Skip to content
Post Views: 7,153
“பாஸ்.. அப்போ நிஜமாவே நீங்க அங்கே அப்பார்ட்மெண்ட்ல தான் ஸ்டே பண்ணறீங்களா..?
எந்த ப்ளோர்..?” என்றாள் ஆர்வம் கலந்த உற்சாகத்தோடு.
Advertisement
“அப்பார்மெண்ட் இல்ல. அடுத்து இருக்கற வில்லா..” என்ற ரியானின் பார்வை இப்போதும் இனியாளின் மீது ஆராய்ச்சியாய் படிந்திருந்தது.
இதுவரை.. தூரமிருந்தே தன்மகனை வசப்படுத்தி வைத்திருப்பவள்.. இவ்வளவு நெருக்கத்தில் இனி என்ன செய்ய போகிறாளோ..?
Advertisement
Advertisement
தனக்கென இருக்கும் ஒரு உறவாயிற்றே அவன்.. என்று ஏதேதோ எண்ணங்கள் வந்து போக..
“ச்சே.. என்ன மடத்தனமான நினைப்பு.
Advertisement
உன்னோட புள்ளைய உன்கிட்ட இருந்து பிரிக்க அவளுக்கு என்ன உரிமை இருக்கு..?
இவன்.. எனக்கும் பிருந்தாவுக்கும் பிறந்த பிள்ளை.
வேறு யாரும் எதுவும் செய்ய முடியாது..” என பலமுறை உருவேற்றி கொண்ட பிறகே மனம் அமைதி கொண்டது.
இதற்கிடையே உணவு உண்டு முடித்திருந்த பிள்ளைக்கு.. அழகாய் வாய் துடைத்து, தண்ணீர் புகட்டி விட்டு, “சம்யூம்மா.. மருந்து எதாவது கொடுக்க சொன்னாங்களா..?” எனக் கேட்க,
“ஃபுட் கொடுத்ததும் நர்ஸ் இன்பார்ம் பண்ண சொன்னாங்க..” என சொன்ன வெங்கடேஷ்..
“அண்ணா.. நா போய் சொல்லிட்டு வந்திடுறேன்..” என்றுவிட்டு போனவன்,
ட்யூட்டி முடிந்த அவர் சென்றிருக்க, அப்போது டியூட்டியில் இருந்த வேறு நர்ஸை கையோடு அழைத்து வந்திருந்தான்.
அதுவரையிலும் இனியாளின் மடியிலிருந்து இறங்கி மெத்தையில் அமர்ந்திருந்தாலும்..
இனியாளின் சுண்டுவிரலை தனது விரலால் பிடித்து வைத்தபடி அவள் சொல்வதற்கு சமத்தாய் தலையாட்டி கொண்டிருந்தான் பிள்ளை.
‘இந்த பேபிக்கு தலையாட்டற ஹேபிட் எங்கிருந்து வந்துச்சுன்னு இப்ப தான் தெரியுது.. இப்படி பேசி.. எல்லாரையும் நல்லா தலையாட்ட பழக்கினா..’ என நினைத்துக் கொண்டு,
எழுந்து சுவரில் சாய்ந்து.. ஒற்றை காலை சுவரில் ஊன்றி, கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு நின்று பார்த்திருந்தான் ரியான்.
சம்யுக்தாவும் இடை இடையே ஏதோ சொல்ல, அதற்கு மட்டும் மறுப்பாய் தலையசைத்தவன்.. இனியாள் சொன்ன எல்லாவற்றிற்கும் அழகான புன்னகையோடு, ‘சரி..’ என்ற தலையாட்டல் மட்டுமே.
யாரோவாய் தள்ளி நின்று பார்க்க.. ‘அழகான கவிதை தான்.. அந்த நிகழ்வு..’
ஆனால் தன்னை தனியே விட்டுவிட்டு, தனக்கென இருக்கும் உறவிடம், உரிமையாய் யாரோ பேச.. ஒதுங்கி நிற்பவனுக்கு லேசான பொறாமை எட்டிப்பார்க்க,
“என்னோட புள்ளகிட்ட உனக்கென்ன பேச்சு.. ன்னு அவனை தூக்கிக்கிட்டா என்ன..?” என்ற எண்ணம் தான் எழுந்தது.
அவனின் அந்த நிலையை நீடிக்க விடாமல் நர்ஸ் வந்து சேர்ந்திட, ‘அப்பாடா..’ என்ற நிம்மதி.. அவனிடம்.
வந்தவர்.. அங்கிருந்த மருந்துகளை ஆராய்ந்து, இப்போது செலுத்த வேண்டியதை எடுத்துக்கொண்டு குழந்தை அருகே வர, குழந்தையை விட பயந்து நடுங்கியது பெண்கள் இருவரும் தான்.
