Skip to content
Post Views: 7,839
அடுத்து வந்த நாட்களில் முகுந்த் பழைய கலகலப்பு இல்லாமல் அமைதியாகிட,
ரியான் முந்தைய தவறை செய்து விட கூடாது.. என எப்போதும் கவனமாக இருந்ததால் அவனை விசாரிக்க,
Advertisement
“நீ வீடுல இதுப்பா.. வெள்ள போகாம்..” என்றிட,
அவனை தூக்கி மடியில் வைத்து கட்டிக்கொண்ட ரியான்,
Advertisement
Advertisement
“ஏன்டா கண்ணா.. அப்பா வேலைக்கு போக வேணாமா..?” என்று கேட்க,
“நோ.. வேணா..” என்றான் பிள்ளை வேகமாய் தலையசைத்து.
Advertisement
“ஏன் ப்பா.. என்னாச்சு..? யாராவது எதாவது சொன்னாங்களா..?
அந்த ஆன்ட்டி உன்கிட்ட எதாவது ரூடா நடக்கறாங்களா..?” என பலவிதமாய் கேட்டும்,
“என்னடே இதுங்க..” என்பதை தாண்டி வேறு எதுவும் சொல்லாமல் போக,
பழைய படி எதாவது தவறு நடக்கிறதா..? என சிசிடிவி வழியாக கண்காணிக்க துவங்கினான்.
அவன் பார்த்த வரையில், அந்த பெண்ணோ.. எப்போதும் போல அவனுடன் பேசி.. அவனுக்கு வேண்டியதை சிரித்த முகமாக செய்வது போல தான் இருந்தது.
சிசிடிவியில் பேசுவது கேட்காதே..!
அதனால் அவளின் முகபாவனையை கூட அவதானித்தவனுக்கு.. எதுவுமே தவறாக படாததால்,
‘அந்த சிறுமி வராததால் தான்.. முகுந்த் அப்படி இருக்கிறான்..’ என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
இப்பொழுது எல்லாம் ஞாயிறும் அவனுக்கு வேலை இருக்க, அன்று மட்டும் வீட்டிலிருந்தே அதை அவன் செய்வது வழக்கம்.
கொரனாவின் கோர தாண்டவத்திற்கு பின்பான பொருளாதார சிக்கலால், ஆட்குறைப்பு நடந்து கொண்டிருக்கும் சூழலில் அவர்கள் இழுப்புக்கு சென்று ஆக வேண்டிய நிலை.
முதலில் எல்லாம் ரியான் வீட்டில் இருக்கும் அன்று அவருக்கு விடுமுறை அளித்துவிடுவான்.
இப்போதோ.. ஞாயிறு விடுமுறை ஆனாலும் வேலை அவனை முழுவதுமாய் ஆட்கொள்ள, அன்றும் முகுந்தைப் பார்த்துக்கொள்ள.. என ரியான் மறுத்தும் ஒப்புக்கொள்ளாமல் அந்த பெண் வந்துவிடுவதால் ரியானுக்கும் கொஞ்சம் உதவியாக இருக்க அவனும் விட்டு விட்டான்.
அப்படி ஒரு ஞாயிறு அவன் தனது வேலையில் மூழ்கியிருந்தான் தனது படுக்கையறையில்.
அருகே முகுந்த் கையில் டேப் வைத்து.. அதில் ‘ஐஸ் ஏஜ்..’ படம் பார்த்து கொண்டிருந்தான்.
அது என்னவோ.. இப்போது எல்லாம் ரியான் வீட்டில் இருந்தால், ரியானிருக்கும் இடத்தில் தான் இருப்பேன்.. என முகுந்த் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்திருந்தான்.
‘வாரம் முழுவதும் அவனை விட்டுவிட்டு வேலைக்கு செல்கிறோம்.. ஒருநாள் பிள்ளை தன்னிடம் இருக்க ஆசைப்படுவது சகஜம் தானே..’ என நினைத்த ரியானும், அவனை பார்த்துக்கொள்ள.. வீட்டின் மற்ற வேலை, சமையல் அந்த பெண் பார்ப்பாள்.
