Skip to content
Post Views: 8,494
காதல் அன்று
அன்று சனிக்கிழமை.
ராகவிற்கு அரைநாள் தான் ஆபிஸ். வித்யாவிற்கு ஸ்கூல் லீவ்.
அவள் அவனுக்கு அன்று அதிகாலையிலேயே அவள் வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்கும் போதே போன் செய்து விட்டாள்!
Advertisement
ராகவ் தூக்கக் கலக்கத்திலேயே போனை எடுத்தான்.
“யாரு இவ்வளவு காலையில் நமக்கு போன் பண்ணுவது?” என்று நினைத்தபடியே.
“ஹலோ மாமா குட்மார்னிங். என்ன உங்கள தூக்கத்தைக் கெடுத்திட்டேனா?”
Advertisement
“ஏய்..உன்னை.. காலங்கார்த்தால தூங்கிக் கிட்டிருக்கும் ஒருத்தனை எழுப்பி, தூக்கத்தைக் கெடுத்திட்டேனான்னு வேறே கேப்பியா? உன்னை..”
Advertisement
“சாரி மாமா, அப்புறம் என் வீட்டில் எல்லோரும் எழுந்து வந்திருவாங்க, அவங்க வரதுக்குள்ள பேசணும்னு தான் உங்கள் எழுப்பிட்டேன்! சாரி..”
“ஏய். சும்மா சொன்னேன்டி, ம்ம் சொல்லு. எதுக்காக போன் பண்ணின?” கொட்டாவி விட்டபடி கேட்டான்.
“மாமா எனக்கு இன்னிக்கு ஸ்கூல் லீவு. பிரன்ட் வீட்டுல இருந்துட்டு க்ரூப் ஸ்டடி பண்ணப் போறேன்னு சொல்லிட்டு வந்திடுறேன். மாமா உங்களுக்கு ஆபிஸ் லீவா?”
Advertisement
“அடிப்பாவி, உன்னை வீட்டில் கேக்க மாட்டாங்களா? யாரு பிரன்ட்? எந்த பிரன்ட்ன்னு எல்லாம்!”
“அதெல்லாம் கேக்க மாட்டாங்க, அவங்களுக்கு என் மேல் நம்பிக்கை! நான் ரொம்ப தைரியம்!
என் அக்கா தான் பயப்படுவா. அவளை எங்காவது தனியா அனுப்பினா தான் பயந்துட்டு இருப்பாங்க!
நான் அப்படியில்ல, எப்ப பார்த்தாலும் அப்படியே ரவுண்டிங்கில் தான் இருப்பேன்! எங்க இருந்தாலும் என் சேப்டிய நான் பார்த்துப்பேன்னு ரொம்ப தைரியம்!”
“ஆனா நீ என் கூட இருப்பது உனக்கு சேப்டி இல்லையே?” என்றான் முணுமுணுப்பாக!
“உன் பக்கத்தில் இருக்கும் போது எனக்கு என்ன பயம் மாமா. சரி சொல்லுங்க, உங்களுக்கு ஆபிஸ் லீவா இல்லியா?”
“எனக்கு ஹாப் டே ஆபிஸ் இருக்கு! நீ ஒண்ணு பண்ணு.
மதியம் வா. ஒரு வேளை வர லேட்டானா. நான் வீட்டை பூட்டி, கீயை வெளியே இருக்கிற ஷூ ரேக்கில் இருக்கும் ஒரு கருப்பு ஷூவின் உள்ளே வச்சுட்டுப் போறேன். நீ வீட்டைத் திறந்து உள்ளே இரு. நான் வந்திடுறேன்.”
“கீழ் வீட்டில் கேக்க மாட்டாங்களா?”
“அதெல்லாம் கேக்க ஆள் இருந்தா தானே! அவங்க எப்ப பார்த்தாலும் அவங்க பொண்ணு வீட்டுக்குப் போய்டுவாங்க!”
“சரி மாமா. அம்மா வர மாதிரி இருக்கு. நான் போனை வச்சுடறேன்” என்று போனை வைத்து விட்டாள்.”