அதிலும் இனியாள், “சிஸ்டர்.. கொஞ்சம் பாத்து வலிக்காம போடுங்க.. ப்ளீஸ்..” என கெஞ்சலாக பரிதவிக்க,
“என்னம்மா.. உன் பையனே தைரியமா இருக்கான். நீ என்னடான்னா விட்டா அழுதிடுவ போல..” என்று சொல்லி முகுந்துக்கு ஊசியை போட,
‘உன் பையன்..’ என்ற பதத்திலேயே, மற்ற அனைவரும் அதிர்ந்து போயிருக்க யாருக்கும் மறுக்க நாவே எழவே இல்லை.
“அடேய் பையா.. நீ எவ்வளவு சமத்தா அழுகாம ஊசி போட்டுக்கறே.
விட்டா உன்னோட அம்மா ஓ.. ன்னு அழுவாங்க போலடா..” என விளையாட்டாய் அந்த நர்ஸ் குழந்தையிடம் சொல்லி சிரிக்க,
அதை, ‘இல்லை..’ என மறுக்க இனியாள் வாய் திறக்கும் போது,
முதலில், ‘உன் பையன்..’ என்றது புரியாவிட்டாலும், இப்போது ‘உன் அம்மா..’ என்ற சொல் குழந்தைக்கு புரிந்து விட,
வட்டமாய் விரிந்த விழிகளோடு ரியானை பார்த்த முகுந்த், “ப்பா.. இது அம்மாவா..?!” என்றிட,
அவ்வறையில் குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் நிலை.
‘இப்போது என்ன சொல்வது..?’ எனப் புரியாமல் அவர்கள் இருக்க,
“என்ன.. குட்டிப்பையா.. அம்மாவா ன்னு கேட்கறே..? என்னமோ புதுசா பார்க்கற மாதிரி..!
ஒருவேள உன் பேரண்ட்ஸ் பிரிஞ்சிருக்காங்களா..?
அவங்க உன் அம்மாவா இல்லைன்னா.. ஏன் உனக்காக என்கிட்ட அப்படி பேசீனாங்களாம்..?
அதுலையே தெரியலையா அவங்க அம்மான்னு..” என்றார்.. பெரிய விசயத்தை குழந்தைக்கு சொல்லி கொடுத்து போல.
‘சுத்தம்.. இவங்க வேற.. முட்டி சந்துல முட்டிட்டு ஓடுற எலி மாதிரி குறுக்க மறுக்க ஓடிட்டு..’ என நினைத்த வெங்கடேஷ்..
“மேடம், உங்க கடமைய முடுச்சிட்டீங்கன்னா கிளம்புங்க..
எங்க பேமிலி ஹிஸ்ட்ரிய நாங்களே குழந்தைக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணிக்கிறோம்..” என கடுப்பாக சொல்ல,
பெரிய நகைச்சுவை கேட்டது போல, சிரித்த அவரோ, “ஆமா.. நீங்க குழந்தைக்கு சித்தப்பாவா..? இல்ல மாமாவா..?” எனக் கேட்க,
‘அடுத்து இதுவா..?’ என நினைத்தவன், “அப்படியே வாங்கலேன்.. போயிட்டே என்ன உறவுன்னு டிஸ்கஸ் பண்ணலாம்..” எனச்சொல்லி.. கையோடு அவர் மறுபடியும் எதுவும் ஆரம்பிக்கும் முன் இழுத்து சென்றிருந்தான்.
அதன் பிறகும் அந்த அறையில் அமைதியே நிலவ, “ப்பா..” என அழைத்த முகுந்த்,
“சொல்லு.. இடு அம்மாவா..?” என்றான் மறுபடியும் ஆர்வம் மின்னும் விழிகளால் ரியானை பார்த்தபடி.
‘இல்லை..’ என ரியான் தலையாட்ட நொடியில் வாடிப்போனது பிள்ளையின் முகம்.
அது மூவருக்கும் வருத்தத்தை தந்தாலும் நிதர்சனம் அது தானே..!
குழந்தைக்கு புரிய வைக்க வேண்டியதும் நல்லது தான் என்பதால்.. மறுப்பாய் யாரும் பேசாமல் இருக்க.. குழந்தையோ இப்போது ஏக்கமாக இனியாளின் புறம் பார்த்தான்.
அந்த முகத்தை பார்த்து, ‘நான் உன் அம்மா இல்லை..’ என சொல்ல நினைத்தாலும் நா எழ வேண்டுமே..!
அதனால் கண்கள் கலங்கிடுமோ.. என்ற நிலையில் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி கொண்டு.. ‘இல்லை..’ என அவளும் தலையசைக்க,
அமைதியாய் தலை குனிந்து அமர்ந்த பிள்ளை, “ப்பா.. தூக்கிக்கோ..” என்றான் கையை மட்டும் உயர்த்தி.
‘எப்போதும் தனக்கு தந்தை மட்டுமே..’ என்ற எதார்த்தம் புரிந்ததோ.. என்னவோ.. அந்த பிஞ்சுக்கும்.
