Skip to content
Post Views: 7,292
பகுதி 22
ரியான் வீடு..
Advertisement
குண்டூசி விழுந்தாலும் கணீரென சத்தம் கேட்கும் விதமாய் அமைதியாய் இருந்தது அவ்வீட்டின் ஹால்.
உள் அறையில் ஏதோ கேட்டபடி இருந்த வெண்பாவிற்கு மெல்லிய குரலில் பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள் சம்யுக்தா.
Advertisement
Advertisement
ரியான் மார்பில் ஒன்றி லேசாக மூச்சு வாங்கியபடி மிரட்சியோடு சுற்றத்தை அவதனித்தபடி இருந்தான் முகுந்த்.
உடலோ மரத்து.. மரணித்த நிலையில் இருந்த போதும்.. ரியானின் கரம் மட்டும் ஆதுரமாய் வருடிக்கொண்டிருந்தது அந்த குழந்தையின் தலையை.
Advertisement
லேசான நடுக்கம் இன்னும் அந்த பிஞ்சின் மேனியில்.
அது இன்னும் அவனின் மனதை உலுக்கி போட மெதுவாக கலங்க துவங்கியது அந்த ஆண்மகனின் கண்கள்.
யார்.. யாரிடம்.. என்ன கேட்பது.. பேசுவது.. என்பதே புரியாத நிலையில் மூலைக்கு ஒருவராய் அமைதியாய் நின்றிருந்தனர் மற்றவர்கள்.
இன்னும் அழுகையில் உடல் குலுங்க தலை குனிந்து அமர்ந்திருந்த அமிழ்தினியாளை மட்டுமே வெறித்திருந்தது தனத்தின் கண்கள்.
‘தன் ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு.. இங்கு வந்து அமர்ந்திருப்பவளை நினைத்து பெருமையாக இருந்த போதும்..
அவள் தன்னிடம் முழுதாய் சொல்லாமல் எதையோ மறைத்திருக்கிறாள்..’ என நினைக்கும் போது வேதனையாகவும் இருந்தது.
****
சற்றுமுன் அமிழ்தினியாள் வீட்டில்..
“அவன்.. என் மகன்..” என ஆங்காரமாய் கர்ஜித்து இனியாள் நிற்க,
வேரறுந்த கொடியாய் கீழே சரிந்தான் ரியான்.
அருகே நின்ற சந்தீப்பும், சட்டென சுதாரித்த வெங்கடேஷூம்.. அவசரமாக அவனை தாங்கிக்கொண்டனர்.
ரியானுக்கு எந்த அளவு அதிர்ச்சியோ.. அதற்கு சற்றும் குறையாத அதிர்வே சந்தீப், சம்யுக்தா இரு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும்.
அதை அவர்கள் யோசித்துக்கொண்டிருக்க.. இதுவரை அமைதியாய் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருந்த வீட்டிலிருந்து வந்த சத்தத்தில்.. அடுத்த அடுத்த வீட்டிலிருந்தவர்கள் எட்டிப்பார்க்க தொடங்க,
பெருமூச்சை வெளிவிட்டு தன்னை முதலில் சுதாரித்து கொண்ட தனம்,
“அவன் உன் மகனா.. இல்லையா.. ங்கறதை இங்கே வச்சு பேச வேணாம்.
முதல்ல எழுந்து கதவை திற.. நாம அவங்க வீட்டுல போய் பேசிக்கலாம்..” என பொறுமையாய் சொல்லிக்கொண்டிருக்கும் போதே,
அந்த அறையின் கதவு தட்டப்பட்டு, அதோடு, “ப்பா.. ப்பா..” என்ற முகுந்தின் அழுகை குரல் அங்கிருந்தவர்களின் காதில் விழுந்தது.
“அச்சோ.. குழந்தை எழுந்து யாருமில்ல ன்னு பயந்துட்டான் போல. அக்கா சாவிய கொடு..” என சம்யுக்தா பதற,
“சம்யூ.. இவங்கள வெளியே போகச்சொல்லு.
அப்போ தான் நான் கதவை திறப்பேன்..” என்றாள் அப்போதும் பிடிவாதமாய்.
“அக்கா.. நீ என்ன லூசா..?
அம்மா என்ன சொன்னாங்க கேட்ட தானே..? முதல்ல கீய கொடு..” என சொல்லும் போதே,
முகுந்த் பயத்தில் மேலும் வீரிட்டு அழும் குரல் கேட்க,
தடுமாறினாலும்.. தன் உடலை திடப்படுத்தி கொண்டு எழுந்த ரியான், நேராக அமிழ்தினியாள் முன் வந்து நின்று தனது இரு கரங்களையும் கூப்பி..
“அவன் பயந்து அழுதா.. அவன் உயிருக்கே ஆபத்தாகிடும்.
ப்ளீஸ்.. நம்ம பிரச்சனையில என் பை..” என ஆரம்பித்தவன், தொண்டை அடைக்க..
