Skip to content
Post Views: 7,479
பகுதி 23
“வினித்.. அது தான் என் தலைஎழுத்தையே மாத்தி எழுதினவன் பேர்.
Advertisement
நான் படுச்சது பேஷன் டிசைனிங் அப்படிங்கறதால.. சில பேரை மாடலிங் பண்ண வெளியே இருந்து வர வைப்பாங்க.
அப்படி எங்க காலேஜூக்கு வந்தவன் தான் அந்த வினித்.
Advertisement
Advertisement
பார்க்க ரொம்ப ஸ்மார்ட்டா.. மாடலிங் பண்ண தேவையான அத்தனை அம்சத்தோடவும் இருந்தவனை அந்த காலேஜ்ல சைட் அடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்.
நாங்க பஸ்ட் இயர்ங்கறதால ஜஸ்ட் சீனியருக்கு ஹெப்புக்குன்னு ஒரு பேஷன் ஷோ ப்ரோகிராமுக்கு போயிருந்த நேரம் தான் அவனோட பேச சந்தர்ப்பம் கிடச்சது.
Advertisement
நம்மளோட வாழ்க்கையில, எதை.. யார்கிட்ட.. ஷேர் பண்ணறோமுன்னு ஒரு கவனம் வேணுமுன்னு.. எனக்கு கத்துக்கொடுக்க என்னோட அம்மாவும் நான் தேவையில்லன்னு போயிட்டாங்க.
அப்பா இருந்தும் தூரத்துல பணத்தை தேடி போய் கடைசியா அவருக்குன்னு வேற குடும்பத்தோட செட்டில் ஆகிட்டார்.
என்னை பார்த்துக்கறேன்னு கூட்டிட்டு போன குடும்பத்துக்கு நான் பணம் கொடுக்கற மரம்.
யாராவது அதை தடவிட்டு போனாலும் அவங்களுக்கு நட்டமாகாத வரை அவங்க கவனிக்க மாட்டாங்க.
இப்படியான நிலைமையில அன்பா அவன் சிரிச்சு பேச, என்னோட தனிமையை.. அன்புக்கு ஏங்க ஏக்கத்தை, அப்பா.. அம்மா.. விசயத்தைன்னு எல்லாமே கொட்டிட்டேன்.
அப்போ அனுபவ அறிவு இல்லையே..!
இப்படி பண்ணறது தப்புன்னு உணர்றதுக்குள்ள எல்லாமே காலம் கடந்து போயிடுச்சு..” என்றவளின் வார்த்தை கரகரப்பே அவளின் வேதனையை உணர்த்த,
மலர் அவசரமாக தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து கொடுக்க,
ஒரு நொடி தயங்கி, “வேண்டாம்..” என மறுப்பாக தலையசைத்தவளை கண்டு கடுப்பான தனம்,
“முதல்ல அதை வாங்கி குடுச்சிட்டு முழுசா சொல்லி முடி..” என அதட்ட,
தாயாய் அவரின் மகளுக்கு ஈடாக.. தன்னையும் இத்தனை நாள் தாங்கியவரின் வார்த்தையை மறுக்க முடியாமல் வாங்கி குடித்தாள்.
பின் மெதுவாக, “எனக்கு வினிதோட பேசறது பழகறது தப்புன்னு எந்த நேரத்துலையும் தோனவே இல்லை.
ஏன்னா அவ்வளவு கண்ணியம் அவன் நடத்தையில.
நானே பக்கத்துல உட்கார்ந்தா கூட, “இது தப்புடா.. உன்னை யாரும் தப்பா பேசக்கூடாது.
நம்மளோட நடவடிக்கை தான் நம்ம கண்ணியத்தை மத்தவங்களுக்கு காட்டும்” ன்னு சொல்வான்.
இதுவரை தப்புன்னு சுட்டி காட்ட ஆள் இல்லாம இருந்த எனக்கு.. அவன் எது சொன்னாலும் சரின்னு தான் தலையாட்ட இந்த பாழாப்போன மூளை சொல்லுச்சு.
அந்த காலேஜூக்கு அவன் வந்த வேலை முடுஞ்சதும் எதாவது கோவில் இல்ல பப்ளிக் ப்ளோஸூக்கு வரச்சொல்லி தான் மீட் பண்ணுவான்.
எந்த இடத்துலையும் தப்பானவன்னு அவனை நான் ஒரு சதவீதம் கூட சந்தேகப்படாத மாதிரி தான் அவன் நடவடிக்கை இருந்துச்சு.
திடீர்ன்னு ஒரு நாள், “இனியா.. எனக்கு பெரிய கம்பெனில மாடலிங் பண்ண வாய்ப்பு கிடச்சிருக்கு.
அது மட்டும் நல்லா போனா போதும் டாப் மாடல் லிஸ்ட்ல என்னோட பேரும் வந்திடும்” ன்னு சந்தோஷமா ஸ்வீட்டோட வந்து சொன்னான்.
“வாவ், சூப்பர் வினி.. எப்போ ஷோ..” ன்னு நானும் சந்தோஷமா தான் இருந்தேன் அவன் மும்பைலன்னு சொல்ற வரை.
“மும்பையா..? நீ போனா எப்ப வருவே..?”
