Skip to content
Post Views: 8,078
வீட்டிற்குள் வந்தவுடன் முகுந்துக்கு கொடுக்க வேண்டிய மருந்தை கொடுத்து முடித்து.. ஓய்ந்து சரிந்த ரியானை காணக்காண அனைவரின் மனதிலும் சொல்லொண்ணா துயர் வாட்டியது.
‘தன் தம்பியின் வாழ்க்கை மட்டும் ஏன் இத்தனை பிரச்சனைகளோடு இருக்க வேண்டும்..?
Advertisement
மொத்த குடும்பமும் போன போது கூட.. அவன் இப்படி கலங்கி போக வில்லையே..!
Advertisement
அவனுக்கு உயிரான ஒரு ஜீவனும், இனி.. அவனுடையது இல்லை.. என்றால், அதை அவனால் எப்படி தாங்க முடியும்..?’ என பரிதவித்தது சந்தீப்பின் உள்ளம்.
Advertisement
ஆளாளுக்கு அவரவர் சிந்தனையில் உறைந்திருக்க,
Advertisement
நேராக அமிழ்தினியாளிடம் வந்த தனம்,
“ஒருத்தனால வஞ்சிக்கப்பட்டு.. இப்போ, இந்த குழந்தையோட உயிருக்காக என்னை காப்பாத்துங்க.. ன்னு என் முன்னாடி நின்னையே..
அப்போ, அந்த ஆள் யார்.. இந்த தம்பியா..?” என ரியானை கை காட்ட,
ஒரு நொடி அனைவருமே ஜர்க் ஆகி போயினர் தனத்தின் கேள்வியில்.
ரியானுக்கு.. அமிழ்தினியாள் சொல்லப்போகும் பதில் தான் தெரியுமே..!
அதனால் அவன் நிலை மாறாமல் அமைதியாக இதுவரை இருந்த நிலையிலேயே தொடர்ந்தான்.
‘இல்லை..’ என மறுப்பாக தலையசைத்தாள் இனியாள்.
“அப்போ.. உன்னை ஒருத்தன் ஏமாத்திட்டான்னு சொன்னது பொய்.. அப்படி தானே..?” என்று தனம் அவளை கேட்க.
“இல்லம்மா.. நான் ஏமார்ந்தது நிஜம்.. ஆனால், அது இவரால அல்ல..” என்ற அமிழ்தினியாள்..
இதுவரை தனத்திடம் மறைத்த எல்லாவற்றையும் சொல்லத்தொடங்கினாள்.
*********
“பணம்.. அது இந்த மனுஷங்கள படுத்தற பாடு.. அந்த பணத்துக்காக பொண்டாட்டி.. புள்ளை.. ன்னு விட்டுட்டு அதை தேடி ஓடற எத்தனையோ பேர்ல என்னோட அப்பாவும் ஒருத்தர்.
என்னோட அப்பா ராஜசேகர்.. அம்மா அமிர்தவள்ளி.
அம்மாவ அப்பா கல்யாணம் பண்ணும் போது அப்பா ஒரு சின்ன கம்பெனில சாதாரண வேலைல தான் இருந்தாங்க.
அம்மாவும் பெரிய வசதி வாய்ப்பு உள்ள குடும்ப பொண்ணு இல்லை.
வசதி இல்லைன்னாலும்.. நிம்மதி இருந்தா போதுமுன்னு வாழ்ந்தவங்க வாழ்க்கைக்கு அச்சாரமா நான் பிறந்தேன்.
எனக்கு ஆறு வயசு ஆகற வரை எல்லா குழந்தைங்க மாதிரியும் அன்பு, பாசமுன்னு எல்லாம் அனுபவிச்சு தான் வாழ்ந்தேன்.
அப்ப தான் எங்க அப்பாக்கு துபாய் போற வாய்ப்பு அமைஞ்சது.
அம்மாக்கு அப்பாவ பிரிஞ்சு தனியா இருக்க விரும்பமில்லாம.. அவரை போக வேணாமுன்னு தடுத்தாங்க.
அதுக்கு அப்பா, “பொண்ணை பெத்து வச்சிருக்கோம்.
ஒரு அஞ்சு வருஷம் அங்கே இருந்தா போதும்.. ஓரளவுக்கு பணத்தை சேர்த்துட்டு வந்திடுவேன்.
அப்புறம் நம்ம நல்லா வாழலாம். பொண்ணையும் நல்ல இடத்துல கட்டிக்கொடுக்கலாம்..” ன்னு அம்மாகிட்ட பேசி பேசியே சம்மதம் வாங்கிட்டு அடுத்த ரெண்டு மாசத்துல வெளிநாடு போயிட்டார்.
அதுக்கு அப்புறம்.. நானும், என் அம்மாவும் தான்.
