Skip to content
Post Views: 7,638
பகுதி 24
மேகப்பொதிகையில் தவழ்ந்து விளையாடும் போது ஏற்படும் சிலிர்ப்பும், சில்லிப்பும் உடலெங்கும் பரவ.. மயக்கமும் அல்லாத முழுவிழிப்பும் இல்லாத நிலையில் ஆழ்ந்திருந்தாள் அமிழ்தினியாள்.
Advertisement
ஆழ்மனதில் இருந்து வந்த தாய்மை மட்டும் லேசாக அவளை அசைத்து பார்த்தபடி இருந்தது.
தன் காதுகளில் விழுந்த அடுத்தடுத்த இரு குழந்தையின் அழுகை குரலே.. அவளுக்கு நிதர்சனத்தை நெற்றிப்பொட்டில் அறைந்த படி உரைத்திருந்ததே இந்த மருத்துவமனையின் ஏமாற்று வேலையை..
Advertisement
Advertisement
‘ஏன்..?’ என்ற கேள்வி மனதில் எழுந்த போதும், அதை வாய்விட்டு கேட்க முடியாத படி.. ஆழ்நிலை மயக்கம் அவளை சூழ ஆரம்பிக்க,
இதோ இப்போது அரைமயக்க நிலையிலும்.. கோமதியிடமும் அவரின் மகளிடமாவது, ‘இரட்டை குழந்தை..’ என சொல்லியிருப்பார்களா..? என தெரிந்து கொள்ள ஆவலும்,
Advertisement
அதே நேரம், ‘ஒற்றை குழந்தை..’ என இதற்கு முன் சொன்னது போல.. ஒன்றை மட்டும் ஒப்படைத்தால், ‘மற்றொரு குழந்தையின் நிலை..?’ என்ற அச்சமும்..
அவளை எப்படியாவது தான் சுயத்தோடு இருக்க வேண்டும்.. நடப்பதை உணர்ந்தே தீர வேண்டும்.. என்ற வெறியை கிளம்பியிருக்க, மருத்துவர் எதிர்பார்த்தபடி அல்லாமல்.. அவளுக்கு லேசான விழிப்பு நிலை நீடித்தது.
அதை உணராது, “சிஸ்டர் கேர்ள் பேபிய வெளியில இருக்கறவங்க பார்வை படாதபடி இடம் மாத்திடுங்க.
அவங்ககிட்ட பாய் பேபின்னு சொல்லிட்டேன்.
இதை மட்டும் க்ளீன் பண்ணி அவங்ககிட்ட காட்டிட்டு.. ரூமுக்கு அமுதாவோட கொண்டு வந்து கொடுப்போமுன்னு சொல்லிடுங்க.
நம்ம சொல்லும் போது பார்ட்டி வந்து அந்த கேர்ள் பேபிய எடுத்துட்டு போயிடுவாங்க.
அதுவரை விசயம் வெளியே போகக்கூடாது.. பீ கேர்ஃபுல்..” என எந்த விதமான குற்ற உணர்வும் இல்லாது.. ஈவு இறக்கமற்ற செயலை அசால்ட்டாக செய்ய சொல்லிக்கொண்டிருந்தார் அந்த மருத்துவர்.
“ஓகே டாக்டர்..” என்றவரும் அதை அப்படியே செய்ய சென்றிருந்தார்.
“அய்யோ.. என் பிள்ளை..” என தாயுள்ளம் தவித்த போதும், விரல் நுனியை கூட அசைக்க முடியாதபடி இருப்பவள் என்ன செய்துவிட முடியும்..?!
பெரும் திகில் சூழ எப்போது தன்னால் சுயமாக செயல்பட முடியும்.. அதற்குள், ‘தன் குழந்தையின் நிலை..!’ என பயந்து,
தன் மனதால் ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டுருந்தவளை.. மொத்தமாக கூறு போடும் விதமாய் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடக்கத்தொடங்கியது.