எவ்வளவோ முயற்சி செய்தும்.. ரியானை நெருங்க முடியாமல் இருக்க, அவனை தன்வசமாக்க வேண்டியதை திட்டம் போட்டு.. அன்று செயல் படுத்தியிருந்தாள் அவள்.
ரியான் முகுந்த் இருவரும் மாலையில் பால் குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள்.
முதலில் ரியான் காஃபி, டீ என குடித்து கொண்டு இருந்தவன் தான்.
குழந்தை அதை கேட்க துவங்க அவனுக்காகவே தன் பழக்கத்தை மாற்றிக்கொண்டான்.
அன்றும் அதே போல இருவருக்கும் பாலை காய்ச்சி ரியானுக்கும், முகுந்துக்கு அவனின் பேவரேட் சிம்பா படம் போட்ட கப்பிலும் ஊற்றி எடுத்துக்கொண்டு அவர்களின் அறைக்குள் சென்றாள்.
அப்போது தான் தனது வேலையை முடித்துவிட்டு அதை சரி பார்த்து கொண்டிருந்த ரியான், பால் அடங்கிய ட்ரே வை வாங்கி அருகே டேபிளில் வைத்து விட்டு,
“நீங்க வீட்டுக்கு கிளம்புங்க.. எனக்கு ஆல் மோஸ்ட் வேலை முடுஞ்சது.
நானும் முகுந்தும் வெளிய போய் ரொம்ப நாளாச்சு.
இன்னைக்கு அவனை வெளியே கூட்டிட்டு போக போறேன்.
நைட் டின்னரும் நானே பார்த்துக்கறேன்..” என்றிட,
“சரி சார்..” என தலையாட்டி வெளியேற முதல் முறை அந்த பொண்ணிடம் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தான் ரியான்.
அது அவளின் பார்வையாலா.. இல்லை அவளின் செய்கையா என்பது புரியாமல் போக தலையை உலுக்கிக்கொண்டு பால் கப்பை கையில் எடுத்தான்.
கேட்டிருந்த மூவருக்கும் ஏதோ அன்று நடந்திருக்கிறது.. அது என்ன..? என்ற ஆவலும், பயமும் ஒருங்கே தோன்றி மறைந்தது.
சந்தீப்புக்கு தன் தம்பி மீது இருந்த அதீத நம்பிக்கையால்.. ‘நிச்சயம் அவன் தவறாக எதுவும் நடக்க விட்டிருக்க மாட்டான்..’ என்று உறுதியாய் நின்றான்.
மலருக்கும், சம்யுக்தாவிற்கும்.. ‘அந்த பெண் என்ன செய்திருப்பாள்..?’ என்ற எண்ணம் எழுந்தாலும்,
ஏதோ ஒரு நம்பிக்கை ரியானின் மேல் லேசாக இருக்க தான் செய்தது.
அதனால் அவர்களும் அமைதியாய் அவனின் பேச்சை அவதானிக்க துவங்கினர்.
அவனுக்கு அன்று நடந்ததை சொல்ல குற்ற உணர்வாக இருந்ததோ.. இல்லை அருவருப்பாக இருந்ததோ.. ஒரு வித புருவ சுழிப்போடு அமர்ந்திருந்தவன், பின்..
“எப்பவும் சமத்தா.. சிந்தாம குடிக்கற முகுந்த்.. படம் பார்த்துட்டே பால் குடிக்க போக.. அப்போ அந்த படத்துல வந்த ஒரு சீன் பார்த்து சிரிக்க ஆரம்பிச்சவனுக்கு கை நழுவி மொத்த பாலும் அவன் மேலையும் பெட்லயும் கொட்டிடுச்சு.
உடனே அவனை தூக்கிட்டு போய் அவன் ட்ரஸ் ரிமூவ் பண்ணிட்டு.. வாஸ் பண்ணி ஷோஃபால உட்கார வச்சிட்டு ட்ரஸ் சேன்ஜ் பண்ணிவிட்டேன்.