மதியம் ஆபிஸ் வேலை முடிந்து, ராகவ் அங்கிருந்து கிளம்ப கொஞ்சம் லேட்டாகி விட்டது.
அவசரமாகவே வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தவன், வீட்டிற்குள் நுழைய, அங்கு ஹாலில் வித்யா இல்லை! பாத்ரூமில் தண்ணீர் சத்தம் கேட்டது!
அங்கே சென்றான். கதவைத் திறந்து வைத்தபடி, ஒரு பக்கெட்டில் எதையோ துவைத்து அலசிக் கொண்டிருந்தாள் வித்யா!
பாவாடை தாவணி அணிந்திருந்தாள்! பாவாடையை லேசாக தூக்கி சொருகிக்கொண்டு ரொம்ப மும்முரமாக துணி துவைத்துக் கொண்டிருந்தாள்.
பின்னாடியே போய், அவள் இடையை வளைத்துக் கட்டிக்கொண்டான் ராகவ்!
அவள் திடுக்கிட்டு திரும்பினாள்.
“ஹேய்.. பயப்படாதே, நான் தான்! இங்க என்ன பண்ணிட்டு இருக்க!”
“ம்ம். உங்க நாத்தம் பிடிச்ச சாக்ஸை எல்லாம் பொறுக்கி எடுத்துட்டு வந்து ஊற வைச்சு துவைச்சுட்டு இருக்கேன்! எல்லாம் ஒரே அழுக்கு! நாத்தம்! ஏன் மாமா இதையெல்லாம் துவைக்க மாட்டீங்களா?”
“எனக்கு துணி துவைக்கிறதுனா கொஞ்சம் அலர்ஜி! எல்லாத்தையும் லாண்டரிக்கு போட்டுடுவேன்! இந்த சாக்ஸை மட்டும் சேர்த்து வச்சு ஒரே நாள்ல துவைப்பேன். முப்பது நாளைக்கு முப்பது சாக்ஸ்!”
“அடப்பாவி”, என்றபடியே பக்கவாட்டு பால்கனியில் அவற்றை எல்லாம் காயப் போட்டுவிட்டு வந்தவள், கைகளை மீண்டும் கழுவிவிட்டு,
“மாமா உங்களுக்கு ஒண்ணு கொண்டு வந்திருக்கேன் பாருங்க”, என்று ஒரு டிபன் பாக்ஸை திறந்தாள்.
“என்ன இது?”
“ம்ம். அவல்!”
அவள் கையில் இருந்தது, அவலை சிறிது நேரம் ஊறப்போட்டு, பிழிந்து எடுத்து உப்பு போட்டு, நிறைய தேங்காய் துருவல்கள் சேர்த்த அவல்!
எல்லோரும் அவலில் வெல்லம் போட்டு தான் பிசறி சாப்பிடுவார்கள்! ஆனால் இது அவன் அம்மா நந்தினியின் ஸ்டைல்!
அதுதான் ராகவுக்கு ரொம்பப் பிடிக்கும்!
அதை தான் இப்போது வித்யா கொண்டு வந்திருந்தாள்!
அவன் ஆச்சரியமாக, அவளைப் பார்த்தான்!
“ஏய்.. இது என்னோட பாவரிட்! உனக்கு எப்படி தெரியும்?”
“ஆல் டீடைல்ஸ் ஐ நோ!” என்றாள் வித்யா!
“அடப்பாவி உன் இங்கிலிஷ்ல தீயை வைக்க!” என்றான் ராகவ் கிண்டலாக.
உடனே வித்யாவின் முகம் சுண்டி விட்டது.
அதைக் கண்டு பதறிய அவன், “ஏய், என்னடி கோச்சுக்கிட்டியா, சாரி சாரி. நான் இனிமே உன்னை இப்படி கிண்டல் பண்ண மாட்டேன்! ப்ளீஸ் ப்ளீஸ்” அவள் முகவாயைப் பிடித்துக் கெஞ்சினான்.
அவள் மூக்கை உறிஞ்சினாள்.
“எல்லோரும் தான் என்னை மக்கு மக்குன்னு கிண்டல் பண்ணறாங்கன்னா, நீயும் பண்ற பார்த்தியா?”
