டுட்டு இங்கே சுத்தறே..!” என்று மடமடவென பொறிந்து கொண்டிருந்தவளின் வாய்.. கப்பென பசை போட்டது போல ஒட்டி போனது,

ரியான் நடந்து வந்து அங்கிருந்த எம்டிக்கான சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த விதத்தில்.

அவளின் அதிர்வில் அவளின் விழிகள் விரிந்து கொள்ள, “அப்போ நீ.. நீங்க..” என்றவளுக்கு அடுத்த வார்த்தை தொண்டையோடு சிக்கிக்கொண்டது.

“எஸ். யூ ஆர் ரைட். ஐம் ஆல்சோ ஒன் ஆஃப் தி டைரக்டர் இன் திஸ் கம்பெனி. அண்ட் முகுந்த் இஸ் மை ஒன் அண்ட்‌ ஒன்லி சன்..” என்றான் கெத்தாக.

‘போச்சு போச்சு.. இவன் தான் எம்டி ன்னு தெரியாம பேசிட்டேனே..! 

இது மட்டுமா.. இவரோட பையன் தான் முகுந்த் ன்னு தெரியாம வேற திட்டிட்டேன். அக்கா அப்பவே சொன்னா..’ என்று நொந்து கொண்டவள்,

‘பரவாயில்ல.. அவனுக்கு நா பேசினதுல பாதி புருஞ்சிருக்காது..’ என்று மனதை தேற்றிக்கொண்டவள், 

‘ஈஈஈ..’ என அனைத்து பல்லையும் காட்டிட,

அவளின் செய்கையில் மலர இருந்த சிரிப்பை அவனின் பதவியும்.. இருக்கும் இடமும் அடக்கிவிட்டது.

‘நேற்று அவன் இருந்த இடமும், அவனின் உடையும் அவளை விளையாட்டாக பேச வைத்திருக்கலாம். 

ஆனால் இன்று ஒரு நிர்வாகி முன் அவளின் இத்தகு செய்கையை ஏற்றால்.. நாளை அவளின் இந்த விளையாட்டு தனம் எல்லா இடத்திலும் பிரதிபலிக்க வாய்ப்பு உண்டு. அதை ஊக்குவிக்க முடியாது..’ என்ற எண்ணம் அவனின் மனதை கடினமாக்க அதன் பிரதியாக முகமும் இறுக்கம் கொண்டது.

அவனின் முக மாற்றத்திலேயே தான் செய்து கொண்டிருக்கும் சிறுபிள்ளை செயல் விளங்க, 

“ஐ’ம் சாரி சார்..” என்றாள் தலை குனிந்து மெல்லிய குரலில்.

காலை அவன் அலுவலகம் வரும் வரை, தான்.. ட்ரைன் பண்ண வேண்டிய நபர் பற்றிய சிந்தனை இல்லாது இருந்தவன்.. இங்கு வந்த உடனேயே சந்தீப் அனுப்பியிருந்த பயோவை ஓப்பன் செய்ய அதிலிருந்த புகைப்படத்தை கண்டதுமே அவள் யாரென புரிந்து போனது.

அவளோடு பேசியது சிறிது நேரமாய் இருந்தாலும்.. அவளின் பொறுப்பும், அக்கறையும் அவனை ஈர்த்தது என்பது உண்மை.

‘அப்படிப்பட்ட பெண் சீக்கிரமே.. தனக்கான வேலையை கற்றுக்கொண்டு தங்களுக்கு உதவுவாள்..’ என்ற எண்ணத்தோடு, 

மேலோட்டமாக பயோவில் அவளின் கல்வி ககுதியை மட்டும் சரி பார்த்துக்கொண்டவனுக்கு.. சம்யுக்தாவின் இந்த விளையாட்டுத்தனம் முதலில் கோபத்தை கொடுத்தாலும், 

சொல்லாமலேயே தனது தவறை உணர்ந்து அதற்கு மன்னிப்பும் கேட்டவளை பற்றிய தனது முந்தைய எண்ணம் சரியே.. என்று நினைத்தான் ரியான்.

அந்த நேர்மறை எண்ணம்.. மீண்டும் அவனின் முகத்தை இலகுவாக்க, 

“இட்ஸ் ஓகே சம்யுக்தா. மேக் ஸ்யூர் இட் டஸ் இன்ட் ஹேப்பன் எகைன்..” என்றான்‌ முதலாளிக்கே உரித்தான தன்மையுடன்.

“ஸ்யூர் சார்..” என்றவள் அமைதியாய் நிற்க,

“ப்ளீஸ் சிட்..” என்றவன், 

அவளின் பயோவை ஓப்பன் செய்து வைத்து கொண்டு சில கேள்விகளை கேட்டு சரிபார்த்து கொண்டவன்,

“லிசன் சம்யுக்தா.. உங்க லேங்குவேஜ் நாலேஜ் எந்த அளவு இருக்கு. 

அதை இந்த ப்ராஜெக்ட்ல எப்படி பயன்படுத்த போறோமுன்னு தான் உங்களுக்கு நான் ட்ரைன் பண்ண போறேன். 

