Skip to content
Post Views: 7,481
பகுதி 13
ரியான், முகுந்தை சாப்பிட வைக்கவென அவனை சுத்தப்படுத்தி மீண்டும் அறைக்குள் நுழையும் போது,
Advertisement
சந்தீப், “மலர்.. சம்யுக்தா தான் அவங்க கொண்டு வந்ததை சாப்பிட்டுக்கறேன் வேஸ்ட் ஆகிடுமுன்னு போயிட்டாங்களே..
சாப்பாடு எக்ஸ்ட்ராவா தானே இருக்கு.. நீயும் இங்கேயே சாப்பிடு..” என சொல்லிக்கொண்டிருந்தான்.
Advertisement
Advertisement
“இல்லைங்க.. வீட்டுல குக் பண்ணி வைச்சது எல்லாம் வேஸ்ட் ஆக போகுது..” என மலர் யோசனையோடு தயங்க,
“இல்ல மலர்.. அப்பா செம கோபத்துல இருப்பார்.
Advertisement
அவரோட கால் பேசப்பேச இங்கே நடந்த இஸ்யூல சட்டுன்னு நான் கட் பண்ணிட்டு வேற வந்துட்டேன்.
அதனால தான் சொல்றேன். நீ இங்கேயே சாப்பிட்டு வெயிட் பண்ணு.
ஈவினிங் ரெண்டு பேரும் சேர்ந்தே வீட்டுக்கு போலாம்..” என்றான் சந்தீப் முடிவாக.
மலர்விழிக்கும் தன் மாமனாரை பற்றி நன்கு தெரியுமாதலால், ‘சரி..’ யென சொன்னவள்,
மூவருக்கும் உண்ண தயாராக ரியான் கொண்டு வந்த உணவோடு இப்போது வந்திருந்த உணவு வகைகளையும் எடுத்து வைத்தாள்.
ரியான்.. சந்தீப் அருகே வந்தமர்ந்ததும், “சாரிடா.. என்னால தானே..?” என்றான் குற்ற உணர்வோடு.
“டேய், அடி வாங்காத.. இதுல உன் தப்பு எதுவும் இல்லை.
என்னோட அப்பாவோட வரட்டு கௌரவத்துக்காக எல்லாம் என்னால உன்னை விட முடியாது.
உண்மைய சொல்லனுமுன்னா.. இதுக்கு முன்னாடி ஒரு கம்பெனில வேலைக்காரனா இருந்த என்னை.. இப்போ, இந்த கம்பெனில முதலாளி ஸ்தானத்துல உட்கார வச்சிருக்கற உன்னோட அருமை அவருக்கு புரியலைன்னு தான் சொல்லனும்..” என்றான் கடுப்பாக.
மலரும், “சின்னத்தான்.. மாமா எப்பவும் எதாவது ஒரு பிரச்சினைய காட்டி பேசறது வழக்கம் தான்.
அதை விட்டுட்டு நீங்க நிம்மதியா இருங்க.
என்னையே சமாளிக்கற என் புருஷனுக்கு.. அவங்க அப்பாவையா சமாளிக்க முடியாது..?” என கிண்டலாய் பேச.
ரியானின் முகம் லேசாக புன்னகை சாயல் பூசியது.. மலர் சொன்ன தோரணையில்.
“பாத்தீயாடா.. எப்படி நேக்கா கோர்த்து விடறான்னு..?
இப்படி தான்டா ரெண்டு பக்கமும் அடிவாங்கி என் வாழ்க்கை போகுது.”. என சந்தீப் புலம்ப,
இன்னும் விரிந்து போனது அவனின் இதழ்.
அவர்கள் பேசுவதையும்.. தந்தை முகத்தையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்த முகுந்த், மலரை மட்டும் ஓர விழியால் அளவிட்டபடி இருந்தான்.
மலர் அவனின் ஆராய்ச்சி பார்வையை ஆரம்பத்திலேயே கண்டு கொண்டாலும்.. தானாக எதாவது பேசப்போய்.. மீண்டும் அவன் அழுதுவிட்டால்..! என்ற பயம் அவளை அமைதி காக்க வைத்தது.