அதே மயக்கநிலையிலேயே அறைக்கு மாற்றப்பட்ட அமிழ்தினியாள், கோமதி தன்னிடம் வருவதற்குள் தன்னை மீட்டுக்கொண்டால்.. தன் இன்னொரு பிள்ளையை காப்பாற்றி விடலாமே.. என எண்ணி தீவிரமான முயற்சியில் இறங்கியிருந்தாள்.
தன் குஞ்சுக்காக.. கழுகை விரட்ட அது பறக்கும் உயரத்தை தாண்டுமாம் கோழி.
அந்த நிலை தான்.. இன்னும் இனியாளை உயிர்ப்பிக்க போராடும் வலுவை தந்து கொண்டிருந்தது.
அப்போது,
“நல்லவேளடீ, எங்கே புள்ளை இவ ஜாடையில பொறந்து தொலச்சு.. நம்மள டென்ஷன் பண்ணிடுமோன்னு பயந்துட்டே இருந்தேன்.
இவ ஜாடையில இல்ல. உன் புருஷனோட ஜாடையும் தெரியல.. யார் மாதிரி வருவான்..?” என அங்கிருந்த ப்ளூ லைட் கிடப்பானில் இருந்த குழந்தையை பார்த்தபடி கோமதி கேட்க,
“அம்மா.. இப்போ அதுவா முக்கியம்..?
குழந்தை வேற வெயிட் லேவா இருக்கான்.. ரெண்டு நாள் இந்த ப்ளூ லைட்ல அப்ஜர்வேஷன்ல இருன்னு சொல்றாங்கன்னு நானே கவலைல இருக்கேன்..” என்றாள் வருத்தமாக.
“நல்லா தானேடீ நம்ம கொடுத்ததை பூராவும் மிச்சம் வைக்காம தின்னா..!
தின்னது எல்லாம் இவ உடம்பே உறுஞ்சிடுச்சு போல.
இப்போ, என் பேரன் தான் கஷ்டப்படறான்..” என கோமதி அங்கலாய்க்க,
கேட்டுக்கொண்டிருந்த இனியாளின் விழியோரம் ஈரம் கசிந்தது கோமதியின் வார்த்தைகளில்.
“ம்மா, இவளுக்கு எப்போ கான்சியஸ் வரும்..?” என்ற மகளின் கேள்விக்கு,
“எப்படியும் மதியத்துக்கு மேல ஆகுமின்னு டாக்டர் சொல்லிட்டு போனாங்க.
ஏன்டீ.. எதுக்கு கேட்கறே..?” என்றார் சந்தேகமாக மகளை பார்த்தபடி.
“இவ முழிக்கறதுக்குள்ள.. நாம, நம்ம வீட்டுக்கு கிளம்பிடனுமின்னு பார்த்தா.. இப்ப குழந்தைக்காக இங்கே இருக்கனுமா..?
இதுக்கு எதாவது ஆப்ஷன் இருக்கான்னு பார்க்கனும்..” என்று ஒரு வித எரிச்சல் குரலில் சொன்னதும்,
“அப்படி என்ன அவசரம்.. உனக்கு..?” என்றார் கோமதி கேள்வியாக.
“புரியாம பேசாதம்மா.. இந்த இடியட் புள்ளைய பெத்து கொடுத்த கையோட போகாம.. என் பையனுக்கு பால் கொடுக்கறாளாமே..! எவ்வளவு அதப்பு இருந்தா என்கிட்ட இப்படி கேட்பா..?
அவ கேட்ட அன்னைக்கே.. நாலு போட்டிருப்பேன்.
நீ தான் என்னை அடக்கிட்டே. இப்போ, இங்கேயே இருந்தா.. இது மறுபடியும் அதே மாதிரி பினாத்தினா மனுஷியாவே இருக்க மாட்டேன் பாத்துக்கோ..!
அதோட, அந்த லூசோட பேமிலி வரும் போது இவ கையில புள்ளைய கொடுத்துட்டு.. நா பெக்கல.. இதோ இவ தான் பெத்தான்னு கை காட்ட சொல்றையா..?” என்றாள் கோபமாக.