“ஏய்.. யாரடி சொன்னா நீ மக்குன்னு, நீ எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா, என்னைப் பற்றி என் ஆபிஸ்ல வந்து வந்து கேட்டுப் பாரு! அப்படி புகழ்வாங்க. அப்படிப்பட்ட என்னையே , இந்தா இப்படி மடிச்சு, இங்க வச்சுகிட்ட, பெரிய ஆள் நீ! நீயா மக்கு!” என்றபடி அவள் நெஞ்சைத் தொட்டுக் காட்டினான்!
“ஏய். மாமா, கையை எடு, சரியான கெட்டப் பையன் நீ” என்று அவள் சிரித்தபடி நார்மலானாள்!
“ஆனா மாமா எனக்கு இந்த இங்கிலீஷ் தான் பேச வர மாட்டேங்குது! என் அக்கா அண்ணன் எல்லாம் இங்க அப்பா அம்மா கூடவே இருந்து டவுனில் படிச்சாங்க.
நான் மட்டும் கிராமத்தில் பாட்டி வீட்டில் இருந்து படிச்சேன்! அதான் எனக்கு இங்கிலீஷ்ல பேச வர மாட்டேங்குது.”
“ஏண்டி உன்மாமா எதுக்கு இருக்கேன், நான் உனக்கு சொல்லித் தரேன். இங்கிலிஷ் கிஸ் அடிக்க சொல்லிக் கொடுத்த உன் மாமா, இங்கிலிஷ்ல பேச சொல்லித் தர மாட்டேனா?” என்றவன் அவளை ஊட்டிய அவலை சாப்பிட்டான்.
“என் அம்மாவுக்கு அப்புறம், எனக்கு இப்படி பிடிச்சத செஞ்சுக் கொடுக்கிறது, என் பிரன்ட் கணேஷ் அம்மாவுக்கு அப்புறம் நீ தான்!” சாப்பிட்டபடி அவன் சொன்னான்.
“ம்ம். கணேஷ் அம்மாவா?” அவள் கொஞ்சம் அர்த்தமாக சிரித்தாள்.
“ஏண்டி ஒரு மாதிரி சிரிக்கிற?” அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே காலிங்பெல் அடித்தது.
கதவைத் திறந்தால், அந்த கணேஷ் தான்!
“Think of the Devil! டேய் உன்னைப் பத்தி தான் பேசிட்டு இருந்தேன். உள்ள வா”
உள்ளே வந்த கணேஷ் அங்கே வித்யாவைக் கண்டு விட்டு ஆச்சரியமாக கத்தியே விட்டான்!
“ஏய் மயிலு, நீ எப்படி இங்க?”
“ம்ம். எனக்கும் ராகவ் மாமாவுக்கு கல்யாணம் ஆகப்போகுது” என்றாள் வெக்கத்துடன்!
“என்னது ராகவ் மாமாவா, ஓ கதை அப்படி போகுதா?”
“என்னடா நடக்குது இங்க?” அவன் ராகவைக் கேட்க அவன் நடந்ததை சொன்னான்.
“எனக்கு வித்யா இப்படி பேசியதில் ஒண்ணும் பெரிசா ஆச்சரியம் இல்ல! ஏன்னா, எனக்கு தெரிஞ்சு அது மூணாவதோ நாலாவதோ படிக்கும் போது இருந்து அது உன்மேல பாசமா இருக்கு!”
“என்னடா சொல்ற? நானே இப்ப தான் உன்னைப் பத்தி உன் அம்மாவைப் பத்தியெல்லாம் அவ கிட்ட சொல்லிட்டு இருந்தேன், உனக்கு இவள முன்னாடியே தெரியுமா?”
“என்னது தெரியுமாவா? ராகவ் உனக்கு ரொம்ப வருஷம் கழிச்சி ஒரு உண்மைய சொல்றேன்.