அவனின் ஏக்கமும், தவிப்பும் புரிந்த போதும்.. ‘இது என்ன சாதாரண விசயமா.. குழந்தைக்காக பொய் சொல்ல..’ என எண்ணி மனதை தேற்றிக்கொண்டனர் மூவரும்.
முகுந்த், ரியானின் தோளில் தலைசாய்த்து படுத்திருந்தாலும் அவனின் விழிகள் இனியாளை மட்டுமே பார்த்திருந்தது.
போட்ட ஊசியின் விளைவோ.. அல்லது அவன் எப்போதும் உறங்கும் நேரம் தாண்டியதாலோ.. பிள்ளையின் கண்கள் மெல்ல சொருகி போனது.
ஒருவழியாக அந்த நர்ஸை சமாளித்து விட்டு.. உள்ளே வந்த வெங்கடேஷ், அங்கிருந்த மூவரின் முகத்திலும் இருந்த கவலையையும்.. சங்கடத்தையும்.. கண்டும் காணாதது போல நிற்க,
“வெங்கி, லேட் நைட்ல லேடிஸ் தனியா கேப் புக் பண்ணி போறது ஷேஃப் இல்ல.
நீ அவங்கள ட்ராப் பண்ணிடு. நாளைக்கு காலைல நீ வண்டிய கொண்டு வந்தா போதும்..” என குழந்தையின் உறக்கம் கலையாதபடி மென்குரலில் சொன்ன போதும்,
பெண்களுக்கும் அது கேட்க, இனியாள் சம்யுக்தாவிடம், “சம்யூ ம்மா.. நம்ம கேப்ல போயிக்கலாம்..” என்றாள் கிசுகிசுவென.
“அக்கா சும்மா இரு.. பாஸ் அப்படி போக என்னை விடமாட்டார்.
பாஸ் கிட்ட கேட்டா டென்ஷன் ஆகிடுவாரு. அதனால நா கேட்க மாட்டேன்..” என்று அவளும் மென்குரலில் சொல்ல,
“ச்சே.. இவன் வண்டில போனுமா..!” என ரியானை முறைத்துவிட்டு வேறு வழியின்றி அமைதி காத்தாள் இனியாள்.
இதை கவனித்தும் கவனியாதவன் போல இருந்த வெங்கடேஷ், “அண்ணா, ஆஃபிஸ்ல இருந்து வந்து அப்படியே இருப்பீங்களா காலைல வரை.
நா இவங்கள ட்ராப் பண்ணிட்டு, உங்களுக்கு வேணுங்கற திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வர்றேன்..” என்றிட,
“இல்லடா, உனக்கு எதுக்கு வீண் சிரமம்..” எனத் தயங்க,
“அண்ணா, இதுல என்ன இருக்கு.. தயங்காம சொல்லுங்க..
நா அப்பவே அம்மாகிட்ட இன்பார்ம் பண்ணிட்டேன்.. மார்னிங் தான் வருவேன்னு.
சோ, எதையும் சொல்லி என்னை கழட்டி விட முடியாது..” என சொன்னதும்,
அவனின் கரத்தை லேசாக பிடித்து அழுத்தியதிலேயே.. அவன் சொல்லாமல் சொன்ன நன்றி புரிந்தது வெங்கிக்கு.
அதற்கு லேசான முறைப்பை காட்டியவன், “அண்ணான்னு அப்ப வார்த்தைக்காக சொல்றேன்னு நினைக்கறீங்க.. அப்படி தானே..?” என முகுந்த் உறங்குவதால் மெதுவாக பெண்களுக்கும் கேட்காத படி சொன்னவனிடம்,
எதுவும் பேசாமல்.. தனது வீட்டின் சாவியை எடுத்து நீட்டியவன், தனது தேவையையும் வரிசை படுத்தியிருந்தான் உரிமையாக.
அதில் இருந்த உரிமையை உணர்ந்தவனும்.. லேசான தலையசைப்புடன் அவனை விட்டு விலகி நடந்தான்.
உறங்கிவிட்ட பிள்ளையை விட்டு வர மனமில்லை.. என்ற போதும், ‘என்ன உறவை சொல்லி.. அன்னிய ஆடவன் இருக்கும் இடத்தில் இருக்க முடியும்..’ என நினைத்து, இனியாளும் கிளம்ப,
“பாஸ்.. பார்த்துக்கோங்க.. மார்னிங் நா வர்றேன்.
எதாவதுன்னா உடனே யோசிக்காம கால் பண்ணுங்க..” என்று சம்யுக்தா சொல்ல,
“அப்பாடா.. நா சொல்ல நினைச்சதை இவ சொல்லிட்டா..” என்ற நிம்மதி இனியாளுக்குள் தோன்ற,
குழந்தையின் முகத்தை.. மீண்டும் நின்று.. கண்கள் நிறைய பார்த்துவிட்டு மனமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பினாள்.
error: Content is protected !!