Skip to content
Post Views: 7,306
பகுதி 11
“ரியான்.. அந்த லேடிய நீ மானிட்டர் பண்ணலங்கற தைரியத்துல தானே அப்படி நடந்துக்கிட்டாங்க..?
Advertisement
அதை கண்டுபிடிச்சதும்.. நீ தான் அதுக்கு தீர்வையும் கண்டுபிடிச்சுட்டையே..!
அப்புறமும் எப்படி..?” என்ற சந்தீப்பை கண்டு கசந்த முறுவல் ஒன்றை கொடுத்தவன்,
Advertisement
Advertisement
“இந்த தடவை வந்த பொண்ணு.. அவனை இல்லாம ஆக்கிட்டு எனக்கு மனைவியாகனுமின்னு முயற்சி பண்ணா..” என்றிட,
“என்ன..!” என்றனர் அதிர்ந்து.
Advertisement
“ம்ம்..” என தலையசைத்தவன்,
“இப்ப தனியா இருக்கற பொண்ணுங்களுக்கு மட்டுமில்ல ஆண்களுக்கும் பிரச்சினை தான்.
நான் வேலை பார்க்கற இடம், அங்கே எனக்கு கிடைக்கும் சம்பளம்.. வீட்டில இருக்கற வசதி.. அவங்க எதிர்பார்த்தத விட நான் கொடுத்த அதிகப்படியான சம்பளம்.. எல்லாமே அந்த பொண்ணை என் பக்கம் பார்க்க வச்சிடுச்சு போல.
ஆரம்பத்துல நா கவனிச்சப்போ எந்த தப்பும் தெரியல.
முகுந்தும் நல்லபடியா தோறியும் வந்தான்.
டாக்டர் கூட அவனோட இம்ப்ரூமெண்ட் பார்த்து சீக்கிரம் எல்லாம் நார்மல் ஆகிடுமுன்னு சொல்ல.. உண்மையாவே அவ்வளவு சந்தோஷம் எனக்கு.
அதுக்கு நான் அவங்ககிட்ட தேங்க்ஸ்.. சொன்னப்ப,
“சார், இது என் ட்யூட்டி.. நீங்க கொடுக்கற சேலரிக்கு இதுவே நான் செய்யறது ரொம்ப குறைச்சல்..” ன்னு அடக்கமா சொல்லவும்..
அப்பாடா.. சரியான ஆள்கிட்ட குழந்தை இருக்கான்னு மனசார நம்பினேன்.
காலைல எப்பவும் போல சமையல் முடுச்சிட்டு போனா.. நைட் வந்து எனக்கு குக் பண்ணிக்கறது தான் வழக்கம்.
சில நாள் ரொம்ப டயர்டா இருந்தா பால் மட்டும் குடுச்சிட்டு தூங்கிடுவேன்.
சில நேரம் அதுக்கு கூட முடியாத அளவு வேலை படுத்திடும்.
பையனுக்கு அவங்க செஞ்சு கொடுத்திடுவாங்க.
அதனால நானும் அதை பத்தி கவலைப்படாம இருந்தேன்.
மெல்ல மெல்ல நைட் எனக்கு சமச்சு வைக்க ஆரம்பிச்சாங்க.. வேண்டாமுன்னு தடுத்து பார்த்தேன்.
அப்போ..” என்றவன்,
அவர்களுக்கு இடையே நடந்து உரையாடலை சொல்ல துவங்கினான்.
“சார், எப்படியும் முகுந்துக்கு நான் சமைக்க கிச்சன் போகனும்.
நீங்க லேட் ஆகி வர்றதால.. எனக்கும் குக் பண்ணி இங்கேயே சாப்பிட்டு, வீட்டுக்கு எடுத்துட்டு போகவும் பர்மிஷன் கொடுத்திருக்கீங்க.
எங்களுக்கு செய்யறதோட சேர்த்து உங்களுக்கும் எதாவது செஞ்சு வைக்கப்போறேன்..” என்றாள் அக்கறை நிறைந்த குரலில்.
அந்த பெண்ணின் அக்கறை, கொஞ்ச நாட்களாக, தன்னந்தனியாக.. எல்லா கஷ்டத்தையும் சுமந்திருந்த மனதிற்கு ஆறுதலாய் இருந்ததோ என்னவோ,
“உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்..” என்றான் பலகீனமாய்.
“இதுல சிரமம் என்னங்க இருக்கு..? ஒருத்தருக்கு குக் பண்ணறது என்ன அவ்வளவு பெரிய வேலையா..!” என்றாள் புன்னகையோடு.
“ஓகே, அப்போ அதுக்கும் சேர்த்து நான் சேலரி கொடுத்திடுறேன்..” என ரியான் சொன்னதும்,
“இல்ல சார்.. வேணாம். ஏற்கனவே.. நீங்க அதிகமா தான் எனக்கு பே பண்ணறீங்க.
இங்கே வேலைக்கு வந்த பின்னாடி தான் என்னோட பேபிய நல்லா வச்சுக்க முடியுது..” என்றாள் லேசாக கலங்கிய கண்களோடு நன்றி உணர்வு மேலிட.
அவளின் கண்ணீரோ.. அல்லது முகுந்தை கவனித்து தங்களுக்கு அவள் செய்யும் உபகாரமோ.. அவளிடம், “கேட்கனுமுன்னு நினைச்சேன், உங்க ஹஸ்பென்ட்..?” என விசாரிக்க வைத்தது.