“குழந்தைய வெளியே விடு. உன் கால்ல கூட விழறேன்..” என அவளின் பாதம் நோக்கி குனியப் போக,
“டேய்..” என தம்பியை தடுக்க சந்தீப் வரும் முன்,
“தம்பி.. என்ன பண்ணறீங்க..?” என தடுத்த தனம்,
“இனியாள்.. நீ என்னை உன் அம்மாவ நினைக்கறது உண்மை ன்னா.. இந்த நிமிஷம் அந்த குழந்தை அவர் கையில இருக்கனும்..” என கட்டளையாக சொல்ல,
அடுத்த அதிர்வு ரியானை சேர்ந்தவர்களுக்கு.
‘அம்மாவா நினைக்கறதுன்னா.. அப்போ, இவள் அவங்க பொண்ணு இல்லையா..?’ என பார்த்திருக்க,
ஒரு நொடி தனத்தின் விழியை இறைஞ்சலுடன் பார்த்த இனியாளின் பார்வைக்கு இறங்காமல் கண்டிப்போடு அவர் நிற்க,
தனது கரத்தை நீட்டினாள் சம்யுக்தா முன்.
அதிலிருந்த சாவியை எடுத்து கதவை திறந்ததும், “ப்பா..” என்ற கதறலோடு ரியானை பிள்ளை தேட,
“க..ண்..ணா..” என அடைத்த குரலோடு அவனை நோக்கி பாய்ந்திருந்தான் ரியான்.
அவனை குழந்தையும் பாய்ந்து கட்டிக்கொண்டு, “ஐ..ம் ஸ்கே..ர்டு ப்..பா..” என்று திக்கி திணறி சொல்லி,
அவன் கழுத்தைக்கட்டிக்கொண்டு முகத்தை தோளில் புதைத்து தேம்ப,
பிள்ளை போல வெளிப்படையாக கதறி அழ முடியாத தன்நிலையை.. எப்படி அவனுக்கு புரிய வைப்பது.. என தெரியாமல் தவித்தான் அந்த பாசக்கார தந்தை.
முகுந்த் பேசப்பேசவே அவனுக்கு லேசாக மூச்சு திணற ஆரம்பிக்க, அங்கிருந்த அத்தனை பேருக்கும் பயம் சூழ்ந்து கொண்டது.
“டேய் ரியான், முகுந்துக்கு மூச்சு திணறுது. மருந்து இருக்கா..? இல்ல ஹாஸ்பிடல் போனுமா..?” என சந்தீப் பதட்டத்தோடு கேட்க,
“வீட்டுல..” என்றவன், முகுந்தை நேராக நிமிர்த்தி டாக்டர் சென்ற முறை பரிந்துரைத்தபடி முதலுதவியை செய்ய ஆரம்பித்தான்.
அதுவரை இருந்த பிடிவாதம் கலைந்து, அந்த குழந்தை படும் பாட்டை பார்த்த இனியாளுக்கு.. தன் மடத்தனம் இப்போது தெளிவாக, பரிதவிப்போடு கைகளை பிசைந்தபடி கண்கலங்கி நின்றிருந்தாள்.
“பாஸ்.. மருந்து எங்கேன்னு சொல்லுங்க. நா எடுத்துட்டு வர்றேன்..” என சம்யுக்தா கேட்க,
“இல்ல சம்யு.. நடங்க எல்லாரும். எதுவானாலும், அங்கே போய் பார்த்துக்கலாம்..” என்றார் தனம்,
சுற்றி இருந்தவர்கள் இப்போது வீட்டிற்குள்ளே எட்டி பார்ப்பதை கண்டு.
‘என்ன ஆனாலும் இது இருவரின் வாழ்க்கை பற்றிய ரகசியம்..
இத்தனை பேருக்கு அது அம்பலம் ஆவதற்கு பதிலாக ரியானின் வீடு தனியானது.
அங்கு யாரும் வந்து இப்படி வேடிக்கை பார்க்க முடியாது..’ என்பதை மனதில் கொண்டு அவர் சொல்ல,
சூழலை அவதானித்த மலரும், “என்னங்க.. முதல்ல சின்னத்தனை கூட்டிட்டு வீட்டுக்கு கிளம்புங்க..” என்றிட,
சந்தீப், வெங்கடேஷ் இருவரும் ரியானை முகுந்தோடு சேர்த்து கூட்டி சென்றனர்.
இந்த கலவரத்தில் வெண்பா எழுந்து வந்திருக்க அவளை தூக்கி கொண்டு சம்யுக்தா மலரோடு செல்ல,
மகனை அழைத்து சென்றதும் இன்னும் அழுது கொண்டே மடிந்து அமர்ந்தவளின் முன் வந்த தனம்,
“அப்ப சொன்னதை தான் இப்பவும் சொல்றேன். நீ என்னை அம்மாவா நினைக்கறது உண்மைன்னா இந்த நிமிஷம் என் கூட நீ வர்றே..” என மெல்ல எட்டி பார்த்திருப்பவர்களின் காதில் விழாத படி தனம் சொல்ல,
அமைதியாய் அவரை பின்தொடர்ந்தாள் அமிழ்தினியாள்.
error: Content is protected !!