என் அம்மா கொடுத்து விட்டாங்க அம்மா கொடுத்து விட்டாங்கன்னு நான் உனக்கு கொண்டு வந்து கொடுத்த சாப்பாடு, ஸ்நாக்ஸ் எல்லாம் உண்மையில் வித்யா ராகவ் அண்ணாவுக்கு கொடுங்கன்னு சொல்லி என் மூலமா கொடுத்தது தான்! என் அம்மா இல்ல!
இத யார் கிட்டயும் முக்கியமா உன் கிட்ட சொல்லக் கூடாதுன்னு அப்பவே உள்ளங்கையில அடிச்சு சத்தியம் வேற வாங்கிடுச்சு!” என்றான் கணேஷ்.
இதைக் கேட்டவுடன் ராகவிற்கு ரொம்பவும் அதிர்ச்சி!
“டேய் என்னடா சொல்ற?”
ராகவ் அப்போது பத்தாம் வகுப்பில்.
அவன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த சமயம்.
காலை ஸ்பெசல் கிளாஸ் இருப்பதால் எட்டு மணிகெல்லாம் கிளம்ப வேண்டும்.
அவன் வீட்டில் அவ்வளவு சீக்கிரம் சாப்பாடு தாயார் ஆகியிருக்காது.
பெரும்பாலும் காசு கொடுத்து அனுப்பி விடுவார்கள். “கடையில் கேண்டீனில் வாங்கி சாப்பிடு” என்று!
ராகவிற்கு அப்போது கடை சாப்பாடு பிடிக்காது.
வேண்டா வெறுப்பாய் வாங்கி பேருக்கு சாப்பிட்டு விட்டு தூக்கிப் போட்டு விடுவான். ஒரு நாள் பசியில் மயக்கமே வந்து விட்டது!
அப்போது கணேஷ் தான் அவனுக்கும் சேர்த்து ப்ரேக்பாஸ்ட் லஞ்ச் எடுத்து வந்து கொடுப்பான்.
அவை எல்லாம் அப்படியே அவன் அம்மா சமைப்பது போலவே இருக்கும்!
அப்புறம் அது அவன் ப்ளஸ் டூ முடிக்கும் வரை கூட தொடர்ந்தது!
அவன் அம்மா நந்தினி அவன் டென்த் லீவில் இருக்கும் போது இறந்து விட, அதற்கு பிறகு ஒரு வருடம் கழித்து அவன் அப்பா அந்த ஈஸ்வரியை கல்யாணம் செய்த பின்னரும் அவனுக்கு வீட்டில் சாப்பாடு கிடைக்க வில்லை!
ஆனால் அவை எல்லாம் கணேஷ் மூலம் வித்யா கொடுத்து விட்டது தான்!
அப்போது அவள் நான்காவது படித்துக் கொண்டிருந்தாள்.
ராகவ் கடை சாப்பாடு பிடிக்காமல் தூக்கிப் போட்டு விட்டு செல்வதைக் கண்டவள் அவள் பாட்டி வள்ளிமயிலிடம் சொல்லி, அவள் பிரண்ட்க்கு என்று சொல்லி தினமும் அவனுக்கும் சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள்.
அவள் எப்போதுமே இப்படி தான் யாருக்காவது இப்படி கொடுப்பாள் என்பதால் வீட்டில் யாருக்கும் சந்தேகம் வர வில்லை.
அதுவும் அப்போது அவள் அம்மாவிற்கு கொஞ்ச தூர ஊரில் போஸ்டிங் போடப்பட்டிருந்தது.
அவர் அந்த ஊரில் ஒரு சின்ன அறையை எடுத்து தங்கி வேலைப் பார்த்து விட்டு, வீக்எண்டு தான் வருவார்.
வாகீசனுக்கும் வாணிக்கும் பப்ளிக் எக்ஸாம் வரும் போது அவர் , பிள்ளைகளுடன் இருக்க வேண்டியிருக்கும் என்று அப்போது அந்த ட்ரான்ஸ்பரை ஏற்றுக் கொண்டிருந்தார் லதா!
குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவென்று கிரமத்தில் இருந்த வள்ளி மயில் இங்கு வந்து விட்டார்.
அந்த சமயம் தான் வித்யா தினமும் ராகவிற்கு பாட்டியிடம் சொல்லி சாப்பாடு வாங்கி போனது!