“என்னடீ.. இவள இந்த புள்ளைய பெத்து கொடுக்க வைக்க என்னவெல்லாம் திட்டம் போட்டு கூட்டி வந்தோம்.
புள்ளைய பெத்து கொடுக்க போற நேரத்துல.. நீ பாட்டுக்கு எதாவது செய்யப்போய்.. இவ வெளிய உண்மைய சொல்லிட்டா..!
இப்போ, புள்ள பிறந்த பின்னாடி அவளால ஒண்ணுமே செய்ய முடியாது.
ஏன்னா, இந்த ஹாஸ்பிடல்ல எந்த இடத்துலையும் இவ பேர் ரெக்கார்டுல இல்ல.
எல்லா இடத்துலையும் உன் பேர் தான் இருக்கு. இவ உண்மையான பேர் கூட இங்கே யாருக்கும் தெரியாது.
இந்த டாக்டரை தான் உன் கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம தேவைக்கு பயன்படுத்தினோம்.
அப்ப இருந்தே இல்லீகலா எல்லாத்துக்கும் நமக்கு சப்போர்ட் பண்ணுது.. பணத்துக்காக.
இப்பவும் அதே பணத்துக்காக தானே, நம்ம திட்டத்துக்கு ஒத்துக்கிட்டு அதுபடி எல்லாமே நடந்திருக்கு.
இப்போ நம்ம இவள இப்படியே விட்டுட்டு போனாலும், ஏன்னு கேட்க யார் இருக்கா சொல்லு..?
பணமும் அளவுக்கு அதிகமாவே கட்டியாச்சு. இவ உடம்பை தேத்தி கழுத்தை புடுச்சு தள்ளுங்கன்னு சொன்னா போதும்.
எல்லாம் நம்ம திட்டப்படி நடக்குன்னு தான் அமைதியா இருன்னு அன்னைக்கு சொன்னேன்.
உன் புருஷனோட பேமிலிய இவ்வளவு வருஷம் சமாளிச்ச நம்மளால இப்போ சமாளிக்கவா முடியாது..?
அதுங்க வந்ததும், நம்ம நடிப்பை பார்த்து.. இவ தப்பி தவறி நேர்ல பார்த்தாலும், சத்தியமே பண்ணாலும் அதுங்க நம்பாது பாரு..” என்றார் கோமதி சாதாரணமாக.
“அதுங்கள சமாளிக்கலாம். அது எனக்கும் ஒரு மேட்டரே இல்ல.
ஆனா, இவ.. அன்னைக்கு அவ ஃபீட் பண்ண கேட்டப்பவே முடிவு பண்ணிட்டேன்.. புள்ள பொறந்தா இவ கண்ணுல கூட காட்டக்கூடாதுன்னு.
அதனால தான் சொல்றேன்.. மொத்தமா பணத்தை வாரி கொடுத்தாச்சு தானே..?
வீட்டுல இவங்க இதே மாதிரி செட் பண்ணி கொடுக்க முடியுமான்னு விசாரி.. வீட்டுக்கே போயிடலாம்.
நான் வேற அவன்கிட்ட இனியும் மறைக்க முடியாது.. பிரச்சனை ஆகிடுமின்னு.. அந்த நர்ஸ வச்சு ஹாஸ்பிடல் பேசன்ட் டிரஸ் போட்டுகிட்டு, குழந்தைய கையல வச்சுட்டு, “வீ ஆர் ஃப்ளஷ்டூ வித் பாய் பேபி..” ன்னு போட்டோ எடுத்து அனுப்பிட்டேன்.
எந்த செக்கண்ட் வேணுமின்னாலும், அது கிளம்பலாம்.
அப்படி அது வர்றதுக்குள்ள எப்படியும் அவனோட பேரண்ட்ஸ் வந்திடுவாங்க.
நம்ம வீட்டுக்கு போயிட்டா.. எப்படியாவது சமாளிச்சிடலாமுன்னு பார்க்கறேன்..” என விளக்க,
இவர்கள் பேச்சு இன்னும் தலைசுற்றலை கூட்ட, ‘அய்யோ நா மயங்கிடக்கூடாது.. இன்னும் மிச்சத்தையும் நா தெருஞ்சுக்கனும்..’ என மனதில் உறுபோட தொடங்கினாள் அமிழ்தினியாள்.