வித் இன் டூ டேஸ்ல.. அதை நீங்க கம்ப்ளீட் பண்ணிட்டு உங்க டீமோட ஜாயின் ஆகிடனும்.

அண்ட் தென் உங்க சம்பந்தப்பட்ட எல்லா வொர்க்கும் என்னோட மெயிலுக்கு பஸ்ட் நீங்க சென்ட் பண்ணனும். 

நா அதை வெரிஃபை பண்ணி.. ஒகே சொன்னதும் உங்க டிஎல் கிட்ட கொடுத்துக்கலாம். ஈஸ் இட் க்ளீயர்..” என்றான், 

அவளை அழைத்த காரணத்தை மிக எளிதாய் புரிந்து கொள்ளும் வண்ணம்.

‘புரிந்தது..’ என்ற விதமாக அவள் தலையசைக்க.. அவளுக்காக ஏற்கனவே அவன் தயாராக வைத்திருந்த சில குறிப்புகளை கொடுத்தவன், 

அதை அந்த குறிப்பிட்ட லேங்குவேஜில் ப்ரோகிராமிங் செய்து காட்ட சொல்லிவிட்டு தனது லேப் டாப்பில் மூழ்கினான்.

ரியான் இப்போது மட்டுமல்ல.. அவன் எப்போதுமே இப்படி தான். 

வேலை என வந்தபின் அவனுக்கு வேண்டிய அவுட்புட்டை வாங்க வேண்டிய விதத்தில் வாங்கிவிடுவான். 

அதுவரை அனாவசியமான‌ எந்த ஒரு பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ள மாட்டான்.

அரை மணி நேரம் கடந்திருக்க சம்யுக்தாவை நிமிர்ந்து பார்த்தவன்.. அவளின் குழப்பமான‌ முக பாவனையை கண்டு, ‘எதோ பிரச்சினை..’ என்பது புரிய, 

தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்தவன் அவளுக்கு பின்னால் நின்றபடி.. அவள் செய்திருக்கும் வேலையை அவதானிக்க துவங்கினான்.

பார்த்த சில கணத்திலேயே, ‘எங்கே தவற விட்டிருக்கிறாள்..’ என்பது ரியானுக்கு தெரிந்து போக, 

சட்டென குனிந்து அவளின் தோளின் குறுக்கே கை நீண்டி ஸ்க்ரீனில் ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டி காட்டினான்.

அவன் வந்ததே தெரியாமல் இருந்தவளுக்கு திடீரென ஒரு கரம் தன் முன் வர பதட்டம் தொற்றிக்கொண்டது.

அதில் அதிர்ந்து ச்சேரிலேயே பின்னால் சாய்ந்து.. அவள் தலையை திருப்ப, மிக அருகே ரியானின் முகம். 

அதில் மேலும் அதிர்ந்தவள்.. பட்டென இருக்கையிலிருந்து எழ, அவளின் அத்தகு செயலை எதிர்பார்க்காத ரியானும் தடுமாறி பின்னால் சாய துவங்கினான்.

அவன் விழாமல் இருக்க பிடிமானத்திற்காக அவனின் கை அவசரமாக அலைய, கைக்கு சிக்கிய எதையோ பற்றியவனின் கூடவே அதுவும் வர, 

அடுத்த நொடி அவன் கீழே விழுந்திருக்க.. ரியான் இழுத்த வேகத்திற்கு.. அவனுக்கு அடுத்து கொஞ்சம் தள்ளிப்போய் விழுந்திருந்தாள்‌ சம்யுக்தா.

இருவரும் கீழே விழவும்.. அந்த அறை கதவு திறக்கவும் சரியாக இருந்தது.

நிச்சயமாக தவறாக எண்ண முடியாத நிலையில் தள்ளியே விழுந்திருந்தாலும், அந்த நிலையில் மற்றவர்கள் தங்களை பார்த்தது இருவருக்கும் ஒரு வித அசூயை தன்மையை விதைத்தது.

முதலில் உள்ளே நுழைந்த சந்தீப், “ரியான்.. என்னாச்சு..?” என பதறி அவனை எழுப்ப போக, 

அவனுடன்‌ உள்ளே நுழைந்த சந்தீப்பின் மனைவி மலர்விழி சம்யுக்தாவை நெருங்கி அவள் எழுந்து கொள்ள உதவினாள்.

“இட்ஸ் நர்த்திங், ஜஸ்ட் ஸ்கிட்டிங்..” என சொன்னவன், 

அவர்களுக்கு தெரியாமல் சம்யுக்தாவை முறைக்கவும் தவறவில்லை.

‘ஒன்றுமில்லாத விசயத்திற்கு அவள் பதறி எழுந்ததால் தானே இப்படி.. 

அதுவும், தான் என்ன தவறான நோக்கத்திலா அவளை நெருங்கினேன்..’ என்ற கோபம் அவனுக்கு. 

ஆனால், ‘பார்த்த‌ இரு தினமும், சில நிமிட நேரமே பழகிய ஒருவனிடம் இருந்து வந்த திடீர் செயல்.. அவளை பதட்டம் கொள்ள செய்யாமல் இருக்குமா..?’ என பெண்ணின் புறமிருந்து யோசிக்க மறந்து போனான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!