Skip to content
Post Views: 11,776
விமான நிலையத்தை கடந்து, வாகனம் மெயின் ரோடை அடையும் முன்பே.. முகுந்த் தூக்கத்தை தழுவி இருக்க அதுவரை பொறுமையாய் இருந்த சந்தீப்,
“அப்புறம்.. எப்படி இருக்கு எங்க ஊரு..?
Advertisement
நீ இருந்த ப்ளேஸ் கூட காம்பேர் பண்ணா கொஞ்சம் ஹாட் தான்.. இல்ல..?” என்றிட,
Advertisement
முகுந்த்தை தனது மடியில் பக்குவமாக படுக்க வைத்து, அவனின் வசதிகளை சரி பார்த்து கொண்டிருந்த ரியான்,
Advertisement
“ம்ம், பரவால்ல. எனக்கு பிரச்சினை இல்லை. நா ஏற்கனவே பழகின கிளைமேட் தானே.. சோ.. நோ இஸ்யூ..
Advertisement
பட், முகுந்த் க்கு தான் இந்த கிளைமேட்க்கு அட்ஜெஸ்ட் ஆகனும்..
மோர்ஓவர் தமிழ்நாட்டுல அதர் டிஸ்ட்ரிக் கூட கம்பேர் பண்ணா.. தட்ஸ் கூல்..” என்றபடி, ஜன்னல் வழியே தெரிந்த மங்கலான காட்சியில் கோவையை அவதானிக்க முயன்றான்.
நீண்ட வருடங்களுக்கு பின் வருவதால் கோவையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் அவனை சிறிது நேரம் ஆக்கிரமித்துக் கொண்டது.
அவனின் சிந்தனையை கலைப்பது போல முகுந்த் லேசாக அசைய அவனை தட்டி கொடுத்தவன்,
“சந்தீப், ஹாஸ்பிடல்ல முகுந்த் ரிப்போர்ட்ஸ் கொடுத்து விசாரிக்க சொன்னேனே..?” என்றான் கவலையாக.
“விசாரிக்காம இருப்பேனா, ரியான். முகுந்த் விசயத்துல எப்படி கேர்லஸ்ஸா இருப்பேன்..?
அதெல்லாம் பக்காவா விசாரிச்சிட்டேன்டா. அதோட டீட்டைல்ஸ் எல்லாம் மெயில்ல அனுப்பினேனே நீ பாக்கலையா..?!” என்றிட,
“பார்த்தேன் டா. சேட்டிஸ்ஃபைடா தான் இருக்கு நீ கொடுத்த ரிப்போர்ட்ஸ்..” என்றவன்,
சிறு அமைதிக்கு பின், “டாக்டர் அப்பாயின்மென்ட் எப்போ போட்டிருக்கே…?” எனக்கேட்டான்.
“இன்னும் டூ டேஸ் கழிச்சு தான் போட்டேன்டா. முகுந்த் க்கு ஜெட் லாக் எல்லாம் சரியாக இந்த டூ டேஸ் ஓகே தானே..?” என்றிட,
குழந்தையின் முகத்தை பார்த்தபடியே, “ம்ம்.. ஓகே..” என்றவனின் குரலில் இருக்கும் கவலை.. சந்தீப்புக்கும் புரிந்தே இருந்ததால் மேற்கொண்டு அதை பற்றி பேசாமல்,
“ரியான், நம்ம கம்பெனி சார்பா கேம்பஸ்ல செலக்ட் பண்ண ஃபிரஷர்ஸ் அண்ட் வேற கம்பெனில இருந்தும் மூனு பேர் இன்னைக்கு ஜாயின் பண்றாங்க.
சோ, நம்ம ரெண்டு பேர்ல யாராச்சும் ஒருத்தர் அங்கே இருக்கனும்.
உனக்கும் ஜெட் லாக் இருக்கும் தானே..? உன்ன உன்னோட வில்லால விட்டுட்டு நா கம்பெனி போறேன்.
நீ முகுந்த் கூட இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வா..” என்றான் அக்கறையாக.
“ஆர்டர் பண்ண பர்னிச்சர்ஸ் எல்லாம் வந்து அரேன்ஜ் பண்ணியாச்சா.. சந்தீப்…?”