இதுவரை எங்கேயும் தனியா போயே பழகாத என்னோட அம்மா, இனி தனியாவே எல்லாத்தையும் சமாளிக்கனும்.. அப்படிங்கற நிலை வர தடுமாற ஆரம்பிச்சாங்க.
அப்பா போன் பண்ணும் போதெல்லாம்.. அம்மா, ‘நீங்க விட்டுட்டு போய் இப்போ ஒவ்வொரு விசயத்துக்கும் நான் தனியா அல்லாடுறேன்..’ ன்னு ஓயாம சண்டை தான் போடுவாங்க.
நாளாக.. நாளாக அவர் போன் பண்ணறது கூட குறைஞ்சு போச்சு.
எப்பவாச்சும் பண்ணாலும், வேலை அது இதுன்னு.. சொல்லி, என்ன.. எது.. பணம் இவ்வளவு அனுப்பறேன்.. இப்போ என்ன தேவை..? அப்படிங்கறதோட அவர் பேச்சு வார்த்தைய முடுச்சுக்குவார்.
இப்படியே ரெண்டு வருஷம் போயிருக்கும்.
அப்பா அனுப்புன பணத்தை வச்சு.. கூட பேங்க் ஈஎம்ஐ போட்டு, வீடு ஒண்ணு வாங்கி, அந்த புது வீட்டுக்கு குடி போனோம்.
அந்த வீடு ரெஜிஸ்ட்ரேஷன், கிரகப்பிரவேசம் பங்ஷனுக்கு ன்னு மட்டும் அப்பா வந்துட்டு ஒரு மாசம் இருந்துட்டு போனாங்க.
அந்த வீட்டுக்கு குடி போய்.. சில மாசத்துல எங்க அம்மா நடவடிக்கையில சில சேன்ஜஸ் நான் பார்த்தேன்.
யாரோ ஒருத்தரோட வெளியே போறதும் அவரை வீட்டுல கூப்பிட்டு சாப்பிட வைக்கவும் இருந்தாங்க.
நான் யார்ன்னு கேட்டதுக்கு, “புது இடமில்லையா.. எனக்கு இங்கே எது எங்கே கிடைக்குமுன்னு தெரியாதே..!
அதான் இவர் எனக்கு ஹெல்ப் பண்ணறார்..” ன்னு சொன்னாங்க.
எனக்கு அப்ப எதுவும் தப்பா தெரியவும் இல்லை.
ஒரு நாள் நான் தூங்கி எழுந்து பார்க்கும் போது.. வீட்டுல அம்மா இல்லை.
எங்கையாவது கடைக்கு போயிருப்பாங்கன்னு நானே குளிச்சு ஸ்கூலுக்கு ரெடியாகி காத்திருந்தேன்.
மணி பத்து ஆகியும் அவங்க வரவே இல்லை.
எனக்கு பயம் வந்து பக்கத்து வீட்டுல இருக்கற அக்காகிட்ட சொன்னேன்.
அவங்க வீட்டுக்கு வந்து சந்தேகப்பட்டு பார்த்தப்போ தான் அவங்க வச்சிட்டு போன லெட்டர் எங்க கண்ணுல பட்டுச்சு.
அதுல அந்த ஆளோடு தான் இனி அவங்க வாழ்க்கை ன்னு எழுதியிருந்தாங்க.
உடனே அப்பாவோட நெம்பருக்கு அடுச்சு.. எப்படியோ விசயத்தை அவங்க சொல்லிட்டாங்க.
ரெண்டு நாள் கழிச்சு அவர் வர்ற வரை.. அந்த பக்கத்து வீட்டுக்காரங்க தான் என்னை பார்த்துக்கிட்டாங்க.
அப்பா வந்துட்டார் ன்னு அவர்கிட்ட போனா.. அவரோட முகத்துல இருந்தது அத்தனையும் கோபம் மட்டும் தான்.
நான் அம்மாவோட நடவடிக்கை பத்தி அவர்கிட்ட மறைச்சிட்டேன்னு கத்தினார்.
எனக்கு தப்பா தெரியாத விசயத்தை நான் எப்படி சொல்வேன்னு அவருக்கு புரியல.
நான் அவ்வளவு பெரிய பொண்ணும் இல்லையே.. அப்போ..!!
அப்ப எனக்கு ஒன்பது வயசு தான்.
நிஜமா அம்மா போனது ஏன்.. ன்னு கூட அப்ப எனக்கு புரியல.
சொந்தக்காரங்கன்னு நிறைய பேர் விசயம் கேள்விப்பட்டு வந்து.. விசாரிக்கறேன்னு அவரோட கோபத்தை தூண்டி விட்டது தான் மிச்சம்.
“இனி, அங்கே போறையா..? இல்ல இங்கையா..ராஜா..?” ன்னு வந்தவங்கள்ல ஒருத்தர் கேட்க,
“போகனும்.. பதினஞ்சு நாள் தான் லீவ் கொடுத்திருக்காங்க.
கான்ட்டரக்ட் போட்டது கேன்சல் பண்ணா நான் பணம் கட்டனும்.