வள்ளிமயிலும் நந்தினியும் ஒரே ஊர்! பக்கத்து தெரு! நந்தினி சமையல் கற்றுக் கொண்டது வள்ளியிடம் தான்!
இதையெல்லாம் அறியாத ராகவ், இப்போது அதிர்ச்சி, ஆச்சர்யம் தாண்டி வேறு பலவகை உணர்ச்சியில் திக்குமுக்காடி போய் விட்டிருந்தான்!
அப்படியே கணேஷ் அருகில் சென்றவன் “அவுட்” என்றான்!
கணேஷ் அதிர்ந்து போய், “அது மயிலு பாப்பா தாண்டா சொல்ல வேணான்னு சொல்லிச்சு, ப்ளீஸ் என்னைத் தப்பா நினைக்காதடா?”
“வெளியே போடா..” என்று ராகவ் ஆரம்பிக்க,
“டேய், தயவு செஞ்சி என்னை துரோகின்னு எல்லாம் சொல்லிடாத, நான் எப்பவும் உன் நண்பன்டா!”
“வெளியே போடா கரடி! பூஜை வேளை கரடி!”
“என்ன கரடியா? அதுவும் பூஜை வேளை கரடியா! டேய் அப்ப உனக்கு என் மேல எந்த கோபமும் இல்லையே?”
“அதெல்லாம் ஒரு வெங்காயமும் இப்ப வரை இல்ல, இனி ஒரு நிமிஷம் இங்க இருந்தாலும் நான் எப்படி மாறுவேன்னு எனக்கே தெரியாது!
ஓடிப் போய்டு! நான் என் டார்லிங் கூட தனியா பேசணும் போடா முதல்ல இங்க இருந்து!” அவனைக் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளி விட்டான் ராகவ்!
அதில் கோபம் இல்லை! அதை கணேஷ் நன்கு உணர முடிந்ததால், சிரித்துக்கொண்டே வெளியே இறங்கிப் போய்விட்டான்!
கதவைத் தாழ் போட்டுவிட்டு வந்தவன், அப்படியே அங்கிருந்த சேரில் உட்கார்ந்து விட்டான்.
அவன் அருகில் வந்தாள் வித்யா!
ராகவ் அவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பார்வையில் அவள் என்ன கண்டாளோ, அவன் முகத்தை அப்படியே தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்!
ராகவனும் அதை தான் எதிர்பார்த்தவன் போல அவளுள் ஒடுங்கிக் கொண்டு கேட்டான்.
“ஏண்டி இத என் கிட்ட சொல்லவே இல்லை இத்தனை வருசமா?”
“அது வந்து மாமா.. எனக்கு , உன்னை ரொம்ப பிடிக்கும் மாமா, பிடிக்கும்னா எந்த அளவுன்னு வார்த்தையால சொல்ல முடியாது! அந்த அளவு பிடிக்கும்!
நான் , அப்பவே, ஏதாவது விசேஷ வீட்டில் வைத்து உன்னை பார்த்தால், உன்னையே பார்த்துட்டே இருப்பேன்.
உன் அம்மா இறந்தப்போ கூட நான் உன் வீட்டிற்கு வந்திருந்தேன் என் பாட்டியோட!
அப்போது நீ மவுனமா நின்னு கண்ணீர் விட்டுட்டு தனியே கொல்லைபுறம் துணி தோய்க்கிற கல்லில் உட்கார்ந்து அழுதுட்டு இருந்தது இன்னமும் கூட எனக்கு நினைவில் இருக்கு!
அப்ப கூட உன்னை இப்படி வந்து கட்டிப் பிடிச்சு ஆறுதல் சொல்ல தான் எனக்கு தோணிச்சு!
ஆனா செய்ய முடியல! அவள் பேசிக் கொண்டே போனவள், அவன் இப்போதும் கூட கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்து, அவளும் கண் கலங்கி போய் விட்டாள்!
“ஷ் மாமா, அழாதே, நீ இப்படி அழறதுக்கா, நான் இவ்வளவு தூரம் பண்ணியிருக்கேன்! நான் இருக்கேன் மாமா ! உனக்கு!