“ஓரளவு செட்டில் பண்ணியாச்சுடா. ஒரு சில திங்க்ஸ் மட்டும், நீ வந்து உன் கம்பர்ட் பார்த்து சொல்லட்டுமுன்னு அன்பேக் பண்ணாம இருக்கு..”
“ஓ… அப்போ அங்கே இப்ப போறது இட் ஓன்ட் டூ பி ரைட்.. ஹோட்டல்ல ரூம் அரேன்ஜ் பண்ணிக்கலாம்..
முகுந்த் கொஞ்சம் ஃபிரஷ் ஆனதும் அங்கே போனா, அரேன்ஜ் பண்ணற வரை ப்ராப்ளம் இருக்காது..” என்றான் யோசனையாக.
“ஹோட்டல்ல ரூம் புக் பண்ணறதுக்கு எங்க வீட்டுக்கு வரலாமேடா..?” என சந்தீப் அக்கறையாக கேட்க,
“இல்ல சந்தீப். முகுந்த் சட்டுன்னு யார் கூடவும் அட்டேச் ஆக மாட்டான். உன்கிட்ட வீடியோ கால்ல ரெண்டு மூனு டைம் பேசினதுல சட்டுன்னு பேசறான்.
உன்னோட வீட்டுல இருக்கறவங்க பேசினா, அவங்ககிட்ட எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியல..! அதனால இப்ப வேணாமே…” என்றிட,
“என்னடா.. இன்னும் அப்பா பேசினதை மறக்க முடியலையா..?” என்றான் சந்தீப் கண்ணாடியில் ரியானின் முகபாவத்தை அவதானித்தபடி.
“இல்லைன்னு சொல்ல முடியாது. எங்க அப்பா லவ் பண்ணது, அதை அவங்க பேரண்ட்ஸ் அக்சப்ட் பண்ணது எல்லாமே அவங்க பர்சனல்.
இதுல பெரியப்பாவுக்கு அறிவே இல்லையா..? ன்னு தாத்தாவ திட்டினதோட, அப்பாவையும் அம்மாவையும் எவ்வளவு தூரம் கேவலமா பேச முடியுமோ.. அத்தனையும் நம்ம சொந்தங்கள் எல்லாரும் கூடி இருக்கும் போது உங்க அப்பா பேசியிருக்க கூடாது தானேடா..?
அப்பா அன்னைக்கு சபையில தலை குனிஞ்சு நின்னது, அந்த வருத்தத்துல தாத்தா மனசு உடைஞ்சு தவிச்சது..
அதையெல்லாம் இன்னும் மறக்க முடியலடா..” என்றவனின் விழிகள் அன்றைய அவமானத்தில் லேசாக கலங்கினாலும் நொடியில் நிதானித்தவன்,
“இப்போ எனக்கு உன்னை விட்டா வேற யாராலும் இந்த ஹெல்ப் பண்ண முடியாதுங்கறதால தான் உங்கிட்ட ஹெல்ப் கேட்டேன்..” என்றவனின் சூழ்நிலை புரிந்து கொண்ட சந்தீப்,
“இம்மட்டிலும் என்னை ஏத்துக்க மனசு வந்ததே அதுவே போதும்..” என்றான் விரக்தியில் விளைந்த சிரிப்போடு வருத்தம் நிறைந்த குரலில்.
ஏனெனில் ரியானின் திருமணம் குறித்து பேச்சுவார்த்தை வந்த போது, சந்தீப்பின் தந்தை பேசிய வார்த்தைகள் சந்தீப்பாலே ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்ததே..!
அப்படி இருக்க சம்மந்தப்பட்டவர்களுக்கு அதன் தாக்கம் இன்னும் அதிகமாய் தானே இருக்கும்..?!
அப்படி தன் தந்தை.. அவன் தந்தையின் கலப்பு திருமணத்தை பற்றி கேலி பேசியதன் விளைவால், மற்றவர்களும் சேர்ந்து பேச.. அன்றைய சூழலே மாறி போனதே.
திருமணம் பற்றி சிந்தனையே இல்லாது இருந்தவனை கட்டாயப்படுத்தி,
சொந்தங்களின் கேலி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.. என்ற ஒரே காரணத்திற்காக,
அவசரமாக புரோக்கர் மூலம் தேடி, ரியான் விடுமுறையில் வந்திருந்த அந்த ஒரு மாதத்தில் திருமணத்தை முடிக்காமல் இருந்திருக்கலாம்.