“இந்த ஒன்பது மாசமும்.. அதுங்களுக்கு விசயம் தெரியாம சமாளிக்கறதுக்குள்ள பட்டபாடே போதும்டீ.. எம்மா..” என கோமதி அலுத்துக்கொள்ள,
“அட.. நீ அதுக்கு அசர்ற ஆளா சொல்லு..?
கல்யாணத்துக்கு முன்னாடி, நான் அடுச்ச கூத்துல.. என்னோட கர்ப்பப்பை வேலைக்கு ஆகாம போச்சுன்னு தெரிஞ்சே.. எவ்வளவு நேக்கா அந்த லூசுக்கு என்னை கட்டிவச்சே..?” என பெருமை பேசிய மகளிடம்,
“பின்ன.. என்ன செய்ய சொல்றே..? நான் எவ்வளவு சொல்லியும்.. கேட்காம ஆட்டமா ஆடுனே..!
உன் அப்பனுக்கு தெரியாம, அதை மறச்சு.. உனக்காக ஒவ்வொரு தடவையும் ஹாஸ்பிடல் வந்து.. இனி நீ கர்ப்பம் ஆனா.. உன் உயிருக்கே கேடுன்னு.. சொல்லியும் உன்னை ஒருத்தனுக்கு கட்டி கொடுக்க நான் பட்டபாடு இருக்கே.. எப்பா..!
நல்லவேள, அதுங்களும் அவசரத்துல இருந்ததால.. உன்னை பத்தி பெருசா விசாரிக்காம கட்டிக்கிடுச்சுங்க.
என்ன இருந்தாலும்.. நீ நான் பெத்த பொண்ணுடீ.
உனக்கு, எங்களுக்கு பின்னாடி ஒரு துணை இருந்தா தானே நல்லா இருக்குமுன்னு தான் கல்யாணத்துக்கு உன்னை போராடி சம்மதிக்க வச்சேன்..” என ஆதூரம் பொங்க கூறினார் அந்த அற்புத தாய்.
“நானே.. நம்ம வசதிக்கு வாயப்பொழக்கற ஒரு இளிச்சவாயனை இங்கேயே பாருன்னு எத்தனை போராடினேன்.
நீ என்னமோ காணாததை கண்ட மாதிரி, அந்த வெங்காயத்துக்கு தான் கட்டி வைப்பேன்னு நின்னையே..” என சலித்துக்கொண்டவளை,
“அடியேய்.. இப்போ அவன கட்டி என்ன மோசமா போச்சு சொல்லு..?
கை நிறைய சம்பாதிக்கறான். உன்னோட சந்தோஷத்துக்காக.. நீ எப்போ நம்ம வீட்டுக்கு வரனுமுன்னு ஆசைப்பட்டாலும் அடுத்த நிமிஷம் அனுப்பினான்.
உங்க அப்பா போன பின்னாடி, அவன் தானே இங்கே வரப்போகன்னு இருக்கான்.
இப்ப சொல்லு.. இவன விட இளிச்சவாயன் இந்த ஊருல கிடைப்பானா..?” என்றார்.
“அதென்னவோ வாஸ்த்தவம் தான். அங்கே இருந்தப்பவும் முழு சுதந்திரம் தான். அவன் காலைல போனா ராத்திரி தான் வருவான்.
எல்லா வேலையையும்.. என்னை எதிர்பார்க்காம அவனே எனக்கும் சேர்த்து செஞ்சிடுவான்.
அதுமட்டுமா ஒவ்வொரு தடவையும், முதல் தடவை மாதிரி என்னமா பொறுமையா ஹோண்டில் பண்ணுவான் தெரியுமா..? அம்புட்டு நல்லவன்..!!!
அவனுக்கு தெரியல நா அதுல எக்ஸ்பெர்ட்டுன்னு..” என நக்கல் வழிய சொன்னாள் மகள்.
error: Content is protected !!