நேத்து கூட உன் சித்தி எங்க வீட்டுக்கு போன் பண்ணி மிரட்டுச்சு!”
“என்ன சொல்ற நீ, சித்தி உனக்கு போன் பண்ணினாங்களா?” அவன் தலையை நிமிர்த்திக் கேட்டான்.
ம்ம். அம்மா கிட்ட பேசி, நம்ம கல்யாணத்தை நிறுத்த தான் அவங்க போன் பண்ணியிருக்காங்க போல, நானே போன் எடுப்பேன்னு அவங்க எதிர்பார்க்கல.
ஆனா அப்பவும் என்கிட்ட, நீ ராகவை பத்தி எதுவும் தெரியாம கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுற!
அவனுக்கு தண்ணி சிகரட்ன்னு எல்லா பழக்கமும் உண்டு!
கோபம் வந்திட்டா அவனை மாதிரி ஒரு முரடனைப் பார்க்க முடியாது யோசிச்சு சொல்லு.
இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல, நீ சொல்லு, நான் இந்த கல்யாணத்தை நிறுத்திடுறேன்! அப்படின்னு சொன்னாங்க.
அதுக்கு நான், என் ராகவ் மாமாவைப் பத்தி நீங்க சொல்லி நான் தெரிஞ்சிக்க ஒண்ணும் இல்லை!
எனக்கு அவரைப் பத்தியும் தெரியும் உங்களைப் பத்தியும் தெரியும்னேன்”
“அப்ப அவனைப் பத்தி எல்லாம் தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறன்னா,.. அவன் சொத்து மேல் தான் உனக்கு கண்ணு!
அப்படி தானே! அப்படி ஒரு எண்ணம் இருந்தா, இப்பவே கேட்டுக்கோ, அதெல்லாம் சல்லி பைசா கூட அவனுக்கு போய் சேர நான் விட மாட்டேன்! வீணா கனவு கண்டு ஏமாறாதே!”
“என்னது சொத்து மேல ஆசைப் பட்டு கல்யாணம் பண்ண, நான் ஒண்ணும் ஈஸ்வரி இல்ல! என்னை என்ன உங்கள மாதிரி நினைச்சுட்டீங்களா?”
“ஏய்! என்ன வாய் நீளுது?”
“பின்னே, நீங்க என்ன? அம்மா இல்லாத ராகவை வளர்த்து ஆளாக்கவா ஐம்பது வயசு கிழவன் ஆனாலும் பரவாயில்ல, வளர்ந்த பையன் இருந்தாலும் பரவாயில்லன்னா ராஜேந்திரன் மாமாவை கல்யாணம் பண்ணினீங்க?
அப்படின்னா நீங்க பிள்ளைப் பெத்துக்காம இல்ல இருந்திருக்கணும்! சும்மா ரொம்ப நல்லவங்க மாதிரி பேசாதீங்க!”
“ஓ, இந்த ஈஸ்வரிகிட்ட சரிக்கு சரியா வாயாடுற இல்ல, உங்க கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்!”
“பாருங்கன்னு” சொல்லி போனை வைச்சுட்டேன் மாமா!
இதை கேட்டுக் கொண்டிருந்த ராகவ், அவளை மேலும் இறுக்கிக் கொண்டு, சொன்னான்.
“அவங்க சொன்னது மாதிரி தான் எனக்கு தண்ணி சிகரட் பழக்கம் எல்லாம் உண்டு!
ஆனா அத நான் பழகக் காரணமும் அவங்க தான்!
தெரு முனை டீக்கடையில் பிரண்ட்ஸ் கூட சும்மா நின்னு பேசிட்டு இருந்தவனைப் போய், என் அப்பாவிடம் டீக்கடையில் நின்னு தம் அடிக்கிறான் என்று சொல்லி அடி வாங்கி வைச்சாங்க.
செய்யாத தப்புக்கு ஏன் அடி வாங்கணும், அதை செஞ்சுட்டே வாங்கிக்கலாம்னு தோணிடுச்சு அந்த வயசுல!