முகுந்துக்கான உணவை பிசைந்து அவனின் வாயருகே கொண்டு சென்ற போது தான்.. ரியான் அவனின் பார்வையை கண்டு கொண்டு,
“முகுந்த் கண்ணா.. இது உன் சந்தீப் பெரியப்பா இருக்காங்க இல்ல.. அவங்க வெய்ஃப்.. பேர் மலர்விழி. உன்னோட பெரியம்மா..” என பொறுமையாய் அறிமுகம் செய்து வைத்தவன்,
“சே ஹாய் டூ ஹெர்..” என்றான்.
சில நொடி தயங்கினாலும் தந்தை தன்னருகே இருக்கும் தைரியத்தில், “ஹாய்..” என்றான் மெல்லிய குரலில்.
“ஹாய் முகுந்த்..” என்ற மலர்விழி,
“என்கிட்ட வர்றீங்களா..? பெரியம்மா சாப்பாடு கொடுக்கறேன்..” என ஆசையாய் அழைக்க,
சட்டென தந்தையிடம் திரும்பி அவனை அணைத்துக்கொண்டவன் தலை மட்டும், ‘வேண்டாம்..’ எனும் விதமாய் அசைந்தது.
“விடு மலர்.. உன்னை அவன் பழகனும்.
பழகின அப்புறம், சார்.. பெரிய மனுஷன் மாதிரி குடும்ப மொத்தத்தையும் குசலமெல்லாம் விசாரிப்பான்.. அதும் இங்கிலீஷூல.. அப்படி தானே முகுந்த்..?” என்றான் நேற்று தன்னை பார்த்ததும் தன் குடும்பத்தை நலன் விசாரித்ததை மனதில் கொண்டு.
அதில் மலரும் ரியானும் சிரிக்க, சந்தீப் தன்னை கிண்டல் செய்வது புரிந்ததோ என்னவோ, முகுந்த் இன்னும் தந்தையின் மார்பில் முகத்தை நன்றாக மறைத்துக்கொண்டான் வெக்கத்தில்.
“பார்ரா..! இதெல்லாம் புரியுதா சாருக்கு..? வெக்கமெல்லாம் வருது..” என சந்தீப் அவனின் இடையில் கிச்சு கிச்சு மூட்ட..
நேற்றை போலவே தட்டி விட்டு, “டோண்ட் டச்..” என்றான் கண்களை உருட்டி மிரட்டலாய்.
“முகுந்த், பெரியப்பா விளையாடறாங்க. இப்படி சொல்லக்கூடாது.. சே சாரி..” என்றான் ரியான் கண்டிப்போடு.
“பட்.. ஐ’ம் ஷை ப்பா.. லெட் மீ டூ வாட்..?” என்றான் குழந்தையும் கேள்வியாய்.
“இந்தா.. ஆரம்பிச்சுட்டான் பீட்டரு..!
அடேய் எப்பா.. நா உன்னை தொடவே இல்ல. நீ சாப்பிடு..” என சந்தீப் விளையாட்டாய் இரு கைகளையும் குவித்து கும்பிடு போட்டு தலையை ஆட்டி ஆட்டி சொல்ல,
புதிராய் பார்த்தான் குழந்தை அவனை.
இது போன்ற கோணாங்கி தனமான செயல்களை எல்லாம்.. இதுக்கு முன் பார்த்திருந்தால் தானே.. அவனுக்கு தெரியும்..?
சந்தீப்பை அவன் ஏதோ வித்தியாசமான பிறவி போல பார்த்து வைத்தான்.
அதை கண்டு கொண்ட சந்தீப், “நீ பார்க்கறதுலையே தெரியுது.. உன் மனசுல என்ன ஓடுதுன்னு..
இவன் என்ன லூசா.. ன்னு தானே நினைக்கறே..?” என்று விளையாட்டாய் சந்தீப் கேட்க,
அவசரமாய், “ஆமாம்..” என குழந்தை தலையசைக்க மலரால் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தவள்,
“இப்படி செல்ஃப் டேமேஜ் எல்லாம் உங்களால தான் பண்ணிக்க முடியும்..” என்றாள்.
“குழந்தை சொன்னதை விட அதுக்கு என் பொண்டாட்டி கொடுக்கற ரியாக்ஷன் தான்டா மனசு தாங்கல.
வீட்டுலையும் இப்படி தான்டா பேசி என் பண்பட்ட நெஞ்சத்தை.. புண்ணாக்குறாங்க..” என சந்தீப் சோகமாய் சொல்ல,
“ஐ நோ தட் சாங்..” என்றான் முகுந்த் அவசரமாய் இடைபுகுந்து.