அவசரத்தில் திருமணம் செய்து.. இன்று அதே அவசர கோலத்தில் அதை இழந்தும் நிற்பது அவன் தானே..! அதன் வலி இருக்க தானே செய்யும்..!
சந்தீப்பின் பேச்சில் அவன் வருந்துவது புரிந்து கொண்ட ரியான்,
“அவங்க பேசினதுல நீ எங்கேயும் இல்லையே.. அது மட்டுமல்ல நீ எனக்கு எப்பவுமே பெஸ்ட் ப்ரண்ட் தான்..
பிரதரா நினைச்சு நா உன்கிட்ட பேசினதே இல்லையே..! சோ, நம்ம ரிலேட்டீவ் ங்கறத விட நல்ல பிரண்ட்ஸ்ஸா தொடரனுமுன்னு விருப்பறேன்.
அதுக்கு ஒரு அடி தள்ளி நிற்கறது தான் இப்போதைக்கு எல்லாருக்குமே நல்லது..” என்றான் ஸ்திரமான குரலில்.
இப்போது தான் வந்திருப்பவனை.. மேலும் பேசி.. அவனை அழுத்தத்திற்கு உள்ளாக்க விரும்பாமல்,
“நம்ம கம்பெனில மேல் ஃப்ளோர்ல பெட்ரூம் முகுந்த் க்காக ரெடி பண்ண ப்ளான் சொன்னையே.. அது இப்ப ரெடியா தான் இருக்கு.. ஒய் டிட் யூ யூஸ் இட்..?
நீயும் அங்கே கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, நம்ம ஆஃபிஸ் எப்படி இருக்குன்னு இன்னைக்கே பார்த்திடலாம்.
என்ன தான் போன்ல அங்கிருந்தே எல்லாம் நீ வாட்ச் பண்ணாலும், நேர்ல பார்க்கறது போல இருக்காது தானே..?
ஈவீனிங் வேலை முடுஞ்சதும் வில்லா போய் எல்லாம் சரி பார்த்துக்கலாம்.. ஓகே வா..?” என்றான், சந்தீப் எளிமையான தீர்வை கண்டு கொண்ட துள்ளலோடு.
“நீ சொல்லறதும் சரி தான். ஒரு ஃபேமஸ் கார்ப்பரேட் கம்பெனி, அவங்களுக்கு ஒரு ப்ராஜெக்ட் பண்ணி கொடுக்க சொல்லி கான்ட்ராக்ட் போட்டு இருக்காங்க.
அதை சக்சஸ்புல்லா முடுச்சு கொடுத்தா, அடுத்து அவங்க எல்லா ப்ராஜெட்டும் நமக்கு மட்டும் கொடுக்கறதா சொல்லியிருக்காங்க..” என்ற ரியானின் வார்த்தையில்,
“ஏய் சூப்பர்டா.. நீ ஏற்கனவே அங்கிருந்து வாங்கின மத்த ப்ராஜெக்ட் எல்லாமே சரியான நேரத்துல கொடுத்துட்டோமே..
சோ, இந்த கம்பெனிக்கும் அதே மாதிரி சக்சஸ்புல்லா முடுச்சு கொடுத்திடலாம்..” என்றான் சந்தீப் உற்சாகமாக.
“எவ்வளவு சீக்கிரம் இதை முடுச்சு கொடுக்கறோமோ அந்த அவ்வளவு நமக்கு நல்லது..
ஏன்னா.. நிறைய காம்படீஷன் இருக்கு.. அவங்க கிட்ட இருந்து ப்ராஜெக்ட்ஸ் வாங்க. ரொம்ப பிரபலமான கம்பெனிஸ் எல்லாம் ரெடியா இருக்காங்க.
அப்படி இருந்தும் நம்மை நம்பி கொடுத்திருக்காங்கன்னா.. அதை நாம யூஸ் பண்ணிக்கனும்.
நானும் இன்னைக்கே அதை பத்தி பேசனா பெட்டர்ன்னு ஃபீல் பண்ணினேன்.