“அது சொல்ல முடியாது இனியா. ஒரு மாசம் ஆகலாம். இல்ல அதுக்கும் மேல கூட ஆகலாம்..”
“அச்சோ.. அதுவரை நான் உங்கள பார்க்க முடியாதா..?” என கண்ணீர் வழிய கேட்டவளை தோளோடு அணைத்துக்கொண்டவன்,
“ஏய் இனியா.. என்ன சின்ன புள்ள மாதிரி.
இப்போ எனக்கு கிடைச்சிருக்கற வாய்ப்பு எவ்வளவு பெருசு தெரியுமா..?
கண்டிப்பா அதுல நான் சக்சஸ் பண்ணிடுவேன். எல்லாமே நம்ம ப்யூச்சருக்கு தானே..?”
“ஆனா.. நா எப்படி உங்கள விட்டுட்டு இருப்பேன்..?”
“அதெல்லாம் கொஞ்ச நாள் தான். அங்கே எல்லாமே சரியா வந்து.. என்னோட.. பெரிய கம்பெனிஸ் கான்ட்ராக்ட் போட்ட அடுத்த நாளே இங்கே வந்து உன்னை கல்யாணம் பண்ணி கையோட கூட்டிட்டு போயிடுவேன்..”
“நிஜமாவா..? என்னை கூட்டிட்டு போயிடுவீங்க தானே..?”
“உன்னை விட்டா எனக்கு வாழ்க்கையே இல்லை..” ன்னு உருக்கமா பேசிட்டு மும்பை போனவன் ரெண்டு மாசம் கழிச்சு வந்தான்.
“மும்பைல எல்லாமே செட்டில் பண்ணி வச்சாச்சு.
இனி நம்ம அங்கே போனதும் நமக்கு கல்யாணம்” ன்னு சொல்ல,
அவன் மேல இருந்த முழு நம்பிக்கையில அவன் சொன்ன மாதிரி அவனோட மும்பை போறதுக்காக ட்ரைனில் கிளம்பிட்டேன்.
அவன் ரிசர்வ் பண்ணி கூட்டிட்டு போனதால நல்ல வசதியாவே இருந்துச்சு அந்த பயணம்.
பெங்களூர் ஸ்டேஷன்ல வண்டி ஒரு மணிநேரம் நிற்குமுன்னு சொல்ல.. அவன், எனக்கு சாப்பிட எதாவது வாங்கிட்டு வர்றேன்னு இறங்கி போனான்.
அந்த நேரம் அவனோட போனை சீட்டுல வச்சிட்டு போனதை மறந்துட்டான்.
அவனோட போன் ரிங் ஆக முதல்ல எடுக்கலாமா.. வேணாமான்னு தயங்கிட்டே இருந்தேன்.
திரும்ப திரும்ப அது ரிங் ஆக, ஒருவேளை ரொம்ப முக்கியமான காலா இருந்து.. அது பேசாம போனா சிக்கலாகிட்டான்னு நினைச்சு தான் அதை எடுத்தேன்.
ஆனா அந்த போன் தான் என்னை அவன்கிட்ட இருந்து காப்பாத்துச்சு.
நான் எடுத்து ஹலோ சொல்றதுக்குள்ள..
“டேய் அமர்.. அந்த பச்சிய கூட்டிட்டு கிளம்பிட்டையா..?
நான் அவ போட்டோவ காட்டி இங்கே பார்ட்டி ரெடி பண்ணிட்டேன்டா.. செம அமவுண்ட் தேறும்.
ஆனா ஒண்ணு.. பார்ட்டி ஃப்ரஷ் பிஸ் தான் வேணுமுன்னு சொல்றான்.
தயவு செஞ்சு போன தடவை மாதிரி எதுவும் வர்ற வழியில கைய கிய்ய வச்சு தொலஞ்சிடாதே..” ன்னு சொல்லச்சொல்ல.. எனக்கு தலையே சுத்த ஆரம்பிச்சது.
எப்படிப்பட்ட புதைகுழியில என்னை தள்ளப்பார்த்திருக்கான் அந்த பொறுக்கின்னு அப்ப தான் புரிஞ்சது.
பேரை கூட என்கிட்ட மாத்தி சொல்லி, என்னோட நம்பிக்கையை வளர்த்து.. எப்படி ஏமாத்தியிருக்கான்னு.. தெரிஞ்சதும் உடைஞ்சு போயிட்டேன்.
ஆனா உடனே சுதாரிச்சு, ‘இது தான்.. நான் தப்பிக்க கடவுள் கொடுத்த நல்ல வாய்ப்பு..’ன்னு அந்த ட்ரைன்ல இருந்து இறங்கிட்டேன்.
எங்கே அவன் வந்து என்னை பிடிச்சிடுவானோ..? ன்னு பயந்துட்டே இறங்கினவ என்னோட போன், பர்ஸ் ரெண்டையும் எங்கே மிஸ் பண்ணேன்னு தெரியாம அப்போ கிளம்ப இருந்த ஒரு ட்ரைன்ல ஏறிட்டேன்.
அந்த ட்ரைன்ல தான் என்னோட வாழ்க்கைய புரட்டி போட்ட அடுத்த நபரை சந்திச்சேன்.
error: Content is protected !!