இந்த வீட்டு கடன் இருக்கு.. அதனால வேலைய விடல..” ன்னு அப்பவும் அவர் பணத்தை தான் யோசிச்சார்.
“அப்போ.. இந்த புள்ளைய என்ன பண்ண போறே..?
கூட கூட்டிட்டு போக முடியுமா..?” ன்னு அவங்க கேட்க,
“அங்கே தனியா வீடு எடுக்கவெல்லாம் முடியாது.
அதனால எதாவது ஹாஸ்டல் பார்த்து விடனும்..” அப்படின்னு அவர் சொல்ல,
“ஹாஸ்டல்ல விடறதுக்கு பதிலா எங்க வீட்டுல இருந்து படிக்கட்டும்.
நீ அங்கே கொடுக்கற பணத்தை எனக்கு கொடு..” ன்னு எனக்கு சித்தப்பா முறை இருக்கற ஒருத்தர் சொல்ல,
அப்பாக்கு எதாவது பண்ணிட்டு உடனே கிளம்பனும். அதனால சம்மதமா தலையாட்டிட்டார்.
அதுக்கு அப்புறம் எனக்கு கிடைச்சது ஒரு அகதி வாழ்க்கை தான்.
பாசமா, அன்பா எதுவுமே கிடைக்காது அங்கே.
பணத்தை மட்டும் கரெக்ட்டா அனுப்பற என்னோட அப்பா, அங்கே நான் என்ன மாதிரி வாழறேன்னு அக்கறையே படல..
ஏன்.. நான் வயசுக்கு வந்துட்டேன்னு சொன்னப்ப கூட, “சடங்கு எதாவது செய்யனுமின்னா நீயே செய்..” ன்னு பணத்தை அனுப்பிட்டு அங்கேயே இருந்துட்டார்.
ஒரு தடவை.. ஒரே ஒரு தடவையாச்சும் என்கிட்ட பேசி..
“எப்படி இருக்கே..? உன்னை நல்லா வச்சிருக்காங்களா..?” ன்னு என்கிட்ட கேட்டிருக்கலாம்.
ஆனா அவருக்கு நான் ஒரு கடமை மட்டுமே.
பணம் கரெக்ட்டா வர்றதால என்னோட படிப்பும்.. என்னோட அடிப்படை தேவைகளும் நல்லவிதமாவே கிடைச்சது.
அவங்க வீட்டுக்கு போய் ரெண்டு வருஷம் இருக்கும்.
ஒரு நாள் அந்த சித்தி சித்தப்பாகிட்ட சத்தம் போட்டுட்டு இருந்தாங்க. ஆரம்பத்துல எதுவும் புரியல.
ஆனா.. கொஞ்ச நேரத்துல புரிஞ்ச விசயம்.. என்னோட அப்பா.. அங்கே யாரையோ கல்யாணம் பண்ணிட்டாங்க.. அப்படிங்கறது தான்.
எப்படியும் ரெண்டு அல்லது மூணு வருஷத்துல அப்பா வந்திடுவாங்க.
என்னை பார்த்துப்பாங்கன்னு நினைச்சதும் பொய்த்து போக, அதுல இருந்து அவங்க என்னை ஒரு அடிமை மாதிரி நடத்தியும் வேற வழியில்லாம சகிச்சிட்டு இருந்தேன்.
“எங்க தேவை அவர் அனுப்பற பணம், அது வரும் வரை நீ இங்கே இருக்க முடியும்.
அவர் பணத்தை அனுப்பலன்னா அடுத்த நிமிஷம் நீ நடுத்தெருவில தான் நிற்கனும்” ன்னு அந்த சித்தி எப்பவும் சொல்லிட்டே இருப்பாங்க.
எனக்கு, “எப்போ என்னை வெளியே போன்னு சொல்வாங்களோ..” ன்னு பயமாவே இருக்கும்.
நா +1 படிக்கவே பேஷன் டிசைனிங் தான் எடுத்தேன்.
காரணம் தொழில் கையில இருந்தா.. யாரையும் நம்பி அவங்களுக்காக ஏங்கி வாழ வேண்டியது இல்லையேன்னு.. எனக்குள்ள உருவான எண்ணம்.
+2 முடுச்சதும் காலேஜூம் அதே கோர்ஸ் எடுத்து தான் படுச்சேன்.
எல்லாமே நல்லா போச்சு.. அந்த ஒருத்தனை நான் சந்திக்கற வரை..” என அமிழ்தினியாள் உணர்வுகள் துடைத்த குரலில் சொல்லிக்கொண்டு போனவள் நிறுத்த,
‘அடுத்து என்ன நடந்திருக்குமோ.. இந்த பாவைக்கு..?’ என்ற, திக்.. திக்.. உணர்வோடு, அவளையே பார்த்திருந்தனர் அனைவரும்.
error: Content is protected !!