அதுக்கு கம்பெனில வந்து இருக்கறது பெஸ்ட் ச்சாய்ஸ் தான்…” என்ற ரியானின் பதிலில்,
“நீ சொல்ற கம்பெனி கொடுக்கறது நிச்சயமா சின்ன பிராஜெக்ட்டா இருக்க வாய்ப்பில்ல.
நம்ம கிட்ட இருக்கற டீம் வச்சு அவங்க சொல்ல டெட்லைனுக்குள்ள முடிக்கனுமுன்னு சொல்றே.. எப்படிடா.. முடியுமா..?” என்றான் கேள்வியாக.
“ஆப்டர்நூன் அரேன்ஜ் தீ மீட்டிங் வித் டீம். நா டீம்ல யார் யார் இருக்கனுமின்னு லிஸ்ட் தர்றேன். அதுப்படி அரேன்ஜ் பண்ணிடு.. ஐ வில் டேக் கேர் ஆஃப் தட்..” என்றான் உறுதியான குரலில்.
“என்னமோ சொல்றே.. நல்லபடியா நடந்தா சரி தான்..” என்றவாரே, சந்தீப் தங்களின் கம்பெனி வளாகத்தினுள் காரை செலுத்தி, முதலாளிக்காக இருக்கும் தனிப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் பார்க் செய்தவன்,
இப்போதைக்கு அத்தியாவசியமாய் தேவையான பெட்டியை மட்டும் ரியானிடம் கேட்டுவிட்டு, அதை எடுத்து கொண்டு லிஃப்ட் நோக்கி சென்றான்.
ரியானும், உறக்கத்தில் இருந்த முகுந்த்தை.. தனது தோளில் போட்டபடி லிஃப்டை அடைந்து அவர்களுக்கான தளத்திற்கு சென்றனர்.
அங்கே இருந்த அறைக்கு அழைத்து சென்ற சந்தீப்,
“ஓகே ரியான், இப்ப தான் டைம் 5am ஆகுது. நீயும் கொஞ்ச நேரம் தூங்கு.
நா வீட்டுக்கு போயிட்டு ரெடியாகி உனக்கும் முகுந்துக்கும் டிஃபன் எடுத்துட்டு வந்திடுறேன்..” என்றுவிட்டு சந்தீப் கிளம்ப,
“இல்லடா, வேற அரேன்ஜ் பண்ணிக்கறேனே..” என்றான் தயக்கமாக.
“நோ, எப்படியும் நாளைல இருந்து நீ தான் தயார் பண்ணிக்க போறே.. இன்னைக்கு ஒரு நாள்.. நா கொண்டு வர்றேன்.
குக் பண்ண போறது என்னோட வெய்ப் தான்.. இதுல அப்பா எங்கேயும் இல்ல.. புரியுதா..?” என்றான் கோபமாய்.
“இல்லடா.. முகுந்த் காரமெல்லாம் எடுத்துக்க மாட்டான். அதான்..” என இழுக்க,
“ரியான்.. எங்க வீட்டுலையும் ரெண்டு குழந்தைங்க பிறந்து வளர்ந்திருக்காங்க.
அவங்களுக்கு எப்படி ஃபுட் கொடுக்கறதுன்னு என் வீட்டுல தெரியாதா..?! நீ வொரி பண்ணாம ரெஸ்ட் எடு..” என்று சொல்ல,
இதற்கு மேலும் மறுக்க வழியில்லாமல், “ஓகே சந்தீப். உன்னோட விருப்பம். காரம் மட்டும் ரொம்ப லேவா இருக்கற மாதிரி பார்த்துக்கோ..
டைம் இருக்கு தானே.. சோ, நீயும் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு.. அப்புறம் எப்பவும் வர்ற மாதிரி வந்தா போதும்.” என்று விடை கொடுத்தவன்,
அவன் சென்றதும் கதவடைத்துவிட்டு, அங்கிருந்த படுக்கையில் குழந்தையை படுக்க வைத்து,
பின்.. தனது தேவையை முடித்து வந்ததும், குழந்தையை அணைத்தவாரே படுத்தவன், அவனோட சேர்ந்து உறக்கத்தை சுகமாய் தழுவினான்.
இனி வரும் காலத்திலாவது இந்த நிம்மதியான நித்திரை இருவருக்கும் நிரந்தரமாகட்டும்..
error: Content is protected !!