“நாங்க பிரிஞ்சிட்டோம்.. ரெண்டு பொண்ணுல ஒண்ணு என்கிட்ட.. இன்னொரு பொண்ணு அவன்கிட்ட..” என்றாள் விரக்தியாய்.
அந்த நாட்டில் சேர்ந்து வாழ்ந்து, பிரிவது.. மிகவும் சாதாரணமான ஒன்று தானே. அதனால் அதை விடுத்து,
“ஓ.. அப்ப நான் தரப்போற கூடுதல் சம்பளம் இன்னும் உங்களுக்கு உதவியா தானே இருக்கும்..! அதனால மறுக்காதீங்க..” என்று வலியுறுத்தி கொடுக்க துவங்கியிருந்தான்.
முதலில் சிம்பிளாக செய்து வைக்க ஆரம்பித்தவள்.. போக போக அவனின் விருப்பம் கேட்டு அதை செய்து வைக்க ஆரம்பித்தாள்.
ரியானை பொறுத்தவரை, ‘நான் சம்பளம் கொடுக்கிறேன்.. அவர்கள் வேலை செய்கிறார்..’ என்ற எண்ணமே.
ஆனால் அவர் அந்த நாட்டு பெண்ணாக இருந்தாலும்.. நம் நாட்டு ஆண்களை மயக்க சமையல் தான் முதலில் கைவசமாக வேண்டும்.. என்பதை தெரிந்து வைத்திருக்கிறாள். அதனால் தான் அப்படி நடந்து கொள்கிறாள்.. என்பதே ரியான் அறியவில்லை.
அதை அறிய வந்த போது முகுந்த் உயிருக்கு போராடும் நிலையில் இருப்பான்.. என்பது அப்போது ரியானுக்கு தெரியவில்லை..!
எப்போதும் போல நாட்கள் செல்ல, அந்த பெண்ணோ அவளின் மகளை மெல்ல அங்கு கூட்டி வர ஆரம்பித்தவள் முகுந்தோடு விளையாட பழக்கினாள்.
முகுந்த் இப்போது.. அவனே மெதுவாக எழுந்து அமர்ந்து.. தனது தேவையை சொல்லும் அளவு வந்திருக்க, அந்த சிறுமியின் துணையும் அவனை உற்சாகப்படுத்தியது என்றே சொல்லலாம்.
முகுந்த், ரியானுடன் பேசும் போது எப்போதும் அந்த சிறுமி பற்றி பேசுவதை கண்டு.. ‘எப்படியோ முகுந்த் சந்தோஷமாக இருந்தால் போதும்..’ என நினைத்தான்.
முகுந்துக்கு வாங்கியதை.. அந்த சிறுமி எடுத்துக்கொள்வது தெரிந்தாலும்,
‘தன் மகன் அந்த பெண்ணால் சந்தோஷமாக இருக்கிறான். அதே போதும்.. திரும்ப வாங்கி தர முடியாத நிலையில் நான் இல்லையே..!’ என்ற எண்ணத்தில், இன்னும் கூடுதலாகவே எல்லாம் வாங்கி வைக்க துவங்கியிருந்தான்.
ஒரு நாள் முகுந்த், “ப்பா, அன்ட க்ஆ சீக்ரமா வீடுக்கு போயி.. னக்கு போர்.. பீச்சுப்பா அன்ட க்ஆ.. இங்க இருக்கம்..” என்றான் கொஞ்சலாக.
மகனின் பேச்சில், ‘அந்த சிறுமி வீட்டிற்கு சென்றதும் அவளை குழந்தை மிஸ் செய்கிறான்..’ என்பது புரிந்தாலும், அவர்களை இங்கே தங்க வைக்க முடியாதே.. என்ற எண்ணத்தால்,
“முகுந்த் கண்ணா இன்னும் கொஞ்ச நாளுல இந்த குட்டி பையன் பிக் பாய் ஆகி ஸ்கூல் போயிடுவாங்களே..!
அப்போ அந்த அக்கா மாதிரி நிறைய பேர் உனக்கு ப்ரண்ட்ஸ் ஆவாங்க..” என்று அவனை கொஞ்சிக்கொண்டே சொல்ல,
“நிசமா ப்பா.. நா பிக் ஆனா கூல் போவனா..?” என்றான் கண்கள் மின்ன.
“ஆமாடா கண்ணா..” என்றவன் வேறு பேசி தூங்க வைத்திருந்தான்.
மறுநாள் அந்த பெண்ணை அழைத்தவன், “நீங்க உங்க டாட்டரை இனி இங்கே கூட்டிட்டு வராதீங்க.
முகுந்த் அவங்கள நைட்டும் இருக்க சொல்லி கேட்க ஆரம்பிக்கிறான்.. அது சரி வராது..” என்று சொல்லிவிட,
நொடியில் மாறி போன அவளின் முகபாவனையை கண்டிருந்தால் ரியான் சுதாரித்திருப்பானோ..?!
ஆனால் அந்த நேரம் போனுக்கு வந்த மெசேஜ் ஒன்றை படித்து கொண்டே பேசியதால்.. அதை தவற விட்டிருந்தான்.
error: Content is protected !!