புரியாமல் பெரியவர்கள் மூவரும் விழிக்க, “தட் சாங் யூ மென்ஷன்ட்..” என்றான் சந்தீப்பை கை காட்டி குழந்தை.
அப்போதும் புரியாமல் பார்க்க, “ப்பா.. மை டேப்..” என கேட்டவனிடம் அதை கொடுக்க,
அவன் அதில் எதோ செய்ய, அடுத்த நொடி.. “போடா போடா புண்ணாங்கு போடாத தப்புக்கணக்கு..” என சத்தமாக பாடத்தொடங்கியது அது.
அதில் சந்தீபின் முகம் அஷ்டகோணலாக மாற.. மற்ற இருவரும் வந்த சிரிப்பை அடக்க படாத பாடு பட்டுக்கொண்டிருந்தனர்.
“ச்சான்சே இல்ல முகுந்த்.. எப்படிடா இப்படி..?” என மலர் சிரிப்போடு அவனின் கன்னம் கிள்ளி கொஞ்ச,
மீண்டும் வெக்கம் கொண்டு தந்தையின் மார்பில் முகத்தை மறைத்தான் பிள்ளை.
இம்முறை மலரை தள்ளி நிறுத்தாமல் அவளின் தொடுகையை ஏற்றதே பெரும் நிம்மதியை மலருக்கு கொடுத்தது.
சந்தீப்போ, ரியானிடம் திரும்பி, “எப்பிடிடா..! நா புண்ணாக்குறாங்கன்னு சொன்னதும் சட்டுன்னு புடிக்கறான்.
இந்த பாட்டெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கானே உன் மகன்..! எப்படி..?” என ஆச்சரியமாக கேட்க,
சின்ன புன்னகையோடு, “ரொம்ப ஸ்ட்ரஸ்ல இருந்தா வடிவேல் காமெடி பார்ப்பேன் அங்கே.
அப்போ முகுந்த் இது யாருன்னு கேட்டான்.. வடிவேல் ன்னு சொன்னேன்.
அவகிட்ட தான் டேப் இருக்குதே.. அதுல வடிவேல் ரிலேட்டேடா எதாவது நோண்டி பார்த்திருப்பான். அதுல இந்த சாங் வந்திருக்கும்..” என்றிட,
“ஆனாலும் உன் புள்ள இப்பவே செம மூளைக்காரன் தான்டா.
ஒரு பேரை வச்சு என்னவெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான் பாரு.
இதுல என்னை டேமேஜ் பண்ணறதுக்கு அதை கரெக்ட்டா யூஸ் வேற பண்ணறான்..” என மெச்சிக்கொண்டான் தம்பி மகனை.
சிறிது நேரத்திற்கு முன் அந்த அறை இருந்த நிலைக்கு மாறாக.. அங்கிருந்தவர்கள் அனைவரின் முகமும் புன்னகை சூடியிருந்தது.
வயதும்.. அந்த வயதுக்குறிய பக்குவமும்.. கொண்டவர்கள் அவர்கள் என்பதால், ஒன்றையே பிடித்துக்கொண்டு சோக கீதம் வாசித்து பலன் எதுவும் இல்லை.. என்பது நன்றாக புரிந்திருந்ததன் பலன் அது.
‘இதுவும் கடந்து போகும்..’ என, பெரும் வலிகளை எல்லாம் கடந்து வந்த ரியான்.. அப்போதைய சூழலுக்கு ஏற்ப தன் மனதை நிலை நிறுத்த பழகியிருந்தான்.
இல்லாவிட்டால் அவன் கடந்து வந்த கடினமான பாதைக்கு இப்போது இப்படியான நிலையில் இருந்திருக்க முடியுமா..?
குழந்தை மனம் நொடியில் சூழலை ஒத்து மாறிடுமே..!
சந்தீப்பும், மலரும் எதிர்பார்த்தது இதை தானே.
ரியானின் மனதை இதமாக்கி விட்டு தான்.. இங்கிருந்து கிளம்ப வேண்டும்.. என முடிவோடு இருந்தவர்களுக்கு.. அவர்களின் முயற்சி வெற்றியே.
error: Content is protected !!