எப்போதும் அவன் அந்த டைம் பால் குடிப்பான்.
அப்போ வெளியே போற ப்ளானும் இருந்ததால அவனை வெறும் வயிறா கூட்டிப்போக மனசில்லாம, எனக்கு வச்சிருந்ததை அவனோட டம்ளார்ல ஊத்தி கொடுத்துட்டு..
முகுந்த் அதை குடிக்கற கேப்ல பெட் கவர், அவன் ட்ரஸ் எல்லாம் எடுத்து.. வாஸ் பண்ண மிஷன்ல போட்டுட்டு
நானும் ஒரு குளிச்சிட்டு வந்தா.. வெளியே கிளம்ப சரியா இருக்குமுன்னு நினைச்சு.. நா வாஸ்ரூம் போயிட்டேன்.
எல்லா வேலையும் முடுச்சிட்டு நா வந்து பார்த்தா.. என் பெட்ல.. பார்த்ததுமே உடம்பு கூசிபோற போஸ்ல இருக்கா அந்த பொண்ணு..” என்றவனுக்கு.. மனக்கண்ணில் இப்போதும் அந்த உருவம் தோன்றியது போல.. அவன் முகத்தில் அத்தனை அருவருப்பு.
அதே பாவனையோடு, “அவளுக்கும் என்னை பார்த்து ஷாக் தான் போல.. அது அவ முகம் காட்டின ரியாக்ஷன் லயே நல்லா தெரிஞ்சது.
அவளோட அந்த ஷாக் லுக்.. அது அவ முகத்துல பகிரங்கமா தெரிய.. லேசான சந்தேகம் எனக்கு வந்துச்சு..
எதுக்காக அவ இப்படி என்னைப்பார்த்து ஷாக் ஆகனும்..?
நான் அவங்கள வீட்டுக்கு போகச்சொல்லியும் போகாம.. இன்னும் இங்கிருக்க என்ன ரீஷன்னு.. புரியாம நான் நின்னுட்டு இருந்தேன்.
எனக்கு.. அவள அங்கே பார்த்ததுமே.. இதெல்லாம் யோசிக்க சில கணங்கள் தேவைப்பட்டது. அந்த இடைப்பட்ட நேரத்துல தான் அவ அந்த மாதிரி நடந்தது.
அவளோட அந்த ஷாக்கும் சில செக்கண்ட்ஸ் தான். அப்புறம், எப்படியும் அவளோட அழகு.. என்னோட தனிமை.. அவளை வேண்டாமுன்னு நான் மறுக்க மாட்டேன்னு நினைச்சு.. என்னை நெருங்கி வந்து அணைச்சுக்கிட்டா.
அவ தொட்டதும் தான் உணர்வு வந்து பட்டுன்னு அவளை தள்ளி விட்டுட்டேன்.
அவளோ அதை பொருட்டா மதிக்காம, “நீங்க சிங்கிளா பையனை பார்த்துக்க கஷ்டப்படறீங்க.
நா.. பொண்ணை சிங்கிளா வச்சு மெயிண்டெயின் பண்ணி கஷ்டப்படறேன்.
உங்களுக்கும் உடல் தேவை இருக்கும்.. லைக் மீ..” ன்னு மறுபடியும் என்கிட்ட வர அவளை பிடிச்சு தள்ளிவிட்டுட்டு,
“ஹெவ் டேர் யூ..? எப்படி இப்படி அசிங்கமா நடந்துக்கற தைரியம் வந்துச்சு..?
நீ.. என் பையனை பார்க்க வந்த ஜஸ்ட் வேலைக்காரி மட்டும் தான்.. என்னை சொந்தம் கொண்டாட உன்னால எப்பவும் முடியாது.. ன்னு கோபமா நான் கத்த,
அப்ப தான்.. அவளோட உண்மை சொரூபமே எனக்கு தெரிஞ்சது..” என்றான் வலி நிறைந்த குரலில்.
error: Content is protected !!