அதே மாதிரி தான் தண்ணியும். ஒரு நாள் பிரண்ட் பர்த்டே பார்ட்டிக்கு போயிட்டு வந்தேன். அது வெறும் சாதாரண பார்ட்டி தான்!
அதுக்குப் போய் வாசலில் நிற்க வைத்து ஊத சொல்லி செக் பண்ணி இன்சல்ட் பண்ணினாங்க!
அதுக்கபுறம் தான் தண்ணி அடிக்கவும் பழகினேன்!
இப்ப என்னை பார்த்தா ரொம்ப கெட்டவன் மாதிரி தோணுதா உனக்கு?” என்று அவளை நோக்கிக் கேட்டான்.
“ஸ். என்ன மாமா நீ, கெட்ட பழக்கம் இருக்கிறவங்க எல்லாம் கெட்டவங்களா!
நீ ரொம்ப நல்லவன் மாமா. இங்க.. நல்லவன்!” அவன் நெஞ்சைத் தொட்டு சொன்னாள்!
“நாம நினச்சா இதுல இருந்து வெளியே வந்திடலாம். ஆனா உள்ளுக்குள்ள இருக்கிற புத்தி அது பிறக்கும் போதுல இருந்தே இருக்கறது! அது மாறாது!
இந்த சொசைட்டி வெறும் புற ஒழுக்கத்தை மட்டுமே வச்சு ஒருத்தனை நல்லவனா தீர்மானிக்கிறது!
அக ஒழுக்கம் பத்தி எல்லாம் யோசிக்கிறது இல்ல! என் மாமா ரொம்ப ரொம்ப அக ஒழுக்கம் உள்ளவன். அவன் தான் எனக்கு எல்லாமே!”
கேட்டுக் கொண்டிருந்த ராகவ் அப்படியே அசந்துப் போய் விட்டான்!
“இவளையா மக்கு என்கிறார்கள்? இவளையா பொடிசுன்னு நாம நினைச்சோம்?
என்ன பேச்சு பேசுது இது” என்று உணர்ச்சிப் பொங்க அவளைப் பார்த்தவன், எழுந்து கொண்டு, அவளை அப்படியே தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டு வெகு ஆழமாக அழுத்தமாக அவளின் இதழில் முத்தமிட்டான்!
அது ரொம்ப நேரம் நீடித்தது!
திடீரென்று அவனிடம் இருந்து விடுபட்டாள் வித்யா!
முகத்தில் ஒரே குழப்பம்!
“என்னடி? என்ன ஆச்சு, ஏன் இப்படி பதறுற?”
“இல்ல மாமா எனக்கு ஒரு டவுட் வந்திடுச்சு! “
“இப்ப என்னடி டவுட்டு?” என்று கேட்டவன், அவள் கேட்ட அந்த கேள்விக்கு விழுந்து விழுந்து சிரித்தான்!
கண்ணில் நீர் முட்டிக் கொண்டு வரும்வரை சிரித்தான்!
அப்படி என்ன கேட்டாள் வித்யா?
அவள் கேட்டது, இன்று வரை 90’s கிட்ஸ்சை கலாய்க்க மீம்ஸ்களில் பயன்படுத்தப் படுவது!
“மாமா, நாம இப்படி சும்மா சும்மா கிஸ் பண்ணிக்கிறமே, அப்ப என் வயத்துல பாப்பா எதுவும் வந்திடுமா?” என்று கொஞ்சம் பயம் நிரம்பிய பார்வையுடன் கேட்டாள் வித்யா!
இதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தவன், பின் சீரியசான முகத்துடன் சொன்னான்.
“கண்டிப்பா பேபி வந்திடும்! அதில என்ன சந்தேகம்! அதான் நமக்கு தான் கல்யாணம் ஆகப் போகுது இல்ல! வந்தா வரட்டும்!
நாம் அடிக்கிற இந்த இங்க்லீஷ் கிஸ் ரேஞ்சுக்கெல்லாம், அநேகமா ட்வின்ஸ் தான் இருக்கும்” என்றான் அவளின் வயிற்றைத் தொட்டுக் காட்டி!
error: Content is protected !!